07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 31, 2007

வலையில் சமூகம்

விழிப்புணர்வு,கருத்துச்செறிவு மிக்க இடுகைகள் வலையில் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.வழிகாட்டியாகவும்,பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் வலைப்பதிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.செய்தி தளமாக வெற்றிகரமாய் சற்றுமுன் வலையை மிளிரச்செய்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

ஜெஸிலா
இவரை புதுமை ஜெஸிலா என்றழைக்கலாம்,மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இவரது குரல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.பெண்ணியம்,உடல்நலம்,மனநலம் என பல்வேறு தளங்களில் இயங்கும் இவரது கட்டுரைகள் எளிமையாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருக்கிறது.

பொன்ஸின் நீலக்குழந்தை இடுகை மனதை தொட்டது பிரச்சினைகளை பேசுவதோடு நின்றுவிடாது களமிறங்கி நண்பர்கள் துணையுடன் தீர்வு கண்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

செந்தழல் ரவி யின் வேலை வாய்ப்பு வழிகாட்டி,மிகவும் பயனுள்ள மற்றும் பாராட்டப்பட வேண்டிய பணி

தோல் பதனிடும் தொழில் குறித்தான மா.சிவக்குமாரின் தொடர் கட்டுரைகள் விலாவரியாய் அத்தொழில் குறித்தான நுட்பம் ,மேலாண்மை, மாசு என எல்லாக் கூறுகளையும் அலசுவது சிறப்பு.

தென்றலின் நாணயம் பக்கம் சிறப்பாக இருக்கிறது என்னை போன்ற மந்தமானவர்களுக்கு கூட புரியும் முறையில் எளிமையாக மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சிறப்பாய் விளக்குகிறார்.

சம்சாரியின் வரவு இயற்கை விவசாயம் குறித்த விழிப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சகவ்யம் குறித்த இவரது தொடர் இடுகைகள் மிக்வும் சிறப்பானவை.விவசாயம் அழிக்கும் அரசியல்வாதிகள் கட்டுரை குமுறல்களை ஏற்படுத்தியது.மண்ணோடு இலக்கியத்தையும் கலக்கும் இவரது அணுகுமுறை வெகு சிறப்பு

பெனாத்தல் சுரேஷின் அரசியல் கட்டுரைகள் நடுநிலமையாய் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இவரது குழப்பமும் உரத்த சிந்தனையும் கட்டுரை என் அலைவரிசையோடு ஒத்துப் போனது.
தேர்தல் முடிவுகள் இடுகை அதை இன்னும் உறுதிப்படுத்தியது.தமிழக அரசியலின் அவசர கோலங்கள் எனும் இந்த கட்டுரை நடுநிலமையாகவும் சிறப்பாகவும் இருக்கும்

சமீபத்தில் வலையில் வெங்கட் மற்றும் ஜெகத் இடையே நிகழ்ந்த திரைமறைவு அரசியல் ஊட்கங்கள் எனும் கட்டுரையும் எதிர்வினைகளும் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.தனிமனித தாக்குதல்,முகம் சுளிக்க வைக்கும் சாடல்கள், குறுகிய பார்வை என வலையில் மலிந்த விடயங்கள் எதுவுமில்லாமல் ஆரோக்கியமான சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கும் நன்றிகள்.

லிவிங் ஸ்மைல் வித்யாவை பற்றி வெகு விரிவாய் வெட்டி முன் வாரத்தில் பதிவிட்டிருந்தாலும் சமூகம் எனும் தலைப்பில் அவரது பங்கு தவிர்க்க இயலாத காரணத்தினால் அவரது வலிகளை உள்வாங்கி கொண்ட சக வலைபதிவாளன் எனும் முறையில் இங்கே அவரின் பணிக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மிகமிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதரான ஓஷோ வை பற்றி பேசும் சக சன்யாசி ஆனந்த நிரூப் மகிழ்ச்சியளிக்கிறார் இவரின் சில இடுகைகள் புத்தருக்கு அவமானம், துனுக்காக மட்டுமே இல்லாத செறிவான கட்டுரைகளையும் இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

புத்தரின் விபாஸனா தியான முகாம் பற்றி பேசும் முத்துக்குமரனின் இந்த இடுகை மிக சிறப்பான ஒன்று .

5 comments:

  1. where is my name :(

    z

    ReplyDelete
  2. வலைபதிவில் சண்டைகள் தோண்றும்போதெல்லாம் கும்மி அடிச்சி திசைதிருப்பல்களை ரசித்ததில்லையா ....


    M

    ReplyDelete
  3. இல்ல திரு M

    யார்யா இது z



    மக்கா எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி பின்னூட்டம்லாம் வருது :(

    ReplyDelete
  4. மக்கா எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி பின்னூட்டம்லாம் வருது :(
    //

    பொது வாழ்க்கையினு வந்துட்டா எல்லாத்தையும் சகிச்சிதான் ஆகனும்னு நம்ம விதி என்ன பண்ணுறது...அய்ஸ்


    (யாருப்பா அது அய்ஸ பயமுறுத்துகிட்டு லிங்ககு கொடுங்க அடுத்த பதிவில் போடுவாரு..)

    ReplyDelete
  5. நன்றி, அய்யனார்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது