07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 15, 2007

அரசியல் திங்கள்

தமிழ் வலைப்பதிவில் அரசியல் ஜாஸ்தி. அதேவேளையில் அரசியல் நிகழ்வுகளை எந்த வித சார்பும் இல்லாமல், நல்ல முறையில் அலசும் பதிவுகள் கொஞ்சம் குறைவு . அப்படியே அலசும் சில பதிவர்களும் தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளையும் அலச இயல்வதில்லை. ஹிந்துவின் op-ed போலவோ தினமணியின் தலையங்கத்தை போலவோ அன்றாட அரசியல்/சமூக நிகழ்வுகளை தொடர்ந்து அலசும் ஒரு பதிவு தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. சற்றுமுன், இட்லிவடை போன்ற பதிவுகள் செய்திகளின் முழுத்தொகுப்பாகத்தான் இருந்து வருகிறதேயொழிய செய்தி அலசல்/விமர்சனங்களை பெரும்பாலும் செய்வதில்லை. ஆனால் இதனை தனியொருவராக செய்தால் தொடர்ந்து அனைத்து செய்திகளையும் விமர்சிப்பது கடினம். மேலும் அது ஒரே பார்வையில் அமைந்துவிடும். கூட்டுப்பதிவாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து அலசுவதும், பல்வேறு பார்வையில் அலசுவதும் எளிதாக இருக்கும்.

தொடர்ந்து அரசியல்/சமூக நிகழ்வுகளை அலசும் ஆங்கில வலைப்பதிவுகள்(இந்திய அளவில்) நிறைய உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க சில பதிவுகளும் அவற்றுள் சமீபத்தில் நான் ரசித்த இடுகைகளும் இங்கே

1. Desicritics - இந்த குழுப்பதிவில் 500க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இணைந்து பங்களிக்கின்றனர். அரசியல், சமூகம், நிகழ்வுகள் , பொருளாதரம், பொழுதுபோக்கு என அனைத்து தளங்களின் செய்திகளையும் அலசுகிறார்கள். நேற்று கொண்டாடிய அம்மாக்கள் தினம் பற்றிய Is Mother's Day Only A Hallmark Holiday? சுவாரசியமான இடுகைகளுள் ஒன்று

2. SepiaMutiny - பல்வேறு துறைகளை சார்ந்த நண்பர்கள் இணைந்து எழுதும் இந்த கூட்டு வலைப்பதிவும் ஆங்கிலத்தில் மிக முக்கியமானது. சமீபத்திய கராச்சி கலவரம் குறித்த இந்தப்பதிவு , Blood and Tears , இதன் அலசலுக்கு எடுத்துக்காட்டு

3. The acorn - மற்றொரு முக்கிய வலைப்பதிவு. நாராயண் மூர்த்தி, சச்சின் ஆகியோர் மீது சமீபத்தில் எழுப்பபட்ட தேசிய சின்னங்களை அவமதித்த குற்றச்சாட்டுக்களையடுத்து எழுதபட்ட இடுகை இது, The empowerment of intolerance

4. இந்தியாவின் உண்மை நிலையை அறிவதாக சொல்லும் இந்த பதிவும், இந்தியாவின் மறுபக்க அவலங்களை அலசும் இந்த பதிவும் இட ஒதுக்கீடு விவகாரங்களின் போது எதிரெதிர் நிலைகளில் புள்ளி விவரங்களோடு தங்கள் நிலைப்பாட்டினை விவாதிக்கும் இடுகைகள் இரண்டு பக்க நியாயங்களையும் உணர வழி வகுக்கும்.

சரி இனி அரசியல்/சமூகம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளின் எனக்கு பிடித்த சமீபத்திய இடுகைகளில் சில

1. தமிழக அரசியல் அவலங்களை அலசும் பினாத்தல் சுரேஷின் பதிவு
2. தயாநிதியை சாதனையாளராக புகழும் வட இந்திய பத்திரிக்கைகளை சாடும் பிரகாஷின் பதிவு
3. நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்... மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்... என்னும் வெட்டிப்பயலின் பதிவு
4. மாயவதியின் வெற்றியை அலசும் பத்ரியின் பதிவு

மற்றொரு தொகுப்போடு நாளை சந்திக்கிறேன்.

2 comments:

  1. :)

    நல்ல சுவாரசியமான ஆரம்பம்.

    சென்ஷி

    ReplyDelete
  2. பொழுதுபோக்காகவோ, தொழில்நோக்காகவோ வலைப்பதிவில் நேரம் செலவிடுவது ஒரு வகை.

    வலைப்பதிவிலேயே சண்டைபோட்டு நேரத்தை விரயமாக்குவது இன்னொரு வகை (தமிழன் ஸ்பெஷலோ?)

    வலைப்பதிவில்(லும்) அரசியல் பேசி, நேரத்தை விரயமாக்கி உருப்படாமலும் போவது இன்னொரு வகை. (சந்தேகமே இல்லை, தமிழன் ஸ்பெஷலேதான்)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது