அன்புள்ள அப்பா- 1
2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போன நாள்.
இன்றளவும் பல முறை அவரைக் கனவில் காணும்போதெல்லாம்,
பிரிவுத் துயரின் கொடூர துக்கத்தில்...
அலறி அழுகிறேன்.
விழித்துப் பார்த்தால் நிஜமாகவே சப்தமிட்டு அழுது கொண்டிருப்பேன்.
அக்கா என்னை "டேய்..! டேய்..! ராஜா..! என்னடா ஆச்சு?" என்று உலுக்கிக் கொண்டிருப்பார்கள்.
அவர் இருந்த வரையில் "அப்பா இருக்கிறார்" என்கிற நினைப்பே
ஒரு அரசனுக்குரிய மனோதைரியத்தை எனக்கு வழங்கிக் கொண்டிருந்தது.
அவர் போன பிறகு அனைத்துமே...
இருள் சூழ்ந்து விட்டதைப் போல...
சர்வ சூனியமானதைப் போன்ற ஒரு நிலை.
அப்போதுதான் (2007-நவம்பர்-13) என் வாழ்வின் வெளிச்சக் கீற்றாய் என் அன்பு விஷி அண்ணன் வந்தார்.
இன்று என் தந்தைக்குரிய ஸ்தானத்தில்...
அவரோடு சேர்த்து,
என் மீது பாசத்தை மட்டுமே பொழியும் "என் சுரேஷ் அண்ணன்",
அன்போடு கருணையையும் சேர்த்துப் பாய்ச்சும் "சீனா அப்பா"...
எனக்கு வேலை கொடுத்துப் பேணி வரும்
"வி. கே. டி. பாலன் ஐயா"....
ஓ...! வானத்திலிருக்கும் என் அப்பா...
என்னைப் பார்த்துப் பெருமையாகப் புன்னகைத்துக் கையசைப்பதாகத்
தோன்றுகிறது.
நீங்க என்ன சொல்றீங்க?
|
|
//ஓ...! வானத்திலிருக்கும் என் அப்பா...
ReplyDeleteஎன்னைப் பார்த்துப் பெருமையாகப் புன்னகைத்துக் கையசைப்பதாகத்
தோன்றுகிறது.//
பெருமையாகக் கையசைப்பதோடு மட்டுமல்லாமல் நீ இன்னும் சாதிப்பே எனவும் சொல்வதாகத் தோன்றுகிறது.
அன்புடன் அருணா
வருகைக்கு நன்றி கபீஷ்...
ReplyDeleteஅந்தோணி
ReplyDeleteசாதிக்க வேண்டும் என்ற வெறி இன்னும் இருக்கிறது உன்னிடம் அந்தோணி - தந்தை மகிழ்வார் - நீ சாதிக்கும் போதெல்லாம்