07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 14, 2008

சாரலும்,மலர்வனமும் கொஞ்சம் யாழன் ஆதி கவிதையும்!

யாழன் ஆதி..கோபமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். யோசித்துப் பார்த்தால் அந்தக் கோபத்திலும் நியாயமிருப்பதாய் படுகிறது!!
குட்டக் கொழப்பியின் பதிவில் யாழன் ஆதி கவிதை! அன்பு என்பவரின் அன்பின் பக்கங்களில் இருக்கும் இன்னொரு கவிதை!

மலர்வனம் லஷ்மி..அவரது சமூகம் எனும் லேபிளின் கீழ் வரும் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன்..சில பதிவுகளைத் திரும்பத் திரும்ப!! அவரது அநேகக் கருத்துக்கள் எனக்குமிருந்ததுண்டு, ஆனால் சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, சொல்லிவிடும் அவரது மொழிநடையின் பாங்கை கண்டு பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு கைவராத அந்த வித்தையை ஒரு ஏக்கத்தோடு!!

ஒருபோதும் பின்னூட்டமிட்டதில்லையெனினும்
வசந்தனின் பதிவுகளையும், சயந்தனின் பதிவுகளையும் தவற விட்டதில்லை!

வசந்தனின் ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்? அவரது கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான் மேலும் கவளம் - ஒரு நினைவு.அந்தத் தமிழில் படிக்க இன்னும் இனிமை!!

இதையும் படியுங்களேன்..எலியுஞ் சேவலும்

சயந்தனின் பதிவுகள் சுவாரசியமாகவும், சில பதிவுகள் மனதை நெகிழ்த்துபவையாகவும், ஒரு சில கிண்டலுடன் யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவையுடனும்..இருக்கும்!!
அவரின் நடையில் அந்தக் கண்களும் சில காதல்களும் மேலும் நினைவழியா நாட்கள்!! ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சயந்தனுக்கு வலைச்சரத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!! :-))

நாளைக்கு எட்டிப்பார்க்க முடியாது போகலாம என்பதால் இன்றே பதிவிடுகிறேன்!!

6 comments:

  1. நன்றி சந்தனமுல்லை.

    ReplyDelete
  2. //யாழன் ஆதி..கோபமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர்//

    எனக்கு புதிதாய்...!
    படிக்க தொடர்கிறேன்!

    //மலர்வனம் லஷ்மி..அவரது சமூகம் எனும் லேபிளின் கீழ் வரும் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன்..//

    எழுதுவதை குறைத்துக்கொண்டாலும் தொடரும் பதிவுகளில் தொடர்ந்துக்கொண்டிருக்கிறேன்! சமூகம் தொடர்பான பல பதிவுகள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒரு சேர தெளிவாக எடுத்துரைக்கும் விதமான பதிவுகள் !

    //சயந்தனின் பதிவுகள் சுவாரசியமாகவும், சில பதிவுகள் மனதை நெகிழ்த்துபவையாகவும், ஒரு சில கிண்டலுடன் யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவையுடனும்..இருக்கும்!! //

    உண்மை அவ்வப்போது சென்று வருகிறேன் சிறப்பாக இருக்கிறது சயந்தன் அண்ணாவின் பதிவுகள் :)

    ReplyDelete
  3. கலக்கல் தொகுப்புக்கள்

    //உண்மை அவ்வப்போது சென்று வருகிறேன் சிறப்பாக இருக்கிறது சயந்தன் அண்ணாவின் பதிவுகள் :)//

    சயந்தன் அண்ணாவா சயந்தன் இதுக்கு மேலையும் உயிரோட இருக்க வேணுமா ;-)

    ReplyDelete
  4. கலக்கல்...:)
    ரசனையான தொகுப்புகள்...!

    ReplyDelete
  5. கானா பிரபா said...
    கலக்கல் தொகுப்புக்கள்

    //உண்மை அவ்வப்போது சென்று வருகிறேன் சிறப்பாக இருக்கிறது சயந்தன் அண்ணாவின் பதிவுகள் :)//

    சயந்தன் அண்ணாவா சயந்தன் இதுக்கு மேலையும் உயிரோட இருக்க வேணுமா ;-)
    \\

    ரிப்பீட்டு...!

    சயந்தண்ணா...
    என்ன கொடுமை இது ;)

    அயில்யன் அண்ணே இது ரொம்ப...:)

    ReplyDelete
  6. உங்களப் படிச்சா போதும், மிக நல்ல எழுத்துக்களையெல்லாம் படிச்சிடலாம் போல இருக்கே.

    கொடுக்கும் எல்லா லின்க்குகளும் நச்.
    சேமித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது