07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 28, 2007

என் வலையுலக முன்மாதிரிகள்

சித்தார்த்
வலைப்பதிவில் நான் முதலில் படித்த இடுகை இவரின் சொர்கத்தின் குழந்தைகள் எனும் இடுகைதான் செறிவான எழுத்துக்குச் சொந்தக்காரர்.பெரிய படிப்பாளி நல்ல சிந்தனையாளன்.வலம்புரி இதழின் இணையாசிரியர்.இவரது சில மொழிபெயர்ப்புகள் மிகவும் பிரசித்துபெற்றது.

பாம்பாட்டி சித்தன்
இவரது கவிதைகளும்,பரந்த வாசிப்பனுபவமும் என்னை நெடுநாள் நடைவழிகுறிப்புகளிலேயே கட்டிப்போட்டு வைத்திருந்தது.இவரது எல்லா இடுகைகளும் எனக்கு பிடிக்குமென்றாலும் கவிதையை வெகு விரிவாய் பேசும் இவரது தொடர் கவிதை அலசல்கள் தெளிவான ஒரு அனுகுமுறையை எனக்கு தந்தது. மேலும் பின்நவீனத்துவம் ஒரு அறிமுகம் எனும் இடுகை என் ஆரம்பகால கேள்விகளுக்கு விடையளிப்பதாய் இருந்தது.

சன்னாசி
இவரது எழுத்துக்களை படித்தபின் என் எல்லைகள் வெட்கப்பட்டு தலைகவிழ்ந்தது. இவரது பார்வை மற்றும் அனுகுமுறைகள் புதிதாய் ஒரு தளத்தில் இயங்குகின்றன.மாண்டீரீஸர் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.யார்?எங்கிருக்கிறார்? ஒரு தகவலும் தெரியவில்லை.தெரிந்தவர் யாரேனும் பினூட்டத்தில் சொன்னால் மகிழ்வேன்.
நகுலன் நாவல்களை விரிவாக அலசும் இவரது இடுகை நகுலன் விடைபெற்ற அன்று படிக்க ஆறுதலாய் இருந்தது. இவரது உலோகங்கள் எனும் புனைவு கவிதை எனக்கு பிடித்த ஒன்று.இவரது perfume திரைப்பட விமர்சனம் வெகுவாய் ஈர்த்தது.அதிலேயும் இப்படி சொல்லியிருப்பார்

இந்தப் படத்தைப் பார்க்கையில் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு சொரசொரப்பு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் கைவிட்டுக் கைவிட்டுப் பிரித்து கிரிச் கிரிச் என்று அரைமணி நேரத்துக்குச் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த ஆசாமியில் சீட் முதுகில் ஓங்கி மிதிக்கலாமா என்று தோன்றியது

சுகுணாதிவாகர்
கோபமான எழுத்துக்கள் இவருடையது.சமூகம்,பெரியாரியல்,கூர்மையான விமர்சனங்கள் அவ்வப்போது முகத்திலறையும் கவிதைகளென பன்முக தன்மை கொண்ட கலைஞன். சென்னை சென்றால் இவரை சந்தித்து வெகுநேரம் பேசவேண்டுமெனத் திட்டம். வனம்,சொற்களின் தாய், முகம் பார்க்கப்படும் காலடிச்சுவடுகள் கவிதைகளும் யார் யாரை தூக்கில் போடலாம் என்ற இவரது ஒட்டு மொத்த கோபத்தையும் வெளிப்படுத்திய கட்டுரையும் எனக்கு மிகவும் பிடித்தவை.

டிசே தமிழன்
வலையில் 4 வருடங்களாய் செறிவாய் இயங்கும் இளைஞர் இவர் சம வயதுக்காரர் என்பது ஆச்சர்யமாய் இருந்தது.முதிர்வான,செழுமையான எழுத்துக்கள்.இவருடைய பின்நவீனத்துவ புரிதல்கள் நான் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கும் இடுகை.துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன் சில மணி நேரங்கள் என்னை உறைய வைத்த கட்டுரை.புத்தக வாசிப்பு என்ற கட்டுரை என் புரிதல்களோடு ஒத்திருந்தது இந்த தனிமை கவிதை எனக்கு பிடித்தது.

மதிகந்தசாமி
இலக்கியம்,திரைப்படம் என வலையில் வெகுபரவலாய் இயங்கும் மதி எனக்கு மிகவும் பிடித்தவர்.2003 லிருந்து எழுதப்பட்ட இவரின் மூவிடாக் என் ஓய்வு நேரங்களை மொத்தமாய் திருடிக் கொள்கிறது.இவர் சமீபத்திலிட்ட காதற்படங்களின் பட்டியல் எனக்குப் பிடித்த ஒன்று.Open your eyes இந்த படமும் விமர்சனமும் எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம் பாக்கனும்.இவரோட மியூசிங்க்ஸ் ல என் பெயரையும் பாத்து சந்தோஷப்பட்டேன் :)

செல்வநாயகி
இவங்களோட எழுத்தும் சிந்தனையும் என்னை நெகிழ்வடைய வைக்கும் தமிழ்நதி சொன்னது போல இருந்து இருந்து எழுதினாலும் மனதில் நிற்கும்படி எழுதுபவர் சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் எனக்கு பிடித்த இடுகை.மனுசங்கடா இடுகை,கல்யாண்ஜி பற்றி பேசும் இந்த இடுகை எனக்கு மிகவும் பிடித்தது.கல்யாணி பத்தி பேசுறாங்கன்னாவே இயல்பா ஒரு நெகிழ்வு அவர்களிடம் இருக்கும்.எடுத்துக்காட்டா இத படிங்க சும்மாதான் இருக்கிறேன்

12 comments:

  1. நீ கும்மி கோஷ்டியின் பொருளாளர் இப்படி இத படி அத படினு கும்மியில்லாத பதிவ படிக்க சொல்லுற உன் கவிதை மாதிரியே இருக்கு..:)

    ReplyDelete
  2. minnalu unakku oovaraa theriyala ithu atangkutaa



    M

    ReplyDelete
  3. nice alasal.. :)) and vaazththukkal for valaitchara aasiriyar thervu :))

    ReplyDelete
  4. மின்னல் நீ கண்டிப்பா படிச்செ ஆகனும் இல்ல இந்த வாரம் நேர்ல வந்து கவித சொல்வேன் :)

    ReplyDelete
  5. அய்யனார் said...
    மின்னல் நீ கண்டிப்பா படிச்செ ஆகனும் இல்ல இந்த வாரம் நேர்ல வந்து கவித சொல்வேன் :)
    ////

    நேரா வந்து கவிதையா.?..ஐய்யயோ

    :)
    (welcome)

    ReplyDelete
  6. இப்படி உங்களைப் போன்றவர்கள் முன்மாதிரி என்று சொல்லுமளவெல்லாம் உருப்படியாக ஏதும் உழைத்துச் செய்திருக்கிறேனா என்று என்னையே கேட்டுக்கொண்டால் "ஆம்" எனச் சொல்ல மனசாட்சி மறுக்கிறது:))
    கவிதைநேசம் எனும் புள்ளியில் நீங்களும் நானும் சந்தித்துக்கொண்டோமென்றும், வெகுவான ரசனைகளில் அவற்றின் வெளிப்பாட்டில் ஒருமித்த கருத்துடையவர்கள் நாம் என்றுமே நான் நினைத்துக்கொள்கிறேன்.

    நீங்கள் நிறையவும் தொடர்ந்தும் எழுதிவாருங்கள். நன்றி.

    ReplyDelete
  7. மின்னலு ப்ளான் ரெடியாயிடுச்சி அடுத்த பாசகா சந்திப்பு அலைன்லதான் :)

    ReplyDelete
  8. டெல்பின் மேம் ..இது என்னோட ப்ளாக் இல்லிங்க சும்மா ஒரு வாரத்துக்கு பொன்ஸ் கூப்டாங்க ..டெம்ப்ளேட் அவங்களோடதுதான்
    வந்ததிற்க்கு நன்றி

    ReplyDelete
  9. செல்வநாயகி
    மிகைப்படுத்தி கொள்ளாத
    இந்த எளிமைதான் உங்களின் உயரங்களை அதிகரிக்கிறது.அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  10. சென்ஷி நன்றி!வெகேசன் முடிஞ்சிடுச்சா :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது