சேட்டைக்காரனுக்கும் தேனம்மைக்கும் பை பை பை - ரோஸ்விக்கிற்கு வெல்கம்
அன்பின் சக பதிவர்களே
கடந்த 10ம் நாள் முதல் 16ம் நாள் வரை ஆசிரியப் பொறுப்பேற்று அட்டகாசமாக ஆட்சி செய்த அருமை நண்பர் சேட்டைக்காரனின் ஒரு வார காலப் பொறுப்பிற்கு நன்றி கூற இன்று தான் வாய்ப்புக் கிடைத்தது. இவர் மிகப் புதுமையான வகையில் இடுகைகளைத் தொகுத்து - நகைச்சுவையின் உச்சத்தினை வெளிப்படுத்தி, ஏற்ற பொறுப்பினை சிரித்துக் கொண்டே நிறைவேற்றினார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 330 மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெற்றார். ஒரு வார காலத்தில் அறிமுகப் படுத்திய பதிவர்களை எண்ண இயலவில்லை. அத்தனை பதிவர்கள். அத்தனையும் முத்தான புதிய பதிவர்கள். அமர்க்களமாக அறிமுகம் செய்து பலரின் பாராட்டினைப் பெற்ற அருமை நண்பர் சேட்டைக்காரனை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழிஅனுப்புவதில் வலைச்சரம் குழுவின் சார்பில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தாமதமான ( பணிச்சுமை - இட மாற்றம் காரணம் ) விடை அளிப்பு நிகழ்ச்சியினை சேட்டைக் கர்ரன் பொருட்படுத்த மாட்டார் என நம்புகிறேன்.
அடுத்து ஆசிரியப் பொறுப்பேற்ற தேனம்மை லக்ஷ்மணன் - இரு வாரமாக - 17 முதல் 30 வரை - இன்று வரை - சேட்டைக்காரனுக்கு ஈடாக - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி -ஒரு கலக்கு கலக்கி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 12 இடுகைகள் இட்டு ஏறத்தாழ 425 மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவரை வலைச்சரம் குழுவின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
அடுத்து நாளை 31.05.2010 துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் அருமை நண்பர் ரோஸ்விக. இவர் காரைக்குடி அருகில் உள்ள சூரம்பட்டி என்னும் கிராமய்த்தில் பிறந்து வளர்ந்தவர். வலையுலகில் ரோஸ்விக் என்னும் புனைப்பெயரில் எழுதி வருகிறார். இவரது வலைப்பூவின் பெயர் திசைகாட்டி.
கல்லல், தேவகோட்டை, மதுரை மற்றும் திருச்சியில் கல்வி பயின்று, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய பிற மாநில தலைநகரங்களில் பணிபுரிந்தவர்.
ஏற்ற பொறுப்பினை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நல்வாழ்த்துகள் சேட்டைக்காரன் - தேனம்மை லக்ஷ்மணன்
நல்வாழ்த்துகள் ரோஸ்விக்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறு மொழி
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஸ்விக்.....
ReplyDeleteநன்றி சீனா சார்
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஸ்விக்
இன்று தான் ஊர் விபரம் தெரிந்தது. நல்வாழ்த்துகள் திசைகாட்டி.
ReplyDeleteவருக ரோஸ்விக்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் சேட்டை,!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் தேனக்கா,!!!
வாங்க தல வெல்கம்!!!
வாழ்த்துக்கள் ரோஸ்விக்...
ReplyDeleteவாங்க வாங்க ரோஸ்விக்.... சிங்கை சிங்கங்கள் பெயரை நிலை நாட்டிடுங்க !!
ReplyDeleteவெல்கம் ரோஸ்விக்!
ReplyDeleteவாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteஎங்கள் தானைதலைவன்,
ReplyDeleteபேசும் தெய்வம்..
இதயக்கனி ரோஸ்விக் வாழ்க..வாழ்க..
வாழ்த்துக்கள் ரோஸ்விக்
ReplyDeleteவாழ்த்துக்கள். ரோஸ்விக்...
ReplyDeleteரோஸ்விக்,
ReplyDeleteகாலை வணக்கம். வந்து கலக்குங்க.
(எழுந்திருங்க சாமி. நம்ம ஊர்ல பொழுது விடிஞ்சிருச்சி. இன்னும் கடையத் தொறக்காம இருந்தா எப்புடி கல்லா கட்றது?)
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteநன்றி தேனக்கா... கலக்கீட்டிங்க.
நன்றி ஜோதிஜி. :-)
நன்றி தமிழ் உதயம்
நன்றி ஜெய்லானி.
நன்றி அஹமது
நன்றி மகேஷ் அண்ணா! கலக்கீடுவோம். :-)
நன்றி பனங்காட்டான்
ReplyDeleteநன்றி NIZAMUDEEN
நன்றி பட்டாபட்டி.. (கண்காணாமல் இருக்கியே ராசா)
நன்றி மின்மினி
நன்றி மதுரை சரவணன்
நன்றி சத்ரியன் (இந்த வாரம் நம்ம கடை மதுரையில் இருந்து கல்லாகட்டும். :-)
நண்பர்கள் அணைவரும் இந்த வாரமும் தங்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கவும். :-)
ReplyDeleteஅன்பின் சீனா ஐயா,
ReplyDeleteதவிர்க்க முடியாத பணிப்பளு மற்றும் வெளியூர்ப் பயணம் காரணமாக உடனடியாக பதிலிட முடியாமல் போனது. எனக்கு தாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை. எனக்கு நீங்கள் அளித்த வாய்ப்பு, எனது வலையுலகப்பிரவேசத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். உங்களது நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகக் கருதி செயல்பட்டேன். இதனை அனைவரும் புரிந்து என்னை ஆதரித்து, எனது இடுகைகளை மனம்திறந்து பாராட்டி ஊக்குவித்திருக்கின்றனர்.
அனைவருக்கும் நன்றிகள் பல கோடி!
திசைகாட்டி ரோஸ்விக்- பெயருக்கு பொருத்தமாக புதிய பதிவர்களுக்கு இலக்கைக் காட்டவல்லவர். அவரது பொறுப்பில் அடுத்த வாரமும் ஆரவாரமாக அமையட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி சீனா ஐயா!
வாழ்த்துக்கள் ரோஸ்விக்!
சேட்டைக்காரன்
நன்றி சேட்டைக்கார நண்பா...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரோஸ்விக்
ReplyDelete