பரிசல்காரனுக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..
சுரேஷ் கண்ணன் - பிச்சைப்பாத்திரம்
இவரது பதிவுகளுக்கு நான் முதலில் போனது ‘…த்தா.. கீழ எறங்குடா’ என்ற இந்தப் பதிவிற்குதான்.
என்னமோ ஒரு மாதிரியான வாசிப்பனுபவம் கிடைக்கிறது இவரது எழுத்தில். என்னவென்று சொல்ல முடியவில்லை. சென்னை பதிவர் சந்திப்புக்கு சென்றிருந்தபோது இவரைச் சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். இவரும் வந்தார். எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு, அவரைப் பார்த்தபோது “வந்துட்டானுகடா.. இதுக்குன்னு அங்கேர்ந்து வந்திருக்கான் பாரு. லூஸூப்பய’ என்று அவர் பார்ப்பதுபோலப் பட்டது. (ஒரு வேளை அவரது எழுத்துக்களைப் படித்துவிட்டு அவரை ஒரு அதிதீவிர முற்போக்குவாதியாக கற்பனை செய்து வைத்ததன் விளைவாகக் கூட இருக்கலாம்.) அந்தப் பார்வைக்கு பயந்துபோய் பேசாமலே வந்துவிட்டேன்!
அந்தப் பதிவில் இவரது மருந்துக்கடைப் பணி அனுபவங்களைச் இப்படிச் சொல்கிறார்..
“மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. 'ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு. ஏதாவது மருந்து கொடேம்ப்பா" என்று டாக்டர் செலவை தவிர்க்கும் உத்தேசத்துடன் வருபவரிடம் முகத்தை ஏதோ இருநூறு ஹார்ட் சர்ஜரி செய்தவன் போன்ற கெத்துடன் தீவிரமாக வைத்துக் கொண்டு மருந்துக் கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் இலவசமாக தரும் மாத்திரைகளை தோல் உரித்து "மூணு வேளை சாப்பிடுங்க. சரியாயிடும்" என்று ஜோசியக்காரன் போல் சொல்லி அனுப்ப வேண்டும். விளக்கெண்ணைய் குடித்தவர் போன்ற முகபாவத்துடன் வருபவர்களை ஓரம் கட்டி ஆணுறை பாக்கெட்டுக்களை கொடுத்தனுப்ப வேண்டும். பெண்களுக்கான மாதவிலக்கு நாப்கின்களை கண்டிப்பாக பேப்பர் உறையிலிட்டு வெளியே தெரியாதவாறு தர வேண்டும். வலி நிவாரண மருந்துகளின் பெயர்களை சரியாக தேர்ந்தெடுத்து கேட்கும் நபர்களை உற்றுப்பார்த்து சந்தேகமான ஆசாமி என்றால் அவர்களை மறுத்து அனுப்ப வேண்டும். மருந்துச்சீட்டில் உள்ள லிஸ்டில் ஏதாவதொன்று ஸ்டாக் இல்லையென்றால் 'இல்லை' என்று திருப்பியனுப்பாமல் 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்' என்று சற்று தூரத்தில் உள்ள கடையில் வாங்கி வந்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அக்கம்பக்கத்தில் கடை விரித்திருக்கும் மருத்துவர்களுக்கு மருந்துச்சீட்டு இலவசமாக (விளம்பரத்துடன்தான்) அச்சிட்டுத்தர வேண்டும். இப்படியாக நானே ஒரு டாக்டராக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில்....”
எவ்வளவு சுவாரஸ்யமான நடை...
அதேபோல எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன் என்ற பதிவில் இப்படிச் சொல்லியிருப்பார்.
“சில சமயங்களில் வீட்டிற்கு இனிப்பு வாங்கிச் செல்லும் போது "இன்றைக்கு என்ன விசேஷம்?" என்பார் மனைவி. "இனிப்பு சாப்பிடுவதற்கு என்ன விசேஷம் வேண்டியிருக்கிறது. சாப்பிட வேண்டும் போல் இருந்தது, அவ்வளவுதான்." குழந்தைகள் அந்தக் கேள்வியை கேட்பதில்லை. சந்தோஷமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். பல விஷயங்களை குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்கள் எரிச்சலடைவதில்லை; அதையும் கொண்டாடுகிறார்கள்.”
இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை!
இவரது புகழ்பெற்ற சாமியாராக பத்து குறுக்கு வழிகள் படித்துவிட்டு சிரிக்கவோ, சிந்திக்கவோ முடியவில்லை என்றால் நல்ல டாக்டரைப் பார்ப்பது நலம்!
(சுரேஷ் கண்ணன்கிட்ட எனக்குப் புரியாத விஷயம் எல்லா பதிவுக்கு முடிவுலயும் suresh kannanன்னு ஏன் எழுதியிருக்கார்ன்னுதான். அதுதான் எழுதினவர் யார்னு வருதே...)
இன்னொருவர் நண்பர் செல்வேந்திரன்.
இவரது வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவரது வலைப்பூ தமிழ்மணத்தில் தெரிவதில்லை. சில நாட்களுக்கு முன் சந்தித்தபோது கணினியில் இணைய இணைப்பு வாங்கிவிட்டதைக் கூறியிருந்தார். அதேபோலவே, அதற்குப் பிறகு நிறைய எழுதத் தொடங்கினார்.
பணப்பிரச்சினை என்கிற தலைப்பில் ஜே.கே.ரித்தீஷ் பற்றி எழுதியிருக்கிறார். அதுக்கு ஏன் இந்தத் தலைப்பு என்பதை பதிவின் முடிவில் பார்க்கவும்!
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் என்று வரவு செலவுகணக்கு எழுதுங்கடா என்கிறார்.
மின்வெட்டைப் பற்றி தமிழன் என்றோர் இனமுண்டு என்று எழுதுகிறார்.
இவரது வலைப்பூவைப் படிக்கும்போது, உங்கள் நண்பனோடு அரட்டை அடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. நீட்டி முழக்காமல் நச் சென்று சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போவார்! ஆகவே இதைத்தான் என்று சொல்ல முடியாது... எல்லா பதிவுகளையும் ஒரு நடை பார்த்துட்டுப் போங்க...
சுரேஷ் கண்ணனுக்கும், செல்வந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை முகஸ்துதிக்காக எதையும் சொல்லமாட்டார்கள். பிடிக்கலியா, பிடிக்கல. நல்லாயிருக்கா - நல்லாயிருக்கு. தட்ஸ் ஆல்.
சுரேஷ் கண்ணன் - எம்.ஜி.ஆர். படம்னா எனக்கு அலர்ஜிங்கறாரு.
செல்வேந்திரன் ஒரு பதிவுல (எந்தை) தவமாய் தவமிருந்து படத்தை எல்லாரும் புகழறப்போ, அப்பா மேல இருக்க வேண்டிய பாசத்தை, இருக்குன்னு சொல்றதை எதுக்குடா இவ்ளோ ஆச்சர்யமா பாக்கறீங்க'ன்னு சாட்டைல அடிக்கறார்.
இவங்க பதிவைப் படிக்கறப்போ எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்ன்னு தோணும்... படிக்கப் படிக்க முடியக்கூடாதேன்னு நெனைக்க வைக்கும்ன்னு சொல்ல வந்தேன்.. (அப்பாடா.. தலைப்பு வந்துடுச்சா...)
இந்த ரெண்டு பேரோட பதிவுகளையும் படிங்க. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்!
|
|
எதிர்பாத்தா மாதிரியே வித்தியாசமான பதிவுகளக்காட்டிருக்கீங்க
ReplyDeleteஇருவரும் வித்தியாசமானவர்கள்.. நன்றி பரிசல்!
ReplyDeleteசுரேஷ் கண்ணனனின் பிச்சைப்பாத்திரம் மிக அருமை.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி பரிசலாறே
:-)))...
ReplyDeleteசெல்வேந்திரனை ரசித்துப் படித்திருக்கிறேன்,சுரேஷ் கண்ணனை அதிகம் வாசிக்கவில்லை என்றாலும் நீங்கள் சொல்கிற பதிவு வாசித்திருக்கிறேன் பின்னூட்டமும் போட்டிருப்பதாக நினைவு....
ReplyDeleteஇருவரும்,
நல்ல வாசிப்பனுபவங்களுக்கான பதிவுகளை உடையவர்கள்...
கே.கே.
ReplyDeleteசுரேஷ் வலைத்தளம் பரிச்சயம் உள்ளது. பிடித்ததும் கூட. நீங்கள் கொஞ்சம் சீரியசாக எழுதினால் அவர் எழுத்துக்கள் போல இருக்கும். செல்வேந்திரன் இதுவரை படித்ததில்லை. பார்க்க வேண்டும். அறிமுகத்துக்கு நன்றி. கலக்குங்க.
அனுஜன்யா
பரிசல்.. மிக நல்ல வார்த்தைகளில் இவர்களை இதுவரை படிக்காதவர்களுக்கு அறிமுகப்படுத்திய பாங்கு நன்று.. நன்றி
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
இப்பவும் தலைமை ஆசிர்யர் ஆகும் உத்தேசம் இருப்பதுபோல் தெரிகிறது...
அருமையான அறிமுகங்கள்
ReplyDeleteஇன்னும் இன்னும்
ஒரு நாளைக்கு இரண்டு பதிவாவது வேண்டும் எங்களுக்கு
இவங்களோடதுல செல்வேந்திரன் சார் பதிவு தெரியாது. அறிமுகத்துக்கு நன்றி:):):) சுரேஷ் கண்ணன் சார் பதிவுகள் எல்லாமே படிச்சிருக்கேன், சூப்பரா இருக்கும்:):):)
ReplyDeleteநன்றி சின்ன அம்மணி!
ReplyDeleteநன்றி தமிழ்பிரியன்
நன்றி ஜமால்.
விஜய் ஆனந்த்... என்னா சிரிப்பு எப்பப்பாத்தாலும்..
நன்றி தமிழன்!
@ அனுஜன்யா
ReplyDelete//நீங்கள் கொஞ்சம் சீரியசாக எழுதினால் அவர் எழுத்துக்கள் போல இருக்கும்.//
மிகவும் மகிழ்கிறேன். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை, வாழ்த்துக்களாக வரும்போது மகிழ்ச்சி பொங்குவது இயல்புதானே..
நன்றி நர்சிம்’
நன்றி கிழஞ்செழியன் (நேத்து ஏன் வர்ல?)
நன்றி வால்பையன்
நன்றி ராப் (உண்மையா இன்னைக்கு உங்க பதிவுகள் பத்தி எழுதி 100 பின்னூட்டம் உங்ககிட்ட வாங்கறதா ப்ளான் போட்டிருந்தேன். சரி.. நம்ம க்ருப் பத்தி கடைசில சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.)
எங்க மீசை மாமா லதானந்த் பத்தியும் எழுதுவீங்களா.
ReplyDelete//சுரேஷ் கண்ணனுக்கும், செல்வந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை முகஸ்துதிக்காக எதையும் சொல்லமாட்டார்கள்.//
ReplyDeleteஉங்களை மாதிரி இல்லைன்னு சொல்றீங்க,
கோச்சுக்காதீங்க, நீங்க மட்டும் இல்ல நிறைய பேர் இப்படித்தான் :-)
@ பெருசு
ReplyDeleteமாட்டேன். காரணம் அங்கிளுக்குத் தெரியும். :-)))))
@ கபீஷ்
இதுல கோவிச்சுக்க என்ன இருக்கு? நான் என்னைமாதிரி இருக்கறதுதான் நல்லது.
ஆஜர் :))
ReplyDelete@ அப்துல்லா
ReplyDeleteத.வ.ந.வ. ஆகுக!
நல்ல நடை. பதிவுலகில் எப்போதாவது எழுதுவது வழக்கம். நன்றாய் எழுதுகிறீர்கள் தோழரே. வாழ்த்துகள்...!!
ReplyDeleteவரவுக்கு நன்றி டீசுரேஷ்!
ReplyDeleteபதிவுகள் சூப்பர்ங்ணா
ReplyDelete