07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 29, 2008

ஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் அருள்வாக்கு!

வலைச்சரத்தில் என்னை எழுத அழைத்தபோது, நான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த பல வலைப்பூக்கள் மிகப் பிரபலம். எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிற வலைப்பூக்களாய்த்தான் இருந்தன. சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த நேரத்தில் தோன்றி எழுதியதுதான்.

இன்றைக்கு நான் தினமும் படிக்கும் வலைப்பூக்களை பார்க்கலாம்.

தினமும் என்றும் கொள்ளலாம், அல்லது இவர்கள் எதை எழுதினாலும் படிப்பேன் என்றும் கொள்ளலாம். (இதில் சில விடுபட்டிருக்கலாம்.. குறிப்பாக எனது நண்பர்கள் வெயிலான், சாமிநாதன் (ஈரவெங்காயம்) ஆகியோரின் வலைப்பூ பற்றி எழுதி அவர்கள் எழுதாமலே இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்பவில்லை!)

இணைய சஞ்சிகைகளிலிருந்து பத்திரிகைகளில் எழுதி, தற்போது விளம்பரம் குறித்த புத்தகமும் எழுதிவிட்ட தோழர் லக்கிலுக்

ரிப்போர்ட்டராக இருப்பதால் ஒவ்வொரு விடுபட்டவையிலும் தனது அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளும் தல யெஸ்.பாலபாரதி

எல்லா சப்ஜெக்டிலும் கலந்துகட்டி கலக்கும் கோவி.கண்ணன்

உருப்படியாக மட்டும்தான் எழுதுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் டாக்டர் ப்ரூனோ

எனக்கு சினிமா சம்பந்தமாக என்ன சந்தேகம் என்றாலும் நான் தொந்தரவு செய்யும் நண்பர் முரளிகண்ணன்

எழுத்தில் இன்னும் பல உயரங்களைத் தொடவேண்டும் என்று வெறியுடன் உழைக்கும் என் நண்பன் அதிஷா (இவருக்கு நான் முதலாளி என்பது உங்களுக்குத் தெரியுமா?)

எளிதில் புரியும் கவிதைகள் மூலம் எல்லோர் மனதிலும் இருக்கும் அனுஜன்யா

கதம்பத்தில் மணம் கமழவைக்கும் வடகரைவேலன்

கவிதைகளில் ஒரு புது அனுபவம் தரும் ஜ்யோவ்ராம் சுந்தர்

கரிசல்காட்டுக்குச் சொந்தக்காரர் - தமிழ்பிரியன்


எதை எழுதினாலும் கலக்கலான நகைச்சுவையில் வயிறு வலியைத் தரும் ராப்

எங்க ஊர்க்காரர் என்று இவரை படிக்க ஆரம்பித்தேன். இப்ப நிறையபேர் கேட்கறாங்க.. ‘நீங்க மகேஷ் ஊர்க்காரரா’

எனக்கு டென்ஷனென்றால் தனது ஏதாவது ஒரு பதிவைப் படிக்க வைக்கும் அபிஅப்பா.

எப்படி எப்போதுமே, எல்லா இடத்திலுமே இவரால் இப்படி கலாய்க்கமுடிகிறது என்று பிரமிக்கவைக்கும் குசும்பன்

கோபப்பட இவர்கிட்டதான் கத்துக்கணும்னு நெனைக்கற சஞ்சய், (அப்பப்ப மொக்கைல படார்னு போட்டுத் தாக்கவும் செய்வார்)

ஹஸ்பெண்டாலஜி-யில் கலக்கும் புதுகைத் தென்றல்

கயல்விழி முத்துலெட்சுமி - மசாலா, காமெடி படங்களுக்கு நடுவே வி.சேகரின் குடும்பப் படம் பார்த்த எஃபெக்டைத் தரும் இவரது பதிவுகள்

சிறுகதை எழுத்தில் நான் பொறாமை கொள்ளும் வெண்பூ

பெருந்தொகை கொடுத்தாலும் ஈடாகாத நட்புக்கு சொந்தக்காரர் – குறுந்தொகை மன்னன் – நர்சிம்

என் உமாவுக்கு – பதிவை ரமாவுக்கு என்று ரீமிக்ஸ் பண்ணி கலக்கிய.. தங்கமணி புகழ் பதிவர் தாமிரா

தம்பிக்கும் தம்பி புதுகை அப்துல்லா

மொக்கையும், சீரியஸும் என்று மாறி மாறி எழுதும் வால்பையன்


விமர்சங்களில் கலக்கி இப்போது சிறுகதைகளிலும் பிரட்டிக் கொண்டிருக்கும் கேபிள்சங்கர்

ஒருகாலத்தில் தினமும் வரும், இப்போது என் வீட்டிற்கு எட்டியே பார்க்காத என் நிரந்தர நண்பன் சென்ஷி

எவ்ளோ சீரியஸ் மேட்டரையும் சிரிச்சுட்டே எழுதற ச்சின்னப்பையன்

சின்னரஜினி – மனசாட்சி கிரி

நண்பர் - அம்பி

மாரநேரி – ஜோசப்பால்ராஜ்

கடகம் - ஆயில்யன்

இணையத்தில் புகழடைந்து இப்போது பத்திரிகைகளிலும் எழுதி வரும் விக்னேஸ்வரன்

கலக எழுத்துக்காரர் செந்தழல் ரவி

இவர் அட்சரபாத்திரம்ன்னு அருமையா எழுதிட்டு இருந்து, சில பல காரணங்களுக்காக அதை டிலீட்டிவிட்டு இப்போ பேனாமினுக்கல்-ன்னு எழுதறாரு. இன்னும் முழுவீச்சில் எழுத ஆரம்பிக்கல. ஆரம்பிச்சார்னா கலக்குவாரு!

அப்பறம் வேறவழியே இல்லாம (படிக்கலைன்னா என்னமோ மிஸ் பண்ணினா மாதிரி இருக்குல்ல!) தினமும் படிக்கற - நம்ம சகா கார்க்கி!


இதெல்லாம் படிக்கறது..

பேசற மேட்டர் ஒண்ணு இருக்கு. எனக்கு ஆஃபீஸ்ல எதுனா டென்ஷன், கொஞ்சம் ரிலாக்ஸா மூடை மாத்திக்கணும்ன்னா இவருகிட்டத்தான் கூப்ட்டு பேசுவேன்.. மனுஷன் நடு ராத்திரி 12 மணிக்கு கூப்ட்டாலும் பயங்கர ஜோவியலா பேச ஆரம்பிப்பாரு. ஒரு அஞ்சு நிமிஷம் பேசினா ரொம்ப ஃப்ரீயா, ரிலாக்ஸ்டா உணர்வேன்.

அவர்தான்..

தொழிலதிபர் (தெரிஞ்சுடுச்சா..)

நந்து f/o நிலா


இது தவிர தினமும் ஒரு நாளைக்கு நான் பல தடவை திறந்து, திறந்து பார்த்து படிக்கற வலைப்பூ ஒண்ணு இருக்கு. படிக்காமயே இருக்க முடியல... எத்தனை தடவை படிச்சாலும் சலிக்கல..

நீங்களும் இந்தப் பதிவரை தினமும் மூணு அல்லது அதற்கு மேல் படித்தால் இரயில் பயணங்களின் போது நல்ல ஃபிகருக்கருகில் பெர்த் கிடைக்கும் பாக்கியமும், பஸ் பயணங்களில் சொகுசான சீட்டில் இடம் கிடைக்கும் பாக்கியமும் கிடைக்கும் என்று ஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் ‘பதிவோபநிஷத்’தில் கூறப்பட்டுள்ளது.

14 comments:

  1. கல்யாணத்துக்கு பத்திரிகை குடுத்த பிறகு யோசிச்சா, ஏதாவது ரொம்ப முக்கியமான நண்பருக்கு குடுக்காம மிஸ் பண்ணியிருப்போம். அதுமாதிரி, என்னதான் யோசிச்சு யோசிச்சு எழுதினாலும், கடைசில யாராவது விடுபட்டிக்குமோன்னு பயந்து பயந்து மூணு மணிநேரம் கழிச்சு இந்தப் பதிவை போடறேன். நம்ம ‘செட்டு’ல யாராவது மிஸ் ஆகியிருக்கா சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!!!

    ReplyDelete
  2. நீங்களும் இந்தப் பதிவரை தினமும் மூணு அல்லது அதற்கு மேல் படித்தால் இரயில் பயணங்களின் போது நல்ல ஃபிகருக்கருகில் பெர்த் கிடைக்கும் பாக்கியமும், பஸ் பயணங்களில் சொகுசான சீட்டில் இடம் கிடைக்கும் பாக்கியமும் கிடைக்கும் என்று ஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் ‘பதிவோபநிஷத்’தில் கூறப்பட்டுள்ளது

    //

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ரொம்ப நக்கலு :)

    ReplyDelete
  3. என்னாது நந்து தொழிலதிபரா? அப்ப சஞ்சயை என்னா சொல்லி கூப்புடுறது? பெரும் தொழிலதிபர்னா?

    ReplyDelete
  4. ஆஹா , கடைசிப்பதிவர் ரொம்ப சுவாரசியமானவர் போல இருக்கே ::)

    ReplyDelete
  5. சூப்பரு... என்னைப் பத்திய பொயைத் தவிற...

    ReplyDelete
  6. ஏம்பா - கிருஷ்ணா !!

    எங்களெ எல்லாம் பாத்தா உனக்குப் பதிவரா தெரியலயா ?

    இருக்கட்டும் பாத்துக்கறேன்

    ReplyDelete
  7. //ஏம்பா - கிருஷ்ணா !!

    எங்களெ எல்லாம் பாத்தா உனக்குப் பதிவரா தெரியலயா ? //

    அதானே !!! :)))

    ReplyDelete
  8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நா லிஸ்ட்ல இல்ல...

    ReplyDelete
  9. @ தாமிரா

    ஒழுங்கா பதிவைப் படியுமைய்யா.

    @ சீனா/சதங்கா

    உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள்ன்னா சுஜாதா, பாலகுமாரன்ன்னு தான் சொல்லுவாங்க. இளங்கோவடிகள், திருவள்ளுவரை யாராவது சொல்லுவாங்களா?

    நீஙக்ள்லாம் பெரிய தலைங்க..

    ஹி..ஹி..

    ReplyDelete
  10. //நீங்களும் இந்தப் பதிவரை தினமும் மூணு அல்லது அதற்கு மேல் படித்தால் இரயில் பயணங்களின் போது நல்ல ஃபிகருக்கருகில் பெர்த் கிடைக்கும் பாக்கியமும், பஸ் பயணங்களில் சொகுசான சீட்டில் இடம் கிடைக்கும் பாக்கியமும் கிடைக்கும் என்று ஸ்ரீலஸ்ரீ ஜிஞ்சனக்கா ஸ்வாமிகளின் ‘பதிவோபநிஷத்’தில் கூறப்பட்டுள்ளது.//

    உணமையிலே இந்தப்பதிவர் லொள்ளு பண்றவர்தான்

    ReplyDelete
  11. ஹய்யா... என் பெயரும் இருக்கே... நன்றி தல!

    ReplyDelete
  12. ஹஸ்பெண்டாலஜி-//

    ஹஸ்பண்டாலஜி- பெண்டாலஜி ஆனது ஏன் பரிசல்????


    :))))))))))))))

    ReplyDelete
  13. எல்லோரும் இருக்காங்கனுதான் நின்க்கிறேன் சகா.. பணியை சிறப்பாக முடிச்சிட்டிங்க..

    அப்புறம் கடைசியா என்னை சொல்லி ரொம்ப சந்தோஷப்படுத்திட்டிங்க...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது