07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 9, 2008

இனிய முத்தங்களுடன்....




முத்தம்... மிக அழகான... மென்மையான... உற்சாகமான... நேசமான .. ஒரு நிகழ்வு காதலில்...
பாலும் தேனும் கலந்தது போன்ற சுவை உடையது காதலியின் வாயில் ஊறிய நீர் என இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கிழவனார் எம் தாத்தா திருவள்ளுவரின் வாக்கின்படி
முத்தம் தரும் சுவையினையும் இன்பங்களையும் அள்ளி அள்ளி பருகிய பருகிக்கொண்டிருக்கிற பரம்பரை நாம்...
வெறும் சத்தங்களால் உருவாவது இல்லை முத்தங்கள்... இதழும் இதழும் மட்டும் அங்கு
பின்னிப்பிணைவதில்லை... அங்கே இதயமும் இதயமும் இரண்டறக்கலந்து ஏற்படுத்தும் ஓர் ஒத்ததிர்வு...
முத்தம் இல்லாத காதல் என்ன காதல்...? ரத்தம் தோய்ந்த வாட்கள் யுத்ததிற்கு அழகுபோல முத்தம்
தோய்ந்த இதழ்கள் காதலுக்கு அழகு... ஈரமான இதழ்களோடு வாருங்கள்... இணையத்தின் சில
பிரபல கவிஞர்களில் முத்த சத்தம் எப்படி இருக்கிறதென கேட்போம்...


மிகப்பெரும் கவிஞர்.. இனிய தோழர்.. வார்த்தைகளுக்குகூட வலிக்கும் என்ற அளவுக்கு மென்மையாகப்
பேசும் இனிய நண்பர் கவிஞர் சேவியர் அவர்களின் தளம் ஒரு கவிதை கடல்... இவரின் தளம் புகுந்தால்
வருடமெல்லாம் இன்பமாக நீந்திக்கொண்டே இருக்கலாம்...

எதையும் தடுமாறாமல்
தாங்கிக் கொள்ள
முடியும்
உன்
மெல்லிய
முத்தத்தைத் தவிர


முத்தத்தைக் கூட தோழர் சேவியர் மெல்லினமாகக் குறிப்பிடுவதிலேயே தெரிகிறது ஏன் மலரினும் மெல்லிது
என கூறினார்களென...

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்

என்று தான்
நினைத்திருந்தேன்.

உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.


முத்தம் வெறும் இதழில் வழியும் அமுதம் மட்டுமல்ல...அது உயிரில் கலந்த அமுதம் என மிக அழகாக
முத்தமுணர்த்துகிறார்....

அமராவதி ஆற்றங்கரையிலமர்ந்துகொண்டு மழைகாலங்கள் தவிர மற்றகாலங்களில் அமராவதி வற்றினாலும்
வற்றாத கவிதைகளை இணையமெங்கும் ஓடவிட்டுக் காதலால் நனைத்துக்கொண்டிருக்கும் இனிய நண்பர்
கவிஞர் அருட்பெருங்கோவின் முத்த வரிகளைப் பாருங்களேன்...

உன்னைப்போலவே உனது
முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.

முதல் நாளின் கடைசி முத்தம்

அடுத்த நாளின் முதல் முத்தத்தை

சந்திக்கும் வரை
உறங்குவதேயில்லை.


கவிஞரின் கவிதைகளில் காதலும் இதழ்களும் என்றுமே உறங்குவதில்லை...


காதலோடு இதழ்களில் கொடுக்கப்பட்ட முத்தம் ஏற்படுத்தும் இனிய உணர்வுகளை
தோழி சத்தியா மிக மிக நுட்பமாக காதல் குன்றாமல் காதலான வரிகளால் உணர்த்துகிறார்
பாருங்கள்...

செவ்விதழ்
என் இதழ் மீது உரச
இமைகள் செருக
கரங்கள் இறுக்கி
சுரங்கள் மீட்டி…

நொடிக்குள் பல யுகங்கள்
தொலைந்து
நாடி நரம்புகள் புடைக்க
நளின நெளிதலுக்குள்
இன்பத் தேன் பருகி…

ம்!…
தந்தாயே
தித்திப்பாய் ஒரு முத்தம்!


தோழி சத்தியாவின் கவிதைகள் அனைத்துமே முத்தங்களைப் போலவே

படிக்க படிக்க சலிக்காது மேலும் மேலும் கொஞ்சத்தூண்டும் ...



காதலில் ஒரு சிறு முரட்டுதனம் எப்பொழுதுமே காதலிகளால் ரசிக்கப்படுகிறது...

உன் அணைப்பு வேண்டுமானால் முரட்டுத்தனமாய் இருக்கட்டும் ஆனால் முத்தங்கள்

என்றுமே மென்மையாய் இருக்க வேண்டும் என மிக அழகான வரிகளால்

முத்தமுணர்த்தியிருக்கிறார் தோழி எழில்பாரதி....


முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!


தோழியின் தளம் எங்கும் காதல் அருவியாய் முத்தமழையாய் பொழிந்துகொண்டிருக்கிறது...


முத்தம் எப்பொழுதும் இதழ்களில் மட்டும் தான் தரவேண்டுமா என்ன... எங்கு முடிகிறதோ

அங்கேயே பதிக்கலாம் என குறும்பாக இதழ் பதித்திருக்கிறார் தோழர் ஸ்ரீ . ஒற்றை அன்றிலாய்

தன் இணைஅன்றிலைத் கவிதைகள்தோறும் தேடியிருக்கிறார் கவிஞர் ஸ்ரீ...


உதட்டில் முத்தமிடவந்தால்

வழிமறித்துவிடுகிறாய்..

அந்த அழகைப் பார்த்து

முத்தங்களை

உன் கண்களிலேயே

தரையிறக்கிவிடுகிறேன்

எப்போதும்...


அழகான தரையிறக்கம் இதழ்களுக்கு அல்லவா.??



இந்த வாரம் முழுதும் நான் படித்த... படித்துக்கொண்டிருக்கிற பல்வேறு

காதல் கவிஞர்களைப் பற்றி கூற எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த சீனா

அவர்களுக்கும்... பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றிகள்...

இனிய முத்தங்களுடன் உங்களுடனிருந்து விடை பெறுகிறேன்... வணக்கம்...





16 comments:

  1. அன்பின் நவீன்

    இறுதிப் பதிவாக முத்தப் பதிவு - எத்தனை கவிஞர்கள் முத்தத்தை எப்படி எல்லாம் வர்ணித்திருக்கிறார்கள் - அவ்வர்ணனைகளைச் சுட்டிக்காட்டி அறிமுகப் படுத்தியது நன்று நன்று.

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. கவிஞர்களின் 'முத்த'வரிகளுடன் முத்தச்சரம் தொடுத்து உங்கள் வலைசர வாரத்தை முடித்திருப்பது அழகு!!

    கடந்த ஒரு வார காலமாக பல கவிஞர்களின் அற்புத படைப்புகளை கோடிட்டு காட்டி அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி!

    தொடரட்டும் உங்கள் 'கவி' பயணம்......வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  3. நன்றி நவீன்...

    ஒரு வாரக் காலம் வலைச்சரம் காதலாய் மலர்ந்து மனம் வீசியது...

    வாழ்த்துகள் நவீன்!!!!

    ReplyDelete
  4. பல கவிஞர்களின் படைப்புகளையும் வலைப் பூக்களையும் அறியத்தந்தமைக்கு நன்றி உங்கள் அடுத்த படைப்பை கூடிய விரைவில் எதிர் பார்க்கிறோம்... வாழ்த்துக்கள் நவீன்.

    ReplyDelete
  5. cheena (சீனா) said...

    // அன்பின் நவீன்

    இறுதிப் பதிவாக முத்தப் பதிவு - எத்தனை கவிஞர்கள் முத்தத்தை எப்படி எல்லாம் வர்ணித்திருக்கிறார்கள் - அவ்வர்ணனைகளைச் சுட்டிக்காட்டி அறிமுகப் படுத்தியது நன்று நன்று.

    நல்வாழ்த்துகள்//

    வணக்கம் சீனாசார்....

    இந்த அரிய வாய்ப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி... :))

    ReplyDelete
  6. // Divya said...

    கவிஞர்களின் 'முத்த'வரிகளுடன் முத்தச்சரம் தொடுத்து உங்கள் வலைசர வாரத்தை முடித்திருப்பது அழகு!!

    கடந்த ஒரு வார காலமாக பல கவிஞர்களின் அற்புத படைப்புகளை கோடிட்டு காட்டி அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி!

    தொடரட்டும் உங்கள் 'கவி' பயணம்......வாழ்த்துக்கள்!!!! //

    வாருங்கள் திவ்யா.. :))

    அழகான வருகைக்கும் தொடர்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.. :)))

    ReplyDelete
  7. //எழில்பாரதி said...

    நன்றி நவீன்...

    ஒரு வாரக் காலம் வலைச்சரம் காதலாய் மலர்ந்து மனம் வீசியது...

    வாழ்த்துகள் நவீன்!!!!//

    வாருங்கள் எழில்..:))

    தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி... :)))

    ReplyDelete
  8. //புதியவன் said...

    பல கவிஞர்களின் படைப்புகளையும் வலைப் பூக்களையும் அறியத்தந்தமைக்கு நன்றி உங்கள் அடுத்த படைப்பை கூடிய விரைவில் எதிர் பார்க்கிறோம்... வாழ்த்துக்கள் நவீன்.//

    வாருங்கள் புதியவன்.. :)))

    தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..:)))

    ReplyDelete
  9. அன்பின் நவீன்.... அன்பினால் நிரப்பி திணறடித்து விட்டீர்கள். :) நன்றி

    ReplyDelete
  10. //Xavier said...

    அன்பின் நவீன்.... அன்பினால் நிரப்பி திணறடித்து விட்டீர்கள். :) நன்றி//

    வாருங்கள் சேவியர்.. :)

    தங்களின் வருகையும் தருகையும் நிரம்ம மகிசழ்ச்சியளிக்கிறது... :)

    ReplyDelete
  11. முத்தமா அப்படின்னா...:)

    ReplyDelete
  12. ஒரு வாரம் முழுவதும் காதல் சொன்ன நவீன் அண்ணனுக்கு...

    வாழ்த்துக்கள்...


    நன்றி...!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது