வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை...!!!
➦➠ by:
உமையாள் காயத்ரி
மனிதனே
ஒரு
கதம்பம் தானே...?
நவரச
நாயகர்கள் நமக்குள்ளே இருக்கிறார்களே...இன்பம்,நகை,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு, அற்புதம்,சாந்தம்.
கதம்ப
மாலை
பார்க்க அழகாக
கலர்
கலரா
இருக்கும். ஃப்ரூட் சாலட்
பழக்
கலவையில பல
சுவை , பல மணத்தோட இருக்கும். கோலம்
பல
வண்ணத்துல அழகா
வாவான்னு கூப்பிடும். போசும்
போதும்
ஒரே
டாபிக்கா இல்லாம
நாம
தாவி
தாவி
பேச்சு
சுவாரஸ்யத்துல ஒன்னுல
இருந்து ஒன்னுன்னு அப்படியே போய்கிட்டே இருப்போதும். கடைசியில எதை
பேச
வந்தோம்னு மறந்து
போகும்
சில
நேரங்களில்...!!!
விருந்துன்னா..... பாருங்க அப்பப்பா..வெரைட்டியான ஐடங்கள். ஸ்வீட்ல இருந்து ஆரம்பித்து இலைமுழுக்க பலவிதமான பதார்த்தங்கள். ஆகா
ஒரு
புடி
பிடிக்க வேண்டியது தான்
அப்படின்னு சந்தோஷமாக இருக்கும் சாப்பிடும் முன்னாலே...இல்லையா...? ஆடி
பதினெட்டுக்கு செய்வார்கள் பாருங்கள் கதம்ப
சாதம்.
எத்தனை
வகை
வகையா...?
கலர்கலரான வண்ணங்கள்
கலந்து கட்டி வரும் ஓவியம்
காவியம் தான் இல்லையா...?
கலர் கலரான பெயிண்டை
காணும் போது அடடா......
என்னமா இருக்கும்....!!!
அது குழைந்து குழைந்து......
நெகிழ்ந்து இருக்கையில் - நம்மையும்
நெகிழ வைத்து விடும்...
நெகிழ்ந்த தூரிகையோ
மனமில்லாமல்....
இடம் மாறும்...
அதற்கு அடையாளம்
அது என தெரியாமல்...?
அழகாய் மாறி விடும்
நிறந்தரமாய்....
நம் மனதிலும் கூடத்தான்....இல்லையா...?
கதம்ப மாலைகளின் மலர்களைக் காண்போமா...
பாலகுமாரன் பேசுகிறார் என்னும் தன்னுடைய வலைப்பூவில் பாலகுமாரன் அவர்கள் சாமியை
பற்றி பதிவிட்டு இருக்கிறார். என்னைக் கலக்கிய மகாபாரதம் நாம் இதை கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு என நினைக்கிறேன். மாகாபாரம் பற்றி இன்னும் மேலும் நாம் புரிந்து கொள்ளலாம்.
பாலகுமாரன்...ஏனோ ...தொடராமல்...தன் தளத்தி வைத்து இருக்கிறார்...இன்னும் நிறை எழுதினால் நன்றாக இருக்கும். பாருங்கள் நண்பர்களே.
shirdisaibabasayings தினமும் ஷீரடி
சாய்
பாபாவின் ஒரு
செய்தியை Shirdi Sai baba Sayings என்னும் வலைத்தளத்தில்
காணலாம்.
கரடி பொம்மை செய்முறை (teddy bear making ) செய்வது எப்படின்னு சங்கீதா
தன்னுடைய வலைத்தளத்தில் சொல்லிக் கொடுக்கிறார். மணமக்களுக்கான மெஹந்தி டிசைன் நீங்க
தேர்வு செய்து போட்டுக்கனுமா?... அப்படின்னா
இவருடைய ஆல்பத்தில் இருந்து தேர்வு செய்து
கொள்ளலாம். ஆல்பம் இதோ....மணமகளுக்கான மெஹந்தி டிசைன் / bridal mehndi design/mehndi design.
பின்னூட்டத்தில்நம் வலைப்பதிவிற்க்கு இணைப்பு கொடுப்பது எப்படி.என் று நண்பர் முரளிதரன் மூங்கில் காற்றில் அழகாக விளக்கி இருக்கிறார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயன் பெறுங்கள்.
பச்சை சேலைகட்டி வா
என கலியுகம் வலைப்பூவில் நண்பர் தினேஷ்குமார் வயக்காட்டை பார்த்து உன் பக்கத்துல வந்து
சொக்கி நிற்க ஆகாத தலைமுறை
நான் என சொல்லிகிறார். நாமும்
அப்படித்தான் இருக்கிறாம் இல்லையா.
முத்துச்சிதறல் வலைத்தளத்தில் நிறை வகைவகையான முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. சகோதரி மனோ சாமிநாதனின் ஓவியங்கள் வெகு அழகு....என்னமாய் வரைந்து இருக்கிறார்கள்.
அலைகடலும் வயிறுப்பசியும்... என்கிற ஓவியம் வாட்டர் கலரில் வரைந்து இருக்கிறார் சூப்பர். நம் கண்களுக்கு நிறைய விருந்துகள் ....இருக்கின்றன சென்று பாருங்கள். 3 கண்ணாடி ஓவியங்கள் பதிவிட்டு இருக்கிறார். ? மிக அழகான ஓவியங்கள் அவை அனைத்தும்.
கண்ணாடி ஓவியம் எப்படி வரைவது..என்பதையும் சொல்லித் தருகிறார் பயன் பெறுங்கள். செராமிக் மலர்கள் களை எவ்வளவு கலை நுணுக்கத்துடன் செய்ய முடியும் என்பதையும் இங்கு காணலாம்.
கண்ணாடி ஓவியம் எப்படி வரைவது..என்பதையும் சொல்லித் தருகிறார் பயன் பெறுங்கள். செராமிக் மலர்கள் களை எவ்வளவு கலை நுணுக்கத்துடன் செய்ய முடியும் என்பதையும் இங்கு காணலாம்.
அப்பா திருப்பதியில் இருந்து வாங்கிக் கொடுத்த பெருமாளுக்கு அனுராதா பிரேம் அழகாக வர்ணம் செய்து இருக்கிறார் பாருங்களேன் அவரின் அனுவின் தமிழ் துளிகளில்... வர்ணம் செய்த பெருமாள்
வைகுண்ட ஏகாதேசி யைப் பற்றி யும், அன்றைய விரதம் பற்றியும் சுபா ஆனந்தி தன்னுடைய Subha Ananathi வலைத்தளைத்தில் சொல்லி இருக்கிறார் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கவிப்ரியன் அவர்கள் கலிங்க நகர் மறக்கமுடியாத நினைவுகள் என்னும் தன் வலைப்பூவில் பரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு என பகிர்ந்து இருக்கிறார் சென்று பாருங்களேன்.
கோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம். அப்படின்னு சொன்னா ....அட நமக்கு தெரியாதா.... நாம தான் தினமும் வாசலில் போட்டு கலக்குறோமே என நினைக்கும் பெண்களே...... எங்க கிளம்பிட்டீங்க ...கொஞ்சம் நில்லுங்க நானும் வருகிறேன். புதுகைத்தென்றல் லுக்கு சேர்ந்தே போகலாம். மருதாணி கோனை நாம கடைல வாங்காம நாமே தயாரித்தும், மற்றும் போட டிசைனும் தந்து அதற்கு டிப்ஸும் தந்தா.... எப்படி இருக்கும்.? என்னம்மா.....(ஆண்கள்) நாங்க வரமாட்டமா...எங்க குழந்தைகளுக்கு போட....... என கேட்கும் சகோதரர்களே....வாருங்கள் வாருங்கள்.
.
.
ஆச்சி ஆச்சி வலைத்தளத்தில் thirumathi bs sridhar
அவர்கள் உபயோகித்த உடையில் பை (BAG ) செய்வோம் என அழகான பழைய ஜீன்ஸ் பாண்டில் செய்து காட்டி சொல்லித் தருகிறார்கள். கொள்ள அழகாக இருக்கிறது. பார்த்து பயன் அடையுங்கள்.
மனசு தளத்தில் அமுதா முருகேஷன் விந்தை மனிதர்தாம் நீவிர்! என கவிதை வாயிலாக இயற்கையும் மனிதனையும் சேர்த்து என்ன உணர்வுகளைக் கொட்டி இருக்கிறார் பாருங்கள்.
கமலாவும் நிட்டிங்கும் - கடுகு தாளிப்பு வலைப்பூவில் கடுகு ஆண்கள் ஸ்வெட்டர் பின்னியது கிடையாது என ஒரு பத்திரிக்கையில் படிக்கவும் எனக்கு ( கடுகு) கொதித்தது எனவும், ஆகையால் அவர் முயன்று நிட்டிங் போட்டது எப்படி என நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார். சிரித்து சிரித்து...முடியலைடா சாமி....!
ஆஹா,,,,,, மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை.
ஆனால் நடைமுறையில் பாரதி சிந்தனைப்போல் உலகம் இனியதாகவா இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியிடம் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்
கசப்பான மவுனம் தானே என இயம்புகிறார்.
பாருங்களேன்.
எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபாயாடிக்ஸ் [antibiotics] என்பதை கலாகுமரன் இனியவை கூறலில் தெளியாக உரைத்திருக்கிறார். டக்டக் என ஆன்டிபயாட்டிக்ஸ் சாப்பிடுபவர்கள் உடனே போய் படியுங்கள்.
தமிழ் அறிவு கதைகள் (கதைக் களஞ்சியம் - குழந்தைகளுக்காக பாபு நடேஷன் ) இவர் குழந்தைகளுக்காக குட்டி குட்டி கதைகளை பதிவுடுகிறார். தினம் ஒரு கதை சொல் என கேட்கும் குழந்தைகளுக்கு இதை படித்து நாம் கதை சொல்லலாம்.. தமிழ் படிக்க ஆரம்பித்து இருக்கும் குழந்தைகளை இதை வாசிக்க வைக்கலாம். அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்படும் அல்லவா..? நன்றியுள்ள காக்கை வாசியுங்கள் இங்கே.
இணையக் குயிலில் துரை டோனியல் வெறும் டவலைப் பயன்படுத்தி உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம் என்கிறார். உபயோகமான தகவல் பாருங்களேன்.
தனிமை உங்களை வாட்டுகிறதா.....? என்கிற பதிவை சாரதா அவர்கள் சாரதா சமையல் என்கிற தன்னுடைய வலைத்தளைத்தில் பதி விட்டு இருக்கிறார். இவரின் தளைத்தில் சமையல் மற்றும் பலவற்றை பகிர்ந்து கொள்கிறார் காணுங்களேன்.
காய்கறிக்கலை
காய்கறிக்கலை
காய்கறிகள் என் முன்னே...!
கலைவடித்தேன் கண் முன்னே...!!!
இந்த ஒருவாரமும் என்னுடன் வந்து ஊக்குவித்து கருத்திட்டும், தமிழ்மண வாக்குகள் கொடுத்தும் வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
எனக்கு கொடுத்த இப்பணியை என்னால் முடிந்த வரை திருப்தியாக செய்து இருக்கிறேன் என நினைக்கிறேன்.
வலை - வழி - கைகுலுக்கள் நண்பர்களே...!!!
என் வலைத்தளத்தில் உங்களை தொடர்ந்து சந்திக்கிறேன்.....வரட்டா.
இந்த ஒருவாரமும் என்னுடன் வந்து ஊக்குவித்து கருத்திட்டும், தமிழ்மண வாக்குகள் கொடுத்தும் வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
எனக்கு கொடுத்த இப்பணியை என்னால் முடிந்த வரை திருப்தியாக செய்து இருக்கிறேன் என நினைக்கிறேன்.
வலை - வழி - கைகுலுக்கள் நண்பர்களே...!!!
என் வலைத்தளத்தில் உங்களை தொடர்ந்து சந்திக்கிறேன்.....வரட்டா.
|
|
வலைச்சரப்பணியை மிக அழகாகச் செய்து முடித்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்தளுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteமுதன்முதலாகக் காட்டியுள்ள கதம்ப மாலைகள் படம் கலர் கலராகக் கவர்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>
அப்படத்தை கூகுளில் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது எனக்கும்.
Deleteகதம்ப மாலைகள் படம் கலர் கலராகக் கவர்ச்சியாக உள்ளது.//
நன்றி ஐயா
’முத்துச்சிதறல்’ + ’ஆச்சி ஆச்சி’ ஆகிய இரண்டு தளங்களும் எனக்கு நன்கு பழக்கமானவைகள்.
ReplyDeleteமற்றவற்றை இனிமேல் தான் நான் போய்ப் பார்க்கணும்.
அன்பில் சிறந்த ஆச்சி அவர்கள் சம்பந்தமான இந்த என் இரண்டு பதிவுகளைப் பார்த்தீர்களோ ?
http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html
http://gopu1949.blogspot.in/2015/01/20.html
நேரம் கிடைக்கும் போது பாருங்கோ.
அன்புடன் VGK
ஆச்சி உங்கள் இல்லத்திற்கு வந்த போது என நீங்கள் இட்டு இருந்த பதிவைக் கண்டு இருக்கிறேன். மற்றொன்று தெரியவில்லை. காண வருகிறேன் ஐயா.
Deleteஇன்றைய நாளிலும் சிறப்பான அறிமுகங்கள். பலவகை (வலை) பூக்களை கதம்பமாலையாக அழகாக தொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சரப்பணியை செவ்வனே செய்து முடித்திருக்கின்றீங்க உமையாள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பிரியசகி.
Deleteவலைப் பூக்களை கொய்து வலைச்சரத்தில் கதம்ப மாலையாக தொடுத்ததன் மூலம்
ReplyDeleteநல்லாசிரியை என்னும் தொடு வானத்தை தொட்டு விட்டீர்கள் சகோதரி!
வாழ்த்துகள்!
இன்றைய 'வலைச் சரம்' கதம்ப மாலையை மணம் வீச செய்த பதிவாளர்கள் அனைவருக்கும் குழலின்னிசையின் இன்ப வாழ்த்துகள்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வலைச்சர வாசலில்
Deleteவரவேற்று....
வாரமுழுதும் உடன் வந்து
அறிமுகங்களுக்கு...
அன்பாய் தெரிவித்து...
நல்வழி அனுப்பும்
நண்பர் புதுவை வேலுக்கு
நன்றிகள் பலபல...
நவின்றேன் இன்று.
இன்றைய பகிர்வுகள் அனைத்தும் சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
பாராட்டுக்கள்... வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கும் ...மிக்க நன்றி...சகோ
Deleteகடைசி நாளான இன்று எனது பதிவையும் அறிமுகப்படுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி அவர்களே. மற்ற அறிமகப் பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ
DeleteIm coming.......af.....
ReplyDeleteIm coming.......af.....
ReplyDeleteமணம் வீசும் கதம்ப மாலையுடன் பணியினை நிறைவு செய்ததற்கு பாராட்டுகள்..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்.. வாழ்க நலம்!..
பாராட்டுக்கள்... வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கும் ...மிக்க நன்றி. ஐயா
Deleteசிறப்பாக வலைச்சர பணியை நிறைவு செய்தீர்கள் உமையாள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்து பதிவர்களும் சூப்பர் பதிவர்கள். ஒவ்வொன்றையும் படிக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
காய்கறிகள் என் முன்னே...!
கலைவடித்தேன் கண் முன்னே...!!!//
கலை அருமை.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா.
Deleteஅடேயப்பா! எவ்வளவு உழைப்பு! வியக்கிறேன். பகிர்வுக்கு நன்றி உமையாள். அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி கீதமஞ்சரி
Deleteகலர்கலரான வண்ணங்கள்
ReplyDeleteகலந்து கட்டி வரும் ஓவியம்
காவியம் தான் இல்லையா...? கதம்பத்தை நானும் ரசிக்கிறேன். அழகாகத் தொடுத்துள்ளீர்கள். ஓவியம், டிசைன், பக்தி, மருந்து, மருதாணி என மாறி மாறி ஒரு கதம்பம் தொடுக்கும்போது அது ரசிக்க வைக்கிறது. ஒரு வாரத்தில் உங்கள் உழைப்பும் துறுதுறு கல்லூரிப்பெண்போல அபாரம். வாழ்த்துக்கள்...
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி விச்சு.
Deleteஅழகழகான தலைப்பிட்டு இந்த வாரம் முழுவதும் வலைச்சர ஆசிரியர் பணியை இனிமையாகவும் அழகாகவும் செய்து முடித்திருக்கிறீர்கள்! நல்வாழ்த்துக்கள் உமையாள் காயத்ரி! !!
ReplyDeleteஎன் ஓவியத்தை இங்கே வெளியிட்டு என் தளத்தினை விரிவாக அறிமுகம் செய்திருப்பதற்கு மனம் நிறைந்த வந்தனங்கள் !!
மிக்க நன்றி அக்கா.
Deleteவலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று சிறப்பாக பண்ணி இருக்கீங்க. என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி
Deleteமணக்கும் கதம்ப மலர்களுடன் வலைச்சர ஆசிரியை பணியைத் திறம்படவும் சிறப்பாகவும் நடத்தி முடித்த காயத்ரிக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அக்கா
Deleteஎனது பதிவையும் கதம்ப மாலையுடன் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி......வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி அனுராதா பிரேம்
Deleteஅக்கா ....மிக அழகான கதம்ப மாலை .... எல்லா பதிவர்களும் சும்மா அசத்துராங்க ....என்னையும் அறிமுகம் செய்த என் அன்பு அக்கா உமையாள் காயத்ரிக்கு என் மனமார்ந்த நன்றிகள் .....
ReplyDeleteஎல்லா பதிவர்களும் சும்மா அசத்துராங்க //
Deleteஆமாம்மா...எல்லோரும் சும்மா அப்படித்தான் எழுதி இருக்கிறார்கள்....நாம என்ன செய்றது...? சும்மா போய் படித்து விட்டு வரவேண்டியது தான்.... ..ஒவ்வொரு பதிவர்களையும் பார்த்து நான் மலைத்து நிற்கிறேன்....
மிக்க நன்றி சங்கீதா.
வலைச்சர ஆசிரியர் பணியை மிகச்சிறப்பாக செய்து முடித்தமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சித்திரம் அருமையாக இருந்தது.
டேப்லெட் படம் முன்பு எனது பதிவில் இட்டு இருக்கிறேன்.
தொடரலாம் வலைப்பூவில்.... நன்றி.
தி கிரேட் தேவகோட்டையா ? கொக்கா ?
தமிழ் மணம் – 5 (ஐந்தருவி)
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
டேப்லெட் படம் முன்பு எனது பதிவில் இட்டு இருக்கிறேன்.//
Deleteஆஹா...கூகுளில் தேடினேன்...இப்படம் பிடித்து இருந்தது...அதை பதிவிட்டேன்.....2 படங்கள் கோ - இன்சிடண்ட்டாக...வந்து இருக்கிறது.
தொடர்வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ
கதம்பமாலை பல மலரால் தொடுப்பது ...நல்ல சிறப்புப் பணி.பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Deleteவலைச்சர ஆசிரியைப்பணியை சிறப்பாக செய்துமுடித்ததற்கு வாழ்த்துகள் அக்கா . கதம்பமாலைபோலவே தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களும் மேன்மேலும் வாசம்வீச வாழ்த்துகள் .
ReplyDeleteவலைச்சர ஆசிரியைப்பணியை சிறப்பாக செய்துமுடித்ததற்கு வாழ்த்துகள் அக்கா . கதம்பமாலைபோலவே தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களும் மேன்மேலும் வாசம்வீச வாழ்த்துகள் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteஉமையாள்,
ReplyDeleteகதம்ப மாலையின் வாசனை இங்குவரை வந்துவிட்டது. இன்றைய மணம் வீசும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். சுவையான காய்கறி மயிலின் ஆட்டமும் அழகு. ஆசிரியப் பணியை சிறப்பாக முடித்திட்ட உங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
கதம்ப மாலையின் வாசனை இங்குவரை வந்துவிட்டது//
Deleteகதம்ப வாசனை தான் உங்களை கூட்டிக் கொண்டு வந்ததா...?
மிக்க நன்றி
என்னையும் என் வலைபதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களே
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteகதம்பமாய் மணக்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ
ReplyDeleteகதம்பம் தங்கள் பதிவுகளின் மகுடமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. அறிமுகப்பதிவர்களுக்கும், மிக சிறப்பாக ஆசிரியப்பணியை மேற்கொண்டு நிறைவு செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச் சர சரத்தில் என்னையும் இணைத்து தாங்கள் செய்த பணி சிறப்பு மிக்கது, நன்றி. தங்களின் சரத்தில் உள்ள மற்ற மலர்களையும் ரசித்தேன். வாழ்த்துகள்,
ReplyDeleteஎனது வலைப்பூவின் அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete