இவனும் என் தோழன்
➦➠ by:
புதுகை.அப்துல்லா
மழை பெய்ந்து ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில் கழுவி விடப்பட்ட சாலைகளில் இருபுறமும் சூழ்ந்த மரங்கள் தரும் சிறு குளிரில் மனதுக்குப் பிடித்த மனைவியோ,தோழியோ, நண்பனோ, நண்பியோ அல்லது வேறு யாரோடோ அரைட்டை அடித்தபடி செல்லும் சுகத்தை உணர்ந்து இருக்கின்றீர்களா?
எனக்கு அப்படி உனர்வைத் தரும் சகோதரர் பாபு அண்ணனின் பதிவுகளைப் படிக்கும் போதெல்லாம். எடுத்துக் கொண்ட விஷயங்களில் கணம் இருக்காது, வார்த்தைகளில் அலங்காரம் இருக்காது, எந்த இடத்திலும் அகம்பாவமும் இருக்காது. கதை, கவிதை என்றெல்லாம் மிரட்ட மாட்டார். சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியோ, சுற்றி நடப்பவற்றில் உருத்துபவை பற்றியோ எழுதுவார். நான் அவருக்கு விடாமல் பின்னூட்டம் போடும் தோஷத்தாலோ என்னவோ அவ்வப்போது மைல்டாக மொக்கை போடுவார்.
தன்னுடைய பேருந்து பயண அனுவங்களைப் பற்றி இந்த பதிவில் சொல்லி இருப்பார்....பாருங்கள்.அதுபோல அந்த நாள் ஞாபகம் என்று ஒரு அருமையான பதிவு. எதார்த்தத்தை விரும்பும் எவரும் இவரை இரசிப்பார்கள்.
பாபு அண்ணனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். என் மாப்பிள்ளை பொடியன் சஞ்சையைப் பார்த்து கெட்டுப் போய்விடாமல் இப்படியே அழகாக எழுதுங்கள்
டிஸ்கி 1 : யோவ் சஞ்சய் வலைச்சரத்துல உன்னையப் பத்தி எழுதலன்னு கோவுச்சுக்கிட்டியே...இப்போ உன் பெயரையும் போட்டாச்சு போதுமா??
டிஸ்கி 2 : பொதுவாக அனைவரையும் அண்ணே என்று அன்போடு அழைக்கும் பழக்கமுடைய நான் மாப்பிள்ளை என்று மகிழ்வோடு அழைப்பது சஞ்சையை மட்டுமே :)
|
|
நான் தான் முதல்ல.
ReplyDeleteஒரு நல்ல பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, இப்போதுதான் பாபு அண்ணண் குறித்து அறிகிறேன்.
ReplyDeleteஇதுவரை பாபுவை படித்ததில்லை.. நல்ல அறிமுகம்.. ரீடரில் சேர்த்தாச்சி.. நன்றி அப்துல்லா..
ReplyDeleteஒரு நல்ல பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணே!
ReplyDeleteபாபுவின் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeletewow..i just posted a similar post in mine..about my friend...
ReplyDeleteநல்ல அறிமுகம்..!
ReplyDeleteவாழ்த்துக்கள் !
//பாபு அண்ணனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். என் மாப்பிள்ளை பொடியன் சஞ்சையைப் பார்த்து கெட்டுப் போய்விடாமல் இப்படியே அழகாக எழுதுங்கள்//
ReplyDeleteயோவ் மாமா... இத யோசிக்கத் தான் ஹைதராபாத்ல 3 நாள் தூங்காம உக்காந்து யோசிச்சிங்களா?
ஒரு நல்ல பதிவரை அறிமுகப் படுத்தியதால சும்மா விடறேன்.. இல்லைனா.. அப்போவும் சும்மா தான் விடுவேன்.. ஜாக்கிரதை.. :))
கதை, கவிதை என்றெல்லாம் மிரட்ட மாட்டார்.// என்னை மனசில் வெச்சு சொன்னா மாதிரியே இருக்குதே.. அவ்வ்வ்..
ReplyDeleteபாபு உண்மையிலேயே ரொம்ப நல்லவருண்ணே.. நானே அவரு பத்தி எழுதுணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க.. (நா அவ்ரு பதிவுக்கு ஆடிக்கொருநாள் போனாலும் தவறாம என் பதிவுக்கு வந்துடுவாருண்ணே..)
ReplyDeleteஇதுவரை பாபுவை படித்ததில்லை.. அறிமுகத்துக்கு நன்றி அப்துல்லா அண்ணே
ReplyDelete//பாபு அண்ணனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். என் மாப்பிள்ளை பொடியன் சஞ்சையைப் பார்த்து கெட்டுப் போய்விடாமல் இப்படியே அழகாக எழுதுங்கள்//
ReplyDeleteரிப்ப்ப்ப்பீட்டு
வாங்க ஜோசப் அன்னே நீங்கதான் முதல்ல :))
ReplyDeleteவாங்க வெண்பூ
ReplyDeleteநன்றி வருகைக்கு
வாங்க தமிழ் அண்ணே
ReplyDeleteவருகைக்கு நன்றி :)
வாங்க சின்ன அம்மினி
ReplyDeleteஎப்படி இருக்கு ஆஸ்திரேலியா???
வாங்க பவனிதா
ReplyDeleteநானும் உங்க வலைப்பூவில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன் :)
வாங்க சுரேகா அண்ணே
ReplyDeleteவருகைக்கு நன்றின்ணே
வாங்க சஞ்சய் மாப்ள
ReplyDelete//இல்லைனா.. அப்போவும் சும்மா தான் விடுவேன்.. ஜாக்கிரதை.. :))
//
சரி சரி சீக்கிரம் கல்யாணம் பண்ன வேண்டியதுதான் உனக்கு. பொண்டாட்டிட்ட பேசுற டயலாகெல்லாம் வந்துருச்சு :))
வாங்க தாமிரா அண்ணே
ReplyDeleteஅடடே...டக்குனு புருஞ்சுருச்சே உங்களுக்கு :)
வாங்க இவன் அண்ணே
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க மங்களூர் சிவாண்ணே
ReplyDeleteபோட்டாச்சா வழக்கம்போல ரிப்பீட்ட...போய்ட்டு வாங்க :)
பெரிய பெரிய ஆளையெல்லாம் நம்ம பக்கம் திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி
ReplyDeleteஅதுவும் அந்த ஆரம்ப வார்த்தைகள், அடடா அருமை.
அந்த வார்த்தைகளுக்கு தகுதியானவன்தானா என்று தெரியவில்லை,உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.
சுரேகா,தாமிரா மற்றும் வெண்பூ பதிவுகளுக்கு நான் தொடர்ந்து போவதுண்டு
//மழை பெய்ந்து ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில் கழுவி விடப்பட்ட சாலைகளில் இருபுறமும் சூழ்ந்த மரங்கள் தரும் சிறு குளிரில்//
ReplyDeleteவர வர நீங்க எத எழுதினாலும் கவிதை மாதிரி இருக்கு
அவரு சஞ்சய் ராமசாமி
ReplyDeleteஇவரு சஞ்சய் சரக்குசாமி
ஆனா எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு உண்மையை சொல்லுவாரு