ரஜினிக்கு பிடித்த பதிவு!
போன வாரம் நான் சென்னைல அப்துல்லா கூட இருந்தப்ப.., சீனா ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. 'வலைச்சர ஆசிரியரா இருங்க’ என்று. ஏற்கனவே தமிழ்மண ஸ்டாரா இருக்கச் சொல்லி, மெயிலனுப்பின குசும்பனோட குசும்பிலிருந்து மீளாம இருந்த நான், சந்தேகத்துக்கு அவருகிட்ட 'இது ஒரிஜினல்தானே'ன்னு கேட்டுகிட்டேன். அவரு ரெண்டு வாரம் முன்னாடி ஆசிரியரா இருந்திருக்காரே.. அவரும் ஆமான்னுட்டார். அப்பறமென்ன, களத்துல எறங்கீட வேண்டியதுதானேன்னு இறங்கீட்டேன்..!
********************
பள்ளிக்கூடம் படிக்கும்போதே, ‘நீ என்னவாக ஆசைப்படற’னு கேட்டதுக்கு
ஆசிரியர்-ன்னு சொன்னவன் நான். அதுக்கேத்தமாதிரி ஒரு பத்திரிகையின் ஒரு இஷ்யூ-வுக்கு ஆசிரியர் குழுவில் ஒருவனா பணியாற்றின அனுபவம் உண்டு. இப்போ இந்த வலைச்சரத்துக்கு ஆசிரியரா...
ரம்பம்ன்னா ஒரு பக்கம்தான். பரிசல்காரன்-ங்கற வலைப்பூவுல ரம்பமா உங்களை அறுத்துக்கிட்டிருக்கற நான் இந்த ஒரு வாரம் மட்டும் ப்ளேடா இருந்து ரெண்டு பக்கமும் அறுக்கப் போறேன்..
இது என்னடா வலையுலகத்துக்கு வந்த சோதனை!
சரி மேட்டருக்கு வருவோம்...
ஐயையோ.. அந்த மேட்டர் இல்லீங்க. அறிமுக மேட்டர்.
உலகத்துலயே ஈஸீயான விஷயம் நம்ம பெருமைகளை நாமளே பீத்திக்கறது. கஷ்டமான விஷயம், அடுத்தவன், அவனைப் பத்தி விடற பந்தாக்களை கேட்கறது.. ம்.. உங்களுக்கு இந்தத் திங்கள் இப்படி விடியணும்ன்னு இருக்கு. யாரால மாத்த முடியும்...
நான் யாரு, ஏன் எழுத வந்தேன் (அதைத்தாண்டா நாங்களும் கேட்கறோம்..), பரிசல்காரனோட பெயர்க்காரணம் எல்லாமே என்னோட 100 வது பதிவான நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்-ல இருக்கு. (அடப்பாவி.. 100 பதிவு எழுதியிருக்கியா நீ? கிழிஞ்சது போ!)
என்னோட பதிவுல மொதல்ல ஹிட்டானதுன்னா (அத நாங்க சொல்லணும்டா) தந்தை எனக்கெழுதிய கடிதம் தான்.
ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா (ஆரம்பிச்சுட்டாண்டா.. கொசுவத்தி சுத்த..) தந்தையர் தினத்துக்கு நான் அப்பாவுக்கு ஒரு கடிதம் உருக்கமா எழுதணும்ன்னு நெனைச்சுகிட்டிருந்தேன். ஆனா சரியா வார்த்தைகள் உட்காரல (நீ சேர் போட்டிருக்கமாட்ட) அப்படி இப்படின்னு தந்தையர் தினமும் வந்துச்சு. அன்னைக்கு காலை வரை அந்த கடிதத்துக்குண்டான விஷயமோ, ஆரம்ப வரிகளோ மனசுல வரவே இல்லை. சரின்னு ஏதோ ஒரு மொக்கையைப் போட்டுட்டு, ஆஃபீஸுக்குப் போய்ட்டேன். சாயந்திரம் வரைக்கும் ‘தந்தையர் தினத்துக்கு உருப்படியா அவருக்குன்னு ஒரு பதிவு போட முடியலியே’ன்னு வருத்தம் இருந்துச்சு. ‘டக்’னு மூளைக்குள்ள பல்பு எரிஞ்சது. (அப்போ பவர் கட் அவ்வளவா இல்ல) எழுதமுடியலியேன்னு நாம வருத்தப் படறா மாதிரி ‘இவன் எழுதலியே’ன்னு அப்பா வருத்தப்பட்டு எனக்கு கடிதம் எழுதினா எப்படி இருக்கும்ன்னு. அது மனசிலேர்ந்து எழுதினது. அதுனால ஹிட்டாச்சு. அது வரைக்கும் அவியல்-ன்னு கலந்து கட்டி எழுதற பதிவுகளுக்கு வாசகர் எண்ணிக்கை அதிகம் வரும். வெறும் மொக்கை, நகைச்சுவைன்னு அதிகமா எழுதிட்டிருந்த நான் இந்தக் கடிதம் மூலமா அதிக அளவிலான வாசகர்களைப் பெற்றேன் என்றால் .. இங்கெ என்ன வரணும்.. ஆங்.. அது மிகையில்லை.
அதே மாதிரி திருமண நாளுக்காக என்னோட மனைவிக்கு நான் எழுதின உமாவுக்கு கடிதம் உலக அளவுல (டேய்.. டேய்... ங்கொய்யால. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா) பிரசித்தி பெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட இதைப் பாராட்டிருக்காரு. (டேய்.. எந்திரிடா.. ராத்திரி 12 மணிக்கு பதிவு எழுதாதேன்னா கேட்கறியா.. தூக்கத்துல ஒளறிகிட்டு. அது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்ல. உன் ஃப்ரெண்டு புதுகை அப்துல்லா) இந்த உமாவுக்கு கடிதம் பிறகு ஜூனியர் விகடனில் வெளியாகி எல்லாரையும் சோதிச்சது!
நான் எழுதின 150வது பதிவான திமிரானவனும் வேற டைப்ல எழுதப்பட்ட பதிவு. (150ஆ? எப்படிடா ஒன்னையெல்லாம் விட்டு வெச்சாங்க?)
எப்ப எழுதும்போதும் என் மனசாட்சியோடதான் எழுதுவேன். இப்பகூட பாருங்க. எழுத எழுத ப்ராக்கெட்ல என் மனசாட்சி என்னை கேள்விகளால துளைக்கறதை.. இதுக்கு மேல பேசினா ஒதைக்கும். அதுனால சுயபுராணம் ஓவர்!
சரி.. டெய்லி சில பதிவுகளையும், பதிவர்களையும் பார்க்கலாம்.. ஓக்கே?
டிஸ்கி: பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்கறீங்களா? என் தோழி ஒருத்தங்க இருக்காங்க.. ரஜினி-ன்னு. அவங்க எப்போ பார்த்தாலும் சொல்லுவாங்க... “கிருஷ்ணா.. உமாவுக்கு’தான் உங்களோட மாஸ்டர் பீஸ்” ன்னு! நீங்க வேற ரஜினியை நெனைச்சுட்டு வந்தீங்கன்னா நானா பொறுப்பு?
|
|
நல்வரவு.
ReplyDeleteவாழ்த்து(க்)கள்.
மீ த செகண்டு
ReplyDelete(காதைபேட்டை செகண்டு இல்லீங்)
மிக மிக நன்றி துளசிம்மா.
ReplyDeleteந்மக்கு மர கழண்டு போச்சுனு நாமே சொன்ன நம்ப மாட்டாங்க. அதுக்கேத்த மாதிரி நாம் நடந்துக் காட்டனும். அத செஞ்சிருக்கீங்க.. ஜோர்...தூள்...அட்டகாசம்.. அமர்க்களம்..(இந்தப் படமெல்லாம் பார்த்துட்டீங்கள)
ReplyDeleteவாழ்த்துகள் சகா..
காதர்பேட்டை செகண்டுன்னு சொல்லவந்து அது காதைபேட்டை ஆகிப்போச்சிங்.
ReplyDeleteநன்றி பெரியவரே! (கூப்பிட முடியாத பேரா வெச்சிருக்கீங்களே....)
ReplyDeleteவாழ்த்துக்கள் பெரியவரே!!!
ReplyDeleteBest Wishes!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் கேகே
ReplyDelete\\அதே மாதிரி திருமண நாளுக்காக என்னோட மனைவிக்கு நான் எழுதின உமாவுக்கு கடிதம் உலக அளவுல (டேய்.. டேய்... ங்கொய்யால. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா) பிரசித்தி பெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட இதைப் பாராட்டிருக்காரு. (டேய்.. எந்திரிடா.. ராத்திரி 12 மணிக்கு பதிவு எழுதாதேன்னா கேட்கறியா.. தூக்கத்துல ஒளறிகிட்டு. அது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்ல. உன் ஃப்ரெண்டு புதுகை அப்துல்லா) இந்த உமாவுக்கு கடிதம் பிறகு ஜூனியர் விகடனில் வெளியாகி எல்லாரையும் சோதிச்சது!\\
ReplyDeleteஜூனியருக்கு வந்த சோதனையா
\\தந்தையர் தினத்துக்கு நான் அப்பாவுக்கு ஒரு கடிதம் உருக்கமா எழுதணும்ன்னு நெனைச்சுகிட்டிருந்தேன். ஆனா சரியா வார்த்தைகள் உட்காரல (நீ சேர் போட்டிருக்கமாட்ட) \\
ReplyDeleteஹா ஹா ஹா
நல்ல இரசனைங்க உங்களுக்கு
@ கார்க்கி
ReplyDeleteமவனே ஒனக்கு இருக்குடி பூச.. ரொம்ப நக்கல் விட்டீன்னா அப்பறம் அப்துல்லா வூட்ல நீ பேசினதை எடுத்து விடுவேன் பாரு...
நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சகா கார்க்கி. (சொல்ல விட்டுப் போச்சு!)
ReplyDeleteநன்றி ரமேஷ், அதிரை ஜமால் & விஜய் ஆனந்த்.
@ கிரி
நண்பா.. எப்படி இருக்கீங்க? பையன் நலமா? நன்றி வரவுக்கு.
நன்றி ராமலட்சுமிம்மா.
ReplyDelete//சரி மேட்டருக்கு வருவோம்...
ReplyDeleteஐயையோ.. அந்த மேட்டர் இல்லீங்க. அறிமுக மேட்டர்//
அறிமுகமே மேட்டரா? :) ரைட்டு அடுத்த அடுத்த பதிவுகளில் மேட்டரை எதிர்நோக்கி!!!
//தமிழ்மண ஸ்டாரா இருக்கச் சொல்லி, மெயிலனுப்பின குசும்பனோட குசும்பிலிருந்து மீளாம இருந்த நான்//
என்ன சகா திரும்ப திரும்ப நீங்க எமாற என்ன நந்துவா?
கலக்கல் ஆரம்பம்! உண்மையில் அண்ணிக்கான கடிதம் தான் சூப்பர் டூப்பர் ஹிட்டானது..:)
ReplyDeleteவாழ்த்துகள். இன்னும் சிறப்பான கட்டுரைகள் பல இந்தக் கிழமை(வாரம்)யே வலைச்சரத்தில் எதிர்பார்க்கிறேன் :-))
ReplyDelete//
ReplyDeleteஅறிமுகமே மேட்டரா? :) ரைட்டு அடுத்த அடுத்த பதிவுகளில் மேட்டரை எதிர்நோக்கி!!!//
ஹி ஹி ஹி ஹி ஹி நானும்....
பரிசல் வாழ்த்துகள்.... ஒரு வாரத்துக்கு நல்லா கலக்குங்க.... கரண்டிய சீனா ஐயா கிட்ட கேட்டு வாங்குங்க....
நன்றி தமிழ்பிரியன், குசும்பன் & முகவை மைந்தன்.
ReplyDeleteஆஃபீஸுக்கு கிளம்பியாச்சு. அதுனால உடனே உடனே பதில் சொல்ல முடியாது. தாமதமானாலும் வந்து நன்றிக்கறேன்!
நன்றி பத்திரிகையாளர் விக்கி அவரக்ளே!
ReplyDeleteவாழ்த்துக்கள் பரிசல்.
ReplyDeleteஹி..ஹி.. படிக்கும்போது நான் சொல்ல நெனச்சதெல்லாம் நீங்களே ப்ராக்கெட்ல சொல்லிட்டீங்க.. ரொம்ப நல்லவருங்க நீங்க.. :)))
ReplyDeleteஇங்கேயும் அட்டகாசத்தை ஆரம்பிச்சாச்சா? நடக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆசிரியர் க்ருஷ்ணா ;)
கலக்குங்க பரிசல்!
ReplyDeleteநானும் உங்களுடைய "தந்தை எனக்கெழுதிய கடிதம்" பதிவிற்கு பிறகுதான் உங்கள் பக்கம் வர ஆரம்பித்தேன்
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்(க் இல்லையாம்) பரிசலாரே!!
ReplyDeleteவலைச்சரத்தில்.. இந்த வாரம்ம்ம்.. என்ற ரீதியில் குரல் ஒலிக்கிறது..
நன்றி சின்ன அம்மணி, வெண்பூ, வெயிலான், சுந்தர்ஜி, புதுகைத் தென்றல் & பாஸ் நர்சிம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பரிசல்...!
ReplyDelete'கலக்குங்க' அப்படின்னு உங்களுக்கு சொல்லத்தேவையில்லை..
இருந்தாலும்...
கலக்குங்க...:)
நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்குங்க...:)
வலைச்சரப் பதிவை(யும்) சூடான இடுகைக்கு கொண்டு சேர்த்த பரிசலார் வாழ்க !
ReplyDeleteவாழ்த்துக்கள், தொடர்ந்து கலக்குங்க. :))
ReplyDeleteநன்றி தமிழன், பிஸி & அம்பி!
ReplyDelete@ கோவி...
நாமெல்லாம் யாரு... டெர்ர்ரர்ர்ர்ர்ல!
வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்வரவு.
ReplyDeleteவாழ்த்து(க்)கள்.
//தமிழ்மண ஸ்டாரா இருக்கச் சொல்லி, மெயிலனுப்பின குசும்பனோட குசும்பிலிருந்து மீளாம இருந்த நான்//
ReplyDeleteஎன்ன சகா திரும்ப திரும்ப நீங்க எமாற என்ன நந்துவா?
//
:)))))))))
நன்றி சந்தனமுல்லை @ சிங்களூர் மவா!
ReplyDeleteநீங்க வேற ரஜினியை நெனைச்சுட்டு வந்தீங்கன்னா நானா பொறுப்பு?
ReplyDelete:((((((((((((((((((
நிஜமா ஏமந்துட்டேன்
me the 40TH:):):)
ReplyDelete//ந்மக்கு மர கழண்டு போச்சுனு நாமே சொன்ன நம்ப மாட்டாங்க. அதுக்கேத்த மாதிரி நாம் நடந்துக் காட்டனும். அத செஞ்சிருக்கீங்க.. //
ReplyDeleteகன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)
//ரொம்ப நக்கல் விட்டீன்னா அப்பறம் அப்துல்லா வூட்ல நீ பேசினதை எடுத்து விடுவேன் பாரு...
ReplyDelete//
என்னதது, என்னதது, என்னதது?
//படிக்கும்போது நான் சொல்ல நெனச்சதெல்லாம் நீங்களே ப்ராக்கெட்ல சொல்லிட்டீங்க.. ரொம்ப நல்லவருங்க நீங்க//
ReplyDeleteசம்மந்தி மத்தவங்கள நக்கலடிக்கிறது இருக்கட்டும், உங்களுக்கு ஒரு பொறுப்பை கொடுத்திருக்கேன், வேறொன்னுமில்ல இனிமேல் எங்க ரெண்டுபேர் சார்பா, எல்லா பதிவர்கள் கல்யாணத்துலயும் நீங்க ஒருத்தரே சாப்டு கடமைய ஆத்தனும்ங்கரதுதான்:):):) (காப்பி ஆத்துறது மாதிரி கரெக்டா செய்யணும்:):):))
வழக்கம்போல அப்துல்லா அண்ணன் 'ஐ ஆம் பிசி யு நோ'ன்னு நாளைக்குத்தான் வருவாரு போலருக்கு:):):)
ReplyDeleteஇதுல எல்லாமே நான் ஏற்கனவே படிச்ச பதிவுகள், அதால, அதப்பத்தி இங்கப் பின்னூட்டம் போடல
ReplyDeleteநம்மாளு... கலக்கலுக்கு கேக்கணுமா... கலக்கோ கலக்குன்னு கலக்குங்க...
ReplyDelete!!!! வாழ்த்துக்கள் !!!!
வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
மனசாட்சியின் கமென்ட்ஸ் சூப்பர்
ReplyDeleteஹிஹி
வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
me the 50TH:):):)
ReplyDelete//
ReplyDeleteஎன்ன சகா திரும்ப திரும்ப நீங்க எமாற என்ன நந்துவா?//
ஊரு முழுசும் தெரிஞ்சு போச்சா?
(குசும்பனுக்கு தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச மாதிரி...)
அப்புரம் பரிசல் போற ஸ்பீடு பாத்தா, இன்னும் கொஞ்ச நாள்ள கலைஞர் முரசொலில "தம்பி பரிசலோடு காலை அரைமணி நேரம் பேசினால்தான் அந்த நாள் எனக்கு இனிய நாள் ஆகும்"ன்னு சொல்ற ரேஞ்சுக்கு ஆயிடுவீங்க போல?
என்னமோ ஒண்ணு எங்கள மறந்துடாதீங்க( அதிலும் இந்த குசும்பனையெல்லாம் மறந்தாலும் என்ன மறந்துடாதீங்க :P )
rapp அக்காவுக்கு எங்க மூக்குல வேர்க்குமோ 50,100 ல சரியா ஆஜராயிடறாங்க
ReplyDelete( கும்ப்ளே கவிதை மாதிரி தோணிக்கு ஒண்ணு எடுத்து விடுங்க ஆவலா இருக்கோம்)
லேட்டா வந்ததுக்கு ஃபர்ஷ்டு சாரிண்ணே
ReplyDelete// rapp said...
வழக்கம்போல அப்துல்லா அண்ணன் 'ஐ ஆம் பிசி யு நோ'ன்னு நாளைக்குத்தான் வருவாரு போலருக்கு:):):)
//
அவ்வ்வ்வ்... சத்தியமா பிசி மாதிரி..
சரி மேட்டருக்கு வருவோம்...
ReplyDeleteஐயையோ.. அந்த மேட்டர் இல்லீங்க. அறிமுக மேட்டர்.
//
நம்ப புத்திய கரெட்டா தெரிஞ்சு வச்சுருக்கீங்க ஹி...ஹி..ஹி..
ஹையா மீ த 55
ReplyDeleteநன்றி விலெகா (ஸாரிங்க.. ஏமாத்தினதுக்கு)
ReplyDeleteநன்றி ராப் (500, 1000 பின்னூட்டங்களைக் கண்ட நாயகி நீங்க. உங்ககிட்ட 50வது வாங்க பெருமையா கீதுங்க!)
நன்றீ மகேஷ், வால்பையன் (என்ன எதிர்பார்க்கறீங்க?)
நன்றி நந்து.. (என்ன பண்றது தொழிலதிபரே.. எல்லாம் தமிழகத்துக்கு வந்த சோதனைதான்!)
//கும்ப்ளே கவிதை மாதிரி தோணிக்கு ஒண்ணு எடுத்து விடுங்க ஆவலா இருக்கோம்//
ஏன் நந்து.. நான் பரிசல்ங்கறதால 'தோணி'க்கு கவிதை கேட்டிருக்கீங்களா?
இல்ல 'தோனி' யா?
நன்றி அப்துல்லா.
வாழ்த்துகள்
ReplyDelete