07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 10, 2008

பறவையின் தடங்களும் சித்தி ஜுனைதா பேகமும்

நான் நல்லா எழுதல்லைன்னாலும், நல்லா கதை படிப்பேன்! பிடித்த கதைகளை திரும்ப திரும்ப படிக்கப் பிடிக்கும்! அப்படி நான் படிக்கும் கதைகளில் ஒன்றுதான் குட்டியாப்பா! சற்றே பெரிய கதை ! இதுதான் அவரது முதல் கதை தொகுப்பு!

அந்த புத்தகம் வரும் வரை அவர் ஒரு எழுத்தாளர் என்றே நான் அறிந்திருக்கவில்லை!
அதனால் என்ன பெரிய நட்டம் என்கிறீர்களா? ஒன்றும் இல்லைதான்! ஆனால்,எங்கள் வீட்டை கடந்து செல்பவரை அதன்பின் கொஞ்சம் மரியாதை கலந்த வியப்புடன் பார்க்க ஆரம்பித்தேன்! ஹவுசிங் போர்ட் குடியிருப்பில் அடுத்தடுத்த பிளாக்குகளில்தான் குடியிருந்தோம் அப்போது! எங்கள் ஊர் ஆண்கள் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் அவர்.

எனது பெரியம்மா எங்கள் ஊரில் கொஞ்சம் பிரசித்தம். கொஞ்சம் இலக்கிய ஆர்வம், புத்தக விரும்பி. எங்கள் ஊரில் எந்த ஒரு விழாவும் (கட்சிக் கூட்டங்கள் தவிர ) அவரின்றி நடைப் பெற்றுவிடுவதில்லை! அவரது முதல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்த பெரியம்மாவுடன் வந்ததுதான் இச்சிறுகதைத் தொகுப்பு! நாகூரிலிருந்து வந்திருந்ததாலும், ஊர்ப் பாசத்தின் காரணமாகவும் இணைத்துக் கொண்டவர். கரெக்ட..நாகூர் ரூமிதான் அவர்! அவரது படைப்புகளைப் பற்றி விபரங்கள் அங்குண்டு! தமிழோவியத்தை அறிந்தவர்களுக்கு இவர் புதியவரல்ல என்றெண்ணுகிறேன்!!

நாகூர் ரூமியை பற்றி அவரது அன்பர் நாகூரியின் இந்தப் பதிவிலிருக்கிறது. அவரது குட்டியாப்பா என்ற கதையும்! ஒருமுறைப் படித்துதான் பாருங்களேன்!


பறவையின் தடங்கள் என்ற அவரது வலைப்பூ இதோ!!

நாகூரியின் வலைப்பதிவிலேயே இருக்கிறது இந்த தமிழின் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளரைப் பற்றி!

சித்தி ஜுனைதா பேகம்! இவர் நாகூர் ரூமியின் உறவினர் (பெரியன்னை).சித்தி எனபது அரபிப் பெயர்!
இவரது மகிழம் பூ நாவல் இதோ! அவ்வளவாக படிப்பறிவில்லாத இப்பெண்மணியின் எழுத்தாற்றல் வியக்க வைக்கிறது!!

9 comments:

 1. நாகூர் ரூமியின் புத்தகங்கள் சில படித்ததுண்டு!

  முதன் முதலாய் ஜுனைதா பேகத்தின் கதையினை இங்கு படிக்கின்றேன்!

  பதிவுக்கு நன்றி :)

  ReplyDelete
 2. நல்ல பதிவு.. :)) நிச்சயம் டைம் கிடைக்கும் போது படிக்கிறேன்..:)

  ReplyDelete
 3. உண்மையில் இந்த அறிமுகம் மூலமே எனக்கு அறிமுகமாகியிருக்கின்றது ஜினைதா பேகத்தின் படைப்பு, நன்றி

  ReplyDelete
 4. நாகூர் ரூமியின் படைப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்... படித்ததில்லை.. இனி முயற்சிக்கின்றேன்.

  ReplyDelete
 5. நன்றி ஆயில்யன்,
  இந்த புத்தகத்தையும் படிங்க!! ஒரு காலை பொழுது அப்புறம் சொர்க்கத்தில் ஒருநாள் போன்ற கதைகள் நல்லாருக்கும்!

  நன்றி புதுகை தென்றல்!!

  நன்றி பொடியன் சஞ்சய்!

  நன்றி ஸ்ரீமதி! பொறுமையாவே படிங்க!

  நன்றி கானாஸ்!
  நன்றி தமிழ் பிரியன்...முயற்சி சிறக்கட்டும்!!

  ReplyDelete
 6. குட்டியாப்பாவை படிச்சிட்டேன்.....அருமையான கதை ;))


  நன்றி அக்கா ;)

  ReplyDelete
 7. நாகூர் ரூமியை பற்றி ஆபிதீன் அவர்களின் பக்கத்திலும் உள்ளது, அதன் இணைப்பு
  http://abedheen.googlepages.com/nagorerumi.html

  நீங்கள் நாகூரின் எழுத்துக்களை படிக்க ஆபிதீன் அவர்களின் 'குழந்தை'யை படித்து பாருங்கள். வாழ்க்கை இருக்கிறது. அதாவது சிரிப்பும் சோகமும் சம அளவில் இருக்கிறது.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது