அவளுக்கும் தமிழ் என்று பேர்...
வணக்கம் நண்பர்களே.. இந்த வாய்ப்பை அளித்த சீனா அவர்களுக்கு மிக்க நன்றி.
என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என காதல் கவிதைகளையே எழுதி அழிச்சாட்டியம் செய்கிறது என் விரல்கள்... ஏண்டா காதல் கவிதைகள் உனக்கு சலிக்கவே சலிக்காதா என என்னைக் கேட்கும் பலருக்கு என்னால் புன்னகையையே பதிலாகத் தர முடிகிறது... எங்கு சென்றாலும் துரத்தி துரத்தி வரும் காதலை என்னால் துரத்தவே முடியவில்லை... துரத்தவும் எனக்கு உள்ளூர விருப்பமே இல்லை... காதலை மடியில் வைத்து கொஞ்ச கொஞ்ச இன்னமும் எழுத ஏராளமான காதல் கொஞ்சலுக்காக விம்மிக் காத்துக்கிடப்பது உணர்கிறேன்... என் கவிதைகளிளும் உணர்த்த முயற்சித்திருக்கிறேன்.. ஆதலினால் என் கவிதைகளில் காதலின் மோகனதாண்டவம்...
அழகானவர்களுக்குத்தான் காதல்கைவரப்பெறுமா என்ன...?? காதல் அழகு பார்ப்பதில்லை... கவனித்துப்பாருங்கள்.. காதலாகப் பார்த்தாலே எல்லாமே எல்லாருமே..அழகுதான்.... அவளை கொஞ்சலாகப் பாருங்கள்... சிணுங்கலாகக் கேளுங்கள்... கொஞ்சம் கொஞ்சிப்பாருங்கள் ... கொஞ்சம் மிஞ்சிப்பாருங்கள்... செல்லமாகச் சீண்டிப்பாருங்கள்... அள்ளி முத்தமிட்டுப்பாருங்கள்....எந்த வயதிலும்... எந்த நிலையிலும்....
எல்லாக் காதலிகளும் அழகான தேவதைகளாகத்தான் இருக்க வேண்டுமா என்ன..?? காதலில் புற அழகைவிட மிக அழகானது அகஅழகுதான்..
ஏதும் சூடிக்கொள்ள வேண்டாமடி
காதல் மட்டும் சூடிக்கொள்
அழகு உன்னைத் தானாக
சூடிக்கொள்ளும்...
அழகான காதல்.. அழகான ஊடல்.. அழகான தேடல்..அழகான கொஞ்சல்
குழைவான கெஞ்சல்... ரசியுங்கள் காதல் கணங்களை....
|
|
வாங்க அண்ணன் ஆரம்பமே அமர்க்களம்...:)
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் காதல்சரம் மட்டும்தான் என்பது என் எண்ணம்...
ReplyDeleteதமிழ் என்கிற பெயரே ஒரு வசீகரமான பெயர்தானே அண்ணன்..
ReplyDelete***
இந்தப்பின்னூட்டத்துக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது...!
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் நவீன்
ReplyDeleteஅழகான ஆரம்பம். காதல் என்றாலே ஒரு ரசிக்கத்தக்க பதிவு வந்து விடுகிறது. எந்த வயதிலும்... எந்த நிலையிலும்....
ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் நவீன் - ஆசை தீர அள்ளித் தருக பதிவுகளை - பல காதல் கவிதைகள் - பதிவுகளாக இருக்கின்றன - தேடிப்பிடித்து அறிமுகப் படுத்துக
காதல் வெற்றி - காதல் தோல்வி - காதல் சோகம் - காதல் மகிழ்ச்சி - காதல் குறும்பு - காதல் விளையாட்டு - அத்தனை பதிவுகளையும் அறிமுகப் படுத்துக
நமக்கு பிடிச்சது உங்க, அப்பா கவிதைதான்
ReplyDeleteவாழ்த்துக்கள் நவீன். அருமையான தொகுப்பு தங்கள் படைப்புக்கள். தொடர்ந்து நல்ல பதிவுகளை, பதிவர்களை அடையாளம் காட்டுங்கள்.
ReplyDeleteஆரம்பமே அசத்தல்!!!!
ReplyDeleteவாழ்த்துகள் நவீன்!!!!!
வாங்க தல... வந்து கலக்குங்க :))
ReplyDeleteஅசத்தல் ஆரம்பம்... வாழ்த்துக்கள் நவீன்
ReplyDeleteஅறிமுக 'சரம்' கலக்கல்ஸ்:))
ReplyDeleteவாழ்த்துக்கள் 'கவிஞரே'!!!
நல்வரவு
ReplyDeleteகாதலை தவிர வேறதும் எழுதினால் சந்தோசப்படுவேன்
அசத்தலான தொகுப்பு! தூள் கிளப்புங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் அசத்தலை எதிர்பார்த்திருக்கிறேன்.
valaichara aasiriyaruku valthukkal
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரத்துல காதலா மணக்கும் ;)
ReplyDeleteவாழ்த்துக்கள் நவீன்
// தமிழன்...(கறுப்பி...) said...
ReplyDeleteவாங்க அண்ணன் ஆரம்பமே அமர்க்களம்...:)
வாழ்த்துக்கள்... //
வணக்கம் தமிழன்... மிக்க நன்றி.. :))
//தமிழன்...(கறுப்பி...) said...
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் காதல்சரம் மட்டும்தான் என்பது என் எண்ணம்...//
ம்ம்ம்... அப்படியா என்ன..? பார்க்கலாம்...:))
//தமிழன்...(கறுப்பி...) said...
ReplyDeleteதமிழ் என்கிற பெயரே ஒரு வசீகரமான பெயர்தானே அண்ணன்..
***
இந்தப்பின்னூட்டத்துக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது...! //
ஆம்.. தமிழ் என்பதே ஒரு கவிதை
போலத்தானே இருக்கிறது....!! :)))
காப்புரிமையா..????? :))))
// திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள் //
வணக்கம் திகழ்மிளிர்...
மிக்க நன்றி.. :))
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் நவீன்
அழகான ஆரம்பம். காதல் என்றாலே ஒரு ரசிக்கத்தக்க பதிவு வந்து விடுகிறது. எந்த வயதிலும்... எந்த நிலையிலும்....
ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் நவீன் - ஆசை தீர அள்ளித் தருக பதிவுகளை - பல காதல் கவிதைகள் - பதிவுகளாக இருக்கின்றன - தேடிப்பிடித்து அறிமுகப் படுத்துக
காதல் வெற்றி - காதல் தோல்வி - காதல் சோகம் - காதல் மகிழ்ச்சி - காதல் குறும்பு - காதல் விளையாட்டு - அத்தனை பதிவுகளையும் அறிமுகப் படுத்துக //
வணக்கம் சீனா...:))
வாய்ப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
// பாபு said...
ReplyDeleteநமக்கு பிடிச்சது உங்க, அப்பா கவிதைதான் //
வணக்கம் பாபு... :))
அப்பா கவிதை பிடித்ததா..?
மிக்க நன்றி... :)))
//சதங்கா (Sathanga) said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நவீன். அருமையான தொகுப்பு தங்கள் படைப்புக்கள். தொடர்ந்து நல்ல பதிவுகளை, பதிவர்களை அடையாளம் காட்டுங்கள்.//
வணக்கம் சதங்கா.. :)))
தங்களின் வாழ்துகளுக்கும் ஊக்கங்களுக்கும் மிக்க நன்றி...:)))
// எழில்பாரதி said...
ReplyDeleteஆரம்பமே அசத்தல்!!!!
வாழ்த்துகள் நவீன்!!!!! //
வணக்கம் எழில்... :)))
மிக்க மகிழ்ச்சி.. :))
// ஜி said...
ReplyDeleteவாங்க தல... வந்து கலக்குங்க :)) //
வணக்கம் ஜி...
மிக்க நன்றி ஜி... நான்
தல எல்லாம் இல்லீங்க... :)))
//இவன் said...
ReplyDeleteஅசத்தல் ஆரம்பம்... வாழ்த்துக்கள் நவீன் //
வணக்கம் இவன் :)))
மிக்க நன்றி !! :))
// Divya said...
ReplyDeleteஅறிமுக 'சரம்' கலக்கல்ஸ்:))
வாழ்த்துக்கள் 'கவிஞரே'!!! //
வணக்கம் திவ்யா.. :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... :))
// வால்பையன் said...
ReplyDeleteநல்வரவு
காதலை தவிர வேறதும் எழுதினால் சந்தோசப்படுவேன் //
வணக்கம் வால்பையன்...
அப்படியா..?? முயற்சிக்கிறேன்..:))
மிக்க நன்றி.. :))
//Thamizhmaangani said...
ReplyDeleteஅசத்தலான தொகுப்பு! தூள் கிளப்புங்க... //
வணக்கம் தமிழ்மாங்கணி...
அசத்தலான வருகைக்கும் வாழ்துக்கும்
மிக்க நன்றி.. :))
//இறக்குவானை நிர்ஷன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்கள் அசத்தலை எதிர்பார்த்திருக்கிறேன். //
வணக்கம் நிர்ஷன்.. :))
மிக்க நன்றி... வருகைக்கும் தோழமையான
தருகைக்கும்... :))
// புதுகைத் தென்றல் said...
ReplyDeletevalaichara aasiriyaruku valthukkal //
வணக்கம் புதுகைத் தென்றல் :))
மிக்க மகிழ்ச்சி... :))
// பிரேம்குமார் said...
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரத்துல காதலா மணக்கும் ;)
வாழ்த்துக்கள் நவீன் //
வணக்கம் ப்ரேம் :)))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. :)))
அவளுக்குத் தமிழ் மட்டும் பெயர் அல்ல....அகில உலக மொழிகள் எல்லாமும்தான் .....எல்லா மொழிகளிலும் காதல் அழகுதான்...
ReplyDeleteஅன்புடன் அருணா
//Aruna said...
ReplyDeleteஅவளுக்குத் தமிழ் மட்டும் பெயர் அல்ல....அகில உலக மொழிகள் எல்லாமும்தான் .....எல்லா மொழிகளிலும் காதல் அழகுதான்...
அன்புடன் அருணா //
வணக்கம் அருணா.. :))
ஆம் காதலுக்கு பல மொழிகள்தான்... இங்கு காதலே தமிழ் என்றுதான் சொல்ல வந்தேன்.. :))))
மிக்க நன்றி.. !!