Sunday, February 28, 2010

வாழ்த்துகள் ஜெட்லி - வருக ! வருக ! காயத்ரி

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற ஜெட்லி ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 80 மறுமொழிகள் பெற்று, பல பதிவர்களை அறிமுகப்படுத்தி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

மார்ச்சுத்திங்கள் முதல் தேதியன்று - நாளை - துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க சென்னையைச் சார்ந்த மாணவி காயத்ரி அன்புடன் இசைந்துள்ளார். இவர் பிரிவையும் நேசிப்பவள் என்ற வலைப்பூவினில் , டிசமபர் 2008 முதல் எழுதி வருகிறார். ஏறத்தாழ 65 இடுகைகள் இட்டிருக்கிறார். 94 பதிவர்கள் பின் தொடர்கின்றனர்.

காயத்ரியை வருக! வருக ! என வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நல்வாழ்த்துகள் காயத்ரி - நட்புடன் சீனா

அனைவருக்கும் நன்றி....!!

அனைவருக்கும் நன்றி....!!

ஏதோ இப்போ எனக்கும் கொஞ்சம் மன திருப்தி...
நாலு பேரை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்திய திருப்தி.
இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு
நன்றிகள் பல....


வலைச்சரம் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலைதான்,
காரணம் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும்.
நான் அதை செய்யவில்லை என்று நினைக்கிறேன்...
ஏதோ என்னால் முடிந்தளவு செய்து இருக்கிறேன்!!


எனக்கு ஊறுதுணையாக இருந்த மீன்துள்ளி செந்தில்
மற்றும் சித்ரா அவர்களுக்கு நன்றிகள்.அடுத்து வரும்
பதிவர் என்னை போல் இல்லாமல் மேலும் பல
பதிவர்களை அறிமுகப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
அவருக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


மனநிறைவுடன் விடைபெறுகிறேன்...
நன்றி..
ஜெட்லி....

Saturday, February 27, 2010

ரௌத்ரம் பழகு

நான் ரசித்த இயக்குனர்:

கற்றது தமிழ் ராம்.எனக்கு கற்றது தமிழ் படம் பிடிக்கும்,பாடல்கள் செம...சமீபத்தில் தான் ராம் அவர்களின் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடந்த வீடியோ தொகுப்பை பார்த்தேன்.அதில் இருந்து அவரின் பேச்சுக்கும் ரசிகன் ஆனேன்....கற்றது தமிழ் படம் ஓடவில்லை என்றாலும் பல மக்களை பாதித்தது என்பது உண்மை....கற்றது தமிழில் அவர் கூறிய கருத்து இது தான்..அது பாரதியாரின்....


"மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டா"!!உங்கள் வாழ்க்கை முறை அடுத்தவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் இருப்பது நலம்!!,,,,

**************************************

தமிழ் உதயம்:

தமிழ் உதயம் அவர்களின் பல சிறுகதைகள் பத்திரிக்கையில்
வந்து உள்ளன.ப்ளாக் உலகுக்கு கொஞ்சம் புதியவர்.
அவர் எழுதும் கட்டுரைகள் மற்றும் அனுபவ கட்டுரைகள்
அனைத்தும் சுவாரசியமாக இருக்கின்றன.

ரௌத்ரம் பழகு........ என்ற பதிவை படித்த பின்பு நான்
சில விஷயங்களை கற்று கொண்டேன்....

ரௌத்ரம் பழகு.


செகண்ட் இன்னிங்க்ஸ் என்ற பதிவு ஒரு சுயமுன்னேற்ற
கட்டுரை போல் நன்றாக இருந்தது....சாம்பிள் வரிகள்..


"நான் தொட்டதெல்லாம் பொன்னாகும்" என்று ஒருவர் பெருமை பேசினார். ஒரு தொய்வுக்கு பிறகு தெரிந்து கொண்டார். "தான் தொட்டதெல்லாம் பொன்னாக வில்லை. ஏற்கனவே அவை பொன்னாகத்தான் இருந்தது" என்று

செகண்ட் இன்னிங்க்ஸ்


வலையுலகில் பல சாதனைகள் செய்ய வாழ்த்துவோம்....!

********************************************
மந்திர ஆசைகள்

மந்திரன் என்ற பெயரில் நீண்ட காலமாக பதிவுகள் எழுதி
வருகிறார்.நான் சில நாட்கள் முன்பு தான் கவனித்தேன்.
இவரின் அரக்க குணம்,இரக்க மனம் என்ற பதிவு
உண்மையிலேயே சூப்பர்....

அரக்க குணம்,இரக்க மனம்


தேசதுரோகிகள் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள
பதிவு ரொம்ப யோசிக்க வைத்தது...படிச்சு பாருங்க....


தேசதுரோகிகள்



*************************


ஜெட்லி......

Thursday, February 25, 2010

கவிதைனா டெர்ரர் ஆகக்கூடாது....!!

கவிதைனா டெர்ரர் ஆகக்கூடாது....!!

நான் ரசித்த பாடல் :

மூங்கில் காடுகளே....(சாமுராய்)

எனக்கு பிடிச்ச பாட்டுன்னு யாராவது கேட்டா
சட்டுன்னு நான் சொல்றது சாமுராய் படத்தில்
வரும் மூங்கில் காடுகளே என்பேன்.அந்த பாட்டில்
அனைத்துமே அருமையை இருக்கும்.அந்த பாடலின்
கான்செப்ட் செம.அதை விட அந்த பாடல் வரிகள்
நன்றாக இருக்கும்.இயற்கை அழகை வைரமுத்து
அழகாக சொல்லி இருப்பார்.

************************************************

இன்று கவிதை எழுதுபவர்கள் குறித்து ஒரு பார்வை....

கவிஞர் மீன்துள்ளியான்(செந்தில்):

இவர் அஞ்சு வயசில் இருந்தே கவிதை எழுதி
வருகிறார், இவர் எழுதும் கவிதைகள் அனைத்தும்
சமுதாய சாட்டையடி போன்று இருக்கும்,வருங்காலத்தில்
ஷெல்லி போன்று வருவார் என்று ஊருக்குள் ரெண்டு
பேர் பேசிகொள்கிறார்கள்....இப்படி எல்லாம் பில்ட்-அப்
பண்ண சொன்னவர் சாட்சாத் அதே மீன்துள்ளி தான்.
(மீன்துள்ளி நீர் சொன்ன மாதிரி எழுதிட்டேனா??)


மீன்துள்ளியின் போரும் அமைதியும் என்ற கவிதை
உண்மையில் சூப்பர்ஆக இருக்கும்.என்ன ஆச்சரியம்
படிச்ச முதல் தடவையே புரிந்தது.....நீங்களும்
படிச்சு பாருங்க.....


போரும் அமைதியும்



இவரின் குடைக்குள் மழை என்ற கவிதையை
அழகாக நகைச்சுவை உணர்வோடு முடித்திருப்பார்...
இது மட்டும் அல்ல இது போல் பல கவிதைகளில்
நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி இருப்பார்.


மீன்துள்ளி உங்களை வருங்கால ஷெல்லினு சொன்ன அந்த
ரெண்டு பேரு யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா??

******************************************************

அண்ணன் டாக்டர் D.R.அசோக்:

இவர் பிரபல பதிவர் இருந்தாலும் நான் ஏன் இவரை
அறிமுக பண்றேன்னா அதுக்கு காரணம் இவர் கவிதைதான்.
இவர் கிட்ட பிடிச்ச விஷயமே இதுதான்,லேபிலில்
கவிதைங்களா?? கவிதை மாதிரி?? என்று நம் முடிவுக்கே விட்டுவிடுவார்.


அசோக் அவர்கள் அவர் கண்ணில் பார்த்த காட்சிகளை
தன் கவிதை மூலம் நம் கண்ணில் நிறுத்துவார்....
அவரின் கவிதைகளில் என்னை கவர்ந்தவை.....

வார்த்தை சிதறல்கள்

மனக் கூப்பாடு


அண்ணன்னோட கவிதைகள் அனைத்தும் எனக்கு
புரிந்தது என்று சொல்ல முடியாது இருந்தாலும்,அவரின்
கவிதைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
அண்ணன் அடிக்கடி தான் யூத்துனு சொல்லுவாரு
யாரும் நம்பாதிங்க..!!(நம்ம வேலை முடிஞ்சுது).

*********************************
ஜான்

ஜான் கார்த்திக் கவிதை,கட்டுரை,விமர்சனம் என்று
கலக்கி அடிக்கிறார்.இவர் என்ன சொல்றர்னா

"எனக்குள் இருக்கும் தமிழை காப்பாற்ற நான் எடுத்த
இரண்டாம் முயற்சி இந்த வலைப்பதிவு எழுதுவது."
இப்படி சொல்றவரு...ஏன் ப்ளாக் தலைப்பை மட்டும்
ஆங்கிலத்தில் வச்சார்னு ஒரு புரியாத புதிர்தான்.

இவரின் விவாகரத்து என்ற கவிதை சொல்லனும்னா
" மூணு வரியில் ஒரு நச்"


விவாகரத்து


இவர் கிட்ட இருந்து மேலும் பல விஷயங்களை
எதிர்ப்பார்க்கிறேன்.... டைம் கிடைக்கும் போது
எழுதுங்க ஜான்....


ஜெட்லி......

Wednesday, February 24, 2010

இந்த பீட்டர் ரொம்ப நல்லவன்!!

நான் ரசித்த சிறுகதை : பீட்டர்

பீட்டர் என்ற சிறுகதையை தூக்கத்தில் என்னை எழுப்பி
கேட்டாலும் ஒப்பித்து விடுவேன்.சுஜாதா அவர்களின்
சிறுகதை தான் இந்த பீட்டர்.பீட்டர் கதையின் கரு
வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்து
கொள்ள வேண்டும் என்பதே.சுஜாதா அவர்கள் இதை
அளித்த விதம் செம....இந்த கதையை நான் ஒரு இருபது
பேரிடம்ஆவது சொல்லி இருப்பேன்.....நீங்களும் அதை
பத்தி ஷேர் பண்ணிக்கலாம்.....

************************************

நான் ரசித்த சில சிறுகதைகள்...

ஹரீஷ் நாராயண்


நானும் ஒரு...என்ற ப்ளாக் எழுதி வருகின்றார் ஹரீஷ்
நாராயண்.ட்ரீமர் என்று புனைபெயர் வைத்துள்ளார்.இவர்
எழுதும் சிறுகதைகள் நன்றாக இருக்கிறது....கதைகள்
தவிர கவிதைகளும் எழுதுகிறார்...ப்ளாக் உலகுக்கு புதியவர்.
இவரின் ஆரியமாலா என்ற சிறுகதை சபலப்படுபவர்களுக்கு
ஒரு எடுத்துகாட்டு...பாண்டேசி கலந்த கதை....

ஆரியமாலா - சிறுகதை



NH4 ஒரு பயணம் என்ற சிறுகதை ஒரு த்ரில்லர் டைப்பில்
இருந்தது....இவரின் நடை கதையை வேகமாக எடுத்து
செல்கிறது......



NH4 - ல் ஒரு பய(ண)ம். - சிறுகதை.



**************************************
ரகு

குறும்புகள் என்ற ப்ளாக் வாசகத்துடன் ரகு அவர்கள் எழுதி வருகிறார்.இவரின் யாருக்கும் தெரியாமல் கதையை சமீபத்தில் தான் படித்தேன்.... படித்தவுடன் எனக்கு தோன்றியது சுஜாதா ஸ்டைல்லில் ஒரு கதை மற்றும் ஈரம் படத்தின் கதையை நினைவுப்படுத்தியது...ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இவர் இந்த கதையை ரெண்டு வருடங்கள் முன்னே எழுதியேதாம்.....படிச்சு பாருங்க......


யாருக்கும் தெரியாமல்




இவரிடம் இருந்து மேலும் எதிர்ப்பார்க்கிறேன்.....


*********************************************

நாளை பார்ப்போம்.....

ஜெட்லி....

Tuesday, February 23, 2010

த்ரிஷா இல்லனா திவ்யா...!!

நான் ரசித்த தன்னம்பிக்கை பொன்மொழி :

த்ரிஷா இல்லனா திவ்யா...!!


மேல குறிப்பிட்ட தன்னம்பிக்கை பொன்மொழி இடம் பெற்ற
படம் தலைநகரம்.வடிவேலு,மயில்சாமி கூட்டணி செம
ரகளை பண்ணி இருப்பாங்க.வடிவேல் அவர்கள் இந்த
படத்தில் வாழ்க்கை தத்துவத்தை?? "த்ரிஷா இல்லனா
திவ்யா.." என்று மிக அழகாக சொல்லி இருப்பார்.
நம் இளைய சமுதாயத்துக்கு இந்த தன்னம்பிக்கை
பொன்மொழி அவசியமானது!!


************************************

நான் ரசித்த சில காமெடி பதிவுகள் உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்....

சேட்டைக்காரன்...

வேட்டைக்காரன் effectல இவர் பேரு இருந்தாலும்,பேருக்கு
ஏற்ற மாதிரி சேட்டைக்கு குறைவில்லை...

உட்கார்ந்து யோசிப்போமில்லே? என்பது இவரின் ப்ளாக்
டைட்டில்...பயங்கரமா யோசிக்கிறாருனு தான் சொல்லணும்...

வலைப்பதிவாளர் ராசிபலன்னு ஒன்னு எழுதிட்டு வரார்...
என் ராசிக்கு என்ன எழுத போறார்னு ஆவலில் இருக்கேன்....


வலைப்பதிவாளர் ராசிபலன்



அடுத்து இதுவும் நல்ல நகைச்சுவையான இடுகை...
சீவகசிந்தாமணி கேள்வி பட்டிருப்போம் இது ஜீரகசிந்தாமணி...



ஜீரகசிந்தாமணி


**********************************************
ரிஷிபன்:

ரிஷபன்,,,கதை,கவிதை,கட்டுரை என்று அனைத்தையும்
எழுதி வருகிறார்.நான் இவரின் கோபம் வராமல் இருக்க
என்ன வழி??
என்ற இடுகைக்கு ரசிகன்...நீங்களும் படிச்சு
பாருங்க.....


கோபம் வராமல் இருக்க என்ன வழி??



அடுத்து இவரின் மனிதம் சிறுகதை...உண்மையிலேயே நச்...


மனிதம்



****************************************
மேலும் பல பேர் காமெடி பதிவில் கலந்து கட்டி
அடிக்கிறார்கள்....அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நாளை சந்திப்போம்!!....

ஜெட்லி....

Monday, February 22, 2010

வலைச்சரத்தில் முதல் நாள்....

வணக்கம்ங்க....

நாலு வருஷம் சந்திக்காத நண்பர்களை ஒரு நண்பனின்
கல்யாணத்தில் சந்தித்து அப்போது நாங்கள் பகிர்ந்து
கொண்ட விஷயங்களை "ஏன் நாம ப்ளாக் ஆரம்பிக்க
கூடாது?" என்று ஆரம்பித்து இப்போது இங்கே வந்து
நிற்கிறேன்.

என்னோட முதல் இடுகையே "அருந்ததீ" படத்தின்
விமர்சனம் தான்.அதற்கு முதல் பின்னூட்டம்
அளித்து ஆதரித்தவர் பழனி டாக்டர் சுரேஷ்
அவர்களுக்கு என் நன்றிகள் பல.அப்புறம் ஏதோ
ஏதோ டைப் அடிச்சுட்டு இருந்தேன்.நண்பர் லோகு
அவர்களின் அறிமுகத்துக்கு நன்றி.குறுகிய காலத்தில்
இருநூறு பின்தொடர்பவர்களுக்கு நான் மட்டும் காரணம்
அல்ல என் நண்பர்கள் சித்துவும்,சங்கரும் தான் காரணம்
என்பதை இங்கு சொல்லி கொள்கிறேன்.


நான் எழுதியதில் எனக்கு பிடித்த சில பதிவுகள்....


கிளுகிளுப்பாக ஒரு காதல் கதை.... ஒரு பக்ககதை....நிறைய பேர் இந்த கதையை படிச்சுட்டு...அதை நீங்க பின்னூட்டத்தில் பாருங்கள்....


"கிளுகிளுப்பாக ஒரு காதல் கதை"





"இது எங்க ஏரியா" என்று நாலு பார்ட் எழுதிட்டேன்
சென்னையை பற்றி மற்ற நகரங்களில் இருப்பவர்கள்
தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.


"இது எங்க ஏரியா"




மற்றவர்களுக்கு நான் கொடுத்த ஓசியில் காலத்தை
ஓட்டுவது என்ற டிப்ஸ்....கூடிய விரைவில் ரெண்டாவது
பாகமும் வரும்...


ஓசியில் காலத்தை ஓட்டுவது எப்படி??



அப்புறம் மக்கள் நலனுக்காக நான் எழுதும் பொது அறிவு செய்திகள்......நான் பார்த்து படித்த இன்னபிற நகைச்சுவையான செய்திகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.....



"பொது அறிவு செய்திகள்"




ஜாய் ஆப் பீடிங்...இது போல் எனக்கு மற்ற நல்ல
மனிதர்களை தொடர்ந்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த
ஆசை....பார்ப்போம்....

ஜாய் ஆப் பீடிங்


நாளைக்கு நான் ரசித்து படித்த சிலரின் பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்...உங்களுக்கும்பிடிக்கும்னு நினைக்கிறேன்......வர்ட்டா...

ஜெட்லி....

Sunday, February 21, 2010

வாழ்த்துகள் ஜெரி - வருக வருக ஜெட்லி

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக, வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று, தனது பணியை முடித்து மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் அருமை நண்பர் ஜெரி ஈசானந்தா . அவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 300 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து = பல நல்ல இடுகைகளின் சுட்டிகள் கொடுத்துள்ளார்.

அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழு பெருமை அடைகிறது.

22ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொற்பேற்க வருகிறார் நண்பர் ஜெட்லி. இவர் குறுகிய கால அவகாசத்தில் ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

ஜெட்லீ குறுகிய காலத்தில், வலையுலகில் பிரபலமான பதிவர்களுள் ஒருவர். எளிதான எழுத்து நடையில், நகைச்சுவை கலந்து எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் எழுதுவதில் வல்லவர். திரை விமர்சனங்கள் இவரது தனி சிறப்பு. ஒரு திரைப்படம் வந்ததும், அது குறித்து இவரது விமர்சனத்தை எதிர்நோக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. சக நண்பர்களோடு இணைந்து ‘பார்த்ததும், படித்ததும்’ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். எழுதத் தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் என்ற செய்தியே இவரது எழுத்துத் திறமைக்கு சான்று. இவரது எழுத்தாற்றலைப்போலவே இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- லோகு. N

அறிமுகம் செய்தது ஈரோட்டைச் சார்ந்த நண்பர் லோகு அவர்கள்

நல்வாழ்த்துகள் ஜெட்லி

நட்புடன் சீனா

விடை பெறுகிறேன்.

வலையுலக நண்பர்களே,வணக்கம்,மதுரை பதிவர்களை சந்திக்க படிமக்கவிஞர் நேசமித்திரன் நைஜீரியாவில் இருந்து இன்று வருகை தந்தார்,காலை முதல் இரவு வரை அவருடன் இருந்து விட்டு இப்போ தான் வீட்டுக்குள் வருகிறேன்.

இந்த வலைச்சர வாய்ப்பை எனக்கு தந்த சீனா ஐயாவுக்கும்,அவரது துணைவியாரும்,எனது தாயுமான செல்வி ஷங்கருக்கும் நான் வாழ்நாள் கடமை பட்டிருக்கிறேன்.

பலதரப்பட்ட பதிவர்களை,தேடி படிக்க முடிந்தது,புதிய நண்பர்கள்,தோழிகள்,கிடைத்து இருக்கிறார்கள்.வலைச்சர அனுபவம் பல புதிய சன்னல்களை திறந்து விட்டிருக்கிறது.புதிய காற்றை சுவாசிக்கிறேன்,...வாருங்கள்....நாளும் அன்பில் தொடர்வோம்.

Saturday, February 20, 2010

வலைச்சரத்தில் சிங்கங்கள்.

வணக்கம் நண்பர்களே,இன்று வலைச்சரத்தில் ஐந்து சிங்கங்களை அறிமுப்படுத்தப்போறேன்,என் இந்த பெயர் வைத்தேன் என்று சும்மா போய் பாருங்க,அப்ப..புரியும்.
-------------------------------------------------------------------------------------------------------------
D.R. அசோக்:என் இனிய நண்பர்,சென்னைக்காரர்,இவர் ஒரு பின்னூட்ட மின்னல்,"அறிதலில் காதல்"என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார்,கவிதைகளின் இளவரசனாக வலம் வருகிறார்.மனித மனத்தின் பேயோட்டமே இவரது கவிதைகளுக்கான கருப்பொருளாக இருக்கிறது.சென்று பாருங்கள்.வீச்சு தெரியும்.
--------------------------------------------------------------------------------------------------------------
துபாய் ராஜா:ராஜ சபை என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்,பயணக்கட்டுரைகள்,அனுபவம் என சகலமும் கலந்து கட்டி அடிக்கிறார்.போய் பாருங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
பால குமார்:மதுரைக்காரர்,பழக இனிமையானவர்,B.s.n.l.-ல் பொறியாளராக பணிசெய்கிறார்.ஒவ்வொரு பதிவுகளும் அசத்துகிறார்,பத்திரிக்கையை படிக்கும் உணர்வு வருகிறது.சோலை அழகுபுரம் என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.கவிதைகளையும்,வாழ்க்கை அனுபவங்களையும் படைக்கிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கமலேஷ்:திருவாரூர் காரர்,தற்சமயம் சவுதியில் பனி செய்கிறார்,சுயம் தேடும் பறவை என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்,கவிதைகளில் பொறாமை வருகிறது,கட்டாயம் பாருங்கள்.நேர்த்தியான புகைப்படங்கள் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------
கருணாகரசு:எனக்கு பிடித்த இனியவர்,சிவப்பு சிந்தனை காரர்,ஈழ மக்களுக்கு என்னோடு தோள் கொடுக்கும் சக பதிவர்,கவிதைகளில் கோபம் கொப்பளிக்கிறது,கருணை மிதக்கிறது,அன்புடன் நான் என்ற வலைப்பூ வைத்துள்ளார்.போய் பார்த்தால் இந்த சிங்கங்களை புரியும்.
------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து வாருங்கள்....நாளும் ...அன்பில்....தொடர்வோம்.

Friday, February 19, 2010

"வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்."

நண்பர்களே வணக்கம்,இன்னைக்கு ஒரு வழியா ஐந்து அம்மிணிகளை தேடிப்பிடுச்சு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போறேன்,எப்பவும் போல உங்க ஆதரவ வேண்டி இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். 
---------------------------------------------------------------------------------------------
சித்ரா: அமெரிக்காவில் வசிக்கும் வலைப்பதிவர்,தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று ஒரு காலத்தில் அழைக்க ப்பட்ட பாளையங்கோட்டையில் பிறந்தவர்,[நானும் இங்கு தான் ஆசிரிய பயிற்சி படித்தேன் ]கொஞ்சம் வெட்டிப்பேச்சு என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.நான் ரசிக்கும் வலைப்பதிவர்.சித்ராவின் எழுத்து நடைக்கு இவருக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி.சராசரியாக 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு இடுகைக்கும் வருகிறது.நிறைய வலை நண்பர்கள் இவரது வலைத்தளத்தை பிரித்து மேய்கிறார்கள்,நீங்களும் கட்டாயம் மேய வேண்டிய வலைத்தளம்.போய் பாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
பிரியா:பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வலைப்பதிவர்,என் மனதில் இருந்து என்ற பெயரில் வலைப்பூ செதுக்குகிறார்.புகைப்பட கலையிலும்,ஓவியக்கலையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார்.ரசித்து வரைந்தவை,உணர்ந்து வரைந்தவை,வியந்து எடுத்தவை,என்ற தலைப்புகளில் சென்று பாருங்கள்,அங்கே பளிச்சிடுகிறதுஅவரதுதிறமை.அப்படியே சொக்கிப்போவீர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
ஸாதிகா ஹசானா:பெயரே நல்ல ரிதமா இருக்குல.எல்லாப்புகழும் இறைவனுக்கே,என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.சென்னையில் வசிக்கிறார்,கட்டுரைகள்,அனுபவங்கள்,சமையல்,சிறுகதை,சரித்திரம்,குழந்தை வளர்ப்பு,என்று பின்னுகிறார்,கதாப்பாத்திரங்கள் என்ற தலைப்பில் நான்கு பதிவுகள் எழுதிஉள்ளார்.படித்துப்பாருங்கள்,அசந்து போவீர்கள்.ஒவ்வொரு இடுகைக்கும் அசத்தல் போட்டோக்கள் இணைத்து அசத்துகிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------
தேனம்மை லச்சுமணன்:சென்னையில் வசிக்கும் இவர் சும்மா என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.எல்லாபதிவுகளையும் ரசித்து எழுதுகிறார்,இதே பெயரில் சமையல் குறிப்பிற்கான ஆங்கில வலைப்பூவும்,நடத்துகிறார்.படித்து பாருங்கள் பெயருக்கேற்றார் போல இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
பத்மா:டெல்லியில் வசிக்கிறார்,கணக்கியல் துறையில் பணிசெய்கிறார்.padma reaches என்ற பெயரில் ஆங்கில கவிதைக்கான வலைப்பூ நடத்துகிறார்.எல்லாமே ரசிக்கும் படியாய் இருக்கிறது,இனி இவர் தளத்தை தினமும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு தொற்றிக்கொண்டது,வத்தக்குழம்பு என்ற பெயரில் சமையல் குறிப்புக்கான ஆங்கில வலைப்பூ நடத்துகிறார்,தமிழில் காகித ஓடம் என்ற பெயரில் வைத்துள்ளார்,முழுக்க முழுக்க கவிதைகளே இருக்கிறது,கவிதைகளுக்கு புகைப்பட தேர்வு வெகு நேர்த்தி,ஐயகோ என்ற தலைப்பில் உள்ள கவிதையை படித்து பாருங்கள்,பத்மா யாரென்று தெரியும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து வாருங்கள்,    நாளும் ...அன்பில் ..தொடர்வோம்

Thursday, February 18, 2010

"வலைச்சரத்தில் நான்காம் நாள்."

வணக்கம் நண்பர்களே,நேத்து முழுசும் "சீதா புராணம்" பாடி முடிச்சிட்டு.இன்னைக்கு எப்படிடா படத்த ஓட்டபோற கைப்புள்ளைன்னு நெனைச்சுட்டு இருக்குறப்ப,நம்ம மதுரையில இருக்குற மூன்று பாசக்கார பய புள்ளைகளை அறிமுகப்படுத்துவோம்னு "எப்பவும் போல உங்களை நம்பி களமேறங்கி இருக்கேன்,கவுத்திபுடாதீக.
நாளைக்கு ஒரு ஐந்து பெண் பதிவர்களையும்,சனிக்கிழமை ஒரு ஐந்து ஆண் பதிவர்களையும் போட்டு,ஞாயிறு அன்னைக்கு நன்றி சொல்லி டைட்டில் கார்டு போட்டுபுட்டு படம் காட்டுரத முடிச்சுகல்லாம்னு வந்துருக்கேன்.
------------------------------------------------------------------------------------------------------------------
பிரபு.எம்.: இவரு என்னோட உறவு க்கார பையன், மறந்து போய்,நான் அறிமுகப்படுத்தாம விட்டு,அப்புறம் அவன் பாட்டுக்கு மாமன்,மச்சுனன்னு கூட பாக்காம வீட்டுக்கு ஆட்டோ  அனுப்பி விட்டா சிக்கலாயிடும்ல,சும்மாவே ..மதுரைக்குள்ள "ரெண்டு இட்லி ஒரு வடை வாங்கி கொடுத்தாக்கூட போதும்,எவனையும் குத்துறதுக்கு ஆள் ரெடியா இருக்கு,இந்த A.C வெள்ளத்துரை வந்து நேத்து ரெண்டு பேர என்கவுண்டர் , போட்ட பிறகுதான் மதுரை மூச்சு விடுது.மதுர வரலாற்றுல இந்த ரெண்டு நாளாத்தான்,எல்லா போலீஸ் 
ஸ்டேசன்லயும் ஒரு F.I.R கூட போடுற துக்கு கேசே வரலையாம்.அல்லு சில்லு பூராம் சிட்டா பரந்துட்டாணுக.ஆனா இந்த கரை வேட்டிக்குள்ள ஒளிஞ்சு இருக்குற டவுசர்களை புடிக்க எத்தன வெள்ளைத்துர வந்தாலும் முடியாது.

சரி மேட்டருக்கு வருவோம்,நம்ம பிரபு இருக்காகளே பிரபு, ஒரு சாப்ட் வேர் எஞ்சினியர்.[network specialist].மலேசியாவில் வேலை பாக்குறார்.அவருடைய பெயரிலேயே வலைப்பதிவு எழுதுகிறார்.பார்பதற்கு சினிமா ஹீரோ மாதி இருக்கார்,நெறமும்,குணமும் பவுனு மாதி.[யாரும் பணம் போட்டு படம் எடுக்கணும்னா ஹீரோ ரெடி.]
இவர் எழுத்துகளில் வயதை தாண்டிய முதிர்ச்சி தெரிகிறது, பெரிய எழுத்தாளர்களிடம் உள்ள எழுத்து நடை இவரிடம் இயல்பாகவே இருப்பது,சிறப்பம்சம்.தமிழ் எழுத்துலகில் இவருக்கென ஒரு இடம் கிடைப்பது உறுதி,நம்ம கால்குலேசன் மிஸ்ஸாகாது. நீங்க மிஸ் பண்ணிடாதீக...போய் பாருங்கப்போய்.
----------------------------------------------------------------------------------------------------
மதுரை சரவணன்:பழகுவதற்கு இனிமையான தம்பி,மதுரையில் உள்ள,திருஞானம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிசெய்கிறார்,என்னுடைய தொழிற் சங்கத்தில் இவரும் உறுப்பினராக உள்ளார்.முழுக்க முழுக்க குழந்தைகள் கல்விக்கான வலைப்பூ நடத்துகிறார்.எல்லா பதிவுகளும் குழந்தைகள்,கல்விநலம் மனநலம் சம்பந்த மாகவே உள்ளது, வாசியுங்கள் உங்கள் குழந்தைகளை சரி பண்ண உதவியாயிருக்கும்.
------------------------------------------------------------------------------------------------
வெற்றி:பதிவுகளில் சர வெடி,அனாயாசமான எழுத்து நடை,இப்பவே இந்த போடு போட்டான்னா ....எதிர்காலத்தில் கலக்குவான் .நம்ம தம்பி வெற்றி பொறியியல் கல்லூரி மாணவர்,நக்கல்,நையாண்டி என எல்லா தளங்களிலும் இயங்குவது ரசிக்க முடிகிறது.நீங்களும் ஒரு நடை போய் பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------
இவர்கள் மூவரையும்,தொடர்ந்து பல பதிவுகள் எழுதி நம் இதயத்தை கொள்ளை கொள்ள,உங்களோடு சேந்து நானும் வாழ்த்துகிறேன்.

டிஸ்கி:அதிகமான பின்னூட்டங்கள் இடும் பதிவர்களுக்கு,தலா Rs-1000 பரிசாக வழங்கப்படும்.எனது ஈமெயிலில் உங்கள் Account number அனுப்பவும்.[cheque-Bounce- ஆச்சுனா கம்பெனி பொறுப்பேற்காது.




Wednesday, February 17, 2010

பெண்பதிவர்:"சீதா பாரதி"



Beloved friends,here iam very proud to introduce such a beautiful and brilliant poetess seetha bharathi. I witness with her soul stirring verses,and all leads you to plunge into the pool of ecstasy,and mesmeric mood.
---jerry eshananda------
---------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட ஆங்கில வரிகள் என் புலமையை காட்ட எழுதவில்லை,சந்தோஷ தர்ணத்தில்,மலை உச்சியில் இருந்து கத்த சொன்னால், உணர்ச்சிப்பெருக்கில் கத்துவோமே,அதைத்தான் இங்கே செய்து விட்டேன்.

வற்றிப்போன ஹார்மோன்களையும்,அரை வினாடியில் சுரக்கச்செய்யும் அருமருந்து -காதல்.

துவண்டு கிடக்கும் மனசை துள்ளி எழுப்பும் பீஜ மந்திரம் - காதல்.

இப்படி காதலை ப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,அது தரும்....வலி,வேதனை,அவமானம்,வெற்றி,பிரிவு, வசந்தம்,சோகம்,என எத்தனையோ வாழ்வியல் பரிமாணங்களில் நம்மை அமிழ்த்தும் "கருணா சாகரம்"- தான் இவரது வலைப்பூ.

யாருமற்ற தனிமையில் பூத்துக்குலுங்கும் நந்த வனத்தில் தென்றலை தழுவியபடி நீங்கள் நடந்தால் எப்படியிருக்கும்?

மெல்லிய குளிரில்,இதமான வாடைக்காற்றில் பௌர்ணமி வெளிச்சத்தில்,உடலை போர்த்தியிருக்கும் கம்பளி ஆடை தரும் கதகதப்பில்,இளைய ராஜா பாடலை கேட்டுக்கொண்டே நடந்தால் எப்படியிருக்கும்?

இன்னும் இது போன்ற எத்தனையோ இனிமைகளை இங்கே இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள் .இந்த இனிமைகள் அனைத்தையும் இவரது வலைப்பூவிற்கு சென்றால்,வாசிப்பு என்ற ஒற்றை சுகானுபவத்தில் இதனை நீங்கள் எட்ட முடியும்.

கண்களுக்கு உறுத்தாத,எரிச்சல் தராத வலையமைப்பு.
கவிதைகளுக்கேற்ற புகைப்படங்கள்,சுகமாய் தாலாட்டும் வரிகள்,...இப்படி வலைப்பூவில் நேர்த்தி மிளிர்கிறது.

உங்கள் கணினி இருக்கும் அறையின் மின் விளக்கை அனைத்து விடுங்கள்,பின் ஒவ்வொரு கவிதையாய் சுவாசித்து ப்பாருங்கள்,விண்வெளியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையே மிதப்பீர்கள்.

நண்பர்களே, உங்களது வாழ்த்துக்கள் இந்த பெண் பதிவர் -சீதா பாரதியை உற்சாகப்படுத்தட்டும்.இவரது கனவும் மெய்ப்படட்டும்.

தொடர்ந்து ..வாருங்கள், நாளும் ...அன்பில்......தொடர்வோம்




Tuesday, February 16, 2010

வலைச்சரத்தில் 2- வது நாள்.

வணக்கம் நண்பர்களே,
என்னைப்பொறுத்த வரையில்,"தமிழ் குடியே,உலகின் தொன்மம் பொதிந்த,ஆதிகுடிஎன்றும்,தமிழ் மொழியே,ஆதி மொழி என்றும் திடமாக நம்புபவன்.வரலாறை மறப்பது துரோகம் என்றால்,வரலாறை மறைப்பது, மாபெரும் துரோகம்.

அந்தவகையில்,நம் இனத்திற்கு நேர்ந்த பேரழிவை, அவமானத்தை,கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி செல்வது என்பது இயலாமை.[Impotent],மாறாக அந்த உணர்வை மனித தன்மையோடு உள்வாங்கி,ஒரு கவிதை வடிவிலோ,கட்டுரை வடிவிலோ,எளிய பாடல் வடிவிலோ,அல்லது தினம் சந்திக்கும் சக மனிதர்களுடனான உரையாடல் வடிவிலோ வெளிப்படுத்துவது என்பது வீரம்,மற்றும் வீர்யம்.

வரலாறாக இருக்கட்டும் அல்லது,,நம் வாழ்கையின் எந்த ஒரு  செயலாகட்டும்,எதையும் நாம் ஆவணப்படுத்தா விட்டால்,அதுநாளடைவில்  தன் சுயத்தை இழந்துவிடும்.அது நம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமும் கூட.

சமீப காலமாக நான் இவரது வலைப்பூவை புக் மார்க் செய்து படித்து வருகிறேன்,ஒவ்வொரு பதிவும்,ஒரு ஆவணபெட்டகம்
தேவியர் இல்லம் -திருப்பூர்,என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் திரு.ஜோதிஜி அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன்.

பூமிப்பந்தில் குடியிருக்கும் ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய வலைப்பூ இது,நான் இந்த வலைப்பூவை பூஜிக்கிறேன்,நீங்கள் குறைந்த பட்சம் நுகர வாவது செய்யுங்கள்.

தொடர்ந்து ....வாருங்கள்,  நாளும் அன்பில் நிலைத்திருப்போம்..


Monday, February 15, 2010

வலைச்சரத்தில் முதல்நாள்.

நாடி நரம்புகளில் நட்பையும்,அன்பையும்,ஒன்றாக ப்பாய்ச்சும்,வலையுலக நண்பர்களே வணக்கம்."இந்த வாரம் -நம்ம வாரம்", மதுரைக்கே மல்லிகையா?என்பதைப்போல,நம்மையும் ஒரு ஆளாக மதித்து,வலைச்சர ஆசிரியராகபணித்த அன்பின் சீனாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.[எப்பிடி...வயச குறைச்சு கிட்டோம்ல.]

எப்படி படத்த ஒரு வாரத்துக்கு ஓட்ட போறோம்னு?நினைச்சுக்கிட்டே,முன்னாள் ஆசிரியர்களின் பக்கங்களை பார்த்தால்,தலை நன்றாகவே 3-D யில் சுற்றுகிறது,ஆனாலும் கிடைக்க விருக்கும் நட்பையும்,அன்பையும் சுவைக்க இருக்கும் தருணங்களை நினைக்கும்போது வலைச்சரப்பணி,விலைமதிப்பற்றது.

நான் இப்பதிவுலகில் எழுத வந்த கதையை,எனது 50- வது பதிவாக எழுத இருப்பதால்,இப்போதைக்கு உங்களை கொரில்லா செல்லில் அடைக்காமல் free- யா விட்டுடுறேன்.
தற்போது 40- இடுகைகளுக்கு மேல எழுதி இருந்தாலும், எல்லோருக்கும் புடிச்சதுன்னு பார்த்தா 
மேலும்...
மேற்கண்ட பதிவுகளை வலைச்சர வாசகர்களுக்கு ப்பரிந்துரை செய்வது என் பாக்கியம். 

.
புதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.

.

Sunday, February 14, 2010

வாழ்த்துகள் கார்த்தி - வருக வருக ஜெரி

கடந்த ஒரு வார காலமாக, ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திகைப் பாண்டியன், ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 170 மறுமொழிகள் பெற்று , பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து, சுட்டிகள் கொடுத்து, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

அவர் பதிவர்களை அறிமுகப் படுத்தும் பொழுதே - தினம் ஒரு புத்தக விமர்சனமும் ஒரு சினிமா விமர்சனமும் இடுகையில் சேர்த்து புதுமை படைத்தது நன்று.

நன்றி கலந்த நல்வாழ்த்துகள் நண்ப கார்த்திகைப் பாண்டியன்.
---------------------------------------------

15ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்த அருமை நண்பர் ஜெரி ஈசானந்தா அவர்களை வருக வருக - பணியினைச் சிறப்புடன் செய்க என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிகிறார். உலகின் மிகத் தொன்மையான "தமிழ் சித்த யோகா" கலாச்சாரத்தைப் பயின்று வருகிறார். ஒ
ருமை என்ற பதிவினில் எழுதி வருகிறார். Divine Factoryஎன்ற பதிவு துவங்கி இடுகைகள் இட திட்டம் வைத்திருக்கிறார்.

பார்ப்பதற்கு காவல்துறையைச் சார்ந்த ஒரு உயர் அதிகாரி போலத் தோற்றம் அளித்தாலும் பழகுவதற்கு இனியவர் - பண்பாளர்.

நல்வாழ்த்துகள் ஜெரி
நட்புடன் சீனா
------------------

Saturday, February 13, 2010

நிறைய நட்பு.. கொஞ்சம் இலக்கியம்..!!!

பொழுதுபோக்கு, வாசிப்பு, தகவல்கள் என்பதையும் தாண்டி இந்தப் பதிவுலகம் எனக்கு கொடுத்திருக்கிற விஷயம் - நட்பு. இந்த ஒன்றரை வருஷத்துல பதிவுலகு மூலமா எனக்கு கிடைச்சு இருக்குற அருமையான நண்பர்கள், நான் பார்த்துப் பழகிய நல்ல இதயங்களைப் பற்றியதுதான் இந்த இடுகை. நிறைய பேரைப் பத்தி சொல்ல வேண்டி இருக்குறதால இடுகைகளை சொல்லாமல் தளத்தோட முகவரியை மட்டும் தந்து இருக்கேன். இவர்களில் நிறைய பேரை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். அதனால கூடவே கொஞ்சம் இலக்கிய சம்பந்தமா எழுதக் கூடிய நண்பர்கள் பற்றிய அறிமுகமும் இருக்கும். வாசிச்சுப் பாருங்க..

தருமி
பப்பு
சுந்தர்
மதுரை சரவணன்
ஸ்ரீதர் - ஸ்ரீ
ஜெரி - ஒருமை
வி.பாலகுமார் - சோலைஅழகுபுரம்
பிரபு.எம் - வாசகர் தேவை
வெற்றி - நெஞ்சினிலே
காவேரிகணேஷ் - காவேரி கணேஷின் பக்கங்கள்
சீனா - வலைச்சரம்
அன்பு - OPEN HEART
பீர் - ஜெய்ஹிந்துபுரம்
இராகவன் நைஜீரியா
கணேஷ்குமார் - Daily coffee
ஜோ - life goes on ..
ரம்யா - Will to live
லோகு - அச்சம் தவிர்
ஆ.ஞானசேகரன் - அம்மா அப்பா
இயற்கை - இதயப்பூக்கள்
குடந்தை அன்புமணி - இலக்கியா
நசரேயன் - என் கனவில் தென்பட்டது
சம்பத் - என் கிறுக்கல்கள்
அதிபிரதாபன் - ஏதோ டாட் காம்
கதிர் - கசியும் மவுனம்
சி@பாலாசி
அத்திரி - சிவசைலம்
சொல்லரசன்
தண்டோரா
தேவன்மாயம் - தமிழ்த்துளி
கணேஷ்குமார் - தீப்பெட்டி
ஆனந்த் - நம்மா ஊரு கடையம்
நாடோடி இலக்கியன்
வானம்பாடிகள் - பாமரன் பக்கங்கள்
ஜெட்லி & சங்கர் & சித்து - பார்த்ததும் படித்ததும்
பிரியமுடன்... வசந்த்
புல்லட்
அ.மு.செய்யது - மழைக்கு ஒதுங்கியவை
யாத்ரா
நர்சிம் - யாவரும் கேளிர்
கேபிள் சங்கர்
கார்க்கி
பைத்தியக்காரன்
கார்த்தி - வானவில் வீதி
நையாண்டி நைனா - லக லக லக
வழிப்போக்கன்
வால்பையன்
வெயிலான்
ராஜு
முரளிகண்ணன் - நீரோடை
ஜாபர்
செல்வேந்திரன்
மாதவராஜ் - தீராத பக்கங்கள்
திருஞானசம்பத் - பட்டிக்காட்டான்

( ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நண்பர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை.. மற்றபடி நண்பர்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அது மறதியின் பொருட்டே... தயை கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்..)

ஒரு சில நண்பர்கள் தாங்கள் படிக்கும் புத்தகங்கள் மற்றும் இலக்கியம் பற்றி எழுதுகிறார்கள். அவர்களுடைய தளங்கள்..

சிரில் அலெக்ஸ்
அழியாச் சுடர்கள்
கிருஷ்ண பிரபு - கதைகள் மற்றும் கட்டுரைகள்
லேகா - யாழிசை ஒரு இலக்கியப் பயணம்
கிருஷ்ண பிரபு - நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்
சுரேஷ் கண்ணன் - பிச்சைப்பாத்திரம்
சேரல் - புத்தகம்

ஒரு சில இலக்கியவாதிகளின் தளங்கள்..

லீனா மணிமேகலை
நாகர்ஜுனன்
முகுந்த் நாகராஜன்
தமிழ்நதி
வாமுகோமு

புத்தகம்

மல்லிகைக் கிழமைகள்

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கவிதைத் தொகுப்பு. மனதை வருடிச் செல்லும் அழகான கவிதைகள். நம் மனதின் திறக்கப்படாத சில பக்கங்களை புரட்டிப் போடும் கவிதைகள். எளிமையாக இருக்கின்ற அதே நேரத்தில் ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்தும் புத்தகம்.

விகடன் வெளியீடு
ரூ. 55/-

உலக சினிமா

A short film about love

காதலர் தினம் கொண்டாடும் நேரத்தில் காதலைப் பற்றி பேசாவிட்டால் எப்படி? இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கான அடிப்படை உணர்வு - காதல். அதைப் பற்றி பேசும் இங்கமர் பெர்க்மானின் படம் பற்றிய இடுகை இங்கே..

Thursday, February 11, 2010

இவர்கள் எனக்கு புதியவர்கள்..!!!

பெருந்துறையில் வேலை பார்த்து வந்த வரை, பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுவது என்பது, எனக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரியிலும், விடுதியிலும் எந்நேரமும் இணைய வசதி இருக்கும். எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாய் படித்து பின்னூட்டங்கள் இட முடியும். பதிவு எழுதி விட்டு பின்னூட்டங்களுக்காக ஆவலுடன் காத்துக் கிடப்பது எத்தனை கஷ்டமானது என்பதை நான் அறிந்தவன். எனவே புதிதாக எழுத வரும் நண்பர்களை தேடிப்பிடித்து வாசித்து ஊக்குவிக்க முடிந்தது.

ஆனால் வேலை மாற்றலாகி மதுரைக்கு வந்த பின் நிலைமை மாறிப்போனது. பிரவுசிங் சென்டரில் இருந்து பதிவெழுத நேரம் இருக்குமே தவிர, பொறுமையாக வாசித்து கருத்துரைகள் எழுத முடியாமல் போனது. அதே போல புதிதாக எழுத வந்தவர்கள் யார் என்பதும் அவ்வளவாகத் தெரியவில்லை. இப்பொழுது எனக்கான கணினியை வாங்கியுள்ள நிலையில்தான் புதிய மக்களை தேடித் பிடித்து படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். இவர்கள் ரொம்ப நாளாக எழுதுபவர்களாக இருக்கலாம்... ஆனாலும் எனக்குப் புதியவர்கள் என்பதை இங்கே நினைவுறுத்த விரும்புகிறேன். சமீப காலமாக நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களைப் பற்றியதுதான் இந்த இடுகை.

பல நண்பர்களுடைய தளத்தில் இருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகவே நண்பர் அக்பரின் அறிமுகம் கிடைத்தது. சிநேகிதன் என்கிற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். சமீபமாக சினிமா பற்றியும் நிறைய எழுதி வருகிறார். தனி மனித உணர்வுகள் பற்றி பேசும் முகமூடி என்கிற இந்த இடுகை எனக்கு ரொம்பவே பிடித்தது.

பலாபட்டறை என்ற பெயரில் எழுதி வந்தவர்தான் இப்போது ஷங்கராய் உருமாறி நிற்கிறார். நிறையவே கவிதைகள் எழுதுகிறார். கூடவே சமூகம் சார்ந்த விஷயங்களையும் நாசூக்காக சொல்லி செல்கிறார். யாசகம் வேண்டும் மனிதரிடம் இருந்து கூட மார்க்கெட்டிங் யுக்தியை கற்றுக்கொள்ள முடியும் என வித்தியாசமாக சிந்திக்கிறார். அவருடைய சின்ன சின்ன கவிதைகள் உங்கள் பார்வைக்கு..

திறந்து பாருங்கள் என்று நமக்கு அழைப்பு விடுக்கிறது பேநா மூடியின் வலைத்தளம். திருப்பூரில் இருப்பதாக தெரிகிறது. கொஞ்சமாக கவிதைகளும், நிறையவே சினிமாவைப் பற்றியும் எழுதுகிறார். அநாதை குழந்தை என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு இலக்கிய வாடை வீசும் கவிதை உங்கள் பார்வைக்கு..

சமீப காலமாக நகைச்சுவையாக எழுதுவதில் பட்டையைக் கிளப்பி வருகிறார் நண்பர் சேட்டைக்காரன். பதிவுலகின் சூதுகளை நிறையவே புரிந்து கொண்டிருப்பார் போல. எல்லா நண்பர்களுடைய தளத்திலும் இவருடைய பின்னூட்டங்களைப் பார்க்க முடிகிறது. என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவருடைய இடுகை - ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.

வெகு நாட்களாகவே எழுதி வந்தாலும் இப்போதுதான் என் கண்களில் தட்டுப்பட ஆரம்பித்து இருக்கிறார் வீடு திரும்பல் - மோகன் குமார். கலந்து கட்டி அடிக்கும் விஷயங்களை வானவில் என்ற பெயரில் தொகுத்து எழுதுகிறார். பல விஷயங்களை ஒரு நூலில் கோர்க்கும் வானவில்லின் அழகான ஒரு துண்டு நீங்கள் பார்த்து ரசிக்க..

பவானியை சேர்ந்தவர் நண்பர் சங்கமேஸ்வரன். சங்கவி - உங்களில் ஒருவன் என்கிற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். உடல்நலம் பேணுவதற்கான மருத்துவம் சார்ந்து பல நல்ல விஷயங்களை எழுதுகிறார். நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களில் கூட இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா என்னும் ஆச்சரியம் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. வெற்றிலையின் மருத்துவ குணம் பற்றிய நண்பரின் இடுகை இங்கே..

நிலா அது வானத்து மேல என்கிற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார் நண்பர் ஸ்டார்ஜன் (Starjan ). உயோரோடை சிறுகதைப் போட்டியில் முதல் முறையாக இவருடைய பதிவை படித்ததாக ஞாபகம். கவிதை, சினிமா, அரசியல் என்று எல்லாப் பக்கமும் புகுந்து புறப்படுகிறார். காந்தி ஜெயந்தி அன்று அவர் எழுதி இடுகை இங்கே..

நகைச்சுவை, சமூகப் பொறுப்பு என்று நம் உள்ளம் கவர்கிறார் நாஞ்சில் பிரதாப். இவருடைய தளம் - நாஞ்சில் எக்ஸ்பிரஸ். அவ்வப்போது மலையாளப் பட விமர்சனங்களும் எழுதுகிறார். என்னது? ச்சே ச்சே.. அது இல்ல.. எல்லாம் அருமையான கதையம்சம் கொண்ட மலையாளப் படங்கள் பத்திதான்ப்பா.. பசுநேசனை வைத்து வார்னர் பிரதர்ஸ் படம் தயாரிச்சா எப்படிம் இருக்கும்கிற அவருடைய கற்பனையை வாசிச்சு சிரிங்க..

டெரராக எழுதி வாசிப்பவர்களை டரியல் ஆக்குகிறார் புலவன் புலிகேசி. கதைகள், கவிதைகள் என எல்லாம் கலந்து எழுதுகிறார். கடவுளை எங்கெல்லாம் தன்னால் பார்க்க முடிகிறது என அவர் சொல்லும் இந்த இடுகை கொள்ளை அழகு.

அஸ்ஸாமில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் நண்பர் தேவராஜ் விட்டலன். எஸ்ராவின் ரசிகர் என்ற ஒரு காரணம் போதுமே.. நான் இவரை வாசிப்பதற்கு. உணர்வுப்பூர்வமாக கட்டுரைகள் எழுதக் கூடியவர். நல்ல கவிஞர். சொந்தமாக ஒரு கவிதை தொகுதியும் வந்திருக்கிறது.தொலைந்து வரும் கடிதங்கள் எழுதும் பழக்கம் பற்றிய அவரது ஆதங்கம் இங்கே இடுகையாய் வெளிப்படுகிறது.

இது போல இன்னும் பலர் இருக்கிறார்கள். தினம் தினம் புதிது புதிதாக எழுத வரும் பதிவர்களாலேயே நம் பதிவுலகம் வெகு ஆரோக்கியமாக இயங்கி வருகிறது என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

புத்தகம்

நாணல் பைத்தியம்

அகநாழிகை இதழில் வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர் - எஸ்.ஷங்கரநாராயணன். சில நாட்களுக்கு முன்பு நூலகத்தில் துழாவிக் கொண்டிருந்தபோது எதேச்சையாக இந்த புத்தகம் கிடைத்தது. மனநிலை பாதிக்கப்பட்டோரை கதையின் மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. படித்து முடிக்கும்பொழுது நம் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கணம் சேர்ந்து கொள்கிறது. நம் வாழ்வில் இது போல நாம் சந்தித்த பல மனிதர்கள் பற்றிய கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறது. மனதை உருக்கும் புத்தகம்.

வெளியீடு - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், தஞ்சை
விலை - ரூ. 75/-

உலக சினிமா

Pulp Fiction

குவிண்டின் டொராண்டிநோவின் மிகச் சிறந்த படம் என்று பல்ப் பிக்ஷனை சொல்லலாம். திரைக்கதை வடிவத்தில் ஒரு புது புரட்சியை உண்டு பண்ணிய படம். 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. படம் பற்றி நண்பர் ஹாலிவுட் பாலா எழுதிய விரிவான விமர்சனம் இங்கே..

Wednesday, February 10, 2010

கவிதையாய் கசிந்துருகி..!!!

உலகின் அதி உன்னதமான கலைஞர்கள் என்று கவிஞர்களை சொல்லலாம். சந்தோசம், துக்கம், வெட்கம், கோபம், வெறுப்பு, பயம் என எல்லா உணர்வுகளையும் கவிதைகளில் காண முடியும். தனக்கான வார்த்தைகளைத் தேர்ந்து எடுப்பதில்தான் ஒரு சிறந்த கவிஞன் முழுமை அடைகிறான். இப்படித்தான் கவிதைகள் இருக்க வேண்டும் என்றோ, இதுதான் நல்ல கவிதை என்றோ எந்த வரையறையும் கிடையாது. எந்த வடிவத்தில் இருந்தாலும், படித்து முடிக்கும்பொழுது, நம் மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தக் கூடுமாயின் என்னைப் பொறுத்தவரை அதுதான் நல்ல கவிதை.

நம் பதிவுலகில் கவிஞர்களுக்கு பஞ்சமே கிடையாது. இணையத்தில் எழுதப்படும் கவிதைகளை நான் இரண்டு வகையாக பார்க்கிறேன். சொல்ல வரும் விஷயத்தை நேரடியாக சொல்லி வாசகனுக்கு எளிதாகப் புரிய வைப்பது ஒரு வகை. சிக்கலான சொல்லாடல்கள் மூலம் வாசகனை கவிதை பற்றி சிந்தக்கத் தூண்டுவது இன்னொரு வகை. தங்களுடைய கவிதைகளால் வாசிப்போர் மனதைக் கொள்ளை கொண்ட கவிஞர்களைப் பற்றியதுதான் இந்த இடுகை.

என்.வினாயகமுருகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று யோசிப்பவர்களுக்கு.. அகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக "கோவில் யானை" என்கிற இவருடைய தொகுப்பு வெளியாகி உள்ளது. எளிதான கவிதைகளின் மூலம் நம் மனத்தை கொள்ளை கொள்பவர். ஆரம்ப காலத்தில் புரிந்த கொள்ள சற்றே கடினமான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவர், இப்போது தன்னுடைய நடையை மாற்றிக் கொண்டு விட்டார். என்னை மிகவும் கவர்ந்த ரயில் விளையாட்டு பற்றிய அவருடைய கவிதை இங்கே..

தாய்மண் மீதான நேசத்தையும், இன்றைய சூழலில் அங்கே நடக்கும் கொடுமைகள் பற்றிய தன்னுடைய கோபத்தையும் கவிதைகளில் வெளிப்படுத்துபவர் தோழி ஹேமா. "வானம் வெளித்த பின்னும்" என்ற தளத்தில் எழுதுபவர். என்றேனும் தம் தலைவர் திரும்பி வரக்கூடும் என்கிற அவருடைய நம்பிக்கை இங்கே கவிதையாக..

மறைமலை நகரில் வசித்து வருகிறார் ஷீ-நிசி. மிக எளிமையாக, ரொம்பவே கம்மியாக எழுதக் கூடியவர். இவருடைய எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு சிறுகதைக்கான கரு ஒளிந்திருக்கும். மீனவர்களின் வாழ்வைப் பற்றி அவர் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு..

சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளில் அடிக்கடி இவருடைய பெயரை நீங்கள் பார்க்க இயலும் - ச.முத்துவேல். சமீப காலமாக "சாளரத்தில் தெரியும் வானம்" என்ற கவிஞர்கள் பற்றிய கட்டுரைத் தொடரொன்றை தடாகம் மின்னிதழில் எழுதி வருகிறார். இவரும் நேரடியான அர்த்தம் கொண்ட கவிதைகளை எழுதக் கூடியவர்தான். கனவையும், காமத்தையும் ஒன்றாகப் பேசும் அவருடைய இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்.

"உழவன்" என்கிற பெயரில் எழுதி வருகிறார் நண்பர் நவநீதகிருஷ்ணன். தொலைந்து போன வாழ்வின் சந்தோஷ தருணங்களையும், அன்றாட வாழ்வின் கசப்பான உண்மைகளையும் கவிதைகளாக எழுதுபவர். "மழை" பற்றிய அவரின் இந்தக் கவிதை மிகச் சிறப்பானது.

ஏழுதோசை என்று நண்பர்களால் செல்லமாக கிண்டல் செய்யப்படுபவர் பிரியத்துக்கு உரிய தோழி "எழுத்தோசை" தமிழரசி. பிரிவு , ஊடல் பற்றிய இவருடைய கவிதைகளின் ரசிகன் நான். துணையைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் மக்களைப் பற்றிய இந்த கவிதையை படிக்கும்பொழுது நம்மையும் அறியாமல் மனதில் ஒரு மெல்லிய சோகம் தோன்றுவதை தவிர்க்க இயலாது.

திண்ணை.காமில் தொடர்ச்சியாக எழுதி வருபவர் நாவிஷ் செந்தில்குமார். மெலிதான சோக உணர்வைத் தாங்கி நிற்பவை இவருடைய கவிதைகள். "கண்டதைச் சொல்லுகிறேன்" என்கிற இந்தக் கவிதையின் மூலமாகவே நாவிஷ் எனக்கு அறிமுகமானார். பதிவுலகில் இருந்து வெளிவரும் அடுத்த கவிதைத் தொகுப்பு இவருடையதாக இருக்க வேண்டும் என பிரியப்படுகிறேன்.

நண்பர் மண்குதிரை மொரிஷியசில் வசித்து வருவதாகக் கேள்வி. சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். எளிதில் வார்த்தைகளில் வசப்படாத விஷயங்களை கவிதையாக மாற்றக்கூடியவர். மாயங்கள் நிறைந்த கனவொன்றை பற்றிப் பேசும் அவருடைய இந்தக் கவிதை உங்களையும் பிரம்மிக்க வைக்கும்.

தமிழின் முதல் ஜென் கவிதைகளை எழுதியவர் நண்பர் நரன். இலக்கிய வட்டாரத்தில் பரவலாக கவனத்தைப் பெற்று வருகின்றன அவருடைய கவிதைகள். "யாத்ரீகனின் குறிப்புகள்" என்ற பெயரில் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். அவருடைய ஒரு சில ஜென் கவிதைகள் இங்கே..

" பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் " - நேரடியான கவிதைகளின் மூலம் மனதை ஈர்க்கிறார் . ஞானிகள் உருவாகும் கதை பற்றிய அவருடைய இந்தக் கவிதை நீங்கள் ரசிக்க..

வெகு சமீபத்தில்தான் இவரைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. டோடோ (TOTO ) என்ற பெயரில் எழுதுகிறார். எந்த விதமான குழப்பமும் இல்லாமல் தான் நினைப்பதை தெளிவாக சொல்லி வாசிப்பவர்களை வியக்க வைக்கிறார். மெல்லிய சிரிப்பை வரவழைக்கும் அவருடைய கவிதை ஒன்று உங்களுக்காக..

கவிதைகளைப் பற்றி பேசும்பொழுது இவர்களைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. "அகநாழிகை" பொன்.வாசுதேவன். என்னைக் கவிதைகளைப் படிக்க வைத்தவர். அடுத்தவர் பா.ராஜாராம். எப்படி இவரால் மட்டும் தான் பார்க்கும் அத்தனை விஷயங்களையும் அழகான கவிதைகளாக மாற்ற முடிகிறது என்று என்னை வியக்க வைப்பவர். கடைசியாக, நேசமித்திரன். இவருடைய கவிதைகளைப் புரிந்து கொள்ள தனியாக ஒரு அகராதியே தேவைப்படும் என்று நான் கிண்டல் செய்வதுண்டு. அறிவியல், சரித்திரம் , இசை என்று எல்லா விஷயங்களைப் பற்றியும் இவர் எப்படி தெரிந்து வைத்து இருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைப்பவர். அடுத்த மாதம் ஊருக்கு வருகிறாராம். நிறைய சந்தேகங்களோடு சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

புத்தகம்

புயலிலே ஒரு தோணி

தன் வாழ்நாளில் இரண்டே நாவல்கள் எழுதியவரை தமிழ் இலக்கிய உலகம் தன் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அவர் ப.சிங்காரம். அவருடைய நாவல்கள் - புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இந்தோனேஷியாவில் நடக்கிற கதைதான் "புயலிலே ஒரு தோணி". இதை கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். இந்தோனேஷியா மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் வெவ்வேறு ஊர்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்தன என்பதை, அந்த காலத்து மண்ணின் மைந்தர்களையும் நம்கண் முன்னே நிறுத்துகிறார் சிங்காரம். ஆரம்பத்தில் கிரகித்துக் கொள்ள சிரமமாக இருந்தாலும், மொழி பழகியவுடன் நம்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்ளுவது புத்தகத்தின் சிறப்பு. அருமையான வாசிப்பனுபவத்தை தரக்கூடியது.

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - ரூ.180 /-

உலக சினிமா

Pedar

உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல தேவையில்லை.
சிறிதும் நாடகத்தன்மை இல்லாது அதிகமான இயல்பும் எளிமையும் குழந்தைகளின் உளவியலை மாறுபட்ட வாழ்வியலை நெகிழ்ச்சியான திரைப்படங்களாக வடிவமைத்தைலையே வழக்கமாக கொண்ட மஜித் மஜீதியின் மற்றொருமோர் உன்னத படைப்பு Pedar. நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்து விட்ட தத்தம் உறவுக்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள்.அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதை தான் இந்த திரைப்படம்.

திரைப்படத்தைப் பற்றிய அண்ணன் butterfly சூர்யாவின் பதிவு இங்கே..

Tuesday, February 9, 2010

மாயமாய் மறைந்த பதிவர்கள்..!!!

நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். நிறைய பேருடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால் அத்தனை பேரின் நினைவுகளும் நம் மனதில் நிலைப்பதில்லை. வெகு சிலரையே நமக்கு நெருக்கமானவர்களாக உணர முடியும். மாறாக ஒரு சிலரை ஓரிரு முறைதான் சந்தித்து இருப்போம். இருந்தும் நம் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள். இந்த விஷயம் பதிவுலகத்துக்கும் பொருந்தும்.

நான் பதிவுலகில் எழுத வந்த புதிதில், என்னோடு சேர்ந்து எழுதத் தொடங்கிய நண்பர்கள் பலர் இருந்தார்கள். திரட்டிகள் என்றால் என்னவென்று தெரியாமல், பின்னூட்டங்கள் ஏதும் இல்லாமல், படிப்பதற்கு ஆள் இல்லாமல்... இனிமேலும் நான் எழுத வேண்டுமா என்று துவண்ட போதெல்லாம் எனக்குத் தோள் கொடுத்துத் தாங்கியவர்கள் அவர்கள்தான். அந்த நண்பர்களே இன்று வரை நான் தொடர்ந்து எழுதுவதற்கும் தூண்டுகோலாக இருப்பவர்கள்.

ஆனால் இன்றைக்கு இவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். அப்படிக் காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பற்றியதே இந்த இடுகை.

இலங்கையைச் சேர்ந்தவர் நண்பர் பிரசன்னா. "வேத்தியன்" என்கிற பெயரில் எழுதி வந்தார். பின்னூட்ட சுனாமி. பொது அறிவு, அழகான படங்கள், நகைச்சுவை என்று கலந்து கட்டி அடிப்பவர். காதல் பற்றிய அவருடைய இந்த இடுகையை படித்துப் பாருங்கள். மின்னஞ்சலில் வந்ததை அழகாக நமக்கு ஏற்றமாதிரி தந்திருப்பார். தற்போது கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருவதால் கணினிப்பக்கம் வருவதில்லை.

இது காதலர் தின வாரம். காதலை விரும்பாத மனிதர் யாரேனும் இருக்க முடியாது. உள்ளம் நெகிழ்ந்து, காதலாகி கசிந்துருகும் கவிதைகளைப் படிக்க வேண்டுமா? நண்பவர் புதியவனின் தளத்துக்குப் போங்கள். சிங்கையைச் சேர்ந்தவர். ஏழு மாதங்களுக்கு முன்பாக விடுமுறைக்கு தாயகம் வருவதாக சொன்னவர், அதன் பின்னர் ஆளையே காணவில்லை. அவருடைய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று.

ஆ.முத்துராமலிங்கம். சென்னையில் இருக்கிறார். நண்பர் குடந்தை அன்புமணிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். "பென்சில்" என்பது இவருடைய வலைப்பூ. அருமையான கவிஞர். எளிமையான கவிதைகளால் உள்ளம் கவர்பவர். இவரையும் கடந்த ஏழு மாதங்களாக வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை. அவர் எழுதிய கவிதைகளில் எனக்குப் பிடித்தது இங்கே..

சமூகத்தின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் நண்பர் ராம்.CM. "மீசைக்காரி" என்ற பெயர் கொண்ட தளத்தில் எழுதுபவர். மத்திய அரசில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார்.வேலைப்பளு காரணமாக சமீப காலமாக எழுதுவதில்லை. தர்மம் போடுவதைப் பற்றிய அவருடைய வித்தியாசமான சிந்தனையை வாசித்துப் பாருங்கள்.

புதிதாக எழுத வருபவர்களை அரவணைத்து பின்னூட்டம் போடுவதை தன்னுடைய கடமையாக செய்து வந்தவர் இவர். பதிவுலகில் என்னை முதன்முதல் அடையாளம் கண்டுகொண்டு உற்சாகப்படுத்தியவர். அவர் நண்பர் பிரேம்குமார் சண்முகமணி. "மொழியோடு ஒரு பயணம்" என்ற பெயரில் எழுதி வந்தார். நல்ல கவிஞர். இவருடைய கவிதை ஒன்று கல்கியில் கூட வந்திருக்கிறது. தற்போது கலிபோர்னியாவில் இருப்பதாகக் கேள்வி. எனக்குப் பிடித்த அவருடைய கவிதை..

திருப்பூரைச் சேர்ந்தவர் நண்பர் ஆதவா. அட்டகாசமான கவிதைகளை எழுதக் கூடியவர். "குழந்தை ஓவியம்" என்பது இவருடைய தளம். இதுதான் என்றில்லாமல் எதைப் பற்றியும் வித்தியாசமான கோணங்களில் கவிதை எழுதும் ஆற்றல் நண்பருக்கு உண்டு. வெகு இறுக்கமான கட்டுரைகளையும் எழுதுவார். "பெண்களில் குளியலறை" என்கிற அவரின் கவிதை உங்கள் பார்வைக்கு..

பதிவர் என்பதை விட என்னுடைய மிகச் சிறந்த நண்பன் என்று பொன்.பாரதிராஜா பற்றி சொல்லுவேன். அவனை இதுவரை பார்த்தது கிடையாது. போனில் பேசியதும் ரொம்பக் கம்மி. இருந்தும் வாடா,போடா என்னுமளவுக்கு எனக்கு மிகவும் நெருக்கமானவன். "பெய்யெனப் பெய்யும் தமிழ்" என்று தளத்தின் பெயரே அழகு. அனுபவங்களை அருமையாக தொகுத்து எழுதக் கூடியவன். செம ராவடியான இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள்.

மலேஷியாவில் இருக்கிறார் நண்பர் குமாரை நிலாவன். இவருடைய தளம் - "மனம் பேசிய மவுனங்கள்". பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல இதயம் கொண்ட மனிதர். சமூகம் மற்றும் காதல் என்கிற இரண்டு விஷயங்களைப் பற்றியும் ஆவலோடு எழுதுபவர். அவருடைய கவிதை ஒன்று உங்கள் வாசிப்பிற்கு..

( இதை யாரேனும் படிக்க நேரிட்டால் இவர்கள் மீண்டும் எழுத வரமாட்டார்களா என்ற என்னுடைய நப்பாசையும் இங்கே ஒளிந்திருக்கிறது... )

புத்தகம்

மதினிமார்கள் கதை

இலக்கிய உலகில் ஒரே ஒரு பெயரைக் கேட்டால் மட்டும் நான் காத தூரம் ஓடிவிடுவேன். அந்தப் பெயருக்கு உரியவர் - கோணங்கி. "பாழி" என்ற அவருடைய நாவலுக்கான முன்னுரையைப் படித்ததிலேயே எனக்கு தலை சுற்றிப் போனது. கனமான வார்த்தைகளுடன் கூடிய சொல்லாடல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது பாதையை வகுத்தவர் கோணங்கி. என்னைப் போன்ற வாசிப்பு அனுபவம் கம்மியாக உடைய நண்பர்கள் இவருடைய எழுத்தை புரிந்து கொள்வது கஷ்டம் என்பது என்னுடைய எண்ணம்.

கோணங்கி தன்னுடைய ஆரம்ப காலத்தில் எழுதியதுதான் "மதினிமார் கதை". அவருடைய எழுத்துக்களில் எனக்கு ஓரளவு படித்து புரிந்து கொள்ள முடிந்தது என்றால் அது இந்தப் புத்தகம்தான். இது எழுதப்பட்ட காலகட்டம்தான் "உலகமயமாக்கல்" என்ற பெயரில் கிராமங்கள் எல்லாம் நகரத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்த நேரம். காலத்தின் கோலத்தால் மாறிப்போகும் மனித மனங்களைப் பற்றி, தொலைந்து போகும் உறவுகள் பற்றி, அழியும் சந்தோஷ நினைவுகள் பற்றி.. ஆழமாக பேசுகின்றன இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள். நிச்சயம் வாசிப்பவர்களின் உள்ளத்தைத் தொடும்படியான மனதை கனமாக்கும் கதைத்தொகுப்பு.

வெளியீடு : அன்னம் பதிப்பகம்
விலை : ரூ. 50 (1987 பதிப்பு)

உலக சினிமா

My Sassy Girl

ஒரு சில பெண்கள் நம் வாழ்க்கையில் கடந்து போய் இருப்பார்கள்... அல்லது வாழ்நாள் முழுவதும் நம்முடனே வாழ்க்கை நடத்துவார்கள்.. அவர்கள் என்னதான் தப்பு செய்தாலும் அவர்கள் மேல் கோபம் வரவே வராது.. பொதுவாக ஒரு சிலரிடம் அவர்களை பார்த்தாலே வயிற்று எரிச்சலாக இருக்கும்.. இத்தனைக்கும் அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது... அவர்கள் அறிமுகம் கூட நமக்கு இருக்காது.. இருப்பினும் பயங்கர கோபம் வரும்... இத்தனைக்கும் அவர்கள் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள்..

ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம்ப ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.. அது பிள்ளையாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம்... இவ்வளவு ஏன் நீங்கள் வளக்கற உங்க நாயா கூட இருக்கலாம்... அப்படி ஒரு குடிகார பெண்ணை ஒருவனுக்கு ரொம்பவும் பிடித்து போக அவன் படும்பாடுதான்.. மை சாசி கேள் எனும் கொரிய மொழி படம்...

படம் பற்றிய அண்ணன் ஜாக்கிசேகரின் விரிவான பதிவு இங்கே..

Monday, February 8, 2010

அன்பென்னும் மந்திரச்சொல்..!!!

அன்பென்னும் ஒற்றை வார்த்தைக்குள் இந்த உலகின் அத்தனை உணர்வுகளும் அடக்கம். புராணங்களும், மதங்களும், கடவுள்களும் சொல்ல வரும் ஒரே விஷயம்.. மற்ற உயிர்களிடத்தில் அன்பாயிருங்கள் என்பதுதான். நம் பாரத தேசத்தில், அன்பை தாயின் வடிவமாக, கடவுளின் வடிவமாக என எல்லா விதங்களிலும் கொண்டாடுகிறோம். அதனால்தான் நம்மை எதிரியாய் நினைக்கும் அண்டை தேசத்தை சேர்ந்த குழந்தைக்கும் நம் நாட்டில் இலவசமாக சிகிச்சை செய்யும் மனம் நமக்கு இருக்கிறது.

உலகில் இருக்கும் அத்தனை உயிர்களின் ஆதாரமாய் இருப்பது அன்பு ஒன்றுதானே? எனவே என்னைப் பொறுத்தவரை பிறிதொரு உயிரிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் அனைவருமே கடவுள்தான்.

சரி, இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாமா?

முரளிகுமார் பத்மநாபன். அன்பே சிவம் என்னும் வலைப்பூவில் எழுதி வருகிறார். பிரியமான மனிதர்.அருமையான கவிதைகளை கிறுக்கல்கள் என்ற பெயரில் எழுதுகிறார். என்னைப்போலவே எஸ்ராவின் ரசிகர். ரசனையில் இவருக்கும் எனக்கும் எக்கச்சக்கமான ஒற்றுமைகள் இருப்பது ஆச்சரியமான விஷயம். அப்பாவைப் பற்றிய இவருடைய இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்த ஒன்று.

செ.சரவணக்குமார் பக்கங்கள் என்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார் நண்பர் செ.சரவணக்குமார். எனக்கிட்ட பின்னூட்டங்கள் வாயிலாகத்தான் இவரைத் தெரியும். எதேச்சையாக ஒரு நாள் இவருடைய வலைத்தளம் கண்ணில் பட்டது. மேலோட்டமாகப் படிக்க ஆரம்பித்தவன் நண்பரின் அம்மா பற்றிய இந்த இடுகையைப் படித்தவுடன் திகைத்து விட்டேன். அன்பின் ஆழத்தை சொல்லும் வலி மிகுந்த வார்த்தைகள். அருமையான நடையில் எழுதி இருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார் நண்பர் கும்மாச்சி. தன்னுடைய அனுபவங்களை எள்ளல் கலந்த நடையில் சொல்வதுதான் இவருடைய பலம். சமீப காலமாக எக்கச்சக்கமான அரசியல் இடுகைகளை எழுதி வருகிறார். ஒவ்வொரு கேரக்டர்கள் பற்றி இவர் எழுதும் இடுகைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. குருசாமி தாத்தா பற்றிய இந்த இடுகையை படித்துப் பாருங்கள்.

"தினசரி வாழ்க்கை" என்கின்ற பயரில் பதிவுலகில் எழுதி வருகிறார் நண்பர் மேவி.மேலாண்மை பயின்ற இளைஞர். தமிழ் தாய்மொழியாக இல்லாதபோதும் தன்முனைப்போடு கற்றுக்கொண்டு தமிழில் எழுதி வருகிறார். வித்தியாசமான எண்ணங்கள் கொண்டவர். நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவரும் கூட. இவர் எழுதிய கண்ணாடி என்கின்ற இந்த இடுகையை வாசித்துப் பாருங்கள்.

அமீரகத்தில் இருக்கிறார் நண்பர் வினோத் கவுதம். "ஜூலை காற்றில்" என்பது இவருடைய தளம். அழகான நடையில் எளிமையாக தான் சொல்ல வந்த விஷயங்களைத் தெளிவாக சொல்லக் கூடியவர். சமீபத்தில் இவர் எழுதிய "கடந்து வந்த மனிதர்கள்" என்கிற இந்து இடுகை எனக்கு ரொம்பவே பிடித்தது.

தமிழின் தற்காலக் கவிஞர்களில் மிக முக்கியமானவர் இசை. இவருடைய கவிதைத் தொகுப்பான "உறுமீன்களற்ற நதி" ஆனந்த விகடனால் சென்ற வருடத்தின் சிறந்த தொகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "டங்கு டிங்கு டு" என்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடைய கவிதைகளில் ஒன்று இங்கே..

புத்தகம்

துணையெழுத்து - என் வாழ்வில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என்று சொல்லுவேன். ஆனந்த விகடனில் முதல்முறையாக துணைஎழுத்தின் ஒரு கட்டுரையைப் படித்த நாளை என்னால் இன்றும் மறக்க முடியாது. கல்லூரி நாட்களில் எனக்குள் ஒரு கேள்வி அடிக்கடி எழும். எதற்காக பிறக்கிறோம், வாழ்கிறோம், பின்பு இறக்கிறோம் என்று. அத்தனை கேள்விக்கான பதிலையும் "அன்பின் வலி" என்ற ஒரு கட்டுரையில் வெகு சாதாரணமாக சொல்லிச் சென்றிருப்பார் எஸ்ரா. ஒருவருக்கொருவர் மீது செலுத்தும் அன்பே வாழ்வை முழுமையாக்கும் என்பதே இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளின் சாராம்சம். கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

வெளியீடு - விகடன் பிரசுரம்
விலை - ரூ.110/-

உலக சினிமா

The Road Home

உலகில் ஆதி மனிதன் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் உணர்வு - காதல்தான். நாம் பல வகையான காதல் கதைகளைக் கேட்டிருப்போம். நண்பர்களின் காதலுக்கு உதவியும் இருப்போம். ஆனால் நமக்கு வெகு அருகே இருந்தும் அதிகம் அறிந்திராத ஒரு காதல் உள்ளதென்றால் நீங்கள் நம்புவீர்களா? அது நம் பெற்றோரின் காதல் கதை.. தன்னுடைய அப்பா அம்மாவின் கண்ணியமான காதலை நினைத்துப் பார்க்கும் ஒரு மகனின் கதைதான் - The Road Home. 1999 ஆம் வருடம் இந்த சீன மொழித் திரைப்படம் வெளியானது. பௌ ஷி என்னும் எழுத்தாளரின் "Remembrance" என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இது பற்றிய என்னுடைய இடுகை..

படத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு..

http://en.wikipedia.org/wiki/The_Road_Home_%281999_film%29

Sunday, February 7, 2010

பெருங்கடலில் சிறுதுளி நான்..!!!

பிரியத்துக்குரிய வலையுலக நண்பர்களே..

அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கம். முதலில் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

நான் மா.கார்த்திகைப் பாண்டியன். என்னுடைய பெயர்க்காரணத்தை என்னுடைய ஐம்பதாவது இடுகையாக எழுதி இருக்கிறேன். மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன். கணினியில் தமிழில் ஒரு உலகம் தனியாக இயங்கி வருவதே எனக்கு ஜூன் 2008இல்தான் தெரியும். நிறைய பதிவுகளை வாசிக்கத் தொடங்கினேன். பின்னூட்டங்கள் இடுவதற்கு நமக்கென ஒரு தளம் வேண்டுமே என்றுதான் நவம்பர் 2008 முதல் எனக்குப் பிடித்தமான புத்தகமான "பொன்னியின் செல்வன்" என்ற பெயரில் வலைப்பூவை தொடங்கினேன்.

ஆசை மற்றும் ஆர்வம் காரணமாகவும், நண்பர்கள் தந்த உற்சாகத்தாலும் பின்பு பதிவுகளில் நானும் எழுதத் தொடங்கினேன். நான் பதிவெழுத வந்த வரலாற்றை என்னுடைய ஓராண்டு நிறைவு இடுகையாக எழுதி இருக்கிறேன்.

பதிவுகள் எழுதுவதால் என்ன பலன் என்று நிறைய பேர் என்னைக் கேட்டதன் விளைவுதான் இந்த இடுகை. உண்மையில் பதிவின் வாயிலாக எனக்கு அருமையான நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். நட்பு என்பதையும் மீறி நெருக்கமான உறவுகளை பதிவுலகம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.

இந்த ஒன்றரை வருடங்களில் எனக்கு பதிவுலகம் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கொடுத்து இருக்கிறது. என்னுடைய ஆதர்ஷ எழுத்தாளரான எஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு பதிவுகளின் வாயிலாகவே கிட்டியது. கல்கியில் என்னைப் பற்றிய ஒரு அறிமுகமும் வந்தது. சென்ற வருட இறுதியில் தோழர் மாதவராஜ் தொகுத்த பூக்களிலிருந்து சில புத்தகங்கள் தொகுப்பில் என்னுடைய பயணக்கட்டுரையும், கவிதையும் இடம் பெற்றது மற்றொரு நெகிழ்ச்சி.

என்னுடைய தங்கையின் திருமணத்திற்கு பதிவர் நண்பர்கள் பனிரெண்டு பேர் கிட்ட வந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். இன்னும் நிறைய பேர் அலைபேசியில் வாழ்த்தினார்கள். இத்தனை அன்பை சம்பாதிக்க முடிந்ததே பதிவுகளால்தானே? அது போதாதா..

இதைப்பற்றித்தான் எழுதுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் பற்றி எழுதுவேன். இலக்கியத்தில் ஆர்வமுண்டு. அனுபவம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவது ரொம்பப் பிடிக்கும். அரசியல் பற்றி மட்டும் எழுதுவதில்லை. என்னுடைய மிக முக்கியமான பொழுதுபோக்கு திரைப்படங்கள்தான் என்பதால் விமர்சனப் பதிவுகள் நிறையவே எழுதுவேன்.

நான் எழுதியவை எல்லாமே எனக்குப் பிடித்த இடுகைகள்தான் என்றாலும், ஒரு சில இடுகைகளை எழுதும்போது நமக்கே ரொம்பப் பிடித்துப் போய்விடும். அது போன்று எனக்குப் பிடித்த சில இடுகைகள்..

ரயில் பயணங்களில்..

காமத்தின் நீண்ட நிழல்..

போதி மரம்..

வினோத மனிதர்கள்..

சமீபத்தில் மதுரைப் பதிவுலக நண்பர்களோடு இணைந்து இரண்டு நல்ல நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. அது பற்றிய இடுகைகள்..

கனவு நிஜமானது - டாக்டர் ஷாலினிக்கு நன்றி..


இனிதே நடந்த பதிவர் பயிலரங்கம்..

சீனா ஐயா வெகு நாட்களாகவே என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக எழுதும்படி சொல்லிக் கொண்டிருந்தார். நான் எனக்கென சொந்தமாக ஒரு கணினியை வாங்கிய பின்பாகத்தான் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்து இருக்கிறது. ரொம்ப சந்தோசம். என்னால் முடிந்த அளவுக்கு நான் ரசிக்கும் பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட முயல்கிறேன். அத்தோடு நான் விரும்பி படித்த புத்தகம் மற்றும் உலக சினிமாக்கள் பற்றிய விவரங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.

உங்கள் ஆதரவுடன் இந்த வலைச்சர வாரம் களைகட்டும் என நம்புகிறேன். நன்றி.

நன்றி லோகு - வருக வருக கார்த்திகைப் பாண்டியன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு அருமை நண்வர் லோகு ஆசிரியப் பொறுப்பேற்று - ஏற்ற பணியினை அருமையாக நிறைவேற்றி - மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவர் சென்ற வாரத்தில் ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ நாற்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில், ஆங்கிலம் பேச உதவும் வலைப்பூக்கள், அழகுக்குறிப்பு-மருத்துவக்குறிப்பு போன்ற உடல் நலம் பேணும் வலைப்பூக்கள், பங்கு சந்தை பற்றிய வலைப்பூக்கள், புகைப்படக் கலை பற்றிய வலைப்பூக்கள் மற்றும் கிரிக்கெட் பற்றிய வலைப்பூக்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி அரும்பணி ஆற்றி இருக்கிறார்.

அவரை வாழ்த்தி வழியனுப்புகிறோம்.

அடுத்து நாளை 08.02.2010ல் துவங்கும் வாரத்திற்கு மதுரையைச் சார்ந்த பிரபல பதிவர் - எல்லோருக்கும் அறிமுகமான - அன்பான - பாசக்காரப் பதிவர் கார்த்திகைப் பாண்டியன் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். பல அலுவல்களுக்கும் இடையில் இப்பொறுப்பையும் ஏற்கிறார்.

இவர் மதுரையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். பொன்னியின் செல்வன் என்ற பதிவில் கலக்கலாக எழுதி வருகிறார். மதுரைப் பதிவர்கள் குழுமத்திற்கு அமைப்பாளராக இருக்கிறார்.

இவரை வருக வருக - இடுகைகளை அள்ளி இடுக இடுக என வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.

நல்வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்

நட்புடன் சீனா

ஆங்கிலம் பேச உதவும் தளங்கள்

அனைவருக்கும் வணக்கம்,

ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். (Source: Wikipedia.org)


 மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில், மொழி ஒரு முக்கிய பங்கு வகித்தது. அதே போல் உலகம் சுருங்கி விட்ட இந்த காலத்தில், தாய் மொழியோடு சேர்த்து அந்நிய மொழிகளையும் கற்க வேண்டியது அவசியமாகிறது. திரை கடலோடி திரவியம் சேர்க்க முற்படும் அனைவருக்கும், வாழும் நாட்டின் மொழி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அடுத்த நாட்டில் வாழும் போது, தினசரி வாழ்க்கையிலும், பேருந்து, இரயில் பயணங்களின் போதும் இலகுவாக இருக்க அந்நாட்டின் மொழியை கற்பது அவசியமாகிறது. அதுமட்டுமின்றி பிற மொழிகளை கற்பது வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. 

வர்த்தகமயமாக்கப்பட்ட இவ்வுலகில், ஆங்கில அறிவு அத்தியாவசியமாக உள்ளது. நம் பாட திட்டங்கள் கூட ஆங்கில அறிவை சிறப்பாக கற்றுத்தராத இச்சூழலில் ஆங்கிலம் கற்பது சிறிது சவாலாகவே உள்ளது. அக்குறையை போக்கி ஆங்கிலத்தை எளிதாய் கற்றுத்தரும் தளங்களை இன்று பார்ப்போம். 

ஆங்கிலம் :
ஏறத்தாழ மூன்று வருடங்களாக, ஆங்கில மொழியை கற்றுத்தரும் அருமையான தளம். ஆங்கில இலக்கணத்தை, எளிதில் புரியும் வண்ணம் கற்றுத்தருகிறது.  ஆங்கிலம் இலகுவாக கற்க இத்தளம் பெரிது உதவும். இத்தளத்தின் சில இடுகைகள் காண்போம்:

ஆங்கிலம் துணுக்குகள் 16 (The vs Thee)

கணினிச் சொற்கள்   

ஆங்கிலப் பெயர்ச்சொற்குறிகள்   

ஆங்கில பாடல்கள், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கில சொற்கள், துணுக்குகள் என அட்டகாசமான தளம். 

******************************* 

ஆங்கில கல்வி குறித்த பிற இடுகைகள். 
ஆங்கில இலக்கணம் : இத்தளத்தில் குறைந்த அளவே இடுகைகள் இருந்தாலும், ஆங்கில இலக்கண நுணுக்கங்களை அழகாய் சொல்கின்றன.
பீட்டர்ஸ்: இத்தளமும் குறைவான எண்ணிக்கைகளில் இடுகைகள் இருந்தாலும், நிறைவாக ஆங்கிலம் கற்றுத்தரும் தளம்.

இவை மட்டுமின்றி  ஆங்கில பேச பழகுவது எப்படி? , ஆங்கிலம் எளிதில் கற்கஆங்கிலம் கற்க உதவும் கோப்புகள் என எளிதாய் ஆங்கிலம் கற்றுத்தர உதவும் இடுகைகள் வலையகத்தில் ஏராளமாய் உள்ளன. படித்து பயன் பெறுங்கள். 

"அவசியம் இருந்தால் மட்டுமே அந்நிய மொழியில் பேசுங்கள்.  தாய் மொழியில் பேசுவதில் பெருமை கொள்ளுங்கள்" 

*******************************
இந்த வாரத்தின் எனது அறிமுகங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். எனக்கு இரண்டாவது முறையாக வலைச்சரத்தில் வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு நன்றிகள் பல. வாசித்த, பின்னூட்டம் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

Saturday, February 6, 2010

என்ன விலை அழகே!

அழகு என்பது, ஒருவருக்கோ, இடத்துக்கோ, பொருளுக்கோ அல்லது ஒரு எண்ணத்துக்கோ இருக்கக்கூடிய ஒரு இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றைக் காண்போருக்கு மகிழ்ச்சி, திருப்தி என்பவற்றைக் கொடுக்கக்கூடிய காட்சி அநுபவத்தை வழங்கக்கூடியது. அழகியல், சமூகவியல், சமூக உளவியல், பண்பாடு ஆகிய துறைகளின் ஒரு பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு பண்பாட்டு உற்பத்தி என்றவகையில் அழகு பெருமளவு வணிகமயமாகி விட்டது. மனிதர்கள் தொடர்பில் சிறந்த அழகு என்பது மற்றவர்களால் விரும்பப்படும் அல்லது ஒரு பண்பாட்டில் அழகு என்று ஏற்றுக்கொள்ளப்படும் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உள்ள இயல்பு எனலாம்.

தற்சார்புத் தன்மை கொண்ட அழகு என்னும் உணர்வு, அவ்வுணர்வைத் தூண்டும் பொருள் இயற்கையுடன் இயைபும், சமநிலையும் கொண்டதாக இருக்கும் நிலையுடன் தொடர்புபட்டது. இந்நிலை, கவர்ச்சியையும், உணர்வு சார்ந்த நலத்தையும் கொடுக்கக்கூடியது. (Source: Wikipedia.org) 

அழகாய் இருப்பது, உடல் உறுப்புக்களை சீராய் பராமரிப்பது என்பது எல்லோருக்கும் அவசியமான, அதே சமயம் கொஞ்சம் சவாலான செயலும் ஆகும். அழகு குறிப்புகள் வெறும் அழகை மட்டும் பேணாது உடல் ஆரோக்கியம், புறத்தூய்மை போன்றவற்றையும் பேணுகின்றன. 

நம் அனைவருக்குமான, எளிய அழகு / ஆரோக்ய குறிப்புகள் வழங்கும் வலை தளங்களை நாம் இன்று காணப்போகிறோம். 

 அழகுக்குறிப்பு, மருத்துவக்குறிப்பு, செய்திகள், விளையாட்டு என பல்துறை களஞ்சியமாக விளங்கும் இத்தளத்தில் ஏராளமான மேனி பராமரிப்பு குறிப்புகள் குவிந்து இருக்கின்றன. அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய மிக சிறந்த தளம்.  இத்தளத்தின் சில முக்கிய இடுகைகள்: 
மேற்கண்ட இடுகை தலைப்புகளே இத்தளம் எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை காட்டியிருக்கும். படித்து பயன்பெறுங்கள்.
***************************** 

உங்களுக்காக 

மகளிர்க்கான அழகு மற்றும் மேனி பராமரிப்பு தகவல்கள் அடங்கிய தளம். வெறுமனே அழகு குறிப்பு மட்டுமல்லாமல் உடை அலங்காரம், முறையான உணவு பழக்க வழக்கங்கள் போன்ற தளங்களையும் அலசுகிறது.   
சுடிதார் அணிந்தால் சொர்க்கமே…!

தொடை சதையை குறைக்க எளிய 7 வழிகள்

பேஷன் டிப்ஸ்

எ‌ந்த நகையை‌ப் போடுவது

 என பல்வேறு தளங்களில் உபயோகமான தகவல்களை கொண்ட தளம். 

***************************** 

என் இனிய இல்லம்

பளபளக்கும் முகம் வேண்டுமா?,>

கழுத்துக்கு அழகு சேர்க்க:

சருமம் கறுப்பதைத் தடுக்க: 

என்பது போன்ற உபயோகமான அழகு குறிப்புகளும்,

வாழைப்பழத்தின் நன்மைகள்

குங்குமப் பூ

மலர்களின் மகத்துவம்..... 

போன்ற ஆரோக்கிய குறிப்புகளும், இன்னும் சமையல் குறிப்புகள், வீட்டுக்குறிப்புகள் என நிறைய தகவல்கள் அடங்கிய தளம் இது. குடும்பத்தலைவிகளும், குடும்பதலைவியாக போகிறவர்களும் படிக்க வேண்டிய தளம் இது. 

***************************** >

இன்றைய அறிமுகங்களும், வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் அடுத்த இடுகையில் சிந்திப்போம். நன்றி.