மகளீர் மட்டும் - வலைச்சரம் ஆறாம் நாள்
➦➠ by:
க.நா.சாந்தி லெட்சுமணன்
வெற்றுச்சுவர்களும், கற்கள் அடுக்கிய அமைப்புகளும் அன்பு நிறை வீடாவது மகளீரால் தான். எங்கள் ஐயா காலத்தில் இருந்தே ஒருவர் திருவிழா, கல்யாணம் மற்றும் வைபவங்களுக்கு சமையல் செய்ய வருவார். அவரது கைப்பக்குவம் நளபாகம் தான். ஆனால் ஒரு வாய் அவர் சாப்பிட மாட்டார். "ஒரு பவண்டோ வாங்கியா! வேறொண்ணும் வேணாம்" என்று சொல்லுவார். ஏனென்று கேட்கும் போது, "வீட்டுல போயி எங்க வீட்டம்மா சோறு வடிச்சு புளிக்குழம்பு வச்சு வச்சிருக்கும்.கஞ்சி இருக்கும்.அதக்குடிச்சாத்தான் எனக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்" என்று அவர் சொன்னார். எத்தனை பெரிய உணவு விடுதியில் உண்டாலும் எப்போதோ விருந்தோ மருந்தோ என்று இருந்தால் தான் சுவை. வீட்டுச்சாப்பாடு அதன் சுவையும், அருமையும் கொண்டாடுபவர்களுக்குத் தான் புரியும். பெண்கள் எத்தனை தான் பெரிய படிப்பு, பதவிகளில் இருந்தாலும் தன் குடும்பத்தினருக்கு தானே சமைத்துப்போடுவது தான் அன்பைப்பெருக்கும்.
சமையலைப் போல வீட்டுப்பராமரிப்பு மற்றும் கைவேலை. எவ்வளவு தான் விலை கொடுத்துப் பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்தினாலும் நாமே நமது கையால் செய்த கைவினைப்பொருட்களால், வீட்டை அழகு படுத்தும் போது அதற்கு கிடைக்கும் பாராட்டுகளும், பெருமையும் தனிதான்.எனக்கு கை வேலை, விதவிதமான சமையலில் ஆர்வம் உண்டு. அதனால் அப்படிப்பட்ட வலைகளை அதிகம் தேடிப் படிப்பதுண்டு. அவற்றில் சில முக்கியமான வலைகளைப் பார்ப்போமா!
1. தமிழ்க்குடும்பம் - இந்த வலையில் போய்ப்பாருங்கள் சகோதரிகளே! மகளிருக்குத்தேவையான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு. சமையல், தையல், குழந்தைப்பராமரிப்பு, கைவினைப்பொருட்கள், ஓவியம், சமையல், எம்பிராய்டரி இன்னும், இன்னும். சகோதரர்களே! உங்கள் மனைவியருக்கு இந்த வலையை அறிமுகப்படுத்துங்கள். வீட்டில் தினம் தினம் திருவிழா தான்.
2. அனைத்து மாநில உணவு வகைகளுக்கான ஒரு வலை இது - http://bojanasalai.blogspot.com/
3. எளிமையான சைவ உணவு வகைகளுக்கான வலை - http://vegetarian-planet.blogspot.com/
4. சகோதரி சினேகிதி அவர்களின் வலை இது. இவர் தமிழ்க்குடும்பத்திலும் எழுதுகிறார். இது இவரின் தனிப்பட்ட வலை. சமையல் + கைவேலைக்கான வலை. http://en-iniyaillam.blogspot.com/
5. அம்முவின் சமையலறையை எட்டிப் பார்க்காமல் நன்றாக ஒரு வலம் வரலாம். அத்தனை செய்முறைகள் - http://ammus-recipes.blogspot.com/
6. கண்ணாடி ஓவியங்கள் வரையச்சொல்லிக்கொடுக்கும் ஒரு வலை இது. ஆங்கிலத்தில் இருந்தாலும் கூட எளிமையாகப் புரியும் படி உள்ள வலை இது.- http://glass-paintings.blogspot.com/
நான் பயன் பெறும் வலைகளை இன்று சகோதரிகள் பலருடன் பகிர்ந்து கொண்டேன். இந்த வலைகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். என்ன நண்பர்களே! பெண்கள்னாவே இது தான். அவுங்க வேலையக்காட்டிட்டாங்க! என்கிறீர்களா? செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும், கண்ணுக்கும். நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
|
|
"ஒரு பவண்டோ வாங்கியா! வேறொண்ணும் வேணாம்" என்று சொல்லுவார். ஏனென்று கேட்கும் போது, "வீட்டுல போயி எங்க வீட்டம்மா சோறு வடிச்சு புளிக்குழம்பு வச்சு வச்சிருக்கும்.கஞ்சி இருக்கும்.அதக்குடிச்சாத்தான் எனக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்" என்று அவர் சொன்னார். எத்தனை பெரிய உணவு விடுதியில் உண்டாலும் எப்போதோ விருந்தோ மருந்தோ என்று இருந்தால் தான் சுவை.
ReplyDelete...... அறிமுகப் படுத்தும் விதத்தில், நீங்களே அருமையாக இடுகை பொருளையும் தந்து அசத்தி விட்டீர்கள்.
அறிமுகப் படுத்தும் விதத்தில், நீங்களே அருமையாக இடுகை பொருளையும் தந்து அசத்தி விட்டீர்கள்.
ReplyDeleteஅன்பின் சாந்தி
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் - நன்று நன்று
நல்வாழ்த்துகள் சாந்தி
நல்ல அறிமுகங்கள். அசத்திட்டீங்க சாந்தி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் சாந்தி,
ReplyDeleteஇந்த இடுகையின் தலைப்பிலும், உள்ளடக்கத்திலும் வேறுபடுகிறேன்.
அது என்னங்க.. சமையல் என்பது பெண்களுக்கு மட்டுமேயானதா..? இதைத்தானே காலங்காலமாக ஆணாத்திக்கவாதிகள் சொல்லி வருகிறார்கள்.
பெண்ணாகப் பிறந்த நீங்களும் இப்படி எழுதுவது வருத்ததை உண்டுபண்ணுகிறது. :(
(அதனால ஒரு -குத்து குத்திட்டேன்)
அருமை!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅருமை! நல்வாழ்த்துகள் சாந்தி
ReplyDeleteநீங்கள் அறிமுகபடுத்தும் விதம், நன்றாக இருக்கிறது!!
ReplyDeletearusuvai.com payanulla samayal thalam
ReplyDeletehttp://arusuvai.com/tamil/
ReplyDelete