விடை கொடுத்தலும் வரவேற்றலும்
அன்பின் சக பதிவர்களே !
கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் அப்துல்லா ஆசிரியப் பொறுப்பேற்று அழகாக கொடுத்த பணியினை கடமை தவறாது நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஏழு பதிவுகள் இட்டு, ஏறத்தாழ முன்னூறுக்கும் அதிகமாக மறு மொழியும் பெற்று, ரசிகப் பெருமக்களை மகிழ்வித்துச் சென்றிருக்கிறார். பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார்.
அவருக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகளைக் கூறி வலைச்சரம் சார்பினில் விடை கொடுத்து வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
------------------------------------------------------------------------------------------------
அடுத்து நவம்பர்த் திங்கள் மூன்றாம் நாள் முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் நவீன் பிரகாஷ். இவர் "ஆதலினால்" என்றொரு வலைப்பூவின் சொந்தக்காரர். இவரது வலைப்பூவினில் பல பதிவுகள் இட்டிருக்கிறார். அனைத்துமே காதல் சம்பந்தப்பட்ட கவிதைகள் தான். அழகிய படங்கள் இணைந்த பதிவாகத் தான் கவிதைகளை படைப்பார். "குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !! " என்பதையே தனது தாரக மந்திரமாகக் கொண்டு காதல் சொல்வார்.
நண்பர் நவீன் பிரகாஷை வருக வருக என வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteமுதலில் சீனா அய்யா என்னை அழைத்தபோது தயக்கத்தோடு ஒப்புக்கொண்டேன். முதல் நாளில் எனக்கு கிடைத்த ஊக்கம் என் தயக்கத்தைப் போக்கியது. எனினும் மிகுந்த வேலைப் பளுவால் நான் நினைத்த பலவற்றை என்னால் செயல்படுத்த முடியவில்லை. மீண்டிம் விரைவில் அடுத்த ஒரு ரவுண்ட் வாய்ப்பு தருகிறேன் என்று உறுதி கூறிய சீனா அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. எனது அனைத்து பதிவுகளுக்கும் வருகை தந்து படித்து பின்னூட்டம் இட்ட,இடாத அனைவருக்கும் என் நன்றி!நன்றி!
ReplyDeleteஅப்துல்லா அண்ணனுக்கு நன்றிகளும், நவீன் பிரகாஷ்க்கு வாழ்த்துக்க்களும்!
ReplyDeleteசகோதரர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஅப்துல்லாவிற்கு பாராட்டுக்கள்.. பணிச்சுமைக்கு நடுவிலும் ஒரே வாரத்தில் 6 பதிவுகளை போட்டதும் சில பதிவர்களை அறிமிகப்படுத்தியதற்கும்..
ReplyDeleteபிராகாஷிக்கு வாழ்த்துக்கள்..