07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 2, 2008

என்ன நம்ப செட்டு.....பெரிய சேவிங் செட்டு


நான் வலைப்பதிவு துவங்கிய காலத்தில் பெரிதாக ஒரு பின்னூட்டமும் வராது. நம்ம பயலாச்சேனு அன்பு அக்கா புதுகைத் தென்றலும், ஊர்க்காரன் என்று அண்ணன் சுரேகாவும் மட்டுமே வருவார்கள். என்னுடைய ஆரம்ப நாட்களில் எழுதிய பதிவுகளில் தற்போது காணப்படும் பின்னூட்டங்கள் எல்லாம் சமீபத்தில் வந்தவைதான்.


கடை திறந்து தன் முயற்சியில் சற்றும் தளராமல் நான் ஈ ஓட்டிக் கொண்டு இருந்த போது ஒருநாள் வந்தார் தங்கை ராப். "அப்துல்லா! நம்பல்லாம் புது ஆளுங்க. நம்பளத் தேடி பெரிய மனுசங்க யாரும் வரமாட்டாங்க. அதுனால நீங்க பிரபல பதிவர்களுக்கு பின்னூட்டம் போடுவதை விட நம்ப மாதிரி புது ஆளாத் தேடிப்போய் பின்னூட்டம் போட்டீங்கன்னா அவங்களும் வருவாங்க" என்றார். அப்துல்லா என்று என்னை அழைத்த ராப் இன்று அண்ணே என்று என்னை அழைக்கிறார்.தனிமடலில் சுக,துக்க பகிர்தல் என தொடர்கிறது எங்கள் உறவு.வரலாற்றுச் சிறப்பு மிக்க ராப்பின் அந்த யோசனையை உடனே செயல்படுத்தத் துவங்கினேன்.

தமிழ்மணத்தில் பதிவைப் பார்த்தவுடன் ஃபுரோபைலைப் பார்ப்பேன்.அதில் நான் ஆரமித்து 3 மாதங்களுக்கு முன் துவங்கியவர்களையும், எனக்குப் பின் துவங்கியவர்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து பின்னூடம் போடத் துவங்கினேன்.
அப்படி நான் போட்ட முதல் பின்னூட்டம் அண்ணன் தாமிராவுக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க நான் அவர் பதிவில் பின்னூட்டம் போட்ட 7 வது நிமிடம் என் பதிவில் அவர் வந்து பின்னூட்டம் இட்டார். அட என்னடா இந்த மனுசன் நம்பள விட காஞ்சுபோய் இருக்கான் போல என்று நினைத்தேன்.இன்றைக்கும் அடிக்கடி தொலைபேசியில் பேசாவிட்டால் தூக்கம் வராது இருவருக்கும்.


அதேபோல வெண்பூ, நான் அவருக்கு பின்னூட்டம் போட்ட ஒரிரு நிமிடங்களிலேயே பதில் போட்டார். எவனாவது வருவானா...வருவானான்னே கீபோர்டும் கையுமா உக்காந்திருந்து இருக்காரு. இந்த தீபாவளி வழக்கம் போல புதுகையில் இருப்பதைத் தவிர்த்து விட்டு சென்னையில் தனியாக அமந்து இருக்கிறேன். அண்ணன் வெண்பூவிடம் இருந்து போன்.
" அப்துல்லா எங்க இருக்கீங்க புதுக்கோட்டையிலயா?"
"இல்லண்ணே. இங்கதான் இருக்கேன்"
"சரி! அப்ப வீட்டுக்கு வந்துருங்க சாப்பிட"
"இல்லண்ணே...உங்களுக்குத்தான் தெரியுமே! நான் தீபாவளி அப்ப எங்கயும் போறதில்லைன்னு"
"தெரியும். சரி அப்ப பரவாயில்லை"
சுரீர் என்றது எனக்கு. அப்படியெல்லாம் இல்லை நீ கட்டாயம் வரனும் வந்தே ஆகனும்னு வெண்பூ வற்புறுத்தி இருந்தால் வர முடியாதுங்கன்னு மறுத்து இருப்பேன். ஆனால் நான் சொன்னவுடன் என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வற்புறுத்தாது சரி என்று சொன்ன அவருக்கு நான் என்ன செய்ய முடியும்? ஒரே ஒரு நொடி யோசித்தேன்.
"சரிண்ணே! வர்றேன். எத்தன மணிக்கு வரணும்?''
"அவங்க எப்ப வேணும்னாலும் சாப்பாடு போடட்டும் நீங்க ஒரு 11.30 மணிப்போல வந்துருங்க."
16 ஆண்டுகளுக்குப்பின் தீபாவளி விருந்து அன்று அண்னன் வெண்பூ வீட்டில்.....

அண்ணன் ஜோசப் பால்ராஜீடனான அறிமுகம் ஒரு மறக்க முடியாத நினைவு. ஒருமுறை கலைஞரைப் பற்றிய அவருடைய கருத்தை எழுதி இருந்தார். தலைவனைப் பற்றி யாரோ எழுதி இருக்காங்களேன்னு போய் பார்த்து படித்து அவர் கருத்துக்கு எதிர் கருத்தை பின்னூட்டமாக போட்டேன். அவர் பதிலளிக்க பிறகு நான் அதற்கு எதிர் பதில் சொல்ல, பின் அவர் தொடரவென நாள் கணக்கில் எங்கள் சண்டை நீடித்தது. அந்தப் போரின் இறுதியில் இருவருமே வெற்றி பெற்றோம்.ஆம் சகோதரர்கள் என்ற பரிசு இருவருக்குமே கிடைத்தது. கருத்து என்பது வேறு நட்பு என்பது வேறு என்பதற்கு சற்று பெருமையோடே சொல்வேன்...நாங்கள் இருவரும் சிறந்த உதாரணம்.


தமிழ்மணத்தில் தினமும் பரிசல்காரன் என்ற பெயரில் பதிவுகள் இருப்பதைப் பார்த்து டெய்லி எழுதுறாரு பழம்பெரும் பதிவர் போலன்னு அவர் பக்கமே போறதில்லை.ஒருமுறை என் பதிவு ஒன்றைப் பாராட்டி அவர் பின்னூட்டமிட பதில் மொய் செய்வதற்காக அவர் வலைப்பூ பக்கம் போனேன். அப்பதான் தெரிஞ்சது அந்தாளும் நம்பளோடயே வந்த ஆளுன்னு. அண்ணன் பரிசலுக்கும் எனக்குமான உறவு இன்று குடும்ப உறவு.

அண்னன் ச்சின்னப்பையனுக்கும் எனக்குமான நக்கல் நட்பு அனைவரும் அறிந்ததே. நான் விபத்தில் சிக்கி இருந்த நேரம் நான் நலம் பெற வேண்டும் என்று தனிப் பதிவே போட்டு என்னை நெகிழ வைத்தவர்.வாரம் ஒருமுறை சாட்டில் வந்து என்னை வம்பிழுப்பதை கடமையாகக் கொண்டவர். ஒருவேளை அப்படி ஒரு வேண்டுதலோ என்னவோ அவருக்கு.


சிங்கைச் சிங்கம் சின்ன ரஜினி "அண்ணன் கிரி"யும் நான் பதிவெழுதத் துவங்கிய நேரத்தில் வந்தவர்தான். நான் முதன் முதலில் நேரில் சந்தித்த பதிவரும் அவர்தான். சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு போகும் வழியில் என்னைச் சந்தித்தார். அவருடைய பதிவுகளில் இன்றுவரை அதிகமான பின்னூட்டம் என்னுடையதாகத்தான் இருக்கும்.


கிரியின் பதிவில் கண்ட பின்னூட்டம் வாயிலாக எனக்கு அறிமுகம் ஆன பதிவர் அண்னன் மோகன் கந்தசாமி. இவரை மோகன் கந்தசாமி என்பதைவிட மோகன் சண்டைசாமி என்றே அழைக்கலாம். தன் கருத்தை சொல்ல எதற்கும்,எவர்க்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர். வெறும் மொக்கைப் பதிவராக மட்டுமே வலையுலகில் அறிமுகமாயி இருந்த என்னை வற்புறுத்தி " திராவிடமும், கம்யூனிசமும்" என்ற கட்டுரையை அவரது வலைப்பூவில் எழுத வைத்தவர். அதன் பின்தான் அண்ணன் கோவி.கண்ணன் போன்ற மூத்த முன்னோடி பதிவர்களின் பார்வை என் பக்கம் திரும்ம்பியது.
அண்ணன் நர்சிம்,அண்ணன் வால்பையன், அண்னன் அதிஷா,அண்ணன் குடுகுடுப்பையார், அண்ணன் அதுசரி, அண்ணன் வடகரை.வேலன், அண்ணன் எஸ்.கே, அண்ணன் கடையம் ஆனந்த்,அண்ணன் இவன்,. தம்பி கார்க்கி, தங்கை கயல்விழி என்று நான் பதிவெழுதத் துவங்கிய காலத்தில் எழுதத்துவங்கி எனக்கு தொடர்ந்து பின்னூட்டம் இடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சொல்லி எழுதப்போனால் நீளம் அதிகமாகிவிடுமென பயந்து இத்தோடு நிப்பாட்டிக்கிறேன்.


என்னை ஆதரித்த பெருசுகள்

நான் எழுதத் துவங்கியதில் இருந்தே சில பழம்பெரும் பதிவர்கள் என் பக்கம் வந்து பின்னூட்டம் இட்டு ஆதரித்தார்கள்.அவர்களில் முதலில் வந்தவர் அண்ணன் தமிழ்பிரியன்.நான் என்ன எழுதுனாலும் சரி ராப்போடு போட்டிபோட்டு மீ த ஃபர்ஸ்டாய் முதலில் வந்து விடுவார். இதில் இருந்தே இவர் எவ்வளவு நல்லவர் என்று உங்களுகெல்லம் தெரியும்.


சகோதரி சந்தனமுல்லை இவரைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை.... இவர் என் குளோஸ் ஃபிரண்டு பப்புவோட அம்மா.


அப்புறம் அம்மா துளசி கோபால், அக்கா இராமலஷ்மி, சீனா அய்யா, அண்ணன் முரளிகண்ணன் , அண்ணன் ஆயில்யன் அவங்கல்லாம் கூட ஆரம்பத்தில் இருந்தே என்னை ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்கள்.


என்ன கைமாறு செய்வேன் உங்களுகெல்லாம் நன்றி என்று போற போக்கில் சொல்வதைத் தவிர.


டிஸ்கி 1: மேல சொன்ன நம்ப செட்டு ஆளுங்களோட பதிவுகள்ல சில நாளா பின்னூட்டம் போடுறத குறைச்சுட்டேன். காரணம் நான் வந்த போது பழைய பதிவர்கள் யாரும் நமக்கு பின்னூட்டம் போடுறதில்லையேன்னு ஏக்கம் இருந்துச்சு. அதுமாதிரிதானே இப்ப வர்ற பதிவர்களும் நினைப்பாங்க. அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.

59 comments:

 1. டிஸ்கியைத்தவிர கிட்டத்தட்ட 90% பதிவு அப்படியே அனக்கும் பொருந்துகிறது. ஆகவே இதை நான் எழுதியதாகவே கருதிக்கொள்கிறேன். ஆகவே பின்னூட்டமிடுவதைவிடவும் பின்னூட்டங்கள் வருவதையே எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்.

  கடை திறந்து தன் முயற்சியில் சற்றும் தளராமல் நான் ஈ ஓட்டிக் கொண்டு இருந்த போது ஒருநாள் வந்தார் தங்கை ராப்.//
  அட என்னடா இந்த மனுசன் நம்பள விட காஞ்சுபோய் இருக்கான் போல என்று நினைத்தேன்.//
  எவனாவது வருவானா...வருவானான்னே கீபோர்டும் கையுமா உக்காந்திருந்து இருக்காரு.//
  அப்பதான் தெரிஞ்சது அந்தாளும் நம்பளோடயே வந்த ஆளுன்னு.//
  ஆதரித்த பெருசுகள் ....அவர்களில் முதலில் வந்தவர் அண்ணன் தமிழ்பிரியன்......நான் என்ன எழுதுனாலும் சரி ராப்போடு போட்டிபோட்டு மீ த ஃபர்ஸ்டாய் முதலில் வந்து விடுவார்...... இதில் இருந்தே இவர் எவ்வளவு நல்லவர் என்று உங்களுகெல்லம் தெரியும்.//
  சகோதரி சந்தனமுல்லை இவரைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை.... //


  இவற்றிற்கு பலத்த ரிப்பீட்டுகளை போட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //
  எவனாவது வருவானா...வருவானான்னே கீபோர்டும் கையுமா உக்காந்திருந்து இருக்காரு.
  //

  :)))))))))

  ReplyDelete
 4. ooooo அது சரி - நாங்கெல்லாம் பெர்சுங்களா - ம்ம்ம்ம் - நாங்களும் பின்னூட்டம் போடுவோம்ல - எல்லாப் பதிவிலேயும்

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. இப்புதிய பழக்கத்தை நான் ஏற்கெனவே தொடங்கி விட்டேன்
  தொடர்கிறேன்

  ReplyDelete
 6. //அந்தப் போரின் இறுதியில் இருவருமே வெற்றி பெற்றோம்.ஆம் சகோதரர்கள் என்ற பரிசு இருவருக்குமே கிடைத்தது. கருத்து என்பது வேறு நட்பு என்பது வேறு என்பதற்கு சற்று பெருமையோடே சொல்வேன்...நாங்கள் இருவரும் சிறந்த உதாரணம்.//

  மனம் நிறைந்த மகிழ்வோடும், விண்ணை முட்டுமளவு கர்வத்தோடும் இதை அப்படியே வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 7. வாங்க தாமிரா அண்ணே

  என்னத்த சொல்ல...சேம் பிளட்டு :)

  ReplyDelete
 8. வாங்க சிவா அண்ணே

  //me the 5th

  //

  ஏங்க ஞாயிற்று கிழமைன்னு கொஞ்சம் ஜாஸ்தியா சாப்டிங்களா? ரெண்டாவதா வந்துட்டு 5th ங்குறீங்க?? :)))

  ReplyDelete
 9. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  //

  நண்றிண்ணே :))

  ReplyDelete
 10. அப்துல்லா என்ற மாமனிதனை எனக்கு சகோதரனாக பெற்றுத்தந்தமையாலும், இன்னும் பல இனிய உறவுகளை எனக்கு கொடுத்தமையாலும் எந்த உருப்படியான விசயத்துக்கும் கிஞ்சுத்தும் வழிகாட்டாத வலையுலகம் என பலர் குறிப்பிட்ட கருத்தை நான் முற்றிலும் புறந்தள்ளுகிறேன்.

  ReplyDelete
 11. //பதிவர்கள் யாரும் நமக்கு பின்னூட்டம் போடுறதில்லையேன்னு ஏக்கம் இருந்துச்சு. அதுமாதிரிதானே இப்ப வர்ற பதிவர்களும் நினைப்பாங்க. அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.//

  இதை நானும் ஃபாலோ பண்றேன் அண்ணா! :)))

  ReplyDelete
 12. வாங்க சீனா அய்யா

  //அது சரி - நாங்கெல்லாம் பெர்சுங்களா - ம்ம்ம்ம் -

  //

  நான் வயசச் சொல்லல...எங்களுக்கு முன்னாடியே எழுத வந்தீங்கள்ள...அதச் சொன்னேன் :))

  ReplyDelete
 13. இப்புதிய பழக்கத்தை நான் ஏற்கெனவே தொடங்கி விட்டேன்
  தொடர்கிறேன்

  //

  நானும் உங்களப் பார்த்து காப்பி அடுச்சதுதான்

  ReplyDelete
 14. வாங்க ஜோசப் அன்ணே

  மிக்க நன்றிண்ணே :)

  ReplyDelete
 15. வாங்க ஆயில்யன் அண்ணே

  //இதை நானும் ஃபாலோ பண்றேன் அண்ணா! :)))

  //


  நீங்கதான் ஏற்கனவே ஃபாலோ பண்ணுறீங்களே!!!அப்படித்தான அண்ணே நான் புதுசா இருந்தப்ப என்பக்கமும் வந்தீங்க :)

  ReplyDelete
 16. //
  16 ஆண்டுகளுக்குப்பின் தீபாவளி விருந்து அன்று அண்னன் வெண்பூ வீட்டில்.....
  //

  எங்கள் அழைப்பை ஏற்று வந்ததற்கு நன்றி அப்துல்லா.. தங்கமணிதான் சாப்பாடு எப்படி இருந்திச்சின்னு கேக்கவே இல்லையேன்னு புலம்பிகிட்டே இருக்காங்க!!! (என்னை கேட்டா எப்படியிருந்தாலும் நல்லா இருக்குன்னுதான் சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரியும்.. ஹி..ஹி..ஹி..)

  ReplyDelete
 17. //
  மேல சொன்ன நம்ப செட்டு ஆளுங்களோட பதிவுகள்ல சில நாளா பின்னூட்டம் போடுறத குறைச்சுட்டேன்.
  //
  இதுக்கு பேர்தான் பெரும்பதிவர் அப்படின்றது :))))

  //
  அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.
  //
  அதாவது உங்க பதிவுக்கு நிறைய பின்னூட்டம் விழறதுக்காக ஆள் சேத்திட்டு இருக்கீங்க.. பாருங்க புதுப்பதிவர்களே.. இதுக்கு பேர்தான் பின்னூட்ட டுபுரித்தனம்.. நம்பாதீங்க.. :))))

  ReplyDelete
 18. நான் உங்க செட்டா???????? அண்ணே மூனு மாசம் ச்சின்னப்பையன்.. அதனால் அடுத்த ஜெனரேஷன்

  ReplyDelete
 19. //(என்னை கேட்டா எப்படியிருந்தாலும் நல்லா இருக்குன்னுதான் சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரியும்.. ஹி..ஹி..ஹி..)//

  ஹிஹிஹி அப்துல்லா அண்ணே அத விட நல்லவ்ரு.. அவரு மட்டும் என்ன சொல்லப் போறாரு? இருந்தாலும் உங்கத் தொப்பைய பார்த்தாலே அண்ணி நல்லாதான் சமைப்பாங்கனு தெரியுது.. தினமும் ஹோட்டல் போய் சாப்பிட மாட்டிங்க.. உங்களுக்கு அவ்ளொ தைரியம் இருக்கா என்ன?

  ReplyDelete
 20. //அண்ணன் இவன்,. தம்பி கார்க்கி,//

  கார்க்கியை தம்பி என்று கூறி என்னை அண்ணா என்று அழைத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.... கார்க்கிய விட எனக்கு 3 வயசு குறைவுங்கண்ணா....

  ReplyDelete
 21. //புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்கு//

  இயன்றவரை இதை நானும் கடைபிடித்து வருகிறேன்.

  ReplyDelete
 22. என்னை மெருசுகளுடன் சேர்த்த அப்துல்லா அண்ணனைக் கண்டித்து உள்நடப்பு செய்கின்றேன்.

  ReplyDelete
 23. ராப் அக்கா, தாமிரா அங்கிள், வெண்பூ அங்கிள், ஜோசப் பால்ராஜ் அங்கிள், ச்சின்னப் பையன் அண்ணன், பரிசல் அண்ணன் இவங்க எல்லாம் இருக்கும் போது என்னை எப்படி நீங்க பெருசுக லிஸ்ட்டில் சேர்க்கலாம்... எனக்கு அழுகை அழுகையா வருது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 24. //சகோதரி சந்தனமுல்லை இவரைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை.... இவர் என் குளோஸ் ஃபிரண்டு பப்புவோட அம்மா.////
  அட உங்களுக்குமா? எனக்கும் பப்பு குளோஸ் பிரண்டாக்கும்... :)

  ReplyDelete
 25. சீனா சார், இராமலக்ஷ்மி அக்கா,துளசி டீச்சர், ஆயில்யன் அண்ணன் இவங்க எல்லாம் வய்சான பதிவர்கள்... நான் ரொம்ப சின்ன பையன்.. என்னைப் போய் பெருசுன்னு சொல்லிட்டீங்களே.. மனசே ஆறலை அண்ணே..;)

  ReplyDelete
 26. ///டிஸ்கி 1: மேல சொன்ன நம்ப செட்டு ஆளுங்களோட பதிவுகள்ல சில நாளா பின்னூட்டம் போடுறத குறைச்சுட்டேன். காரணம் நான் வந்த போது பழைய பதிவர்கள் யாரும் நமக்கு பின்னூட்டம் போடுறதில்லையேன்னு ஏக்கம் இருந்துச்சு. அதுமாதிரிதானே இப்ப வர்ற பதிவர்களும் நினைப்பாங்க. அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.///

  நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க... :)

  ReplyDelete
 27. //அதன் பின்தான் அண்ணன் கோவி.கண்ணன் போன்ற மூத்த முன்னோடி பதிவர்களின் பார்வை என் பக்கம் திரும்ம்பியது.//

  இதெல்லாம் பேரண்டப் புளுகு, அதற்கும் முன்பே உங்கள் பதிவுகளில் பின்னூட்ட மிட்டு இருக்கிறேன், தேதிகளை வைத்துச் சரிபார்த்துக் கொள்ளவும்.

  ReplyDelete
 28. உங்களோட பரந்த மனசு யாருக்கு வரும்னு கேக்கத் தோணுது... எனக்கெல்லாம் ஒரு பதிவுல அறிமுகம் குடுத்து, உங்களோட பதிவுலகத்து நண்பர்கள் எல்லோரையும் பத்தி ஒரு பதிவு போட்டு, வலைச்சரம் வாய்ப்பை பயன்படுத்தி பலரை மிகப் பலரிடம் கொண்டு சேர்த்த உங்களை எப்பிடி பாராட்றதுன்னே தெரியல... எது செஞ்சாலும் அதுல ஒரு நல்ல நோக்கம் இருக்கணும்கறது உங்களோட பணிகளையும் பதிவுகளையும் பார்க்கும்போது புலனாகிறது. இடை விடாத பணிகளுக்கு இடையேயும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பையும் மிகச் சிறப்பாக செய்திருக்கீங்க. வேற வார்த்தை தெரியலங்கறதால "நன்றி"ன்னு ஒரு வார்த்தைதான் சொல்ல முடியுது. உங்களோட நட்பு கிடைத்ததை ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.

  உங்களை முதலில் சந்தித்தபோது ஏன் ஃபோட்டோ எடுத்துக்கலைன்னு பரிசல் கேட்டிருந்தாரு. நிஜமா உங்களோட 2 மணி நேரம் செலவிட வாய்ப்பிருந்தபோதும் ஃபோட்டோ எடுதுக்கணும்னு தோணவே இல்லை. உங்க பேச்சையும், உயர்ந்த உள்ளத்தையும் எண்ணங்களையும் ரசிச்சுக்கிட்டுருந்தேன். எஙக மறந்துருவோமோன்னு ஒரு சின்ன அவநம்பிக்கை இருக்கறபோதுதான் ஃபோட்டோ எல்லாம் அவசியமாகுது. உங்களை மறக்கவே முடியாதுங்கிறபோது.....

  நல்ல இருகங்கண்ணே... மனமார்ந்த வாந்த்துக்கள் !!!

  ReplyDelete
 29. //Mahesh said...
  உங்க பேச்சையும், உயர்ந்த உள்ளத்தையும் எண்ணங்களையும் ரசிச்சுக்கிட்டுருந்தேன். எஙக மறந்துருவோமோன்னு ஒரு சின்ன அவநம்பிக்கை இருக்கறபோதுதான் ஃபோட்டோ எல்லாம் அவசியமாகுது. உங்களை மறக்கவே முடியாதுங்கிறபோது.....

  நல்ல இருங்கண்ணே.//

  நான் எழுத நினைத்ததை எழுதிய மஹேஷ் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 30. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................தீபாவளி விருந்தா?????????? என்ன மெனுன்னு சொல்லாமத் தவிர்த்த உங்க நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கறேன். நைசா சம்மந்தியும் சொல்லலை. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், தங்கச்சி, சம்மந்திக்காக ஒரு நாள் வயித்துவலியக் கூடப் பொறுத்துக்கமுடியாதா உங்க ரெண்டு பேரால? இவ்ளோ பிசினாரியா நீங்க ரெண்டு பேரும் இருந்தாலும் நான் இன்னைக்கு உங்கள மன்னிச்சிடரேன். ஏன்னா நான் இன்னைக்கும் ஒரு சூப்பர் கோழிச் சாப்பாடு சாப்பிட்டேன்:):):)

  ReplyDelete
 31. //வாங்க சிவா அண்ணே

  //me the 5th

  //

  ஏங்க ஞாயிற்று கிழமைன்னு கொஞ்சம் ஜாஸ்தியா சாப்டிங்களா? ரெண்டாவதா வந்துட்டு 5th ங்குறீங்க?? :)))//

  வழிமொழிகிறேன்:):):)

  ReplyDelete
 32. ////
  மேல சொன்ன நம்ப செட்டு ஆளுங்களோட பதிவுகள்ல சில நாளா பின்னூட்டம் போடுறத குறைச்சுட்டேன்.
  //
  இதுக்கு பேர்தான் பெரும்பதிவர் அப்படின்றது :))))

  //
  அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.
  //
  அதாவது உங்க பதிவுக்கு நிறைய பின்னூட்டம் விழறதுக்காக ஆள் சேத்திட்டு இருக்கீங்க.. பாருங்க புதுப்பதிவர்களே.. இதுக்கு பேர்தான் பின்னூட்ட டுபுரித்தனம்.. நம்பாதீங்க.. :))))//

  கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

  ReplyDelete
 33. //ராப் அக்கா//

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு கல்யாணம் ஆனா ஒரே காரணத்துக்காக இன்னும் எத்தனப் பேர் இப்டி என்னை பழிவாங்கப் போறீங்க?

  ReplyDelete
 34. எனக்கும் சந்தனமுல்லை அவர்களை ரொம்ப பிடிக்கும். அவங்க எழுதுற விதம், பப்புவோட ஒவ்வொரு ஸ்டேஜயும் அழகா பதிவு பண்ற விதம் கலக்கல். இதெல்லாத்துக்கும் மேல அவங்க எங்கக்கா மாதிரியே ரசனை உள்ளவங்கன்னு சிலப் பதிவுகள் பார்க்கும் போது தெரிஞ்சு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. Bally sagoo பத்தி அவங்க எழுதுன பதிவை படிச்சு நான் அழுதுட்டேன். அந்த பீரியட் என் மனக்கண் முன்னால அப்டியே வந்துடிச்சி. எங்கக்கா செட் எல்லாம் அப்போ எப்டி இருந்தாங்களோ, அதை கண் முன் கொண்டுவந்துட்டாங்க. அந்த வயசுல எல்லாம் அவங்களாவே(எங்கக்கா செட்) மாறணும்னு நாங்கல்லாம் அவ்ளோ முயற்சி பண்ணுவோம். அது ஒரு அழகிய நிலாக்காலம்:):):)

  ReplyDelete
 35. ஆனா சம்மந்தி வெண்பூ அவர்களே, நானெல்லாம் இவர் போட்ட அளவுக்கு மினிமம் சீன் கூட போடாம, வீட்டுக்குக் கூப்டீங்கன்னாலே என்ன சாப்பாடு போடுவீங்கன்னு கேட்டிருவேன். ஹி ஹி, அப்புறம் எஸ்.ராமகிரிஷ்ணனுக்கு சப்பாத்தி சுட்டுப் போட்ட கதையா மாறிடும்:):):) எப்டி நாங்களும் இதெல்லாம் படிச்சிருக்கோம்னு சந்துல சிந்து பாடியாச்சு பாத்தீங்களா:):):)

  ReplyDelete
 36. //அப்துல்லா என்று என்னை அழைத்த ராப் இன்று அண்ணே என்று என்னை அழைக்கிறார்//

  அதெயெல்லாம் ஏன் நியாபகம் வெச்சிருக்கீங்க?:):):)

  ReplyDelete
 37. //தனிமடலில் சுக,துக்க பகிர்தல் என தொடர்கிறது எங்கள் உறவு//

  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்க ரெண்டு பேர் போட்டோ உங்களுக்கு துக்கமா இருக்கா?:):):)

  ReplyDelete
 38. //அப்துல்லா என்ற மாமனிதனை எனக்கு சகோதரனாக பெற்றுத்தந்தமையாலும், இன்னும் பல இனிய உறவுகளை எனக்கு கொடுத்தமையாலும் எந்த உருப்படியான விசயத்துக்கும் கிஞ்சுத்தும் வழிகாட்டாத வலையுலகம் என பலர் குறிப்பிட்ட கருத்தை நான் முற்றிலும் புறந்தள்ளுகிறேன்//

  ஜோசப் அண்ணே... நிஜம்தாங்க நீங்க சொல்றது... அப்துல்லா அண்ணன் மாதிரி நட்பு கிடைச்சது இந்த இணையத்துலேன்றதாலே... என் பதிவுலே போட்டிருக்கிற மேற்பட்ட வாக்கியத்தை நான் எடுத்து விடுகிறேன்....

  ReplyDelete
 39. // ஆயில்யன் said...
  //பதிவர்கள் யாரும் நமக்கு பின்னூட்டம் போடுறதில்லையேன்னு ஏக்கம் இருந்துச்சு. அதுமாதிரிதானே இப்ப வர்ற பதிவர்களும் நினைப்பாங்க. அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.//

  இதை நானும் ஃபாலோ பண்றேன் அண்ணா! :)))
  //

  இனிமே நானும்....

  ReplyDelete
 40. //
  கார்க்கி said...
  //(என்னை கேட்டா எப்படியிருந்தாலும் நல்லா இருக்குன்னுதான் சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரியும்.. ஹி..ஹி..ஹி..)//

  ஹிஹிஹி அப்துல்லா அண்ணே அத விட நல்லவ்ரு.. அவரு மட்டும் என்ன சொல்லப் போறாரு? இருந்தாலும் உங்கத் தொப்பைய பார்த்தாலே அண்ணி நல்லாதான் சமைப்பாங்கனு தெரியுது..
  //

  :-)))))))))))))))))

  ReplyDelete
 41. // தமிழ் பிரியன் said...
  ராப் அக்கா, தாமிரா அங்கிள், வெண்பூ அங்கிள், ஜோசப் பால்ராஜ் அங்கிள், ச்சின்னப் பையன் அண்ணன், பரிசல் அண்ணன் இவங்க எல்லாம் இருக்கும் போது என்னை எப்படி நீங்க பெருசுக லிஸ்ட்டில் சேர்க்கலாம்... எனக்கு அழுகை அழுகையா வருது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  //

  இதுலே என் பேர் தப்பா சேத்துட்டாரு நம்ம தமிழ்... மக்களே, படிக்கும்போது என் பேரை தவிர்த்துட்டு படிக்கவும்... நன்றி...

  ReplyDelete
 42. //
  தமிழ் பிரியன் said...
  ராப் அக்கா, தாமிரா அங்கிள், வெண்பூ அங்கிள், ஜோசப் பால்ராஜ் அங்கிள், ச்சின்னப் பையன் அண்ணன், பரிசல் அண்ணன் இவங்க எல்லாம் இருக்கும் போது என்னை எப்படி நீங்க பெருசுக லிஸ்ட்டில் சேர்க்கலாம்... எனக்கு அழுகை அழுகையா வருது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  //

  யோவ் தமிழு, உமக்கு ச்சின்னப்பையன், பரிசல் எல்லாம் அண்ணன்.. நான், தாமிரா, ஜோசப் எல்லாம் அங்கிளா... ஆனாலும் ரொம்ப ஓவர்.. சொல்லிட்டேன்..

  நாங்கல்லாம் யூத்து.. ஞாபகம் வெச்சுக்கோ..
  :))))

  ReplyDelete
 43. //
  ச்சின்னப் பையன் said...
  // தமிழ் பிரியன் said...
  ராப் அக்கா, தாமிரா அங்கிள், வெண்பூ அங்கிள், ஜோசப் பால்ராஜ் அங்கிள், ச்சின்னப் பையன் அண்ணன், பரிசல் அண்ணன் இவங்க எல்லாம் இருக்கும் போது என்னை எப்படி நீங்க பெருசுக லிஸ்ட்டில் சேர்க்கலாம்... எனக்கு அழுகை அழுகையா வருது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  //

  இதுலே என் பேர் தப்பா சேத்துட்டாரு நம்ம தமிழ்... மக்களே, படிக்கும்போது என் பேரை தவிர்த்துட்டு படிக்கவும்... நன்றி...
  //

  ஆஹா.. என்னா பெருந்தன்மை.. உங்களை அங்கிள் லிஸ்ட்ல சேக்காம விட்டுட்டாருன்றதால கோச்சிகிட்டிங்களா? :)))

  ReplyDelete
 44. //
  rapp said...
  ஆனா சம்மந்தி வெண்பூ அவர்களே, நானெல்லாம் இவர் போட்ட அளவுக்கு மினிமம் சீன் கூட போடாம, வீட்டுக்குக் கூப்டீங்கன்னாலே என்ன சாப்பாடு போடுவீங்கன்னு கேட்டிருவேன்.
  //

  நானும்தான்.. ஹி..ஹி.. சேம் பிளட்..

  ReplyDelete
 45. //
  rapp said...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........................
  தீபாவளி விருந்தா?????????? என்ன மெனுன்னு சொல்லாமத் தவிர்த்த உங்க நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கறேன். நைசா சம்மந்தியும் சொல்லலை.
  //

  சென்னைக்கு வராமய போய்டுவீங்க.. வர்றப்ப சொல்லுங்க.. உங்களையும் கவனிச்சிடுவோம் (டிஸ்கி: கவலைப்படாதீங்க, என் தங்கமணி நல்லாவே சமைப்பாங்க..)

  ReplyDelete
 46. பதிவை முழுசாப் படிச்சுட்டேன். பின்னூட்டங்களை முழுசா படிக்கல. அப்படியும், இப்படியுமா படிச்சதுல நான் சொல்ல நினைக்கற பல விஷயங்களை, பலரும் சொல்லியிருக்காங்க. அதுனால ஒரே ஒரு பாராட்டு...

  அதாவது சின்னப்பையனை அண்ணன் -னும்போது, அண்னன்’ன்னு சொல்லியிருக்கீங்க. பெரிய ண’வுக்கு பதிலா சின்ன ’ன’ போட்டது அவரு சின்னப்பையன்ங்கறதால தானே?

  ரொம்ப ரசிச்சேன்!

  (கிகிகிகிகிகிகி.......)

  ReplyDelete
 47. அண்ணே

  பதிவே எழுதாத என்னையும் பதிவரா சேர்த்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சினே நிறைய பேரை கை காட்டி விட்டு இருக்கீங்க. படிக்கவும் பின்னோட்டம் போடவும் முயற்சி பண்றேன்.

  ReplyDelete
 48. //நம்பளத் தேடி பெரிய மனுசங்க யாரும் வரமாட்டாங்க.//

  யாரு அந்த பெரியவங்க

  ReplyDelete
 49. //அப்படியெல்லாம் இல்லை நீ கட்டாயம் வரனும் வந்தே ஆகனும்னு வெண்பூ வற்புறுத்தி இருந்தால் வர முடியாதுங்கன்னு மறுத்து இருப்பேன். ஆனால் நான் சொன்னவுடன் என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வற்புறுத்தாது சரி என்று சொன்ன அவருக்கு நான் என்ன செய்ய முடியும்?//

  ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை போல

  ReplyDelete
 50. //இவரை மோகன் கந்தசாமி என்பதைவிட மோகன் சண்டைசாமி என்றே அழைக்கலாம்.//

  நல்லா வைக்கிறிங்க பேரு

  ReplyDelete
 51. //தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.//

  தங்களின் சேவை பதிவுலகுக்கு தேவை

  ReplyDelete
 52. //சொன்னா நம்ப மாட்டீங்க நான் அவர் பதிவில் பின்னூட்டம் போட்ட 7 வது நிமிடம் என் பதிவில் அவர் வந்து பின்னூட்டம் இட்டார்//

  ஹா ஹா ஹா ஹா

  //இன்றைக்கும் அடிக்கடி தொலைபேசியில் பேசாவிட்டால் தூக்கம் வராது இருவருக்கும்.//

  அப்ப! தாமிரா கிட்ட பேசுனா தூக்கம் வருதுன்னு சொல்றீங்க..இந்த நுண் அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் :-))))))

  //எவனாவது வருவானா...வருவானான்னே கீபோர்டும் கையுமா உக்காந்திருந்து இருக்காரு.//

  :-)))))

  //அப்படியெல்லாம் இல்லை நீ கட்டாயம் வரனும் வந்தே ஆகனும்னு வெண்பூ வற்புறுத்தி இருந்தால் வர முடியாதுங்கன்னு மறுத்து இருப்பேன்//

  அன்புக்கு அப்துல்லா அடிமை :-)

  //தொடரவென நாள் கணக்கில் எங்கள் சண்டை நீடித்தது//

  ஒரு ரணகளமே நடந்து இருக்கு

  //கருத்து என்பது வேறு நட்பு என்பது வேறு என்பதற்கு சற்று பெருமையோடே சொல்வேன்...நாங்கள் இருவரும் சிறந்த உதாரணம்.//

  அதுல என்னையும் இணைத்துக்குங்க..நாங்க போடாத சண்டையா (ஒரு வாட்டி தான் இருந்தாலும் ...)

  //பழம்பெரும் பதிவர் போலன்னு அவர் பக்கமே போறதில்லை//

  நல்ல வேளை பழம் தின்னு கோட்டை போட்ட பதிவர்னு நினைக்காம இருந்தீங்களே :-)))))

  //நான் முதன் முதலில் நேரில் சந்தித்த பதிவரும் அவர்தான்.//

  அப்ப நான் தான் மீ தி பஷ்டு :-)))

  //மோகன் கந்தசாமி என்பதைவிட மோகன் சண்டைசாமி என்றே அழைக்கலாம்//

  ஹா ஹா ஹா ஹா

  //அதுமாதிரிதானே இப்ப வர்ற பதிவர்களும் நினைப்பாங்க. அதுனால கிடைக்கின்ற நேரத்தில் தற்போது புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்.//

  அப்துல்லா உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு :-)) வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 53. பிரபலங்கள் பெயர் உள்ள இடத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 54. நிதானமா
  அழகா
  வலைச்சரத்தை
  முடிச்சிருக்கீங்க..
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 55. ஒரு சின்ன செய்தி..
  பதிவில்
  என் பெயரைக் கிளிக்கினால்
  நண்பர் முரளிகண்ணன்
  வலைப்பூவுக்குப்போகுது!

  பாத்தீங்களா?
  :)))

  ReplyDelete
 56. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணே.

  ReplyDelete
 57. புதியவர்களை ஆதரிக்கும் உங்கள் பின்னுட்டக் கடமைக்கு வாழ்த்துக்கள் அப்துல்லா.

  தாயறியும் குஞ்சின் வேதனை.

  ReplyDelete
 58. இதே மாதிரி நானும் ஒரு பதிவு போடணும்..இப்போதைக்கு சுருக்கமா சொல்லிக்கிறேன்..

  தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது