07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 17, 2008

என் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.

இன்றளவும் எனக்குப் பல வகைகளில் ஆதர்ச துணையாய் இருந்து பல விதங்களில் உதவி வரும் சீனா அப்பாவுக்கு என் மனது நிறைந்த நன்றிகள்.

வலைச் சரத்தில் என்னை எழுத அவர் அழைத்த போது சற்று கலக்கமாகவே உணர்ந்தேன்.

(இடது கையினால் மட்டுமே டைப் செய்தாக வேண்டும். தவிரவும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை.)

முன்பே ஒப்புக் கொண்ட பணி. இந்த ஒரு வாரத்தில் என்னால் முடிந்த வரை நல்ல விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்.

முதல் பதிவாக "நான் வலைப்பூ உலகிற்கு அறிமுகமானவுடன் எழுதிய முதல் பதிவு."

என்னவோ இதை முதலில் உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
----------------------------------------------------------------
என் அண்ணன்



அண்ணன் என்ற வார்த்தைக்கு, எனது அகராதியில் அப்பா என்ற ஒரு மிகப் பெரிய அர்த்தமுண்டு।

நாங்கள் உடன் பிறந்தோர் ஒன்பது பேர்। மூத்தவர் அண்ணன். பெயர் லூர்துசாமி.அடுத்து ஆறு பேர் அக்கா. பிறகு நான். எனக்கடுத்து ஒரு தங்கை.

என் அண்ணனுக்குத் திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, (பிறந்த மறு நாளே, இறந்து விட்டது.) எட்டு மாதங்கள் கழித்து பிறந்தவன் நான்.

என்னை பெற்றது மட்டுமே என் பெற்றோர். வளர்த்ததெல்லாம் அண்ணன், அண்ணி..., பெரிய அக்கா, மாமா..., மற்றுமுள்ள அக்காக்கள்தான்.

குறிப்பாக அண்ணனது குழ்ந்தை இறந்து போனதால்..., அந்த அன்பையும், பாசத்தையும்... என்னிடம் மட்டுமே செலுத்தி வளர்த்தார்கள்.

என் அண்ணன் தான் எனது முதல் குரு.
(அந்தக்காலத்து S.S.L.C முடித்தவர்)

நான் இன்றைக்கு ஏதோ கொஞ்சமாவது, அறிவுத்தெளிவுடன் இருக்கிறேன் என்றால்...,
என் அன்பு அண்ணன் அன்று...,
என்னை அடித்து அடித்து சொல்லிக்கொடுத்ததுதான்.
அவர் எனது இரண்டாவது தந்தை.

அம்மா என்ற வார்தைக்கு, நான் அர்த்தம் கண்டது என் அண்ணியிடம்தான்.நான் நடக்கத் துவங்கும் வரை, அவ்ர்களின் இடுப்பிலேயே என்னைச் சுமந்து சென்றவர்கள்.
Toilet போனால் அவர்கள்தான் கழுவி விடுவார்கள்.

எனது 11-வது வயதில், இந்த விபத்து நிகழ்ந்த நாள் வரை, என் அண்ணனை கட்டியணைத்துக் கொண்டு, அவர் மீது கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவேன்.

நான் முதன்முத்லாக ரசித்து, நேசித்த..., முதல் 'HERO' என் அண்ணன்தான். (இப்போதும் கூட என் பேச்சில் செயல்களில், அவருடைய பாதிப்புக்கள் நிறைய இருக்கும்.)

நடிகர் சத்தியராஜின் உயரம். சுருள் சுருளாக தலை முடி. வீட்டிலிருக்கும் நேரம் தவிர, எப்போதும் Polyester வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டை.

அவரது சிவப்பு நிற RAJDOOT-ல்... அவர் ஆரோகணித்து வரும் Style-ல், சத்தியமாய் அந்தக்கால எம்.ஜி.ஆர்., சிவாஜி தோற்றுப் போவார்கள்.

சிறு வயது, நினைவென்றால்...
குந்தாணிசுனை கிராமத்தில், பரந்து விரிந்து கிடக்கும் எங்களுக்குச் சொந்தமான கழனி வயல்களுக்கு நீர் பாய்ச்ச, பம்பு செட் விட, என்று என் அண்ணன் வரப்பில் நடந்து செல்லுவார்.

அவரது தோளில் நான்.

அப்போதெல்லாம் அண்ணன் ஒரு பாடலை,
அடிக்கடி பாடுவார்.

பெரியவனானதும்தான்....
அது என்ன பாடல்?
என்ன படம்॥?
அதற்கு என்ன அர்த்தம்?
என்று புரிந்தது.

"அன்பு சகோதரர்கள்" படத்தில்
"கண்டசாலா" பாடிய
"முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக,
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம், கண்ணுக்குக் கண்ணாக," பாடல் அது.

இபோதும் கூட அந்த பாடலைக் கேட்டாலே... என் கண்களில் நீர் சுரக்கத் துவங்கி விடும்.அந்தப் பாடலை எனக்காக ஒரு முறை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.



இந்தப் பாடலின் முதல் சரணத்தில்...,
"தாயாரும் படித்ததில்லை,
தந்தை முகம் பார்த்ததில்லை,
தாலாட்டு கேட்டதன்றி,
ஓர் பாட்டும் அறிந்ததில்லை.
தானாகப் படித்து வந்தான்,
தங்கமென வளர்ந்த தம்பி...!
தள்ளாத வயதினில் நான்...
வாழுகிறேன் அவனை நம்பி."

'(Sorry! இதை எழுதும்போதே அழுகை வருகிறது.)

என் அண்ணனுக்கு இபோது அறுபது வயது ஆகப் போகிறது. அவருக்கு நான்கு பிள்ளைகள்.

இருந்தாலும் அவர்களயெல்லாம் தாண்டி...,
அவரது மூத்தப் பிள்ளை நான் தான்.

அவர் என் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தார் என்றால்....

விபத்தில் நான் படுக்கையில் விழுந்த உடன்...,

முழுவதுமாக உடைந்து போய் விட்டர்.

இருபத்தைந்து வருடங்களாகியும்...,

இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

13 comments:

  1. வாழ்த்துக்கள் அந்தோணி அண்ணே! வாரம் முழுதும் கலக்குங்க! :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...அந்தோணி...

    //இந்த ஒரு வாரத்தில் என்னால் முடிந்த வரை நல்ல விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்.//

    முயன்றால் முடியாதது இல்லை.....கண்டிப்பாக கலக்கப் போகிறீர்கள்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. எல்லாமுமாக இருந்த அண்ணனுக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தித் தொடங்கியுள்ளீர்கள் வலைச் சர வாரத்தை. அவரது ஆசிகளுடனே அது அற்புதமாய் அமைய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள் அந்தோணி முத்து - மீள் பதிவு - நன்கு அமைந்துள்ளது

    ReplyDelete
  6. திகழ்மிளிர் said...
    //வாழ்த்துகள்//
    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி திகழ்மிளிர்...

    ReplyDelete
  7. சந்தனமுல்லை said...
    //வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சந்தனமுல்லை...

    ReplyDelete
  8. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வாழ்த்துக்கள் அந்தோணி அண்ணே! வாரம் முழுதும் கலக்குங்க! :)
    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி KRS ...

    ReplyDelete
  9. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ராமலக்ஷ்மி அக்கா...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி புதுகைத் தென்றல்...

    ReplyDelete
  11. cheena (சீனா) said...
    //நல்வாழ்த்துகள் அந்தோணி முத்து - மீள் பதிவு - நன்கு அமைந்துள்ளது//
    வாழ்த்துக்கு நன்றி அப்பா...

    ReplyDelete
  12. 'தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்' - லூக்கா நற்செய்தி 23:46

    இன்று (23.08.2010) காலை 10 மணியளவில் அந்தோணிமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (24.08.2010) காலை 11 மணிக்கு அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், பெரியநாயகி நகரில் நடைபெறும்.

    "Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46

    Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.

    Funeral Mass will be offered at 11.00 a.m. on August 23, 2010, 11.00 a.m. at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது