எழுத்தாளர் ஆக எக்கச்சக்க ஆசையா?
தற்போது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் இடத்தில் எனக்கு அருகில் ப்ரிண்டர் இருக்கின்றது. 'இதனால் உனக்கு ஏதேனும் ப்ரைவசி பாதிக்கப்படுகின்றதா?' என்று ஒருவர் கேட்டார். 'ஆபிஸிலேயே எல்லோரும் தவறாமல் செல்லும் பகுதிகள் இரண்டு. ஒன்று டாய்லெட் ரூட். மற்றொன்று ப்ரிண்டர் க்யூபிக்கள். இரண்டிலும் உள்ள ஒற்றுமை, இரண்டு இடங்களிலும் பேப்பர் பயன்படுத்துகிறார்கள்.' என்றேன்.
அது போல, அடிப்படைச் செயல்களைத் தவிர, எல்லோராலும் செய்யக் கூடிய கலைகள் இரண்டு. ஒன்று பாடுதல்; மற்றொன்று வரைதல் (அ) கிறுக்குதல்.
எழுதுதல் என்பதற்கு கொஞ்சம் மூளை உழைப்பையும் இட வேண்டி இருப்பதால், அதில் கை வைப்பவர்கள் குறைவு; நாம் வலைப்பூ வைத்திருப்பத்தால் நமக்கு எழுதும் ஆர்வம் இருக்கின்றது என்று நம்புகிறேன்.
எனவே எழுதுவதற்கு, எழுத்தாளன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்..? எனக்குத் தெரிந்த அளவில் கொஞ்சம் பார்ப்போம்.
'எழுதுவது எப்படி?'
இது விஷயமாகச் சந்தித்த அத்தனை பேரும், படித்த அத்தனை கட்டுரைகளும், கண்ட புத்தகங்களும் சொல்லும் வார்த்தை, 'படி...படி..'.
மூன்று பங்கு நேரத்தை இதற்காக நாம் ஒதுக்கினால், அதில் இரண்டு பங்கைப் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, மிஞ்சிய ஒரு பங்கை மட்டுமே எழுத வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
சில இலக்கிய வடிவங்களைப் பற்றி ஜெயமோகன் தரும் அறிமுகங்கள் ::
சிறுகதையில் என்ன நடக்கிறது?
தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு
‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
நாவல் - ஒரு சமையல்குறிப்பு
எழுதப்போகிறவர்கள்
கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…
யெஸ்.பாலபாரதி கொடுக்கும் ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
விஞ்ஞானச் சிறுகதைகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி வாத்தியார் கூறிய சில பதில்கள், தேசிகனின் வலைப்பூவில்!
திண்ணையின் இலக்கியக் கட்டுரைகள் பகுப்பில், சில நல்ல கட்டுரைகள் வரையறை செய்கின்றன.
சிறுகதை - அதன் அகமும் புறமும்
சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
எனக்குத் தெரிந்த அளவிற்கு சில தளங்களைக் குறிப்பிடுகிறேன். அவற்றில் இருந்து நாம் பெறுகின்ற படைப்புகளின் அறிமுகங்கள், நம்மையும் நல்ல எழுத்தாளர் ஆக்க ஒரு முயற்சி!
ManyBooks
1800களில் வெளிவந்த ஆங்கில க்ளாசிக் நாவல்கள், நூல்கள் அத்தனையும் இங்கே கிடைக்கின்றன, இலவசமாக! அவற்றில் நல்லதொரு நடை, சொல்லும் கருத்துகள் என்று நாம் கற்றுக் கொள்ள ஏராளம்.
EBooks - Tamil
தமிழின் தொடர்ந்த எழுத்து சூப்பர் ஸ்டார்களான பேராசிரியர் கல்கி மற்றும் வாத்தியாரின் படைப்புகள் பி.டி.எஃப். வடிவில் கிடைக்கின்றன. இவற்றைத் தெரிந்து கொள்வது, தமிழ் எழுத்து மொழியில் நிகழ்ந்த கால மாற்றங்களை அறிந்து கொள்ள முக்கியம்!
சென்னை நூலகம்.
பெரும்பாலான தமிழ்க் கதைகள் இங்கே படிக்கக் கிடைக்கின்றன.
மீண்டும் நாளை கடைசிப் பதிவில் காண்போமா..?
|
|
Nice... I have given a link to this post.
ReplyDeleteஅருமையான தொகுப்புகள்.. நன்றி வசந்தகுமார் :)
ReplyDeleteஅருமையான விவரங்கள்.
ReplyDeleteநன்றி.
நன்றாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteமிக நல்ல தகவல்கள் மற்றும் தொடுப்புகள் .. வலைச்சரத்தில் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த பதிவு இது .
ReplyDelete....
ReplyDeleteஅன்பு வினிதா மேடம், சென்ஷி, கே.ரவிஷங்கர், சரவணகுமரன்,அதிஷா,ஆட்காட்டி...
ReplyDeleteமிக்க நன்றிகள்...!