அறிமுக செவ்வாய்
இணையத்தில் அதுவும் வலைப்பதிவுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே குறைவு கிடையாது. சமீபத்தில் நான் பார்த்த சில நல்ல முயற்சிகளை அடையாளம் காட்டும் பதிவாக இந்த அறிமுக செவ்வாய் பதிவை எழுத நினைக்கிறேன்.
1. பிடிச்ச நாலு , பிடிக்காத ஆறு , தூக்கத்துல பேசுற எட்டு வார்த்தைகள் போன்ற தலைப்பில் சங்கிலித்தொடர்கள் வலைப்பதிவுலகில் வாடிக்கை. முதல் முறையாக ஒரு தொடர்கதையை பல்வேறு பதிவர்கள் இணைந்து சங்கிலித்தொடராய் எழுதவிருக்கிறார்கள். நல்ல சுவாரசியமான முயற்சி. ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர் மன ஓட்டத்தை ஒட்டி எழுதும்போது ஒரே கதை பல திசைகளில் பயணிக்கும். அதேவேளையில் கதையின் கருவை ஒரு மனதாக தீர்மானித்து விட்டு அதன் அடிப்படையில் எழுதினால் சுவாரசியமாக இருக்கும் என தோன்றுகிறது. நீட்டிப்பு கிடைக்காத மெகா சீரியலாய் அடுத்து எழுத பதிவர் கிடைக்காவிட்டால் காவேரி break பிடிக்காத national permit ஒன்றினால் ... என சொல்லி முடித்துவிடும் அபாயமும் இருக்கிறது ;)
பார்த்த ஞாபகம் இல்லையோ பகுதி 1, பகுதி 2
2. சென்னை சத்யமிலோ, மாயாஜாலிலோ நாலு பேர் ஒரு படம் பார்த்து விட்டு திரும்பவே ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. இந்நிலையில் ஆயிரம் ரூபாயை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பத்து நாளைக்குள் தென்னிந்தியாவிலிருக்கு பத்து இடங்களுக்கு போய் திரும்பும் சாகச பயணத்தை திட்டமிட்டிருக்கிறார்கள் வலைப்பதிவர்கள் சிலர். இரண்டு பேர் கொண்ட அணி ஒன்றை உருவாக்கி கொண்டு தங்களுடைய பயணச்செலவை குறைக்கவும், ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் பணத்தை புத்திசாலித்தனமாக சம்பாதிப்பதுமே த்ரில் என நம்புகிறார்கள். எப்படிலாம் வாழ்க்கையை அனுபவிக்கிறாங்கப்பா
Make your trip
3. ஒண்ணே முக்கால் அடி குறள்கள் மனப்பாடம் பண்ணுவதற்கு எளிதாக இருந்தாலும் அடக்கியிருக்கும் பொருளை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அதனாலயே திருக்குறளின் உரைகளின் எண்ணிக்கை மட்டும் அதன் குறள்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். ஆனால் பல திருக்குறள் உரைகளுக்கே கோனார் நோட்ஸ் தேவைப்படும் நிலைமையும் இருக்கிறது. இந்த நிலையில் சக பதிவர் ரவிசங்கர் எளிய நடையில் திருக்குறளுக்கு பொருளுரை எழுதத்தொடங்கியிருக்கிறார். உண்மையிலே எளிமையாய் இருக்கிறது. சீக்கிரம் செஞ்சுரி+33 அடிக்க வாழ்த்துக்கள்
கடவுள் வாழ்த்து,வான்சிறப்பு
4. மூன்று மணி நேர திரைப்படத்தை ரொம்ப சாதாரணமாய் சோப் போட்டு அலசி கிளிப் மாட்டு காயப்போடும் நம்மைப்போன்ற வலைப்பதிவர்களுக்கு கானம் கலைக்கூடமும் மற்றும் சில நண்பர்களும் (மலைநாடன்) இணைந்து ஒரு எளிதான (!!) போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு நிமிட நேரம் பிடிக்கும் குறும்படம் ஒன்றை தயாரித்து இயக்கி அனுப்ப சொல்லியிருக்கிறார்கள். சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கவிருக்கிறார்கள்.
குறும்படப்போட்டி - மீள் அறிவிப்பு
5. சற்றுமுந்தைய செய்தி நிகழ்வுகளை பல வலைப்பதிவர்கள் இணைந்து தொகுக்கும் சற்றுமுன் கூட்டுவலைப்பதிவிலிருந்து அதன் 1000மாவது இடுகையின் கொண்டாட்டத்தின் பகுதியாக ஒரு செய்தி விமர்சன போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறோம். அரசியல், சமூகம், அறிவியல் உள்ளிட்ட ஐந்து துறைகளில் செய்தி விமர்சன கட்டுரைகள் எழுதலாம். பல வகை பரிசுகளும் உண்டு.
சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு
|
|
அது அறிமுக செவ்வாயா...
ReplyDeleteநான் ஏதோ அதிமுக செவ்வாய்ன்னு நினைச்சுக்கிட்டேன் ;0
சென்ஷி
இந்த பின்னூட்டம் முத்துலட்சுமி அக்காவுக்காக
ReplyDeleteநல்ல பதிவு
விக்கி!
ReplyDeleteகுறும்படப்போட்டி குறித்த அறிவிப்பை இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி