07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 18, 2008

இதுதாங்க ."மஸ்த்" பதிவு...!

"மஸ்த்" அப்பிடின்னா ஹிந்தியில,
ஜாலி-ன்னு நம்ம "ஜெய்ப்பூர் (வைஸ் ப்ரின்ஸி) அருணா மேடம்" சொன்னாங்க.

சரிதான். இன்னிக்கு தலைப்பு அதையே வச்சிடலாம்னு.... ஹி... ஹி...!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு.

தினமும் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்கத் தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார்.

பிச்சைக்காரன் பயந்து போனான்.

"எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?"

"நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!"

"இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க?"

"எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே!
யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்'"

"அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?"

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...
அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடித்துப் போனான்.

"சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான்.
நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ!"

கடைக்காரர் சிரித்தார். சுரண்டுவதை நிறுத்தவில்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

"ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!"

கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...
மெள்ள மெள்ள...
மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்கத்துவங்கியது.

பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

"அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,
இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசீல,
அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?"


இதே போலத்தான்... நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்...,
தன்னம்பிக்கை- யின்,
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,
உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


நம்முடைய ஆழ்மனம் ஒரு கம்ப்யூடருக்கு ஒப்பானது.

நாம் அதற்குக் கொடுக்கும் ஆணைகளுக்கேற்ப (Commands) அது செயல்படுகிறது.

"வெற்றி பெறுவோம்" என்ற ஆணையைக் கொடுத்தால்... வெற்றியைக் கொண்டு வரும்,
(அதற்கு பெரிய காரியம், சின்ன காரியம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல.)

மாறாக "தோற்றுப் போவோம்" என்ற ஆணையைக் கொடுத்தால் தோல்வியைத்தான் கொண்டு வரும்.

(நாம வெற்றியடைந்தால்; அதைவிட "மஸ்த்" [ஜாலி]
வேறு என்ன? ---தலைப்பக் கோத்து விட்டாச்சுங்களா--- )

:-)

ஆக நீங்கள் என்ன ஆணை கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

இப்போது....

உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....!


---------------------------------------

சரி! இன்றைய வலைப்பூ அறிமுகம்... இதோ....

வானம் தொட்டு விடும் தூரம்தான்.

இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.....
இதைவிட நம்பிக்கை தரும் வார்த்தைகள் உண்டா என்ன?ஒரு காரியம், முடியுமா என்ற சந்தேகமும், அது முடியாது என்ற விடையும் எழுவதற்குக் காரணம், தன்னம்பிக்கை குறைவு மட்டுமல்ல, மனச்சோம்பலும்தான்.

அதை விட்டொழித்து விட்டால் வானம் கூடத் தொட்டு விடும் தூரம்தான்.

அப்படித் தன்னம்பிக்கை தரும் பதிவு இன்றைக்கு.


"விசாராவின்" இந்தப் பதிவு

8 comments:

  1. கதையும் அதன் நீதியும் நல்லாருக்கு!
    சென்னை வரும் பொழுது உங்கலை சந்திக்க முடியுமா?
    எனது எண் 9994500540

    ReplyDelete
  2. //வெற்றி பெறுவோம்" என்ற ஆணையைக் கொடுத்தால்... வெற்றியைக் கொண்டு வரும், //

    நான் வெற்றி பெறுவோம் என்ற command கொடுத்துவிட்டேன்பா....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. நல்ல நீதிக்கதை - நல்ல அறிமுகப் பதிவு

    மனம் தொடர்ந்து எண்ணுவது நடக்கும் - உண்மை

    ReplyDelete
  4. வருகைக்கு மிக்க நன்றி Rapp.

    ReplyDelete
  5. நன்றி அப்துல்லா அண்ணே...!

    ReplyDelete
  6. வாங்க வாங்க நண்பரே.

    எப்ப வேணாலும் நீங்க வரலாமே..!

    நண்பனைச் சந்திக்க நாள் கிழமை, அனுமதி இதெல்லாம் அவசியமா..?

    விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. அன்புடன் அருணா said...

    //நான் வெற்றி பெறுவோம் என்ற command கொடுத்துவிட்டேன்பா....
    அன்புடன் அருணா//

    ஆஹா..! உங்க Command- க்கு ஒரு ஸ்கூலே கட்டுப் படுது.

    வெற்றி கட்டுப் படாதா?

    ReplyDelete
  8. cheena (சீனா) said...

    //நல்ல நீதிக்கதை - நல்ல அறிமுகப் பதிவு

    மனம் தொடர்ந்து எண்ணுவது நடக்கும் - உண்மை//

    ஆமாம் அப்பா.

    இதைத்தான் "வள்ளுவர்" "வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்."
    எனச் சொல்லியிருக்கிறாரோ.?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது