வலைச்சரத்தில் 2 ஆம் நாள்
➦➠ by:
மேனகா சத்யா
இன்று நாம் பார்க்க போவது சமையல் வலைப்பூக்கள்
நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க ஆனா என்னைப் பொறுத்தவரை உணவின்றி அமையாது நம் உயிர் அதனால் இன்றைக்கு நான் முதலிடம் தரப்போவது சமையல் வலைப்பூக்களுக்கே...
சமைக்கும் போது கவனம் சிதையாமல் சமைத்தாலே அந்த சமையல் ருசியாக இருக்கும்.
எடுத்தவுடனே இந்த சமையல் சமைத்தேன் சரியாக வரவில்லை என சொல்லாமல் அதில் எப்படி என்ன தவறு செய்தோம் என கண்டறிந்து பின் மறுபடியும் சமைத்தால் ஆஹோ ஒஹோ தான்.
சமைக்கும் போது அன்பு என்னும் சுவையையும் கலந்து சமைத்தால் சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்து நம்மை வாழ்த்துவதே இருக்கு அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பேன்.
சமைப்பது ஒருகலை என்றால் அதனை இன்முகத்துடன் பரிமாறுவதே தனிகலை.சுவையில்லாத உணவுகூட சுவையாயிருக்கும்.
அறுசுவை.காம் இந்த வலைப்பூவில் ஏராளமான குறிப்புகள்.இப்போ புதுமுயற்சியாக வீடியோ தொகுப்புகளை அறிமுகபடுத்தியிருக்காங்க.நீங்களும் போய் பாருங்களேன்.
வஞ்சீரம் மீன் குழம்பு மற்றும் வறுவல் பற்றி சுவையா எழுதியிருகாங்க சித்ரா அவர்கள்,ஸ்ஸ்ஸ் சொல்லும்போதே நாவூறுதே....
வேர்க்கடலை குழம்பு எப்படி செய்றதுன்னு சுவைபட சொல்லியிருகாங்க,நானும் செய்து பார்க்கனும்..
தக்காளியோதரை கேள்விபட்டிருக்கீங்களா,அது என்னன்னு தெரிஞ்சுக்க இங்க போய் கொஞ்சம் பார்த்துட்டு வாங்க...
மணத்தக்காளியில் செய்துருக்கீங்களா,நானும் செய்ததில்லை.அதை எப்படி செய்றதுன்னு நீங்களே போய் இங்க பார்த்துடுங்க.
பொரிச்சகரை சமையல் பெயரே வித்தியாசமா இருக்குல்ல..செய்முறை குறிப்பு இங்கே.
குடம்புளி சேர்த்து ஏஞ்சலின் அவர்கள் மீன் குழம்பு செய்துருக்காங்க இங்க வந்து நீங்களும் பாருங்க.இது பெரும்பாலும் கேரளாவில் மட்டுமே பயன்படுத்துவார்கள்.குடம்புளி உடம்புக்கு மிக நல்லது.
கொங்கு நாட்டு சமையல் குறிப்புகள் ஏராளமா இருக்கு இங்கே..
கதிர்வடை கேள்விபட்டிருக்கிங்களா,இல்லைன்னா செய்முறை குறிப்பு இங்கே இருக்கு வாங்க பார்க்கலாம்..
பெரும்பாலும் தூள் வெல்லம் கிடைப்பதில்லை,உருண்டை வெல்லத்தை ஈசியாக எப்படி துருவலாம் என இங்கு சொல்லியிருக்காங்க.இது ஒரு ஆங்கில வலைப்பூ.
மீதி நாளைய பதிவில்
|
|
//எடுத்தவுடனே இந்த சமையல் சமைத்தேன் சரியாக வரவில்லை என சொல்லாமல் அதில் எப்படி என்ன தவறு செய்தோம் என கண்டறிந்து பின் மறுபடியும் சமைத்தால் ஆஹோ ஒஹோ தான்.//
ReplyDeleteரொம்ப சரியா சொன்னீங்க... நிறைய பேர் ஒரு முறை செய்துட்டு சரியா வரலேன்னா மறுபடியும் முயற்சி செய்றதே இல்லை..
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோ!!
Deleteபரிமாறுவது தனி கலை மட்டுமல்ல...
ReplyDeleteகொடிது கொடிது வறுமை கொடிது...
அதனினும் கொடிது இளமையில் வறுமை...
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்...
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்...
அதனினும் கொடிது அவர் கையால்...
இன்புற உண்பது தானே...?
பல தளங்கள் தொடர்ந்தால் மேலும் சுவை கூடும்...! இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சரியாக சொன்னீங்க,மிக்க நன்றி சகோ!!
Delete//சமைக்கும் போது அன்பு என்னும் சுவையையும் கலந்து சமைத்தால் சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்து நம்மை வாழ்த்துவதே இருக்கு அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பேன். // நானும் எல்லா சூப்பர்மார்கெட் , ஹைபர்மார்கெட் , மால் எல்லாம் தேடிட்டேன் . அன்பு மட்டும் கிடைக்கவே இல்லை . கடல்லயே இல்லையாம் ஹி..ஹி....
ReplyDeleteஜெய் அன்பு எங்கயும் தேட வேண்டும்,நம் உள்ளத்திலயே இருக்கு..
Deleteஒரு சமையல் இன்னொரு சமையலை புகழவது அபூர்வம்., சூப்பர் , தொடர்ந்து மணம் வீச வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Deleteசமையலறை - வீட்டின் பூஜை அறையை விட முக்கியமானது!..
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி ஐயா!!
Deleteசிறப்பான தொகுப்பு ..வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி அனுராதா!!
Delete//சமைப்பது ஒருகலை என்றால் அதனை இன்முகத்துடன் பரிமாறுவதே தனிகலை.சுவையில்லாத உணவுகூட சுவையாயிருக்கும்.// உண்மை.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ப்ரியசகி!!
Deleteபகிர்ந்த பதிவுகள் நம்மை சமையல்ல கிங் ஆக்கிருமோ!!!
ReplyDeleteநிச்சயமாக,வாரத்தில் ஒருநாள் உங்க மனைவிக்கு சமையலறையில் விடுமுறை கொடுங்க..மிக்க நன்றி சகோ!!
Deleteநல்ல தகவல் சகோ.... என் பதிவுகளை தமிழ்மணத்திரட்டியில் இணைக்க இயலவில்லை ... கொஞ்சம் உதவவும்.. என் தளம் : www.naveensite.blogspot.com
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!இதுபற்றி எனக்கு தெரியவில்லை,தெரிந்தவர்கள் உதவுவார்கள்..
Deleteஅறுசுவையான பதிவு. வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!
Delete//சமைக்கும் போது அன்பு என்னும் சுவையையும் கலந்து சமைத்தால் சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்து நம்மை வாழ்த்துவதே இருக்கு அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பேன்.//
ReplyDeleteஉண்மைதான் மேனகா ...சமையல் விஷயத்தில் பின்னோக்கி பார்க்கிறேன் ..ஆனந்த கண்ணீர் வருது ..:) இன்னிக்கு ஒரு ரெசிப்பி பார்த்ததும் உடனே செய்ய முடிகிறது என்றால் இணையமும் உங்களை போன்றவர்களின் குறிப்புகளும்தான் காரணம் .
நீங்கள் சொல்வதை கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கு ஏஞ்சலின்!!
Deleteஎனது குடம் புளி குழம்பை இங்கு அறிமுகப்படுதியதற்கு நன்றி ..ஓடோடி வந்து தகவல் தந்த ப்ரியாவுக்கும் நன்றி :)
ReplyDeleteமிக்க நன்றி ஏஞ்சலின் !! தகவல் தந்த ப்ரியாவுக்கு நன்றி...
Deleteசமையல் வலைத்தளங்களின் அறிமுகம் அருமை....அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஆதி!!
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மேடம் .
மிக்க நன்றி சகோ!!
Deleteஅதானே நாம சமையல் குறித்துப் பகிரும் போது அதற்குத்தானே முதல் மரியாதை...
ReplyDeleteகலக்கல்... அறிமுகங்கள் அனைவரும் அருமை சகோதரி...
மிக்க நன்றி சகோ!!
Deleteஅருமை!
ReplyDeleteஆமாம்... நீங்க தபால் வடை கேள்விப்பட்டு இருக்கீங்களா?
தபால் வடையா,இது என்ன புதுசா இருக்கே..மிக்க நன்றி துளசிம்மா..
Deleteசமையலை ருசித்தோம். அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!!
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இதோ அனைத்துக் குறிப்பையும் பார்வையிடுகிறேன்.
ReplyDelete