07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 13, 2008

என்றென்றும் புன்னகை..வாழும் புன்னகை!

விவசாயத்தை, நம் நாட்டின் முதுகெலும்பை பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துகள் எவ்வளவு செறிவானவை!!

ரயில் நிலையமோ அல்லது கடைகளோ..எங்கு படிக்கட்டுகளைப் பார்த்தாலும் இந்தக் கட்டுரை ஒரு முறை நினைவுக்கு வந்துப் போகும்!!வாழ்க்கை என்னும் பிசாசு..!

நடைவண்டியின் கிராமத்துக் கதைகளும் படிக்க நன்றாயிருக்கும்!

அடுத்ததாக,

இவரது எழுத்துக்களினாலும், இவர் எழுதிய ஒரு புத்தகத்தினால் மட்டுமே எனது கண்ணோட்டம் மாறியது என்று சொன்னால் அது மிகையல்ல! இவரது வலைப்பூவை படிக்கும்வரை ஒருவித அச்சத்தோடும், திருநங்கைகளை குறித்து எந்தவொரு பிரக்ஞையுமின்றியே இருந்திருக்கிறேன்! அவர்கள் எதிர்வரும்போது வித்தியாசமாய் நோக்கியிருக்கிறேன்..ஆனால், திருநங்கைகளும் மனிதர்களே..என்னைப் போன்ற பெண் வர்க்கமே என்று உணர வைத்தது அவரது வலைப்பூவும், அவரது புத்தகமும்!

நாம் எனும் அவரது கவிதை...

அவரது விரும்புவதெல்லாம் ஒன்றே !! அப்படியே அவரது இந்தக் கட்டுரையையும் படிச்சிடுங்க!! வாழ்க்கையை இயல்பாய் வாழவே எவ்வளவு போராட்டங்கள்!!

என்ன முரண் எனில், என்னைப் பாதித்த/ஈர்த்த இந்தப் பதிவுகளையெல்லாம் படித்திருக்கிறேனேயொழிய ஒரு பின்னூட்டம் கூட போட்டதில்லை! மறுமொழியாக சொல்வதற்கு வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பதே உண்மை!!

8 comments:

  1. இணைப்புகளை இப்போதே படித்து பார்க்கின்றேன்..

    ReplyDelete
  2. இணைப்புகளை இப்போதே படித்து பார்க்கின்றேன்.....//

    ஒரு ரிப்பீட்டு போட்டுகிட்டு படிக்க (சுட்டிகளைத்தான்) போறேன்.

    ReplyDelete
  3. அத்தனை சுட்டிகளும் அருமை :)

    ReplyDelete
  4. தேர்ந்தெடுத்துப் படிப்பீர்களோ.

    இதுவரை கொடுத்த எல்லாச் சுட்டிகளுமே அருமையாய் இருக்கின்றன்.

    ReplyDelete
  5. திருநங்கைகளும் மனிதர்களே..என்னைப் போன்ற பெண் வர்க்கமே என்று உணர வைத்தது அவரது வலைப்பூவும், அவரது புத்தகமும்!

    என்னைப் போன்ற பெண் வர்க்கமே!!!
    செவிட்டில் அறைவது போல் இருக்கிறது இவ்வரிகள்.

    ReplyDelete
  6. வித விதமான ரசனைகள், நல்ல ஆரோக்கியமான படைப்புக்களை இனங்கண்டு வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. வித விதமான ரசனைகள், நல்ல ஆரோக்கியமான படைப்புக்களை படித்து நினைவுகளில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்:)

    ReplyDelete
  8. வித்தியாசமா கொடுத்து இருக்கீங்க... நன்றிகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது