07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 15, 2008

வணக்கம் வலைச்சரம்.

அன்பார்ந்த வலைச்சர, வலைப்பூ வாசகர்களே.. வணக்கம்.

முதலில் இந்த பெருமைக்குரிய வாய்ப்பை வழங்கிய திரு.சீனா அவர்களுக்கு எனது நன்றி. அவர் முதலில் இந்தப்பணிக்காக என்னை அழைத்தபோது தயங்கினேன். நமது பெட்டிக்கடையையே ஒழுங்காக நடத்த துப்பில்லாமல் இருக்கும் நமக்கு இப்படி ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்தும் வாய்ப்பா? என்று வியந்தேன். மேலும் நாம் ஒரு பெரிய படைப்பாளி ஆயிற்றே..(சரி, சரி..) வலைச்சர ஆசிரியராக இருப்பதற்கு படிப்பாளியாக அல்லவா இருக்க வேண்டும்.? பிறகு அவர் என்னை தேற்றினார். ஒருநாள் வலைச்சரத்தை பின்னோக்கி ஒரு பறவைப்பார்வை பார்த்தபோது பல படிப்பாளிகளும், படைப்பாளிகளும், திறமைசாலிகளும் இந்த பணியை சிறப்புற செய்து சென்றிருப்பதைக் காணமுடிந்தது. இருப்பினும் இடையிடையே சில மொக்கை பார்ட்டிகளும் வந்துசென்றிருப்பதைக் காணமுடிந்தது. அதன்பிறகே எனக்கு ஒரு தைரியம் வந்து ஒப்புக்கொண்டேன்.

நான் யாரையெல்லாம் அறிமுகம் செய்து பதிவு போடலாம் என நினைத்தேனோ, அவர்கள் ஏற்கனவே புகழ் பெற்றவர்களாக உள்ளனர். வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்துள்ளனர். நன்கு அறிமுகமாகியும் உள்ளனர். அவர்களைப்பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தால் ஆவ்வ்வ்வ்.. என்று கொட்டாவி வந்துவிடும் உங்களுக்கு.

சிலர் பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நான் வந்த புதிதிலேயே தமிழ் பிரியன் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் அதன்பிறகு பல மாதங்களுக்கு பிறகு அப்துலும், பரிசலும் மட்டுமே போனாப்போகுதுன்னு என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இடையில் யாரையுமே நான் கவரவில்லை போலும் என நினைத்து கொஞ்சம் சோகமானேன். முதல் பதிவில் சுயபுராணத்தையும் (அதான் ரொம்பப்பிடிக்குமே..) கடைசி பதிவாக வித்தியாசமாக நாம் தினமும் படிக்கும் நண்பர்கள் பதிவுகள்பற்றி ஒரு தொகுப்பும், இடை‌யில் ஒரு நான்கு புதிய‌ ப‌திவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ (தேடுவ‌து கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்தான்) அறிமுக‌மும் செய்து ஒருவ‌ழியாக‌ முடித்துவிட‌லாம் என‌த்திட்ட‌மிட்டால் அப்ப‌டியே அதை க‌ச்சித‌மாக‌ ச‌மீப‌த்தில் ப‌ரிச‌ல் செய்துவிட்டுபோய்விட்டார். ந‌ண்ப‌ர்க‌ள், ம‌ற்றும் நான் தின‌மும் ப‌டிக்கும் ப‌திவுக‌ளின் ப‌ட்டிய‌லை அப்ப‌டியே அவ‌ர் வ‌ழ‌ங்கிவிட்ட‌தால் அத‌ற்கு நான் ஒரு பெரிய‌ ரிப்பீட்டு போட்டு முடித்துக்கொள்கிறேன். அப்ப‌டியானால் என்ன‌தான் செய்ய‌ப்போகிறாய்? என்கிறீர்க‌ளா.. ஏதோ முடிந்த‌தை செய்கிறேன். ஆத‌ரித்து அதிக வாக்குகளையும், அதிக‌ பின்னூட்ட‌ங்களையும் வாரி வ‌ழ‌ங்கி என் மான‌த்தை காப்பாற்றுங்க‌ள்.

சரி, வாருங்க‌ள் முதலில் சுய‌புராண‌த்தைப் பார்க்க‌லாம்.. (இந்த சமயத்தில் ஒரே ஒரு அறிமுக‌ப்ப‌திவும், ம‌ற்றெல்லாம் சுய‌புராண‌மாக‌வும் இருந்தால் எப்ப‌டியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன், சீனா இது குறித்து சிந்திக்க‌லாம்)

யாரிட‌மாவ‌து, ஏதாவ‌து நம‌‌து பிர‌ச்சினையைப்ப‌ற்றி சொல்ல‌க்கூட‌ வேண்டாம், லேசாக‌ கோடிட்டாலே போதும் காது புளிக்க‌ புளிக்க நிறைய அறிவுரைக‌ள் கிடைக்கின்ற‌ன‌. வீடு, ஆ.:பீஸ், ந‌ண்ப‌ர்க‌ள் என‌ எங்கெங்கும் ஐடியாக்க‌ள், அறிவுரைக‌ள். அந்த‌ மாதிரி நாம் செய்ய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌த்தான் 108 அறிவுரைக‌ள் என்றே ப‌திவுக்கு பெய‌ர் வைத்தேன். அதையும் மீறி நானே ப‌ல‌ அறிவுரைக‌ளை வாரிவ‌ழ‌ங்கியிருக்கிறேன். ப‌திவில் லேபிள்க‌ள் இணைப்பு த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ற்றை ப‌டிக்க‌லாம். துவ‌ங்கிய‌ போது இந்த ப‌‌திவுல‌கின் பிர‌மாண்ட‌ம் என‌க்குத்தெரிய‌வில்லை. த‌மிழ்ம‌ண‌ம் போன்ற‌ திர‌ட்டிக‌ளைப்ப‌ற்றியும் என‌க்குத்தெரிய‌வில்லை. ஆர‌ம்பித்த சில‌ வார‌ங்க‌ளில் ஆட்களே வராமல் க‌டையை மூடிவிட‌லாமா என்று கூட‌ யோசித்திருக்கிறேன். பின்ன‌ர் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை தெரிந்துகொண்டு இப்போது முத‌லுக்கு ந‌ஷ்ட‌மில்லாம‌ல் ஏதோ க‌டை ஓடிக்கொண்டிருக்கிற‌து.

இதுவரை 98 பதிவுகள் எழுதியுள்ளேன். ஒட்டு மொத்தமாக பார்த்தால் தங்கமணி, புத்தகம், சினிமா, காதல், துறைசார்ந்த பதிவுகள் என அனைத்திலும் சிறிது நகைச்சுவை கலந்துகட்டி எழுதியிருப்பது தெரிகிறது. எனக்குப்பிடித்த பதிவுகள் என்று கேட்டால் அனைத்துமே (மிகச்சிலவற்றைத்தவிர) ரசித்து, பிடித்துப்போய் எழுதிய பதிவுகள் என்றுதான் சொல்வேன். த‌ங்க‌ம‌ணி குறித்த‌ ப‌திவுக‌ள் ஆர‌ம்ப‌த்தில் ப‌ர‌வ‌லான‌ க‌வ‌னிப்பை பெற்றுத்த‌ந்த‌ன‌. பின்ன‌ர் துறைசார்ந்த‌ ப‌திவுக‌ள் க‌வ‌ன‌த்தைப்பெற்ற‌ன‌. காத‌ல் குறித்த‌ ப‌திவுக‌ளும் ஓர‌ள‌வு வெற்றி பெற்ற‌ன‌. குறிப்பிட்டு சொல்லவேண்டும் எனில் 'எழுதுவ‌து ஒரு வாதை' என்று எழுதுவ‌து குறித்து நான் எழுதிய‌ ஒரு குட்டிப்ப‌திவு என‌க்கு மிக‌ பிடித்த‌து. ஆனால் அது ப‌ர‌வ‌லாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌து போல‌ தெரிய‌வில்லை. 'திருட்டு விசிடி' ப‌ற்றி எழுதி விஜ‌ய் ர‌சிக‌ர்க‌ளின் எதிர்ப்பை ச‌ம்பாதித்தேன். 'காதல்', 'எழுத்தாள‌ர்க‌ளுட‌ன் ஒரு அதிகாலைநேர‌ம்', 'ப‌திவுல‌க‌ அர‌சிய‌ல்', 'நெல்லிம‌ர‌மும் சில‌ புத்த‌க‌ங்க‌ளும்', 'சிக்ஸ் சிக்மா', 'ப‌ப்புவும் ச‌ந்த‌ன‌முல்லையும்' போன்ற‌வை என் ப‌திவின் சில‌ சாம்பிள்க‌ள். கம்ப்யூட்டர் கேம்களைப்பற்றி நான் எழுதிய 'கடமை அழைக்கிறது' எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ப‌திவுக‌ளைவிட‌ பின்னூட்ட‌ங்க‌ளும், அத‌ற்கு நாம் இடும் ப‌திலூட்ட‌ங்க‌ளும் சுவார‌சிய‌மாக‌ இருப்ப‌துண்டு. அப்படி ஒரு அழ‌கான எனக்குப்பிடித்த ப‌திலூட்டம் 'வித‌ வித‌மான‌ பெண்க‌ள்' என்ற‌ ப‌திவில் உள்ள‌து. விட்டால் அனைத்துப்ப‌திவுக‌ளுக்குமே இணைப்பு த‌ந்துவிடுவேன், ஆக‌வே நீங்க‌ளே வலைப்பூவிற்கு சென்று பார்த்துக்கொள்ளுங்க‌ள். பை.!

19 comments:

  1. உங்கள் எழுத்துப்பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  3. /புதுகைத் தென்றல் said...
    அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்//

    அப்படின்னா இந்த பதிவு வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா? பொங்கி எழுங்கள் பேச்சுலர்களே!!! நம் காவல் தெய்வத்தை எதிர்த்து பேசும் இவரை சும்மா விடலாமா?

    ReplyDelete
  4. /முதலில் இந்த பெருமைக்குரிய வாய்ப்பை வழங்கிய திரு.சீனா அவர்களுக்கு எனது நன்றி.//

    இந்தக் கொடுமை எங்களுக்கு வர காரணம் அவர்தானா?

    /அவர் முதலில் இந்தப்பணிக்காக என்னை அழைத்தபோது தயங்கினேன். //

    அவரும் முதலில் தயங்கியிருப்பார்..

    /நமது பெட்டிக்கடையையே ஒழுங்காக நடத்த துப்பில்லாமல் இருக்கும் நமக்கு இப்படி ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்தும் வாய்ப்பா?//

    ஓ அது பெட்டிக்கடையா? நான் வேற ஒன்னு நினைச்சேன்..

    //மேலும் நாம் ஒரு பெரிய படைப்பாளி ஆயிற்றே..//

    ஆமாமா.. பப்பாளிக்கு டை கட்டின மாதிரி இருப்பதால் ப"டை"ப்பாளிதான்..

    ReplyDelete
  5. பொட்டிக் கடையில் இருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து இருக்கும் தாமிராவுக்கு வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தாமிரா!!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் தாமிரா :-)

    ReplyDelete
  8. கலக்குங்க தல‌

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தாமிரா. கலக்குங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  10. கலக்குங்க தல‌

    ReplyDelete
  11. அங்கே வலைப்பூவில் ஆபீஸில் ரொம்ப பிஸின்னு கதை கட்டிட்டு...இங்கே அமைதியாகக் கலக்கிட்டு இருக்கீங்களா??
    வாழ்த்துக்கள்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்!!!

    ஹிஹிஹி..

    ReplyDelete
  13. வணக்கம் அமிஷு அம்மா, நன்றி தென்றல், நீங்க என்ன நினைச்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியும் கார்க்கி, இனிய வாழ்த்துகளுக்கு நன்றி தமிழ்,முல்லை,கிரி,திகள்மிளிர், நர்சிம்,தங்கராசா,அனுஜன்,ச்சின்னவர்,ஆனந்த். நம்புங்க அருணா, டார்ச்சர் தாங்கலை, அழுதுருவேன்..அவ்வ்வ்வ் உங்களுக்கு சிரிப்பா இருக்கா என் நிலைமை விஜய் ஆனந்த்.!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தாமிரா

    ReplyDelete
  15. அப்படின்னா இந்த பதிவு வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா? பொங்கி எழுங்கள் பேச்சுலர்களே!!! நம் காவல் தெய்வத்தை எதிர்த்து பேசும் இவரை சும்மா விடலாமா?//

    avvvvvvvvvvv

    இதைப் படிச்சாச்சு அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்னு சொன்னேன்.

    ReplyDelete
  16. காவல் தெய்வத்தை//
    :))))))
    எதிர்த்து பேசும் இவரை சும்மா விடலாமா?//

    ஹா ஹாஹா ஹோ ஹோ.

    ReplyDelete
  17. வாய்யா!வாய்யா!வாய்யா!வாய்யா!
    :)

    ReplyDelete
  18. நன்றி வேலன்.!
    நன்றி அப்துல்.!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது