07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 5, 2008

இறுக்கியணைத்த....





நான் ஒரு கவிதைக் காதலன்... அதுவும் காதல் கவிதைகள் மேல் எனக்கு காதல் அதிகம்...
பொதுவாக காதல் கவிதைகளை மூன்று வகைப்படுத்தலாம்...
முதல் வகை காதலியைப் பார்த்தவுடன் அவளை பார்த்த பிரமிப்பில் தேவதை.. மயில் என
உயர்வு நவிர்ச்சியாக எழுதும் கவிதைகள்... இரண்டாவது வகை காதல் கைகூடாமல் போன
சோகத்தில் கண்ணீரை பேனாவில் ஊற்றியெழுதும் சோக காதல் கவிதைகள்... மூன்றாம் வகை
காதலுக்குள் சென்று காதலின் இன்பங்களையும் ஊடல்களையும் ஊடிய காதலியை சமாதானப்
படுத்தும் சாக்கில் செய்யும் குறும்புகளையும் அழகுற சொல்லும் கவிதைகள்...

முதல் இரண்டு வகைக் காதல் கவிதைகள் தான் மிக அதிகமாக இருக்கின்றன... மூன்றாம் வகைக்
கவிதைகள் குறைவுதான்... ஆனால் இந்த மூன்றாம் வகைக் கவிதைகள் படித்தவுடன் கண்டிப்பாக
ஒரு புன்னகையையோ சில வெட்கங்களையோ களவாடிவிடும் ... உங்களை அறியாமலே...


பெண்மையின் மென்மையில் தன்னையே தோற்ற இனிய தோழர் தமிழன் ( கறுப்பி ) அவர்களின்
வலைபக்கம் சென்றால் காதலின் முப்பரிமாணங்களும் நம்மை வாரி அணைத்துக்கொள்ளும்.
இவரின் எழுதுக்கள் எப்பொழுதுமே எனக்குள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். தமிழனின் இந்த தமிழ்க்
குறும்பை நீங்களும் உணர்ந்து பாருங்கள்...


என்ன குறும்பு பார்;
சப்தமிட்ட கொலுகளை எடுத்து
முத்தமிட்டு பார்த்ததும்
சப்தமில்லாமல் நழுவி
மார்பில் விழுந்தது
விழுந்த கொலுசுகளை
எடுக்க மறந்து தூங்கிப்போனேன்
என்னோடு நீயிருக்கிறாய்
என்கிற நினைவில்

தூக்கம் கலைகிற அதிகாலைப்பொழுதில்
கழுத்தோரம் பரவிய மீசை முடியின் குறுகுறுப்பில்
சிலிர்த்துப்போய் விழித்தேன்

அட! கொலுசுகள்தான்

போடா...

உன்னைப்போலவே இருக்கிறது
நீ கொடுத்த கொலுசுகளும்!



காதலியிடம் முத்தம் அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியுமா என்ன..? உடனே
கொடுத்து விட்டால் தான் அது இனிக்குமா என்ன...?? முத்தம் கேட்டுவிட்டு செல்லமாக
திட்டு வாங்குவது எவ்வளவு இன்பம் பயக்கும் என்பதனை தோழர் நாடோடி இலக்கியன் எவ்வளவு அழகான தமிழால் படைத்திருக்கிறார் பாருங்கள்... சமீபமாகத்தான்
தோழரின் வலைபக்கம் வந்தேன்... தன் தளம் முழுதும் காதலான கவிதைகளால் வலை
விரித்திருக்கிறார்... கொஞ்சம் உலாவினாலே அவை உங்கள் வெட்கங்களையும்...புன்னகைகளையும்
கவர்ந்திழுப்பது தின்னம்...


நேற்று
யாரோ உன்னைக் கேலி செய்தபோது
" போடா பொறுக்கி " என்றாய்
இன்று
நான் முத்தம் கேட்கிறபோதும்
அதையே சொல்கிறாய்...
ஆனாலும் எவ்வளவு வித்தியாசம்...


ஆண் கவிஞர்கள் மட்டும் தான் மூன்றாம் நிலைக் கவிதைகளில் முத்திரை
பதிப்பார்களா என்ன..? இதோ இந்தக்கவிதையைப் பாருங்கள்...
தோழி அதிதி என்கிற சாவரியாவின் தளம் முழுதும் காதல்... காதல்... காதல்....
காதல் தவிர வேறொன்றுமே இல்லை... மிக அழகான எளிய நடையில்
நெஞ்சை அள்ளும் பல கவிதைகளை விதைத்துச்சென்றிருக்கிறார்...


நீ ஒவ்வொரு முறையும்
"ஏய்,. நீ என்னவள் டீ" என்று
சொல்லும் போது
என் நினைவுகளில்,..
என்னை இறுக்க இறுக்க
கட்டிக் கொள்கிறாய் தெரியுமா...
அதையே சற்று குரல் உயர்த்தி
நீ அதிகாரமாய் சொன்னால்,..
நீ அழுத்தமாய் முத்தமிட்ட படி
இறுக்க கட்டிக் கொண்டிருகிறாய்
என்று அர்த்தம்


இவர்கள் மேலும் மேலும் வெட்கங்களையும் புன்னகைகளையும்
அள்ளித்தரும் கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்...

20 comments:

  1. கலக்கல் தொகுப்பு..!!

    ReplyDelete
  2. அன்பின் நவீன்

    அருமையான காதல் கவிதைகளுக்குச் சுட்டிகள் - நன்று நன்று

    அறிமுகப்படுத்தப் பட்ட அனைத்து வலைப்பூக்களுமே காதல் கவிதைகள் கொண்டவை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நவீன் நானும் கவிதைகள் எழுதுவேன். ஆனால் காதல் கவிதைகள் எழுதுவதில்லை. அதிகம் காதலை விரும்புபவர்கள் காதல் கவிதைகள் எழுதுவதில்லை. தெரியுமா???
    :)

    ReplyDelete
  4. நல்ல தொகுப்புகள்!!!

    படம் அருமை!!!

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  5. சாவரியாவை அதிகம் வாசித்தது கிடையாது பார்க்கலாம் நேரம் கிடைக்கும்பொழுது...

    ReplyDelete
  6. \\
    ஆனால் இந்த மூன்றாம் வகைக் கவிதைகள் படித்தவுடன் கண்டிப்பாக
    ஒரு புன்னகையையோ சில வெட்கங்களையோ களவாடிவிடும் ... உங்களை அறியாமலே...
    \\

    உண்மைதான் உண்மைதான்..

    எனக்கும் இந்தக்கவிதைகள்தான் பிடிக்கிறது...;)

    ReplyDelete
  7. 'காதல் கவிதைகளை' வகைப்படுத்தி,
    அதற்கு தகுந்த பதிவுகளையும் தொகுத்தளித்த விதம் அருமை!!

    ReplyDelete
  8. அன்பு நவீன்!
    இதற்கு நான் தகுதியானவளா எனத் தெரியாது!

    இருந்தாலும் இதைப் படிக்கும் போது உள்ளம் ஒரு உற்சாகத்துள்ளல் போடுவது என்னவோ உண்மை!

    என் கவிதைகள் இப்போது கள் குடித்த மயக்கத்தில் ,..நானும் கூட கொஞ்சம் அப்பிடித் தான் உணர்கிறேன் :)

    ரொம்ப நன்றி..(ரொம்பவும் சின்ன வார்த்தையாய் இருக்கு :( )
    உங்கள் எதிர்ப்பார்ப்பிற்க்கேற்ப கவிதைத் தர முயலுகிறேன்...
    அப்பறம் ஒரு விஷயம் ..உங்கள் கவிதை வாசிப்புக்குப் பின் தான் முத்தம் பற்றியே எழுத ஆரம்பித்தேன் :)

    ReplyDelete
  9. //இவர்கள் மேலும் மேலும் வெட்கங்களையும் புன்னகைகளையும்
    அள்ளித்தரும் கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்...//

    புதியவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்
    உங்கள் கவிதைகள் காதலரை உற்சாகப் படுத்துவது போல...

    ReplyDelete
  10. //மின்னுது மின்னல் said...

    கலக்கல் தொகுப்பு..!! //

    வணக்கம் மின்னல்.. :))

    மிக்க நன்றி...!!

    ReplyDelete
  11. //cheena (சீனா) said...

    அன்பின் நவீன்

    அருமையான காதல் கவிதைகளுக்குச் சுட்டிகள் - நன்று நன்று

    அறிமுகப்படுத்தப் பட்ட அனைத்து வலைப்பூக்களுமே காதல் கவிதைகள் கொண்டவை

    நல்வாழ்த்துகள் //

    வணகம் சீனா சார் :)))

    மிக்க நன்றி தங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு...

    ReplyDelete
  12. // புதுகை.அப்துல்லா said...

    நவீன் நானும் கவிதைகள் எழுதுவேன். ஆனால் காதல் கவிதைகள் எழுதுவதில்லை. அதிகம் காதலை விரும்புபவர்கள் காதல் கவிதைகள் எழுதுவதில்லை. தெரியுமா???
    :) //

    வணக்கம் அப்துல்லா.. :))

    அப்படியா..? பார்க்கிறேன்...!! ஆம் காதலை விரும்புகிறவர்கள் காதல் செய்யத்தான் விரும்புவார்கள்... கவிதையை அல்ல.. :))))

    ReplyDelete
  13. // ஸ்ரீமதி said...

    :)) //

    வாருங்கள் ஸ்ரீமதி... :))

    ReplyDelete
  14. //எழில்பாரதி said...

    நல்ல தொகுப்புகள்!!!

    படம் அருமை!!!

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்!!!! //

    வாருங்கள் எழில் :))

    பயணத்தை உற்சாகப்படுத்தும் தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி... :)))

    ReplyDelete
  15. //தமிழன்...(கறுப்பி...) said...

    சாவரியாவை அதிகம் வாசித்தது கிடையாது பார்க்கலாம் நேரம் கிடைக்கும்பொழுது... //

    வாருங்கள் தமிழன்... :)))

    நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்... அருமையான வரிகள் காத்துக்கிடக்கின்றன... :))

    ReplyDelete
  16. // தமிழன்...(கறுப்பி...) said...

    \\
    ஆனால் இந்த மூன்றாம் வகைக் கவிதைகள் படித்தவுடன் கண்டிப்பாக
    ஒரு புன்னகையையோ சில வெட்கங்களையோ களவாடிவிடும் ... உங்களை அறியாமலே...
    \\

    உண்மைதான் உண்மைதான்..

    எனக்கும் இந்தக்கவிதைகள்தான் பிடிக்கிறது...;) //

    அப்படியா..? உங்களுக்குமா..?? மகிழ்ச்சியாக இருக்கிறது... :))

    ReplyDelete
  17. // Divya said...

    'காதல் கவிதைகளை' வகைப்படுத்தி,
    அதற்கு தகுந்த பதிவுகளையும் தொகுத்தளித்த விதம் அருமை!! //

    வாருங்கள் திவ்யா.. :)))

    அருமையாக வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி.. :))

    ReplyDelete
  18. //ஸாவரியா said...

    அன்பு நவீன்!
    இதற்கு நான் தகுதியானவளா எனத் தெரியாது! //

    வணக்கம் ஸாவரியா.. :))

    என்ன இப்படி சொல்கிறீர்கள்.. மிகத்தகுதியானவர்தான்... :))

    //இருந்தாலும் இதைப் படிக்கும் போது உள்ளம் ஒரு உற்சாகத்துள்ளல் போடுவது என்னவோ உண்மை!

    என் கவிதைகள் இப்போது கள் குடித்த மயக்கத்தில் ,..நானும் கூட கொஞ்சம் அப்பிடித் தான் உணர்கிறேன் :) //

    அப்படியா..?? மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...

    // ரொம்ப நன்றி..(ரொம்பவும் சின்ன வார்த்தையாய் இருக்கு :( )
    உங்கள் எதிர்ப்பார்ப்பிற்க்கேற்ப கவிதைத் தர முயலுகிறேன்...//

    நன்றி எல்லாம் எதற்கு..? கண்டிப்பாகத் தாருங்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்..:)))

    // அப்பறம் ஒரு விஷயம் ..உங்கள் கவிதை வாசிப்புக்குப் பின் தான் முத்தம் பற்றியே எழுத ஆரம்பித்தேன் :) //

    ஆஹா... அப்படியா..?? அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஸாவரியா... மேலும் பல படைப்புகளை வழங்குங்கள்... :)))

    ReplyDelete
  19. //புதியவன் said...

    //இவர்கள் மேலும் மேலும் வெட்கங்களையும் புன்னகைகளையும்
    அள்ளித்தரும் கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்...//

    புதியவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்
    உங்கள் கவிதைகள் காதலரை உற்சாகப் படுத்துவது போல... //

    வணக்கம் புதியவன்.. :)))
    மிக்க மகிழ்ச்சியளிக்கிறது தங்களின் வருகையும் உற்சாகமான தருகையும்... :))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது