07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 28, 2008

தமிழ்மணம் சூடான இடுகையில் இடம்பெற வழிகேட்ட பதிவர்!

இதுவரை நான் பார்த்த வலைப்பூக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ டிசைன் இதுதான். தினமும் இவர் எழுதியதைப் படிக்கிறேனோ இல்லையோ, ஒருமுறை திறந்து இவரது வலைப்பக்கத்தைப் பார்த்துவிடுவேன். அவ்வளவு பிடிக்கும்!

இதுபோல நம் வலைப்பக்கத்தை மாற்ற என்ன செய்யவெண்டும் என்று கணிணியில் தேர்ந்த யாராவது சொன்னால் பரவாயில்லை.

அந்த வலைப்பூ கரையோரக்கனவுகள். ஸ்ரீமதி.

கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

கொட்டிக்கிடக்கின்றன
வார்த்தைகள்
எனினும்
உனக்கான கவிதைகள்
மட்டும் இன்னும்
ஏனோ கைவரவில்லை....

நாம் தொட்டு
சாயம் இழந்த
வண்ணத்துப்பூச்சிகளுக்கெல்லாம்
கொண்டாட்டம்
உன்னால் சிவந்த
என் கன்னங்களைக் கண்டு....


இப்படி காதலர்களுக்குப் பிடித்தமான வார்த்தைகளை பொருத்தமான இடங்களில் உட்காரவைத்து புனைகிறார்!

நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கிறது..

தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம்பிடிப்பது எப்படி என்றொரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்கள்... Best Mokkai Award கொடுக்கலாம் அந்தப் பதிவுக்கு!

பிரசித்திபெற்ற சினிமா பற்றிய தொடரொன்றில் கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த படம் எதுவென்ற கேள்விக்கு இவரது பதிலை இப்படி முடிக்கிறார்...

முக்கியமான விஷயம் நான் எந்த படம், அரங்கு மட்டுமல்ல... எங்க பார்த்தாலும், அமர்ந்துப் பார்க்கறதுதான் வழக்கம்.. சோ நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி அமர்ந்து பார்த்தப் படம்னெல்லாம் கேட்கக்கூடாது... ஓகே?? ;)))

என்னா ஒரு வில்லத்தனம்!!!

காதல்திருத்தம்
என்று தொடர்கதைகூட எழுதுகிறார். நல்ல நடை!

நிறைய வாசகர்களை குறுகிய காலத்தில் பெற்றிருக்கிறார்.

இன்னும் ஊக்குவித்தால், தனது எழுத்தை மேலும் மேம்படுத்தி இன்னும் பல காதல் கதைகளையும், கவிதைகளையும் புனைவாரென்பதால் இவரைப் பற்றி எழுதுகிறேன்.

கரண்ட் கட்!

ஆகவே அடுத்த பதிவரை இன்று மாலை சந்திக்கலாம்!

13 comments:

 1. ஓ.... தங்கச்சிக்கு புகழாரமா... நன்றி பரிசல்! வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

  ReplyDelete
 2. http://jobs.smashingmagazine.com/

  இப்படியொரு சுட்டியும் உள்ளது அவர்களது வளைப்பூவில்.

  வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

  ReplyDelete
 3. தமிழ் பிரியன் கூட இந்த கவிதாயினியைப்பத்தி பதிவு போட்டிருந்ததார்.
  வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

  ReplyDelete
 4. ஆமாமாம்.. :) நானும் கூட அந்த template பாத்து பொறாமைப்பட்டிருக்கேன்.. ;)

  வாழ்த்துகள் ஸ்ரீ..!

  ReplyDelete
 5. ஹையா நம்ப தங்கச்சியோடு பதிவா இன்னைக்கு :)

  ReplyDelete
 6. தங்கச்சியக் காணோமே.....

  ReplyDelete
 7. பரிசல் அண்ணே,

  அமித்து அம்மா டெம்ப்ளேட் பொய் பாருங்க இதே மாதிரி இருக்கு. ஸ்ரீமதி தான் உதவி செய்தாங்கலான்னு தெரியலை. :-)

  இப்போ கொஞ்ச நாலா தான் படிச்சிட்டு இருக்கேன். காதல் திருத்தம் அருமையா இருந்தது :-)

  ReplyDelete
 8. டெம்பிளேட் பிரமாதம் என்றால் இவர் கவிதைகள் படு பிரமாதம்

  ReplyDelete
 9. டெம்ப்லெட் சூப்பரா இருக்கு!

  ReplyDelete
 10. சரியான அறிமுகம் பரிசல்.. ஸ்ரீமதி எனக்கும் ரொம்ப புடிச்ச கவிஞர்.. அதுலயும் அவங்க ரொம்ப ஃபீலிங்ஸோட எழுதற காதல் கவிதைகள் வித்தியாசமாகவும் நல்லாவும் இருக்கும்..

  ReplyDelete
 11. ஹை என்னப்பத்தி பதிவா?? :)) நன்றி கிருஷ்ணா அண்ணா...:)))))) சாரி இங்க ஒரே மழைனால ஆபீஸ் லீவ் அதான் பதிவ பார்க்கவே இத்தன நாள் ஆச்சு... :(( வாழ்த்து சொன்ன எல்லா அண்ணாக்களுக்கும், அக்காகளுக்கும் நன்றி நன்றி நன்றி.. :)))))))))

  ReplyDelete
 12. // வெண்பூ said...
  சரியான அறிமுகம் பரிசல்.. ஸ்ரீமதி எனக்கும் ரொம்ப புடிச்ச கவிஞர்.. அதுலயும் அவங்க ரொம்ப ஃபீலிங்ஸோட எழுதற காதல் கவிதைகள் வித்தியாசமாகவும் நல்லாவும் இருக்கும்.//

  என்னது கவிஞரா??? அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? ;)))))

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஸ்ரீமதி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது