வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்
➦➠ by:
மஞ்சு பாஷிணி
இரண்டாம் நாள் சுகந்த மணத்துடன் பவளமல்லி வாசத்துடன் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே….
எத்தனையோ பூக்கள் பார்த்திருப்பீங்க, மாலையா கோர்த்திருப்பீங்க, தலையில் சூடி இருந்திருப்பீங்க. பவளமல்லி பூ பற்றி யாரேனும் அறிந்திருக்கிறீர்களா? ஏன் இதைப்பற்றி கேட்கிறேன்னா எங்க வீட்டு தோட்டத்தில் பவளமல்லி மரம் இருந்தது ஒருக்காலத்தில். நிறைய பூக்கள் பூத்து பறிக்க சிரமம் ஏற்படாமல் அழகா கொட்டி இருக்கும்.. ஆரஞ்ஜ் கலர் காம்புடன் மனம் நிரப்பும் மணத்துடன்… இந்த மலருக்கு இருக்கும் மணம் போல் வேறெந்த மலரிலும் நான் உணர்ந்ததில்லை. பாட்டி தினமும் கோயிலுக்கு போகுமுன் பூக்களை ஈர மண்ணில் இருந்து எடுத்து கழுவி கோர்த்து மாலையாக வைத்திருப்பேன். பெருமாளுக்கு பாட்டி எடுத்துட்டு போய் ஐயரிடம் கொடுத்து சார்த்த சொல்வாங்க. மானிடர்கள் சூடிக்கொள்ளமுடியாத தெய்வீக மலர் இது. சமீபத்தில் இதைப்பற்றி முகநூலில் எழுதினேன். தமிழில் பவளமல்லி, தெலுகில் பாரிஜாதா…
உன் வாசம்
என் நுனிமூக்கைநிரடுகிறது....
உன் பனித்துளி
தொடுதலில்
மனம்
சிலிர்க்க வைக்கிறது...
உன் அழகை
சிலாகிக்க
இந்த ஒரு யுகம்
போதவே இல்லை
எனக்கு
கண்ணனை
மட்டுமே
தழுவிக்கொள்ளும்
உன் தெய்வீகத்தில்
சிந்தனை மெழுகாகிறது...
பூத உடல் வேண்டாம்
எனக்கு
உன்னைப்போலவே
வாசம் பரப்பி
மனதை நிறைக்கும்
பவழமல்லி
மலர்களாக்கிவிடு
இறையை தழுவிக்கொண்டு
நானும் சற்றே
இளைப்பாறிக்கொள்கிறேன் !!!
இன்று இந்த பவளமல்லி பூவைப்போல் பூவையரின் பதிவுகளை அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்... மென்மையும் பெண்மையும் நிறைந்த பூவையர் பகிர்வுகளை பார்ப்போம் இன்று...
இன்று இந்த பவளமல்லி பூவைப்போல் பூவையரின் பதிவுகளை அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்... மென்மையும் பெண்மையும் நிறைந்த பூவையர் பகிர்வுகளை பார்ப்போம் இன்று...
என் மனம் கவர் பதிவர்கள் – இரண்டாம் நாள்
2. கண்ணனுக்காக
கண்ணன் இருக்கும் கோயிலைத்தேடி நாம் போய் தரிசிக்கிறோம்.. இங்கே கண்ணனையே நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும் சக்தி இவர் எழுத்துகளில் உண்டு. கண்ணன் நிறைந்திருக்கும் பூலோக சுவர்க்கத்தை இவர் வலைப்பூ பக்கம் போய் வாசித்து மகிழலாம்.
3. நாச்சியார்
பார்வையிலும் பேசும் வார்த்தைகளிலும் எழுத்திலும் அன்பெனும் வாஞ்சை... சுற்றுப்பயணம் செய்துவிட்ட வந்த இடங்களில் எல்லாம் தன்னுடைய சுவடுகளை மறக்காமல் எழுத்தால் பதித்துவிட்டு வந்த தாரகை. இவர் எழுத்துகளில் நல்லவை கூட மென்மொழியிலேயே இருக்கும். ரசிக்கவைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர், சமையல் ஆகட்டும், பொது விஷயங்களாகட்டும், நிகழ்வுகளாகட்டும், எல்லாவற்றையுமே அழகாய் கட்டுக்கோப்பாய் தன் எழுத்துக்குள் கொண்டு வந்து விடுவார்.
5. அம்பாளடியாள்
சிட்டிகை போட்டால் தும்மல் வருவது போல் ஒரு வார்த்தை சொன்னால் அதை வைத்து ஒரு கவிதையே சந்தம் இசைத்து பாடல் அமைத்து எழுதிவிடுவார்கள்.. கவிதையே பாடலைப்போல் இனிமையாக இருக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
6. அனன்யாவின் எண்ண அலைகள்
இவர் எழுத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையும் இருக்கும், ரசனைக்காரி... எழுத்துகளில் ரசனை படிமன் இல்லா வரிகளே இருக்காது. இனிய குழந்தை.. இவருடைய வரிகள் படிக்கும்போதே மழலைமொழி படிப்பது போலவே ஒரு சந்தோஷம் ஏற்படும்..
தூசி உறிஞ்சி
இம்சையான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள்
அத்திதி தேவோ பவ
7. வேதாவின் வலை
தமிழ் கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தூய்மையான தமிழ் வார்த்தைகளை இவர் எழுத்துகளில் வாசித்து ரசிக்கலாம். இயற்கை, பயணம், குழந்தை, கருத்து இப்படி எல்லாவற்றை பற்றி மிக அசத்தலாக எழுதி இருப்பார் இவர் வலைப்பூவில்.
பசுமை நறுமணம் புல்தரை
எட்டும் வரை எட்டு
குழந்தைத் தூக்கம்
8. ரஞ்சனி நாராயணன்
இவர் எழுத தொடங்கியதே ரொம்ப லேட் தான். ஆனால் எழுத ஆரம்பித்தப்பின் அசுர வேகம், மலைகள் பல தாண்டியதை போன்றதொரு உற்சாகம், இவர் எழுத்துகள் எப்போதுமே நம்மிடம் பேசுவது போலவே இருக்கும்.. ரசனையான எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். நிறைய கட்டுரைகள், பயனுள்ள மருத்துவ கட்டுரைகள், பெண்களுக்கான கட்டுரைகள், குழந்தை வளர்ப்புக்கான கட்டுரைகள் இப்படி பல விஷயங்கள் நிறைந்த இடம் இவர் வலைப்பூ.
அரியலூர் அடுக்கு தோசை
குழந்தையா வேலையா?
நோய் நாடி நோய் முதல் நாடி
9. திருமதி பக்கங்கள்
இவர் செல்லும் இடமெல்லாம் நம்மையும் அழைத்து சென்றுவிடுவார் எழுத்தின் ஊடே. அருமையான நல்ல விஷயங்களை அற்புதமாய் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக இவருடைய பகிர்வு வந்துள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் !!
இவர் எழுத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையும் இருக்கும், ரசனைக்காரி... எழுத்துகளில் ரசனை படிமன் இல்லா வரிகளே இருக்காது. இனிய குழந்தை.. இவருடைய வரிகள் படிக்கும்போதே மழலைமொழி படிப்பது போலவே ஒரு சந்தோஷம் ஏற்படும்..
தூசி உறிஞ்சி
இம்சையான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள்
அத்திதி தேவோ பவ
7. வேதாவின் வலை
பசுமை நறுமணம் புல்தரை
எட்டும் வரை எட்டு
குழந்தைத் தூக்கம்
8. ரஞ்சனி நாராயணன்
இவர் எழுத தொடங்கியதே ரொம்ப லேட் தான். ஆனால் எழுத ஆரம்பித்தப்பின் அசுர வேகம், மலைகள் பல தாண்டியதை போன்றதொரு உற்சாகம், இவர் எழுத்துகள் எப்போதுமே நம்மிடம் பேசுவது போலவே இருக்கும்.. ரசனையான எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். நிறைய கட்டுரைகள், பயனுள்ள மருத்துவ கட்டுரைகள், பெண்களுக்கான கட்டுரைகள், குழந்தை வளர்ப்புக்கான கட்டுரைகள் இப்படி பல விஷயங்கள் நிறைந்த இடம் இவர் வலைப்பூ.
அரியலூர் அடுக்கு தோசை
குழந்தையா வேலையா?
நோய் நாடி நோய் முதல் நாடி
9. திருமதி பக்கங்கள்
இவர் செல்லும் இடமெல்லாம் நம்மையும் அழைத்து சென்றுவிடுவார் எழுத்தின் ஊடே. அருமையான நல்ல விஷயங்களை அற்புதமாய் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக இவருடைய பகிர்வு வந்துள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் !!
அச்சரப்பாக்கம் சிவன் கோயில்
பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு
10. கீதமஞ்சரி
சத்தமில்லா சாதனைகள் புரிந்த எழுத்துகள் இவருடையது. இனிமையான கவிதை வரிகள் மனதை கொள்ளைக்கொள்ளும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். எண்ணமே இவரின் எழுத்துகளானது. அதுவும் வீரியமானது.
தவறிய கணிப்பு
வானரக்கண்ணே என் காதல் பெண்ணே
தமிழ்விடு தூது
11. சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
இவர் எழுத்துகள் ஜனரஞ்சகமாக இருக்கும். சிறுவயது காலத்து விளையாட்டு முதல் தாலாட்டு வரை, பெற்றோர் குழந்தைகள் இடையே இருக்கும் அருமையான பந்தம், ஆன்மீகம், இலக்கியம் இப்படி நிறைய எழுதி இருக்கிறார்.
நமக்கு நாமே எதிரி
எழுந்திடு பெண்ணே எழுந்திடு
பணம் பணம் பணம் பணமில்லையேல் பிணம்
12. தென்றல்
எளிய நடையில் அழகு தமிழில் மழையாய் கவிதை பிரவாகம் இவர் எழுத்துகளில்...புத்தகம் வெளியிட்டிருக்கிறார். கவிதைக்கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தெம்மாங்கு பாடும் எளிய நடையில்...
எல்லாக்கல்லும் சிலையாக
கற்க கசடற
தமிழ்ச்சாரல்
13. தேன் மதுரத்தமிழ் கிரேஸ்
இவரின் துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பதிவை அப்படியே பகிர்கிறேன். இவருடைய நூலை வெளியிட்டு பகிர்ந்தவை மிக அற்புதமானவை. இவரின் எழுத்துகளே இதற்கு சான்று.
துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
கதிர் கொண்டு வளைச்செல்லும் களவன்
அணிலும் பாடுதே
14. எண்ணத்தூரிகை
வசீகரிக்கும் எழுத்துகளில், சில மனம் நெகிழவைக்கும், பல ரசிக்கவைக்கும், ஒருசில உருகவைக்கும். கட்டிப்போட்டுவிடுவார் தன் எழுத்துகளில் இவர்.
மன சாம்ராஜ்யம்
சுமுகமான உறவுகள் நிலைத்திட
ஸ்ரீயின் செல்லக்குறும்புகள்
15. சுந்தர நேசங்கள்
சுந்தர எழுத்துகளுக்கு சொந்தமானவர். எங்காவது ஒரு படம் பார்த்துவிட்டால் உடனே அந்த படத்திற்கேற்ற பொருத்தமான மிக அற்புதமான கவிதை ஒன்றை வரைந்துவிடுவார். அத்தனை தத்ரூபம் இவர் எழுத்துகளில்.
அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்
பெண்மை பெருந்தவ பிறப்பு
காவேரி பூம்பட்டிண கலையழகி நான்
நம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்துவிட்டால் நமக்கு இடர் வரும் நேரமெல்லாம் நம் நல்லவையே அற்புதங்களாக மாறி மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவிடும்.. நம்மை காத்திடும்..
இன்றைய நாள் எல்லோருக்கும் நலன்கள் தரும் நன்னாளாகட்டும் !!
மீண்டும் நாளை என் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.
அதுவரை நன்றி வணக்கம் !!
பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு
10. கீதமஞ்சரி
சத்தமில்லா சாதனைகள் புரிந்த எழுத்துகள் இவருடையது. இனிமையான கவிதை வரிகள் மனதை கொள்ளைக்கொள்ளும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். எண்ணமே இவரின் எழுத்துகளானது. அதுவும் வீரியமானது.
தவறிய கணிப்பு
வானரக்கண்ணே என் காதல் பெண்ணே
தமிழ்விடு தூது
11. சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
இவர் எழுத்துகள் ஜனரஞ்சகமாக இருக்கும். சிறுவயது காலத்து விளையாட்டு முதல் தாலாட்டு வரை, பெற்றோர் குழந்தைகள் இடையே இருக்கும் அருமையான பந்தம், ஆன்மீகம், இலக்கியம் இப்படி நிறைய எழுதி இருக்கிறார்.
நமக்கு நாமே எதிரி
எழுந்திடு பெண்ணே எழுந்திடு
பணம் பணம் பணம் பணமில்லையேல் பிணம்
12. தென்றல்
எளிய நடையில் அழகு தமிழில் மழையாய் கவிதை பிரவாகம் இவர் எழுத்துகளில்...புத்தகம் வெளியிட்டிருக்கிறார். கவிதைக்கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தெம்மாங்கு பாடும் எளிய நடையில்...
எல்லாக்கல்லும் சிலையாக
கற்க கசடற
தமிழ்ச்சாரல்
13. தேன் மதுரத்தமிழ் கிரேஸ்
இவரின் துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பதிவை அப்படியே பகிர்கிறேன். இவருடைய நூலை வெளியிட்டு பகிர்ந்தவை மிக அற்புதமானவை. இவரின் எழுத்துகளே இதற்கு சான்று.
துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
கதிர் கொண்டு வளைச்செல்லும் களவன்
அணிலும் பாடுதே
14. எண்ணத்தூரிகை
வசீகரிக்கும் எழுத்துகளில், சில மனம் நெகிழவைக்கும், பல ரசிக்கவைக்கும், ஒருசில உருகவைக்கும். கட்டிப்போட்டுவிடுவார் தன் எழுத்துகளில் இவர்.
மன சாம்ராஜ்யம்
சுமுகமான உறவுகள் நிலைத்திட
ஸ்ரீயின் செல்லக்குறும்புகள்
15. சுந்தர நேசங்கள்
சுந்தர எழுத்துகளுக்கு சொந்தமானவர். எங்காவது ஒரு படம் பார்த்துவிட்டால் உடனே அந்த படத்திற்கேற்ற பொருத்தமான மிக அற்புதமான கவிதை ஒன்றை வரைந்துவிடுவார். அத்தனை தத்ரூபம் இவர் எழுத்துகளில்.
அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்
பெண்மை பெருந்தவ பிறப்பு
காவேரி பூம்பட்டிண கலையழகி நான்
இன்றைய நாள் எல்லோருக்கும் நலன்கள் தரும் நன்னாளாகட்டும் !!
மீண்டும் நாளை என் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.
அதுவரை நன்றி வணக்கம் !!
|
|
தெய்வீக மணம் பரப்பும் பாரிஜாதமலர்களின் இனிய அறிமுகத்துடன் அறியத்தந்த பதிவர்களில் எமது பதிவும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது..
ReplyDeleteபெண்பூக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி :)
Deleteபவளமல்லி வாசத்தோடு தொடுக்கப்பட்ட இன்றைய வலைச்சரத்தில் எனக்குமொரு இடமளித்த உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி மஞ்சு. ஒன்றிரண்டு தளங்கள் மட்டுமே இதுவரை அறியாதவை. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கீதா :)
Deleteஇன்றைய பவளமல்லிகள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)
Deleteஎன்னையும் நறுமண மாலையில் சேர்த்ததற்கு நன்றி .
ReplyDeleteஅறியாத சில தளங்கள், சென்று பார்க்கிறேன்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :)
Deleteஓ..! இந்தவா...ரம் பெண்கள் வாரமாக்கும்?! நல்லதுதான் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தாலும், நான் பார்க்காதிருந்த நல்லபதிவர்கள் சிலரை அறியத்தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி.
ReplyDeleteஆஹா சார் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் :)
Deleteபவளமல்லி எங்கள் வீட்டிலும் இருக்கிறது. மாமனார் ஆசையாக அள்ளி அள்ளி போட்டு தினம் சிவபூஜை செய்வார்கள், மாமியார் தினம் கோர்த்து பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு கொண்டு கொடுப்பார்கள்.
ReplyDeleteஊரிலிருந்து வரும் குழந்தைகளுக்கு தினம் பாட்டியுடன் சேர்ந்து பூக்களை சேகரித்து அதை ஊசியில் கோர்த்து மகிழவது ஒரு பொழுது போக்கு.
பூக்களை எப்படி மெதுவாக இதழகள் உதிராமல் எடுக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது மென்மை தனமை குழந்தைகளுக்கு வந்துவிடும்.அப்படி பெருமை வாய்ந்த பூ பவளமல்லி.
இருவர் வலைத்தளம் மட்டும் சென்றது இல்லை அதற்கும் இன்று சென்று பார்த்து விடுகிறேன்.
பவளமல்லி நறுமண மாலையில் நானும் இடம்பெற்றது மகிழ்ச்சி. நன்றி மஞ்சு.
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்துவிட்டால் நமக்கு இடர் வரும் நேரமெல்லாம் நம் நல்லவையே அற்புதங்களாக மாறி மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவிடும்.. நம்மை காத்திடும்..
எப்போது யார் பவளமல்லி பூ பற்றி பேசினாலும் எழுதினாலும் சிறுவயதில் கோர்த்துக்கொடுத்த மாலையும் பெருமாளும் பாட்டியும் கோயிலும் நினைவுக்கு வரும் சுகந்த நினைவுகள்பா..
Deleteநீங்கள் பதிவில் கடைசியாக சொல்லி இருக்கும் கருத்து மிக உண்மை. அற்புதமான கருத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்மா :)
Deleteவலைச்சரத்தில் என் வலைத்தளம் இடம்பெற்றத்தை வாழ்த்துக்களுடன் வந்து சொன்ன இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteஎன் பணியை சற்றே குறைத்த இராஜராஜேஸ்வரிக்கு என் மனமார்ந்த நன்றிகளும்பா :)
Deleteசிறு வயதில் எங்கள் தெருவில் இரண்டு வீடு தள்ளி பவளமல்லி உதிர்ந்து தெருவையே மூடி இருக்கும். கால் படாமல் தாண்டிச் செல்ல முயல்வார்கள் பாதசாரிகள். ஓரமாக விழுந்திருக்கும் கால் படாத பூக்களை அதிகாலையில் ஒரு சிறு கிண்ணத்துடன் சென்று, சேகரித்து, வீட்டில் பூஜைக்கு வைப்பது என் வேலை.அது ஒரு வாசனையான காலம்!
ReplyDeleteதெரிந்த பதிவர்களின் அணிவகுப்பு இன்று. அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
அது ஒரு வசந்தகாலம்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஸ்ரீராம் :)
Deleteஅக்கா
ReplyDeleteநேற்றே வரவேண்டும் என நினைத்தேன்,வரமுடியவில்லை. இன்று தோழி க்ரேஸ், கீதா அக்கா போன்றோர் அறிமுகம் செய்யபட்டிருகிரார்கள். ரொம்ப சந்தோசம்:) எல்லோருக்கும் வாழ்த்துகள், பகிர்ந்தமைக்கு நன்றி!
மைதிலி குட்டி :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மைதிலி:)
Deleteமைதிலி குட்டியா...? உனக்கும் செல்லமாயிடுச்சா மன்ச்சூ இந்தச் சுட்டிப் பொண்ணு...? மகிழ்ச்சி.
Deleteஉங்க ரெண்டு பேர் அன்பு கிடைத்த எனக்கு பெரிய கிப்ட்:)) நன்றி அக்கா! அண்ணா!
Deleteஎன்றென்றும் புள்ள :)
Deleteபவள மல்லி பாரிஜாதம்
ReplyDeleteமல்லிகை, முல்லை,
ரோஜா. சவந்தி
தாமரை, சாமந்தி,
மகிழம்பூ,
துளசி,
பன்னீர் பூ,
வாடா மல்லி,
அல்லி த்தண்டில்
தொடுத்து இருக்கும்
கதம்பம் இன்று
அந்த ஆண்டவனே கண் திறந்து
அடடே ! அபாரம் எனப் புகழும்
பெருமை உடைத்து.
ஒன்று மட்டும்
குறும்பானது
மனோ ரஞ்சிதம்
நிறம் அல்ல. மணம் .
முக நூலிலும்
முன் நிற்பது.
யாரது ??
சுப்பு தாத்தா.
ஆஹா எத்தனை விதமான மலர்கள் அப்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா :)
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார் :)
Deleteஇப்போதும் பவளமல்லி தெருக்களில் எல்லாம் இங்கு இறைந்து இருக்கின்றது. பொருக்குவார் இல்லாமல்...வண்டிகள் அதனைத் தேய்த்துவிடுவதால்...வீடுகளில் அதை வளர்ப்பவர்கள் உள்ளே வைத்திருக்கலாமே தெருவில் விழுவது போல் உள்ளதே என்று மனம் வருந்தும்....தங்கள் கவிதை அருமை சகோதரி....
ReplyDeleteஅறிமுகங்கள் பலரை அறிவோம்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...தொடர்கின்றோம்...
பூக்கள் காலில் மிதிபடுவதே மனதுக்கு என்னவோ செய்கிறதுப்பா... தெருக்களில் விழுந்து வண்டி சக்கரம் நசுக்கி என்று படிக்கும்போதே பதறுகிறது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா துளசிதரன் வி தில்லையகத்து :)
Delete//நம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்து விட்டால்...//
ReplyDeleteஅருமை - பாரிஜாத மலர் போலவே!..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா துரை செல்வராஜ் :)
Deleteபூவையர் அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteஅவைவருக்கும் வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஆர் உமையாள் காயத்ரி :)
Deleteபூவும் பூவையரும் ஆஹா... அக்கா ரைமிங்கா அசத்துங்க அசத்துங்க.. அனைத்து சகோதர உறவுகளுடன் தென்றலின் அறிமுகமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன். வாழ்த்துக்கள் அக்கா. அம்மா எப்படி இருக்காங்க ? இல்லத்தில் அனைவரையும் கேட்டதாக சொல்லுங்க. தங்கையையும் சேர்த்து.
ReplyDeleteகண்டிப்பா சசி... நன்றி அக்கா தங்கைக்குள் அவசியமா என்ன :) ரொம்ப சந்தோஷம் புள்ள எனக்கு...
Deleteபவளமல்லி வாசத்துடன் ஆன்மீக ராஜராஜேஸ்வரியம்மா, மனோம்மா, ரஞ்சனியம்மா, தங்கைகள் கிரேஸ், தென்றல் சசி, குறும்புக்காரி அனன்யா, தோழி கீதமஞ்சரி, அழகுக் கவிதை அம்பாளடியாள்ன்னு அசத்தற பெண்கள் மலர். மிக ரசித்தேன்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா.
Deleteபிரியமுள்ள மஞ்சு,
ReplyDeleteவணக்கம்.
இன்றைய பதிவினில் பாரிஜாதப்பூவின் வாசனை தூக்கல். நாடு விட்டு நாடு வந்தும் அதன் மணம் என் மனதை அப்படியே மயக்கி சொக்க வைத்து விட்டது. :)))))
இதில் அடையாளம் காட்டப்பட்டுள்ள இருவர் [SERIAL NUMBERS: TEN and ONE] என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துக்கொண்டுள்ள சாதனையாளர்கள் என்பதில் மேலும் எனக்கு மகிழ்ச்சிகள். http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
பாராட்டுகள்....... வாழ்த்துகள்........ :)))))
பிரியமுள்ள கோபு
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா..
Deleteபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் மஹா..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள்....!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் மணிமாறன்...
Deleteவாழ்த்துக்கள் வலைப்பூவில் இடம் பெற்ற
ReplyDeleteஅனைத்து பூவையர்களுக்கும் பாராட்டுக்கள்
தொரட்டும் இந்த சரங்கள் மேலும் புதுப்புது
பூக்களோடு எண்ணற்ற கவிமணத்தோடு இங்கே..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ராஜன்....
Deleteஇன்றைய அறிமுக சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கில்லர் ஜீ...
Deleteஅத்தனை பேரும் தரமான பதிவர்கள்.. தொகுத்து கொடுத்த சரம் மணக்கிறது இன்றும்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா..
Deleteகவிதை சிற்பிகளாய் பிறந்த இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ....
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தினேஷ்குமார்...
Deleteஅருமை. மற்ற பதிவுகளை படிக்கிறேன். பதிவு எழுதுபவர்கள் முகநூலிலும் (face book) கணக்கு வைத்துக் கொண்டால் மற்றவர்களும் பதிவை படிப்பது சாத்தியப் படும். இப்போது பதிவு எழுதுபவர்கள் தான் படிக்க முடியும்/படிக்கிறார்கள். நீங்கள் நல்ல வழி காட்டியிருக்கிறீர்கள். நன்றி & வாழ்த்துகள் திருமதி
ReplyDeleteManju Bashini Sampathkumar. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.. மிக்க மகிழ்ச்சி....
Deleteவலைச்சரத்திலும் கலக்கும் உங்களுக்கும், இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் வெங்கட் நாகராஜ்...
Deleteமனிதருக்குகந்த பூ.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை.
Deleteஒன்றிரண்டு புதிய பதிவர்களை அறியத் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சிவகுமாரன்..
Deleteஅன்புள்ள மஞ்சு,
ReplyDeleteவழக்கம்போல உங்கள் தேன் சிந்தும் கவிதையினாலும், பவளமல்லி பூக்களாலும் வலைச்சரத்தை மணக்க வைத்திருக்கிறீர்கள். எளிய வார்த்தைகளில் அழகு நடையில் கவிதை மனதை அள்ளுகிறது.
அறிமுகத்திற்கு நன்றி! எனது வலைப்பக்கத்திற்கு வந்து சேதி சொன்ன சகோதரி இராஜராஜேஸ்வரிக்கு ஸ்பெஷல் நன்றி!
எல்லோருமே நான் மிகவும் விரும்பிப்படிக்கும் பதிவாளர்கள். எல்லோருக்கும் வாழ்த்தக்கள்!
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரஞ்சனிம்மா :)
Deleteவணக்கம் !
ReplyDeleteமிக்க நன்றி மஞ்சு அக்கா என்னையும் இங்கே அறிமுகம் செய்து வைத்தமைக்கு !
அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொந்தங்களே .
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)
Deleteஆஹா என் பதிவும் வந்திருக்கிறதா. மஞ்சுமா. பவழமல்லியையும் என் பதிவையும் ஒன்றாக எழுதியது மிகப் பெருமையாக இருக்கிறது.நன்றி கண்ணா. அத்தனை பதிவர்களும் அறிமுகமானவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சிமா.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் வல்லிம்மா :)
Deleteராஜராஜேஸ்வரி மூலம் இன்று தான் அறிந்தேன். அறிமுகத்திற்கு மிக்க நன்றி. நான் செய்வது மொழிபெயர்ப்பு மட்டுமே. அதன் பெருமையெல்லாம் எழுதியவரையே சாரும். மீண்டும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மஞ்சு. வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கும் வாழ்த்துகள். :)
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :) அறிய தந்த இராஜ ராஜேஸ்வரிக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள்பா..
Delete