விடைபெறுகிறேன்.. அட நெஜமாங்க...!
வலைச்சரத்தில் எழுத என்னை அழைத்தபோது நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும், அரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பதிவர்களை முன்னிறுத்த வேண்டும் என்றெல்லாம் பலவாறு நினைத்திருந்தேன்.
ஆனால் செவ்வாய், புதனில் அலுவலத்தில் ஆரம்பித்த வேலைப்பளு இந்த வாரத்தையே ஆக்ரமித்துவிடவே முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. போதாக் குறைக்கு வீட்டிலிருக்கும் இணைய கனெக்ஷன் மக்கர் பண்ணியதால், வீட்டிலிருந்தும் சரியாக மேய முடியவில்லை.
இருந்தாலும் ஒன்றிரண்டு அரிய பதிவர்களை அறிமுகம் செய்த மகிழ்ச்சியில் இந்த ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறேன்.
சீனா ஐயாவிற்கு ஒரு வேண்டுகோள்.. என் நண்பன் வெயிலான் நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர். நல்ல நல்ல படைப்புகளைத் தேடிப்படிப்பவர். அவரை ஒரு வாரத்திற்கு ஆசிரியராக்கி அழகு பார்க்க ஆசைப்படுகிறேன். நிறைவேற்றுவீர்களா?
மீண்டும் சீனா ஐயாவிற்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, பல பெருந்தலைகள் அமர்ந்த இந்த நாற்காலியில் ஒருவாரம் என்னையும் அனுமதித்ததை பெருமையுடன் நினைவுகூர்ந்து, மேலும்...
சரி.. போடா – என்று நீங்கள் சொல்வதற்குள்.
வுடு ஜூட்!
|
|
ஹை அண்ணா டாட்டா...பை பாய்... :)))))
ReplyDeleteஹாய் - பை பாஃர் நௌ
ReplyDeleteஆமா வெயிலான் தானே - பரிசலின் ஆசைய நிறைவேத்திடலாமே - நோ பிராப்ளம்
ஒண்ணு தெரியுமா - வெயிலான் ஏற்கனவே லிஸ்ட்லே இருக்காரு - டிசம்பர்லே ஒரு வாரம் ரிசர்வ்ட் -
ஆமா - அவர்கிட்டே சொல்லிடுங்க பரிசல்
பரிசல் / சீனா ஐயா!
ReplyDeleteஇருவருக்கும் நன்றி!
எனக்கு ஏற்கனவே பொன்ஸ் பொறுப்பாளராக இருக்கும் போது (ஆகஸ்டு 2007) வலைச்சர ஆசிரியராக அழைப்பு வந்தது. மிகக்குறுகிய கால அவகாசம்
(1 நாள்)எனக்கு கொடுத்ததால் என்னால் ஏற்க முடியவில்லை.
வெயிலான் - கவலை வேண்டாம்
ReplyDeleteடிசம்பர் 22 முதல் எழுதுங்களேன்
நல்வாழ்த்துகள்