07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 6, 2015

எல்லோருக்கும் பிடித்த ஹீரோ...!!!


அப்பா… 
என் நினைவலைகள் பின்னோக்கி….
பயணம் செய்கிறது
வருடங்கள் ஏறஏற..
பயணத்தின் தூரமும் கூடுகிறது

அடிக்கடி பயணம் செய்து 
களைப்படைய விரும்பவில்லை
நிறைய களைப்படைந்ததால்..

ஆனால்
அது தான் பசுமையாய் 
நினைவில் நிற்கிறது

அன்பில் நனைந்த நினைவுகள் 
ஆழமாய் இறங்கி விட்டன 
கவலை என்றால் என்ன..? 
அறியாத வயது….
ஆனந்தம் ஆனந்தம் தான்

எனக்கு மிகவும் பிடித்த மனிதர் 
அவரிடம் இருந்து தான் 
உண்மை, நேர்மை, நாணயம்
எளிமையின் கம்பீரம்….
உள்ளது உள்ளபடி இருத்தல்..
என கற்றதை
சொல்லிக் கொண்டே போகலாம்..

அந்த அஸ்திவாரம் தான் 
எங்களின் வாழ்க்கையை 
எளிமையாக கடக்க உதவிய துடுப்பு

ஆனால்  அவர் போன பின் 
வாழ்க்கையின் நிதர்சனம்,வலிகள், 
ஆனந்தம் அப்படின்னா..? 
என எல்லாம் விட்டு போயின…
காலியான வெறுமை…
தங்கிவிட்டது. 

ஐயப்பனுக்கு பிரியமான பக்தர்…
  
அவரே அழைத்துக் கொண்டார்
இன்றும் அவரின் மகள் என 
மற்றவர் சொல்லும் போது 
பெருமையாக இருக்கிறது. 
அவரின் நற்குணங்கள் 
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அப்பா
எத்தனையோ குழந்தைகளின் 
முதல் நாயகன் அவர் தான்



தந்தைக்குள்ளும் ஒரு தாய்மை உணர்வுண்டு. அது மேல் எழுந்தாற் போல் தெரியாது. நம்மை மனதில் சுமந்து பெற்றவர் அவர். ஆகையால் தானோ தாயுணர்வை மறைத்தே வைத்திருக்கிறார்...? நம்மை ஏற்றி விடும் ஏணி அவர். மெளனமாய் இருந்திடுவார். நம்முடன் நிறைய நேரங்கள் செலவிடாவிட்டாலும் நம்மை நன்கு அறிந்து வைத்திருப்பார். நமக்கெது பிடிக்கும் என நமக்கு தெரிவதை விட நம் அம்மா, அப்பாவிற்கு நன்கு தெரியும் என நான் நினைக்கிறேன். நமக்கு எது வரும் வராது என அவர்கள் துள்ளியமாக உரைப்பார்கள். 

நம்முடைய திறமைகளை கண்டுபிடித்து ஊக்கு விப்பார்கள். சிறுவயதில் ( 3, 4 வது படிக்கும் சமயம்) இருந்து எனக்கு கோலம் போடுவது, வரைவது என்பது மிகவும் பிடித்த ஒன்று. தெருக்களில் யாராவது அழகாய் கோலம் போட்டு இருந்தார்கள் என்றால் பார்த்து வந்த மறுநாளே எங்களில் வீட்டு வாசலில் போட்டு விடுவேன். அந்த பெரியவர்கள் அடுத்த நாள் பார்த்து விட்டு உங்க பொண்ணு சின்ன வயதுலயே எங்களை மாதிரி நல்லா போடுறா என்பார்கள். கண்ணு பார்த்தா கை வேலை செய்யும். இதை எங்க அப்பா நல்ல தெரிந்து வைத்திருந்தார். உனக்கு படிப்பை விட ஓவியம் நல்லா வருது ஆகையால் 6 வதில் ஓவியப்பள்ளியில சேர்க்கவா அப்படின்னார்...? அவர் கேலி பண்ணுகிறார்ன்னு தப்பா நினைத்து விட்டேன். (நீங்க வேற ரொம்ப மோசமா படிப்பேன்னு நினைக்காதீங்க ஒரளவு நல்லா படிப்பேன்.) இப்போ தோணுது சே...நாம தப்பு பண்ணிட்டோம் ஒழுங்கா ஓவியம் வரைய கத்துட்டு இருக்கலாம்ணு...
இப்போது வரை கத்துக்காம வரைந்திட்டு இருக்கேன். முறையா ஓவியம் வரைய கத்துக்கணும்னு ஆசை பார்க்கலாம்...இன்னும் காலம் இருக்கே.



அப்பாவை பற்றிய நினைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் இல்லையா.....புதைந்த நினைவுகள் அழகாய் ஓரமாய் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும். அவரவரின் அப்பாக்கள் குறித்து அவர்களின் பதிவுகளை காணலாமா...




மகளைப் பெற்ற அப்பா..என்கிற கதையை மருத்துவர் மயிலன் அவர்கள்  தன் 
வலைத்தளம் மயிலிறகுவில் பதிவிட்டு இருக்கிறார். மெல்லிய உணர்வலைகள்....பயணிக்கிறது கதையின் தொடக்கம் முதல் முடிவு வரைமுடிவில் கண்களில் நீர் பூக்கிறதுஒரு இளம் தந்தையின் அவஸ்தையை அழகாய் சொல்லிச் செல்கிறார். இளம் பெண்ணின்
தந்தை மார்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை இது. 

நவீன் பிரகாஷ் அருமையிலும் அருமையாய் அப்பாகவிதையை
எழுதி இருக்கிறார்இக்கவிதையை பலபேர் தன் வளைத்தளத்தில் பகிர்ந்து
இருக்கிறார்கள்சிலர் தன் படைப்பாய் பதிவிட்டு இருக்கிறார்கள்ஆதலினால் என்னும் வலைத்தளத்தில் இக்கவிதையை ருசித்து வாருங்கள் நண்பர்களே.




வலியவனிடம் காட்ட முடியாத கோபத்தை... எளியவனிடம் காட்டுகிறோம்.
அதுவும் பொற்றவர்கள் என்றால் எதையும் யோசிக்காமல் காட்டி விடுகிறோம்.அவர்களும் நம் பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை அதனால் மனக்கஷ்டம்   எனவேதான் இப்படி பேசுகிறான் என புரிந்து நமக்கு வடிகாலாய் இருக்கிறார்கள்நாம் அவர்களை புண்படுத்துகிறோம் என புரிந்து கொள்ள சில நேரங்களில் தவறி 
விடுகிறோம்ஆனால் அவர்கள் தாம் நம் ஆன்மபலம்
தவறுகள் உணரும் தருணம்  என்னும் கதையின் வாயிலாக தம்பி கூர்மதியன் அழகாய் 
சொல்லிச் செல்கிறார் அவரின் வலைத்தளம் - ம்...!!! 


 Romeo Benet -  வைப்பூவில் நான் தொலைத்த என் அப்பா...  (கவிதை சாரல்கள்வில்  அப்பா இல்லாத இருப்பு எப்படி
இருக்கும் 
அதன் வெறுமையை சிந்தியிருக்கிறார்எத்தனை பேர் இருந்தாலும் நீ 
இல்லாத நம் வீடு மூலவர் இல்லாத கர்பக்கிரகமாகவே இருக்கிறது என என்னமாய் .....கவிதை எழுதி இருக்கிறார்.


சுஜா கவிதைகள் என்கிற வலைத்தளத்தில் தான் கவிதைகளையும்பயணங்களையும் நேசிக்கும் ஜீவன் என தன்னைப்பற்றி சொல்கிறார்உண்மைதான்
அவரின் வலைத்தளம் கவிதை பூக்களை மணம் பரப்பிக் கொண்டும், பயணங்களின் பதிவளில்அவர் கண்ட இடங்களை பதிவிட்டு இருப்பதில் இருந்தே தெரிகிறது அப்பா...!!! நச்சுன்னு ஒரு கவிதை.
பயணங்களின் பதிவுகள் என இவர் சென்ற பயணக்குறிப்பு பயனுள்ளதாக
இருக்கிறது.
அந்தமான் -1 ஒரு விசிட் போகலாமா நாமளும்....அடடே அந்தமானுக்கு இல்லங்க அவர் வலைக்குத்தாங்க...



விஜய் தன் பெயரிலேயே விஜய் கவிதைகள் என வலைத்தளம் வைத்திருக்கிரார். தந்தையின் பாசம் அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே இழையோடி இருக்கிறது என்பதையும், ஆகையால் தான் அம்மாக்கள் முதலிடம் பாசத்தில் எப்போதும் என அன்புள்ள அப்பாவிற்கு... என்னும் பதிவில் அழகாய் உரைக்கிறார். 



 குறலும் குத்து மதிப்பும் என்கிற தளத்தில் நெல்லை பழனி ராஜா அப்பா மகன் உறவில் மகன் அப்பாவாகும் போது, தன் அப்பாவை அதிகம் நினைக்கிறான் என்பதை அப்பா கவிதையில் அருமையாக வடித்திருக்கிறார். 





நம்மில் எத்தனை பேருக்கு அப்பாவுக்கு பிடித்தவை, அப்பாவின் ரசனைகள் பற்றிதெரிந்திருக்கும்...? அப்பாக்களை புரிந்து கொள்ள, அவர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது. அது எப்படி வாழ வேண்டும் என்று மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை! சில சமயங்களில் எப்படி வாழக்கூடாது என்பதாகக் கூட இருக்கலாம். இப்போதும் எனக்கு அப்பாவைப் பிடிக்கும் என்பது அப்பாவுக்கு தெரிந்திருக்குமா? என வானம்தாண்டிய சிறகுகள் வலைத்தளத்தி...அப்பா!வைப்பற்றி உமா ஜி விரிவாக எழுதி இருக்கிறார். சென்று பாருங்கள் நண்பர்களே.



 Cheers with jana வில் ஜனா ஒரு மகளின் பார்வையில் அவளது அப்பா...அவளது கண்களுக்கும், மனத்திற்கும் எப்படி எல்லாம் காட்சியளிக்கின்றார் உணர்வுடன் பாருங்கள்...என்கிறார் தன்னுடைய  அப்பா.......   பதிவில். என் அப்பாவைப் போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம் தான் அப்பா என முடிக்கிறார்.



தீபிகா கவிதைகளில்   தீபிகா ஒரு குழந்தையின் நடத்தை,பழக்கவழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே என்கிறார் அவர் சொல்வது சரி தானே. தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்து விட்டால் பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும், யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள் என தன் அப்பா...உரைநடையில் அசத்தலாய் இன்னும் நிறைய சொல்கிறார் திபீகா.




நான் வாழும் உலகம் வலைப்பூவில் ரியாஸ்Le Grand Voyage ஒரு மகத்தான பயணம்!!!  என்னும் பிரெஞ்சு படத்தை பற்றி ராமகிருஷ்ணனின் விமர்சனத்தை பகிர்ந்து இருக்கிறார். மேலும் அவர் மொழியில் நீங்கள் படிக்க  நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்தப் படம் பார்த்த தருணத்திலிருந்து இதைப்பற்றி எழுதியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தோடு பலமுறை முயன்றாலும் ஏனோ என்னால் முடியவில்லை.. காரணம் அப்படத்தின் உள்ளடக்கத்தையும், பாத்திரங்களின் முற்று முழுதான உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை..

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளிள் ஒன்றான ஹஜ் பயணத்தையும், தலைமுறை இடைவெளிகளால் தந்தை மகனுக்கிடையில் இடம்பெறும் புரிந்துணர்வின்மையையும் அவற்றினால் ஏற்படும் உணர்வுப்போராட்டங்களையும் மிக அற்புதமாக சொல்லி செல்கிறது இப்படம்.. இதை ஒரு படம் என்று சொல்வதை விட ஒரு மகத்தான பயணம் என சொல்வதே ஏற்புடையது படம் பார்க்கும் போது அந்த உணர்வு நமக்கு தொற்றிக்கொள்ளும்..  இந்தப்படத்தை பற்றிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையொன்றிருக்கிறது..அதில் இப்படத்தைப்பற்றி அற்புதமாக விபரித்திருக்கிறார்.. அதைவிட அழகாக வேறு யாராலும் சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன்..  ஆகையால் அதை இங்கே பகிர்கிறேன்!!

இனி எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துக்களில் தொடர்கிறது...முழுப்பயணம்/படம்

தமிழ் வலைத்தளைத்தில் ராஜா MVS பெண் பிள்ளைகளின் தந்தைகளே! கவனியுங்கள்..,  என்கிற பதிவை கட்டாயம் படியுங்கள். மிக அற்புதமாக விவரித்து இருக்கிறார். பெண்குழந்தைகளின் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு



இந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு  இதை டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் நேரடியாக ஆங்கிலத்தில் படித்து உணர்ந்து முடிந்தவரை தமிழில் 
மொழிபெயர்க்க வேண்டும் என்ற எனது ஆசையே இப்பதிவிற்குக் காரணம் என்கிறார்கள்.

இந்திரா பிரியதர்ஷினிக்கு அவருடைய தந்தை ஜவஹர்லால் நேரு எழுதியுள்ள கடிதத் தொகுப்பைக் கொண்ட  "உலக வரலாறு' (Glimpses of World History) என்ற நூலில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஆன ஒரு பிணைப்பினையும், பாசத்தையும் உணரமுடியும். பல்வேறு காலகட்டங்களில் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களில் உலக நாடுகளின் தோற்றம், பல நாடுகளில் சமய, சமூக, பண்பாட்டு நிலை, புரட்சிகள், உலகப்போர்கள் போன்றவை உள்ளிட்ட பல செய்திகளைப் பற்றி விவாதிக்கிறார்.  தன் மகளுக்கு அவர் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அவர் கொண்டுள்ள அத்தகைய பிணைப்பைக் காண்போம்


அவர் தளம் சென்று கடிதங்களைக் கண்டு வாருங்கள்.அற்புதமாக இருக்கிறது.




                                             தஞ்சாவூர் ஓவியம்


தந்தையை போற்றுவோம்
தந்தைக்கு நன்றி.


இன்று என் வலைத்தளத்தில் சாய் பாமாலை
வாழ்க வாழ்க சாயின் நாமம் 







43 comments:

  1. வலைச் சரம்

    கவி மழை புவி புகும்
    இல்லம் வலைச் சரம்!
    கதை நல் விதை விதைக்கும்
    விளை நிலம் வலைச்சரம்!
    கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
    மேனி வலைச் சரம்
    செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
    பிறக்கும் கருவறை வல்லோர்
    நிறைந்த வலைச்சரம் வாழி!

    (பதிவிற்குரிய பின்னூட்டத்தோடு பிறகு வருகிறேன்! நன்றி)

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர கவிதை...அருமை சகோ
      வாருங்கள் நன்றி

      Delete
  2. சிந்தை நினைந்தே விந்தை புரிந்தார்
    தந்தை புகழ்சேர் புவி!

    நல்லதோர் நலம் பாராட்டும் பதிவு! நல்கிய,
    "வலைச் சரம்" ஆசிரியை, உமையாள் காயத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி புதுவை வேலு

      Delete
  3. தந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் கவிதைப் பதிவு ஒவ்வொரு மகனும், மகளும் ரசித்து படிக்கவேண்டியது. எனது மற்றொரு வலைப்பூவில் வந்த இந்திரா பிரியதர்ஷினி பற்றிய நேருவின் பதிவினை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தந்தையைப் பற்றி எழுதிய தங்களுக்கு பிறிதொரு செய்தி, மகளைப் பற்றியது. இந்திரா காந்தி, நட்வர்சிங்குக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தான் ஒரு மகளுக்காக ஆசைப்படுவதாகக் கூறுகிறார். (......My heart has always yearned for a daughter......[Indira Gandhi letter dated 7th November 1970, to K.Natwar Singh, Source: Yours sincerely, K.Natwar Singh) அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா நாளை சந்திப்போம்

      Delete
  4. வணக்கம்
    அப்பா. பாசம் பற்றி உருகும் பதிவுகள் அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்குபாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நங்கள் வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  5. தந்தை பற்றிய சிறப்பான தொகுப்பு... பாராட்டுக்கள் சகோதரி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நங்கள் வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  6. தந்தையர்களைப் பற்றிய அருமையான தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. நங்கள் வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  7. தந்தையரின் பெருமை பேசும் பதிவு அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நங்கள் வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  8. அன்பின் வடிவம் - அப்பா!..

    வாழுங்காலத்தில் ஒரு சில பிள்ளைகளே முழுதாக உணர்ந்து கொள்கின்றனர்..
    தங்கள் பதிவில் - என் தந்தையின் நினைவுக்குள் நான் ஆழ்ந்து விட்டேன்..

    மௌனம்.. நிசப்தம்!..

    ReplyDelete
    Replies
    1. நங்கள் வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      தங்கள் பதிவில் - என் தந்தையின் நினைவுக்குள் நான் ஆழ்ந்து விட்டேன்//

      நானும் ஆழந்து விட்டேன்.

      Delete
  9. அன்பின் அப்பா!.. சிறப்பான தொகுப்பு..
    அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. அப்பா…
    எத்தனையோ குழந்தைகளின்
    முதல் நாயகன் அவர் தான். //

    உண்மை அப்பா அப்பா தான் எல்லாம் எனக்கு. மிக அருமையாக சொன்னீர்கள் அப்பாவைப்பற்றி.
    தந்தையைப்பற்றி பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறந்த தொகுப்புக்கு நன்றி உமையாள்.
    தஞ்சை ஓவியம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி

      Delete
  11. தந்தையைப்பற்றிய உன்னதமான பதிவு
    ஆம் தந்தை எல்லோருக்கும் ஹீரோதான்
    இன்றைய பதிவர்களுக்கு அனைவருக்கும் எமது வாழ்த்துகள்
    நண்பர் முனைவர் பி.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  12. //தந்தைக்குள்ளும் ஒரு தாய்மை உணர்வுண்டு. அது மேல் எழுந்தாற் போல் தெரியாது. நம்மை மனதில் சுமந்து பெற்றவர் அவர். ஆகையால் தானோ தாயுணர்வை மறைத்தே வைத்திருக்கிறார்...? நம்மை ஏற்றி விடும் ஏணி அவர். மெளனமாய் இருந்திடுவார். நம்முடன் நிறைய நேரங்கள் செலவிடாவிட்டாலும் நம்மை நன்கு அறிந்து வைத்திருப்பார்// மிக மிக உண்மையான கருத்து.
    அப்பாவிற்கான கவிதை அருமை. பாராட்டுக்கள் உமையாள்.
    இன்றைய அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அப்பாவைப் பற்றிய பதிவுகள் எல்லாமே அருமை. உங்களது அப்பாவைப் பற்றிய கவிதை, தஞ்சாவூர் பாணி ஓவியம் எல்லாம் அற்புதம். பாராட்டுகள்! நாளை யாரைப்பற்றி சொல்லப்போகிறீர்கள் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்கள்.

      Delete
  14. அப்பப்பா !
    அப்பாக்களைப்பற்றி எவ்வளவு படைப்புகள் !

    அடேங்கப்பா !!
    எப்படித்தான் அழகாகத் தொடுத்துக்கொடுத்தீர்களோ !

    அனைவருக்கும் + தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பப்பா !
      அப்பாக்களைப்பற்றி எவ்வளவு படைப்புகள் //

      இன்னும் எவ்வளவோ இருக்கிறது அப்பாவைப் பற்றிய பதிவுகள். நேரமின்மையால் இன்னும் தொடுக்க முடியவில்லை அவர்களை வலைச்சரத்தில்.

      பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      Delete
  15. தஞ்சாவூர் ஓவியம் [தாடையைத்தவிர] நல்லாவே வந்திருக்கு :)

    >>>>>

    ReplyDelete
  16. //இப்போ தோணுது சே...நாம தப்பு பண்ணிட்டோம் ஒழுங்கா ஓவியம் வரைய கத்துட்டு இருக்கலாம்ணு... இப்போது வரை கத்துக்காம வரைந்திட்டு இருக்கேன். முறையா ஓவியம் வரைய கத்துக்கணும்னு ஆசை பார்க்கலாம்...இன்னும் காலம் இருக்கே.//

    நானும் தங்களைப்போலவே முறைப்படி ஓவியம் கற்காமல் போய் விட்டோமே என அடிக்கடி நினைத்து வருந்துவது உண்டு.

    உங்களுக்காவது இன்னும் காலம் இருக்கு. :)

    எனக்கு அதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காவது இன்னும் காலம் இருக்கு. :)

      எனக்கு அதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

      உங்களுக்கும் நிறைய காலம் இருக்கிறது ஐயா. தாங்களின் 100வது பிறந்த நாள் விழாவில் நானும் கலந்து கொள்வேன் ஐயா.

      Delete
  17. தந்தை பற்றி மிக அருமையான பதிவு. கவிதையும்! இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சகோஸ்

      Delete
  18. தஞ்சாவூர் ஓவியம் மிக அருமை! எனக்கும் தங்களைப் போல பல ஏக்கங்கள் உண்டு...ஓவியம் கற்காமல் போய்விட்டோமே. என்று. சங்கீதம் கற்று அதை விரிவு படுத்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்று, நடனம்கற்க முடியாமல் போய்விட்டதே என்று....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாம் எல்லோருக்கும் ஏதோ ஒரு நிறைவேறாத ஏக்கங்கள் அடி மனதில் இருக்கிறது தான்.

      நன்றி சகோ

      Delete
  19. சிறுவயதில் எல்லோருக்குமே அப்பாதான் ஹீரோ.. தஞ்சாவூர் ஓவியம் சூப்பரா இருக்கு. பலதிறமைகளை வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விச்சு

      Delete
  20. வித்தியாசமான தலைப்புக்களில் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  21. தந்தையைப் போற்றுவோம்... அருமை....
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்

      Delete
  22. என் வலைதளத்தை அறிமுகபடுத்தியதர்க்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி ....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது