07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 18, 2008

அன்புள்ள அப்பா- 2

என் மனம் தொட்ட அப்பா பதிவுகள் சில....


"நினைவுகள் கலைய
என் கர்வத்தின் காரணம்
உணர்ந்தேன்

அது என் உடல்மீதிருந்த
இறுக்கமான
அப்பாவின் சட்டை"
இது முத்துக் குமரனின் அப்பா

"அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;
எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்
நாசியை வருடும் மண்மணம்."

இது கலையரசனின் அப்பாவின் வாசம்.படித்தவுடன் அப்பாவின் வாசம் நினைவுக்கு வருகிறது.


//எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு. திருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது. //

இது கிருத்திகாவின் அப்பாவின் நினைவு நாள்.....படிக்கப் படிக்க வலி கொடுக்கும் வார்த்தைகள்.

அப்புறம் அமிர்தவர்ஷினி அம்மாவுடைய இந்தப் பதிவு
சற்றேறக்குறைய என் சொந்த அனுபவம்.

படிக்கும்போது கண் கலங்கி மனம் கனத்து விட்டது.

அங்கே நான் இட்ட பின்னூட்டத்தை இங்கேயும் இடுகிறேன்.

--------------------------------------------------

தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட உங்களின் நேர்மை வியப்புக்கும், பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

உங்களைப் போலவே நானும் என் பெற்றோருக்கு வயதான பிறகு பிறந்தவன்தான்.

(அண்ணனுக்கு திருமணமாகி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு, நான் பிறந்தேன்.)

உங்களைப் போலவே நானும் என் தந்தையை அவர் வாழும் காலத்தில் மதித்ததில்லை.

இத்தனைக்கும் என் அறிவு, திறமை, அவ்வளவு ஏன்...?, சில மாதங்கள் முன்பு வரையிலான சாப்பாடு வரையில்.... எல்லாமே அவருடையதுதான்.

அவ்ர் இறப்பதற்கு சுமார் ஒரு வருடம் முன்புதான் அவரது முழு அருமை, உணர்ந்து...
அன்பின் ஊற்றுக்கண் திறக்கப்பட்டு...,

அவரிடத்தில் பெற்ற கடலளவு நன்மையில், கடுகளவேனும் திருப்பித் தர முழு இருதயத்துடன் தவமிருக்கத் தொடங்கினேன்.

என் தவம் ஈடேறுமுன்னே தந்தை என்னை விட்டுச் சென்றார்.

இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வினாடியிலும் அழுகிறேன்.

எத்தனை முறை கதறினாலும், அழுதாலும், இழந்த அந்த நாட்கள் திரும்ப வரப்போவதில்லை.

7 comments:

  1. ரொம்ப கஷ்டமாயிருந்தது, என்ன சொல்றதுன்னு தெரியல

    ReplyDelete
  2. ரொம்ப கஷ்டமாயிருந்தது, என்ன சொல்றதுன்னு தெரியல//

    நானும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  3. கலையரசனின் அப்பாவும்,கிருத்திகாவின் அப்பாவும், அமிர்தவர்ஷினி அம்மாவின் அப்பாவும் படித்திருக்கிறேன்.முத்துக் குமரனின் அப்பா புதிது.அருமையான பதிவு...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  4. கபீஷ் said...
    //ரொம்ப கஷ்டமாயிருந்தது, என்ன சொல்றதுன்னு தெரியல//
    வருகைக்கு நன்றி கபீஷ்...

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்.....

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி அருணா....

    ReplyDelete
  7. அனைத்துமே அருமையான பதிவுகள் அந்தோணி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது