கொஞ்சம் கவிதை பார்ப்போமாங்க???
கவிதைகள் எழுதாதவர்கள் உலகில் உண்டா என்ன?
கனவோ,காதலோ,சுகமோ, சந்தோஷமோ, துக்கமோ, மனம் நிரம்பி வழியும் போது உணர்வுகளை வார்த்தைகளாய் கொட்டினால் கொஞ்சம் நிம்மதி.
அதுவே கவிதை.
சிலருக்கு இயல்பாக வருகிறது.சிலருக்கு கொஞ்சம் கஷ்டப் பட்டு வருகிறது.
நிறைய புதியவர்கள் எழுதுகிறார்கள்..
வார்த்தைப் பிரயோகங்களும் நன்றாகவே இருக்கிறது....
நான் சமீபத்தில் ரசித்த கவிதைகள் சில....
இது சரவணகுமரனின் "நிரம்பி வழிகிறது மனசு... "
//காரணங்கள் ஏதுமில்லை.
யார் மீதும்
எந்த கோபமும் வருத்தமும் இல்லை..
வலிகள் மறந்தோ மறத்தோ போய்விட்டது..
ஓர் உற்சாகம் மட்டும்
மூளைக்குள் விம்மி விம்மி சுரக்கிறது..//
இது குட்டிச் செல்வனின் "நிலையாமை" பற்றிய கவிதை
//சில மழை நாட்களும்
சில மகிழ்ச்சி கிழமைகளும்
என்னில் ஏற்படுத்திய தாக்கங்களை
ஏதொன்றாலும் சமன்படுத்த இயலவில்லை //
இது நதியலையின் வன்மக் கசடுகள்.....
//இப்பொழுது அணைக்கவியலாதெனத்தெரிந்தும்
அணையும் பாவனையில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
வந்து மழை பொழிவதாக
பொழிந்துவிட்டுச் செல்!//
இது சகாரா தென்றலின் காட்சிப் படுத்துதல்
//வலிந்து தவிர்த்தலில்
உறுத்திக் கொண்டேயிருக்கின்றன
சில நினைவுகளும் கவிதைகளும்..//
|
|
கவிதைகள் எழுதாதவர்கள் உலகில் உண்டா என்ன? //
ReplyDeleteநான் கவிதைல்லாம் எழுதறது இல்லீங்க.
எல்லோரும் எழுதினா ரசிக்க ஒரு ஆளு வேணும் பாருங்க.
:))))
புதுகைத் தென்றல் said.
ReplyDelete//நான் கவிதைல்லாம் எழுதறது இல்லீங்க.
எல்லோரும் எழுதினா ரசிக்க ஒரு ஆளு வேணும் பாருங்க.//
------------------------------------------
புதுகைத் தென்றல் அக்கா...
இது ரொம்ப அநியாயம்.
"எங்க கவிதையை நீங்க படிக்கிறப்ப...,
உங்க கவிதையை நாங்க படிக்க விடாம இருட்டடிப்பு செய்யறீங்களே?.
இதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.
ஒழுங்கா.... நல்ல பிள்ளையா...
உங்க பழைய நோட்டுப் புத்தகத்துல எழுதி வச்சி இருக்கற எதாவது ஒரு கவிதையை வெளியிடறீங்க.
(ஆமா... நெறையா எழுதி வச்சிருக்கீங்களாமே.? நம்பத் தகுந்த வட்டாரத்துல இருந்த் தகவல் வந்துச்சே... நிசமாவா அக்கா?)
நீங்க வெளியிடலே அப்பிடின்னா...
சாகும் வரை உண்ணா விரதம் அறிவிச்சிடுவேன். ஆமா...! சொல்லிப்[புட்டேன். :-)
ஒழுங்கா.... நல்ல பிள்ளையா...
ReplyDeleteஉங்க பழைய நோட்டுப் புத்தகத்துல எழுதி வச்சி இருக்கற எதாவது ஒரு கவிதையை வெளியிடறீங்க.//
பழைய நோட்டு புத்தகத்துல நான் கவிதை எழுதி வெச்சிருக்கேனா?!!!
:)))) நீங்க வேற டயரிக்கு்றிப்பு/சமையற்குறிப்பு கூட எழுதி வெச்சுக்க மாட்டேன்.
(ஆமா... நெறையா எழுதி வச்சிருக்கீங்களாமே.? நம்பத் தகுந்த வட்டாரத்துல இருந்த் தகவல் வந்துச்சே... நிசமாவா அக்கா?)//
ச்சே. அதெல்லாம் நம்பாதீங்க. யாரோ புரளியை கிளப்பி விட்டுருக்காங்க.
:))))))))))
நீங்க வெளியிடலே அப்பிடின்னா...
ReplyDeleteசாகும் வரை உண்ணா விரதம் அறிவிச்சிடுவேன். ஆமா...! சொல்லிப்[புட்டேன். :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
பாசக்காரவுகளாக இருக்கீகளே ஐயா.
நம்மளையும் இந்த உலகம் நம்புது.
புதுகைத் தென்றல் said
ReplyDelete//நீங்க வேற டயரிக்கு்றிப்பு/சமையற்குறிப்பு கூட எழுதி வெச்சுக்க மாட்டேன்.//
அதானே பாத்தேன்.
கண்ணதாசன் மாதிரியே....
அக்காவும்..., தூக்கத்துல எழுப்பி கவிதை சொல்லச் சொன்னாக் கூட, Instant- ஆக.... கவி மழை கொட்டறவகளாத்தான் இருக்கணும்னு நெனச்சிருந்தேன்.
அக்கா.... ப்ளீஸ்க்கா....
ஒரே ஒரு கவிதை....!.
கவிதையே எழுதாத வலைப் பதிவர்- அப்படீங்கற பெருமைய நீங்க அடைய விட்டுருவமா?
ReplyDelete:-)
ஐயா, அண்ணே. அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி... எல்லாரும் வாங்க....
நீங்க எல்லாரும்... சாட்சி...!
"புதுகைத் தென்றல் அக்கா" கவிதை எழுதலேன்னு நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சிட்டேன்.
பல புதிய பதிவர்கள் அறிமுகம் - அருமை அருமை
ReplyDeletecheena (சீனா) said...
ReplyDelete//பல புதிய பதிவர்கள் அறிமுகம் - அருமை அருமை//
நன்றிகள் அப்பா.
புதுகைத் தென்றல் அக்காவை ஒரே ஒரு கவிதை எழுதச் சொல்லுங்க அப்பா..!