வலைக் கவிகள் மற்றும் கவிதைகள்
கவிதையின் மீதுள்ள காதலும் கிறக்கமும் என்னை வேறெந்த தளத்திலும் இயங்கவிடுவதில்லை.வலையில் முதலில் தேடிப்படிப்பது பெரும்பாலும் கவிதைகளாகத்தான் இருக்கும்.இப்போது வலையில் மலிந்த விடயம் கவிதைதான் செறிவாய் எழுதுபவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பது வருத்தமளிக்கிறது.கவிதைக்கான தளம் விரிவடைந்த இக்காலகட்டத்திலும் இன்னும் பழைய,சலித்த அணுகுமுறைகளோடே கவிதைகள் தினமும் நூற்றுக்கணக்கில் எழுதப்படுவது குறித்து எப்போதும் வேதனை உண்டெனக்கு.இப்பதிவில் என் பார்வையில் சிறந்த கவிஞர்களை பகிர்ந்து கொள்ளுகிறேன்.
தமிழ்நதி
கவிதை,சிறுகதை,கட்டுரை என முப்பரிமாண வடிவில் இயங்கும் தமிழ்நதி முழு நேர எழுத்தாளர்.கனடாவில் பெரும்பாலான தமிழ் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன விரைவில் தமிழ்நாட்டின் வெகுஜன ஊடகங்களிலும் இவரது பங்களிப்பை எதிர்பார்க்கலாம்.இவரின் கவிதைகள் அழகியல் பார்வை கொண்டது.அழகின் லயிப்பிலிருந்தபடியே நககண்ணில் ஊசி ஏற்றுவது போல ஒரு வலி அல்லது துன்பம் சுமந்தபடி வெகு அழகாய் மிளிர்ந்திருக்கும். எனக்குப் பிடித்த இவரின் சில கவிதைகள் எழுது இதற்கொரு பிரதி ,சாத்தானின் கேள்வி, கலைந்துபோன மேகம்
தனிமையை மெல்ல இட்டு நிரப்புகிற்து அன்பின் வழிதல்கள்.
வா.மணிகண்டன்
வெகு நுட்பமான கவிஞர்.இவரது கவிதைகளை படிப்பதே ஒரு அலாதியான சுகம்.இவரது பார்வை சம தளங்களிலிருந்து மீண்டு உணர்வு நிலைகளின் மென் கோடுகளை அரூப வடிவின் ரகசிய வழித் தடங்களை சரியாய் பிடிக்கிறது.இவரது கவிதைகள் உயிர்மை,காலச்சுவடு உட்பட பெரும்பாலான இலக்கிய ஏடுகளில் வெளிவந்துள்ளது.வலைப்பதிவில் பதிவிக்காத இவரது 28 கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றை படிக்க நேர்ந்த இரவொன்றில் இக்கவிஞனின் விரல்களை மென்மையாய் பற்றிக்கொள்ளத் தோன்றியது.எனக்கு பிடித்த இவரது சில கவிதைகள் நிழல், எழுதிவிட முடியாத கவிதை,அது பிசாசு போலவே இல்லை,சனிக்கிழமை இரவின்
அபிமன்யூ
புதிதாய் எழுத வந்திருக்கிறார்.காதல் என்ற உட்பிரிவில் எழுதப்பட்டிருக்கும் 12 கவிதைகளும்,கவிதைகள் பிரிவில் 10 கவிதைகளும் நன்றாக இருக்கிற்து.தலைப்புகள்,கவிதை இயங்கும் தளங்கள் வித்தியாசமாக
புதிதாக உள்ளது.குழப்பங்கள் நிரப்பிய கோப்பை ,
மித மிஞ்சிய தேநீரும் கடவுளின் நண்பனும் இந்த இரண்டு கவிதைகளும் எனக்கு ஓஷோ வினை நினைவு படுத்திப் போனது.கடவுளின் மரணப்படுக்கை எனக்கு மிகவும் பிடித்தது
நிவேதா
புனைவு கவிதைகள் வெகு நேர்த்தியாய் வருகிறது இவருக்கு.புலி கானகம் என என் சிந்தனைகளோடு ஒத்திருக்கிறது இவரது கவிதைகள் அல்லது இருவருமே ரமேஷ் ப்ரேமின் சாயல்கள் என்றும் சொல்லலாம்.இருப்பினும் சாயல்களை தவிர்க்க முனைதல் அபத்தமென்பதால் அதை அப்படியே விட்டுவிடலாம்.இவரது கனவுகளை படியுங்கள் மேலும் தேவதைகள் காத்திருப்பதில்லை, அகமெங்கும் பொழியும்... இந்த இரண்டும் செறிவாய் இருக்கும்.
லக்ஷ்மி யின் கையெட்டும் தூரம் கவிதை சிறப்பாக வந்திருந்தது கென் னின்(பேர் நல்லாருக்கில்ல!!) இந்த கவிதைகள் நன்றாக வந்திருக்கிறது. ப்ரியனின் இந்த கவிதை நன்றாக இருந்தது.
|
|
தட்டச்சும்போது பூக்கள் உதிர்வதெல்லாம் கனவின் வழிதான். எனினும், சிலகாலமாக அப்படி நிகழக்கூடும் என நம்ப வேண்டியிருக்கிறது. இந்தப் பூச்சொரியும் ஆச்சரியம் என் மீதான நேசத்தினாலா அன்றேல் உண்மையாகவே நான் கவிதை போல ஒன்றை எழுதவாரம்பித்திருப்பதனாலா என்றெனக்குத் தெரியவில்லை. எது எவ்வாறு இருப்பினும் யாரோ நமது பெயரை உச்சரிக்கிறபோது மகிழ்ச்சியாய்த்தானிருக்கிறது.
ReplyDeleteதிடீரென்று யாரேனும் நம்மை பாராட்டினால் இயல்பாய் எழும் கர்வத்தைக்காட்டிலும் மெலிதான பயமே வருகிறது இனிமேலும் சரியாய் எழுதவேண்டுமென்று.மிக்க மகிழ்ச்சி!நன்றி அய்யனார்.
ReplyDeleteவணக்கம், கானகப்புலி அய்யனார்க்கு, பேர்ல மட்டுமாவது அறிவு இருக்கட்டும்னு வைத்த பேர் அதான் உங்களுக்கு பிடித்து இருக்கு. நான் இரண்டாம் முறையாய் வலைச்சரத்தில் பதிவிடப்பட்டிருக்கிறேன். நன்றிகள் அய்யனார் மற்றும் வலைச்சரம்.
ReplyDeleteஇனிமேலாவது கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
தமிழ்நதி இதிலென்ன சந்தேகம்?உங்க கவிதையின் செறிவு ப்ளாக் குலம் அறியும் :)
ReplyDeleteஅபிமன்யு இந்த பயம் எல்லாருக்கும் பொது..என்ன செய்ய தைரியத்த வரவச்சிட்டு எழுத வேண்டியதுதான்.நம்மள யார் கேக்க முடியும் :)
ReplyDeleteஅடப்பாவி கென் நீயுமா கிர்ர்ர்..எல்லாம் இந்த பொன்ஸால வந்தது :(
ReplyDeleteஇன்னைக்கு கும்மி கிடைக்கல என்ன பண்ணலாம் ...:)
ReplyDeleteM
//கிர்ர்ர்..எல்லாம் இந்த பொன்ஸால வந்தது :( //
ReplyDeleteஹி ஹி... கிர்ர் இல்ல தலைவா.. புலி மொழியில் உர்ர்ர், கர்ர்ர், புர்ர்ர் ;)
இருந்தாலும் இப்புட்டு தன்னடக்கம் கூடாது தல
ReplyDelete(ஒன்னோட லிங்க் ஒன்னு கூடவா ஒனக்கு புடிக்கல..)
/ஒன்னோட லிங்க் ஒன்னு கூடவா ஒனக்கு புடிக்கல..)/
ReplyDeleteயப்பா!!மின்னலு உனக்கிருந்தாலும் இம்புட்டு பாசம் கூடாதுய்யா :)
பொன்ஸ்
ReplyDelete:) நல்லாருங்க
நாமும் கவனிக்கப்படுகிறோம் என்ற சந்தோசம் எழுகிறது...பலவற்றை கவிதை என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்தாலும் சிலதே என் மனதுக்கு முழுமையாக பிடித்தவையாக இருக்கும்.அப்பட்டியலில் இருக்கும் 'சிறகறுந்த கவிதை' உங்களுக்கும் பிடித்தது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
ReplyDeleteநிச்சயம் இது எனக்கு உத்வேகம் அளிக்கும்...நன்றி...
This comment has been removed by the author.
ReplyDeleteபுதிய கவிஞர்களை (எனக்கு) அறிமுகபடுத்தியற்கு நன்றி, அய்யனார்.
ReplyDeleteகாட்டாறு , காயத்திரி
வலைப்பூக்களையும் பார்ப்பதுண்டு.
/தமிழ்நதி இதிலென்ன சந்தேகம்?உங்க கவிதையின் செறிவு ப்ளாக் குலம் அறியும் /
நன்றாக சொன்னீர்கள், அய்யனார்!
தமிழ்நதிக்கு இதில சந்தேகம் இல்லையே?
annivarukkum vaalthukkal...
ReplyDelete[kavithaikal ezuthippalakum...]
thottarayaswamy.a
www.pagadai.blogspot.com
நன்றி ப்ரியன்
ReplyDeleteநன்றி தென்றல்
தோட்டா உங்கள் கவிதைகளையும் படிப்பதுண்டு சென்ஷி ஏற்கனவே உங்கள் கவிதையொன்றை இங்கே சொல்லிவிட்டார் எனவேதான் தவிர்க்க நேர்ந்தது
வலைக்கவிக்ள் மற்றும் கவிதைகள் - அடுத்த பதிவில, என் பெயரும் வரணும்.
ReplyDeleteநீ தான் கவிதையே எழுதலையே! சொல்லப்பிடாது!
இனி தான் எழுதப்போறேன். அதுக்கு தான் அட்வான்சு புக்கிங்!
நன்றிப்பா கவிஞரே!
நான் கவிஞர்கள்ல பாதிக்கப்பட்டதுலே, நீயும் ஒரு கவிஞர். பதிவர் வட்டம் நடத்துறதாலே, உன்னை அதிகமா கலாய்க்க மாட்டேன். தப்பிச்சுட்ட கவிஞரே!