ம்ம்ம்... மழைபெய்கிறது....
➦➠ by:
நவின் ப்ரகாஷ்
பெண்களைப் போலல்லாது ஆண்கள் எப்பொழுதுமே காதலை உணர்வுப்பூர்வமாகப் பார்ப்பவர்கள்.
ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அவளைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை..
அவளுக்காக பந்தங்களை உதறித்தள்ளிவிட்டு வர எப்பொழுதுமே அவர்கள் தயங்கியதில்லை...
பெண்கள் அந்த அளவுக்கு இல்லாத்து இயற்கை அவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை உணர்வாகக் கூட இருக்கலாம்... இணையத்தில் கவிதைகளால் பூத்துகுலுங்க வைத்திருக்கும் சில ஆண் கவிஞர்களின் கவிச்சோலையிலே உலவலாம் வாருங்கள்...
ஒரு நகரப்பேருந்தில் பயணிப்பது போல் இருக்கிறது
தோழர் செல்வ கருப்பையாவின் தளம் எங்கும் விரவிக்கிடக்கும் கவிதைகள்... நட்பா காதலா என பகுத்தறிய முடியாமல்
காணப்படும்
இன்றைய ஆண் பெண் நட்பை நாளைமுதல் நட்பு என மிக அழகாக எளிமையாக சொல்லி இருக்கும் விதம் மிக அருமை...
தோழரின் அழகு கவிதை எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு குறும்பான கவலை...
கடந்து செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் தென்படும் ஏதோ ஒரு அழகியபெண்ணின் முகம் போல கடந்து செல்லும் ஒவ்வொரு கவிதையிலும் ஏதோ ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது தோழர் செல்வ கருப்பையாவின் படைப்புகளனைத்தும்...
கவிதையின் இன்பம் தேடும் இளைஞன் என தன்னிலை விளக்கத்தோடு வெற்றுக்காகிதத்தில் தன் எண்ணக்குவியல்களால் கவிதை தேர் கட்டி அழகாக வலம் வரவிட்டிருக்கிறார் தோழர் தணிகை...
மழையை நான் ரசிப்பதற்கு
காரணம் கேட்கிறாய் நீ!
நான் மழையை விட
அதில் நனையும் உன்னை
ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்
சொல்லுவேன் என தெரிந்தே
தணிகையின் கவிதைகள் முழுதும் மெல்லிய குறும்பு சீரான புன்னகையோடு பயணிக்கிறது...
சத்தம் போடாமலிருந்தால்
முத்தம் கிடைக்குமென்கிறாய்
முத்தம் கொடுத்தாலே
சத்தம் வராதென்கிறேன் நான்!
அழகான குறுப்புகளோடு காதல் மட்டும் அல்லாத பல அருமையான கவிதைகளோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறது தோழரின் தளம்...
மழையை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா....? பட்டுத்தெறிக்கும் முதல் துளி கிளர்த்தும் மண் வாசனை போல தோழர் சார்லஸ் ஆண்டனி யின் தளம் எங்கும் கவிதைவாசனை...
நீ பூ கட்ட
போகிறேன் என்றாய்
நான் அடுக்கிக் கொடுக்கிறேன்
என்றமர்ந்தேன்
காதல் மாலை கட்டி
நமக்குச் சூடியது
என அழகான காதல் மாலை சூட்டிய மழைக்காதலன் தன் கவிதைச் சாரலால்
நட்பின் அழகிய பக்கங்களையும் மிக அழகான நனைத்திருக்கிறார்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
சுயம் இழக்காமல்
இருக்கமுடிவது
நட்பில் மட்டும் தான்
மழையை காதலிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தான் பெற்ற இன்பத்தை
அனைவருக்கும் மிக எளிய வார்த்தைகளில் கவிதையாக பொழிந்து
தளம் நுழையும் அனைவரையும் இதமான சாரலில் நனையவிட்டிருக்கிறார்
இந்த மழையின் காதலன்...
அழகான கவிதைகளால் இதயம் களவாடும் கவிஞர்கள் மேன் மேலும்
பல இதயங்களை தங்கள் வரிகளால் தாலாட்ட வாழ்த்துக்கள்....
|
|
மிக அழகான கவிதைகள் பூத்துக்குலுங்கும் கவிச்சோலையில் உலாவ வைத்தமைக்கு நன்றி!!
ReplyDeleteகவிஞர்களை அறிமுகப்படுத்திய விதம் மிக அழகு!!
தொடருங்கள்........வாழ்த்துக்கள்!!
கவிஞர்களின் படைப்புகளை நீங்கள் வரிசைப் படுத்தும் விதம் அழகு. ஒரு அழகிய ஓவியம் மற்ற ஓவியங்களை வரிசைப் படுத்துவது போல் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள் நவீன்.
ReplyDeleteஅசத்தல்!!!!!
ReplyDeleteஅறிமுகப்படுத்திய எல்லா கவிஞர்களின் கவிதைகளும் அருமை!!!!!
தொடருங்கள் வாழ்த்துகள்!!!!
ஆஹா நவீன் நீங்களா இந்த வார வலைச்சர ஆசிரியர் தாமதமான வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜொள்ளு ஆறு பெருக்கெடுத்து ஓடட்டும்
ReplyDelete(கவிதைகளில்)
அழகிய கவிதைகளுக்கான தங்கள் அறிமுகம் கூட இன்னொரு அழகான கவிதைப்போல தான் இருக்கிறது நவீன்... வாழ்த்துக்கள். இன்னும் நிறைய இடுகைகளுக்காக, மன்னிக்கவும், கவிதைகளுக்காக காத்திருக்கிறோம்:):):)
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.
ReplyDeleteமழை என்று பார்த்ததும் வந்தேன்.
இத்தனை அழகான கவிதைகள் வரிசைப் படுத்தி அழகோவியமே தீட்டி விட்டீர்கள்.
நன்றி.
இனி,
தவறாமல் இவர்களை வாசிக்கலாம்.
//பட்டுத்தெறிக்கும் முதல் துளி கிளர்த்தும் மண் வாசனை போல //
ReplyDeleteபதிவு முழுவதும் மழை வாசனைதான்...மிகவும் அருமை.
அன்புடன் அருணா
அன்பின் நவீன்
ReplyDeleteஅருமையான அறிமுகம் - பல புதிய பதிவர்களுக்கு - காதல் கவிஞர்களுக்கு - நல்வாழ்த்துகளுடன்
நம்மாளுங்க கலக்குவாங்கன்னுறது ஒன்னும் புதுசில்லையே...
ReplyDeleteமழையும் காதலும் பெண்மையும் கூடவே இருந்தால் அது போல அற்புத தருணம் வேறென்ன! அண்ணன்...
நன்றிகள்.. அருமையான சுட்டிகளைக் கொடுத்தமைக்கு நன்றிகள்
ReplyDelete//Divya said...
ReplyDeleteமிக அழகான கவிதைகள் பூத்துக்குலுங்கும் கவிச்சோலையில் உலாவ வைத்தமைக்கு நன்றி!!
கவிஞர்களை அறிமுகப்படுத்திய விதம் மிக அழகு!!
தொடருங்கள்........வாழ்த்துக்கள்!!//
வாருங்கள் திவ்யா.. :))
கவிச்சோலையில் உலவ வந்தமைக்கு மிக்க நன்றி திவ்யா.. :))
// புதியவன் said...
ReplyDeleteகவிஞர்களின் படைப்புகளை நீங்கள் வரிசைப் படுத்தும் விதம் அழகு. ஒரு அழகிய ஓவியம் மற்ற ஓவியங்களை வரிசைப் படுத்துவது போல் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள் நவீன்.//
வாருங்கள் புதியவன்...:))
ஆஹா இப்படியெல்லாம் புகழாதீர்கள்...
மிக்க நன்றி புதியவன்... தறாத வருகைக்கும் தருகைக்கும்... :)))
//எழில்பாரதி said...
ReplyDeleteஅசத்தல்!!!!!
அறிமுகப்படுத்திய எல்லா கவிஞர்களின் கவிதைகளும் அருமை!!!!!
தொடருங்கள் வாழ்த்துகள்!!!!//
வாருங்கள் எழில்...
மிக்க நன்றி... தொடர்ந்த வருகைக்கும் அழகான தருகைக்கும்... !!! :))
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஆஹா நவீன் நீங்களா இந்த வார வலைச்சர ஆசிரியர் தாமதமான வாழ்த்துக்கள்! //
வாருஙகள் சிவா.. :)))
எப்படி இருக்கிறீர்கள்..? மிக்க நன்றி சிவா ... :)))
// மங்களூர் சிவா said...
ReplyDeleteஜொள்ளு ஆறு பெருக்கெடுத்து ஓடட்டும்
(கவிதைகளில்) //
ஆஹா சிவாவின் குறும்புக்கு எல்லையேது... :))))
// reena said...
ReplyDeleteஅழகிய கவிதைகளுக்கான தங்கள் அறிமுகம் கூட இன்னொரு அழகான கவிதைப்போல தான் இருக்கிறது நவீன்... வாழ்த்துக்கள். இன்னும் நிறைய இடுகைகளுக்காக, மன்னிக்கவும், கவிதைகளுக்காக காத்திருக்கிறோம்:):):) //
வாருங்கள் ரீனா...
மிக்க நன்றி ரீனா...
இன்னும் நிறைய இடுக்கைகளா..? :)) ம்ம்.. பார்க்கலாம் ரீனா... !
// வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.
மழை என்று பார்த்ததும் வந்தேன்.
இத்தனை அழகான கவிதைகள் வரிசைப் படுத்தி அழகோவியமே தீட்டி விட்டீர்கள்.
நன்றி.
இனி,
தவறாமல் இவர்களை வாசிக்கலாம். //
வாருங்கள் வல்லிசிம்ஹன் :))
மழை மிகவும் பிடிக்குமா..? மிக அழகான ரசிப்புக்கு மிக்க நன்றி... கண்டிப்பாக வாசியுங்கள்... !!
//Aruna said...
ReplyDelete//பட்டுத்தெறிக்கும் முதல் துளி கிளர்த்தும் மண் வாசனை போல //
பதிவு முழுவதும் மழை வாசனைதான்...மிகவும் அருமை.
அன்புடன் அருணா //
வாருங்கள் அருணா.. :))
மிக்க நன்றி... வருகையும் மழைபோலவே மகிழ்ச்சியளிக்கிறது...:))
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் நவீன்
அருமையான அறிமுகம் - பல புதிய பதிவர்களுக்கு - காதல் கவிஞர்களுக்கு - நல்வாழ்த்துகளுடன்//
வாருங்கள் சீனா.. :))
மிக நன்றி ...தவறாமல் ஊக்கமளிப்பதிற்கு... !!!
//தமிழன்...(கறுப்பி...) said...
ReplyDeleteநம்மாளுங்க கலக்குவாங்கன்னுறது ஒன்னும் புதுசில்லையே...
மழையும் காதலும் பெண்மையும் கூடவே இருந்தால் அது போல அற்புத தருணம் வேறென்ன! அண்ணன்... //
வாருங்கள் தமிழன்... :))
ஆம் சரியாகச்சொன்னீர்கள்... மழை எப்பொழுதுமே மண்வாசனையைப் போலவே காதல் வாசத்தையும் கிளர்ந்தெளச்செய்வதென்னவோ உண்மைதான்...:))))
// Sharepoint the Great said...
ReplyDeleteநன்றிகள்.. அருமையான சுட்டிகளைக் கொடுத்தமைக்கு நன்றிகள் //
வாருங்கள் விஜய்பாலாஜி... :)))
மிக்க நன்றி அழகான வருகைகும் ரசனையான தருகைக்கும்... :)))