07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 6, 2008

தொலைந்த‌போது....





பெண்மை என்றாலே மென்மை... நேர்த்தி... அன்பு... பாசம் .. நேசம்...
காதல்... என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது... பெண்ணின் மனது மட்டும் ஆழம் இல்லை... அவளின் முடிவுறா நேசமும் தான்... நிராகரிப்பும்... நிராகரிப்பின் வலிகளும்... நிராகரிப்பின் கோபமும்... நிராகரிப்பின் ஏக்கமும் நம் பெண் கவிஞர்களின் கவிதைகளில் நீக்கமற பூத்துக்கிடக்கின்றன்... தடமெங்கும் கொட்டிக்கிடக்கும் பூக்களிடையே கூடப் பூத்துக் கிடக்கும் முட்கள் போலே ஆங்காங்கே வார்த்தை அம்புகள் இதமாக தைக்கின்றன வாசிக்கும் இதயத்தை...

தோழி இனியவளின் வலையெங்கும் வலிகளின் வீச்சு அதிகமாகத் தென்படுகிறது. இவரின் தளத்தை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள்... காதலை... காதல் தரும் வலிகளைக் கூட மிக அழகான வார்த்தைகளால் எளிய தமிழில் மிக அழகாக படைத்துள்ளார்...

நட்பாய் என்னில் அமர்ந்து
காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான
எனது
நாட்குறிப்பின்
நனைந்து போன பக்கங்கள்
கண்ணீரில்....


என ஆரம்பித்து இவர் படைத்துள்ள கவிதைகள் சுகமான சோகம்...

ஏராளமான கோபங்களோடும் வலிகளோடும் வரிகளை பிரசவித்திருக்கும் தோழியின் கவிதைகள் என்னதான் கோபம் இருந்தாலும் பெண்மைக்கே உரிய தாய்மையோடு தன் காதலனுக்கு வழங்கியிருக்கும் வாழ்த்து தண்டனை மிக அழகு...

எங்கிருந்தாலும் உந்தன்
இந்நாள்
காதலையாவது நீ
நம்பிக்கையோடு எதிர்கொண்டு
நலமாக வாழ ...

இன்றும் வேண்டுகிறேன்

இறைவனிடம் ....

இனியவளாய் !!!.....



தோழி மேகாவின் தளம் நுழைத்தாலே பசுமை சோலைக்குள் விழுந்தது போல தளமெங்கும் அன்பின் வாசனை.... மழைபெய்த வீதியை நனைத்துவிட்டுப் போகும் இளங்சூட்டுச் சூரியன் போலே அழகான வரிகளுக்குள் மெலிதான சோகங்களை மென்மையாக மலரவிட்டு இருக்கிறார்...

நட்சத்திரங்கள் எரிந்த போன இரவிலும்
நிலாக்கள் மரிந்து போன அறையிலும்

உன்னோடு நான் மட்டும் பேசிக்கொள்ள

இருட்டு பிரசவத்தில்

இதயத்தில் ஈன்றெடுக்கிறேன்

எல்லாம் கடந்த பின்னும்

விரும்பியே கொன்ற பின்னும்

புதுப்பித்து புதுப்பித்து
என்னுள்
புதைத்து வைக்கிறேன்
நேசம் கொள்ள நாளெல்லாம்


நிலாக்கள் மரித்துபோன அறையில் பிரசவிக்கப்பட்ட இதயத்தின் வரிகள் அழகான வலிகள்...


குடையிருந்தும் நனைவதாகச் சொல்லிவிட்டு தளத்தில் நுழையும் நம்மையும் சேர்த்து தன் இதமான கவிதை வரிகளால் நனையவிட்டு மழையில் நனையும் இன்பம் காட்டும் தோழி லக்ஷ்மி சாஹம்பரியின் நிலாக்காலக் கவிதைகள்....


அறிவிப்பற்ற மழையாய்
நீ என்னை
நனைக்கத்
தொடங்கிய பொழுதில்

உனக்கான தாகம் வற்றத் துவங்கி

உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது

உன்னைகாட்டிலும் போலியானது

என் காதலை கொழுத்து வளரவிட்ட

உன்னைபற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..


சாதரண வார்த்தைகள்தான்.. கோர்த்திருக்கும் விதத்தில் மிக அழகான மாலையாய் மீண்டும் மீண்டும் சூடிக்கொள்ளத்தோன்றுகிற‌து... சூடியபின் கனத்துபோகிறது வாசித்த மனதும்...

பிரிவின் வலி உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்... வலிகளையும் சுகமாக ஏற்றுக்கொள்வது பெண்மைக்கே உரிய உயரிய குணம் என்பதை தோழி மது வின் தளம் விளைந்த அழகான கவி வரிகள் உணர்த்துகின்றன...

அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின்
பதிவுகள்
அப்படியே
தலைகீழாக

துக்கத்தை
தருகின்றன ?

என சாதாரணமாக கேட்டுவிட்டுச் செல்லும் வரிகளில் காதலின் ரணம் ஆழமாக உணரப்படுகிறது...

ல்லையற்று குவியும்
உன் நினைவு தரும்
கனவுகளுக்குள்
என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!

இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
மன்னித்துவிடு இனியும்
இரங்காதாம் என் இதயம் ..
அட இன்னுமா போகவில்லை
...
சீக்கிரம்..!!


இதைவிட பிரிவின் வலியை மிக அழகாக மென்மையாக சொல்லமுடியுமா..? ஒரு தாய் தன் குழந்தையை செல்லமாக‌ அதட்டுவதுபோல மிக மென்மையாக எழுதியிருக்கிறார்...

இதமான சாரலில் நனைய ஆசையா..? வாருங்கள் தோழி நாணலின் தளத்திற்கு... வேகமாக‌ நடக்க வேண்டாம்... மழைநாளில் நாணல்கள் தழுவ சோலையில் நடப்பதைப் போன்ற‌ உணர்வைத்தரும் இதமாக வரிகள் இவர் தளம் நெடுகிலும்... மெதுவாக ரசித்து நனையுங்கள்...

மழைக்கு மறியல் செய்து
குடையோடு
செல்லும் பலர்
எனை
பார்த்தனர் பரிதாபமாக..
பெருமிதத்துடன்
சொல்லிக் கொண்டேன்
நான் நனைவது

மழையில் அல்ல
உன் நினைவில்..



என்னதான் அதட்டினாலும் அடங்காது மீண்டும் மீண்டும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுத் தப்பி ஓடும் அலைகள் போலே அடங்கமாட்டாமல் மீண்டும் மீண்டும் வரும் காதல் நினைவுகளை அதட்டாமல் மிக அழகாக அரவணைத்து செல்லும் வரிகள்... மிக ரசனையோடு எழுதியிருக்கிறார்...


வலிகளான வரிகளையும் வளமையாக தந்திருக்கும் கவிஞர்கள் மேன்மேலும் கவிமழையில் அனைவரையும் இதமாக நனையவைக்க வாழ்த்துகள்...

18 comments:

  1. காதல் கவிதை மழையில் நனைய வைக்கிறீர்கள் நவீன்!

    நல்ல அறிமுகங்களை வெளிக் கொணர்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  2. ஏற்கெனவே அறிமுகமாகிய பதிவுகள் என்றாலும் மீண்டும் படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. ஜஸ்ட் அட்டெடன்ஸ் மார்க்டு - ஐ வில் கம் பேக் எகெயின்

    ReplyDelete
  4. அருமையான பதிவுகள்!!!

    தொடருங்கள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  5. 'வலி'தனை வெளிப்படுத்தும் கவிதை தளங்களை அருமையாக சரம் தொடுத்தளித்துள்ளீர்கள், பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  6. //வெயிலான் said...

    காதல் கவிதை மழையில் நனைய வைக்கிறீர்கள் நவீன்!

    நல்ல அறிமுகங்களை வெளிக் கொணர்கிறீர்கள். நன்றி!//

    வாருங்கள் வெயிலான்....

    மிக்க மகிழ்ச்சி... மேன்மேலும் நனைய வாருங்கள்... :))

    ReplyDelete
  7. // Aruna said...

    ஏற்கெனவே அறிமுகமாகிய பதிவுகள் என்றாலும் மீண்டும் படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
    அன்புடன் அருணா //

    வணக்கம் அருணா... :)))

    மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்.. !

    ReplyDelete
  8. // cheena (சீனா) said...

    ஜஸ்ட் அட்டெடன்ஸ் மார்க்டு - ஐ வில் கம் பேக் எகெயின் //

    வணக்கம் சீனா சார்... :)
    மிக்க மகிழ்ச்சி.. !

    ReplyDelete
  9. //எழில்பாரதி said...

    அருமையான பதிவுகள்!!!

    தொடருங்கள் வாழ்த்துகள்!!! //

    வாருங்கள் எழில்...
    மிக்க நன்றி...தவறாத வருகைக்கும் தருகைக்கும்.. :)))

    ReplyDelete
  10. //Divya said...

    'வலி'தனை வெளிப்படுத்தும் கவிதை தளங்களை அருமையாக சரம் தொடுத்தளித்துள்ளீர்கள், பாராட்டுக்கள்!!//

    வாருங்கள் திவ்யா... :)))

    அழகாக தொடுத்தளித்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !!!

    ReplyDelete
  11. சுட்டி காட்டியமைக்கு நன்றி நவீன்... :)

    ReplyDelete
  12. thank you so much naveen :) appreciated it. Naane yosikkatha maathiri ennoda kavithiaya solli irukinga. so nice of you :) thanks again.

    ReplyDelete
  13. பெண்மை காதல் சொல்கிறது மட்டுமல்ல கவிதை சொல்கிற விதமும் தனிதான் அண்ணன்...:)

    ReplyDelete
  14. இது என்ன மாதம்?

    காதல் கவிதை மழை பொழிவதைப் பார்த்து பிப்ரவரியோ என்று குழம்பிவிட்டேன்.

    :))))

    ReplyDelete
  15. // நாணல் said...

    சுட்டி காட்டியமைக்கு நன்றி நவீன்... :) //

    வாருங்கள் நாணல்.. :))

    மிக்க நன்றி வருகைக்கு.. !!

    ReplyDelete
  16. // Mathu said...

    thank you so much naveen :) appreciated it. Naane yosikkatha maathiri ennoda kavithiaya solli irukinga. so nice of you :) thanks again.//

    வாருங்கள் மது.. :))

    நீங்களே யோசித்த மாதிரி சொல்லி இருக்கேனா..? மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. :)))

    ReplyDelete
  17. //தமிழன்...(கறுப்பி...) said...

    பெண்மை காதல் சொல்கிறது மட்டுமல்ல கவிதை சொல்கிற விதமும் தனிதான் அண்ணன்...:) //

    வாருங்கள் தமிழன்.... :)))

    ஆம் முற்றிலும் சரிதான்... கவிஞருக்கு தெரியாததா என்ன..? மிக்க நன்றி தமிழ்...:)))

    ReplyDelete
  18. //புதுகைத் தென்றல் said...

    இது என்ன மாதம்?

    காதல் கவிதை மழை பொழிவதைப் பார்த்து பிப்ரவரியோ என்று குழம்பிவிட்டேன்.

    :)))) //

    வாருங்கள் தென்றலே... :)))

    அட பிப்ரவரியில் தான் காதல் மழை பொழியும் என தவறாக நினைக்காதீர்கள்... காதலுக்கு
    தினம் ஏது..?? தினந்தோரும் காதலே... :)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது