Tuesday, November 29, 2011

செவ்வாய் - துறைசார் தொழில்நுட்பம்...


தொழில்துறை சார்ந்த நுட்பமாக பதிவுகள் தமிழ் வலையுலகில் அதிகம் இல்லை என்பது உண்மை. அறிவியல், கணிணி போன்ற துறைகள் சார்ந்த வலைப்பூக்கள் சில இருந்தாலும் அவை தொடர்ந்து செயல்படுவதில்லை. அதற்கு அவர்களின் வேலைப்பளு ஒரு காரணியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் துறை சார்ந்த பதிவுகளை தொடர்ந்த இட வேண்டும்.

பள்ளி ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர், தமிழ் வலைப்பூக்கள் சிலவற்றிலிருக்கும் தொழிற்நுட்ப தகவல்களையெல்லாம் சேகரித்து வைத்திருந்தார். அவற்றை முதன்முதலாகப் பார்த்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். அவர் அவை எளிமையாக இருப்பதால் தம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் என்று காரணம் கூறினார். உண்மையில் நாம் பொழுதுபோக்கிற்காகவோ, நேரக்கடத்தியாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ எழுதும் நம் பதிவுகளுக்கு இதைவிட பிறவிப்பலன் கிடையாது. இத்தகைய வலைப்பூக்கள் தொழில்நுட்பம் சார்ந்த பல புத்தகங்கள் எதிர்காலத்தில் வெளிவருவதற்கு நிச்சயம் உதவி செய்வதாக அமையும். 

*****************

ராஜாசங்கர் - பொறியாளரான இவர் தனது வலைப்பூவில் இயற்பியல் மற்றும் உயிரியல் சம்பந்தமான கொள்கைகளை ஆராய்ந்து கருத்துக்களை எழுதி வருகிறார். மேலும் இவரது குவாண்டம் கொள்கை பற்றிய தொகுப்பு, இதுவரை தமிழில் வெளிவந்த எந்த நூல்களிலும் இல்லாத அளவு மிக எளிமையாக புரியும்படி இருக்கிறது. அவற்றிற்கான தொடுப்பு...

குவாண்டம் கொள்கை 
குவாண்டம் கொள்கை தொகுப்பு 

முருகன் - அறிவியல் மக்களுக்கே என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அறிவியல் சம்பந்தமான தகவல்களை மிக அழகாக கோர்த்து வரும் இவர் அடிக்கடி பல விழிப்புணர்வு கட்டுரைகளையும் வலைப்பூவில் பதிந்து வருகிறார்.

சவ்வூடு பரவல் 
சிட்டுக்களின் அழிவும், புறாக்களின் பெருக்கமும்

சுடுதண்ணி - சுடுதண்ணி என்ற வலைப்பூவில் எழுதி வரும் நண்பர் தமிழரசன் அவர்கள், கணிணி சம்மந்தமான கட்டுரைகளைப் பதிவிட்டு வருகிறார்.  பல அரிய கணிணிச் செய்திகளையும், கணிணித் தொழிற்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் புரட்சிகளைப் பற்றியும் மிக அழகாக எழுதி வருகிறார். குறிப்பாக அவரின் எள்ளல் எழுத்துநடையும், இடையிடையே தோன்றும் நகைச்சுவையும் பதிவுகளை சோர்வில்லாமல் வாசிக்க வைக்கிறது.

டோரண்ட் ஓர் அறிமுகம்
விக்கிலீக்ஸ், தி ஹிந்து பெருமையுடன் வழங்கும் 


சசிக்குமார் - வந்தேமாதரம் எனும் தலைப்பில் வலைப்பூவில் எழுதிவரும் கணிணி தொடர்பான பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவரின் பல்வேறு பதிவுகள், அடிப்படை கணிணிப் பிரச்சனைகளிலிருந்து, கணிணியுகத்தின் புதிய வரவுகள் வரை பதிவுகளில் அலசுகிறார்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்கள் மீட்டெடுக்க 
தேவையில்லாத பைல்களை நீக்கி கணினியை வேகமாக இயங்க வைக்க 

பொன்மலர் - பொன்மலர்பக்கம் என்ற வலைப்பூவில் பதிவுகள் இட்டு வரும் தோழி பொன்மலர், இணையம் தொடர்பான பல இடுகைகளை ஏற்றம் செய்து வருகிறார்கள். அவர் இடுகைகளில் குறிப்பிடத்தக்கவை...

நவீன தொழில்நுட்பம் - பெண்களே உசார்!
பிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க 

ஷேக் பரீத், அர்ஜீன், ஆகியோர் 365-தினமொரு ஆன்டிராய்டு அப்ளிகேஷன் என்ற தலைப்பினில் வலைப்பூ ஒன்றினினை ஆரம்பித்து எழுதி வருகின்றனர். கைபேசி தொழில்நுட்பத்தின் மிகச்சமீபத்திய வரவான ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கைபேசிகளில் பயன்படுத்தக் கூடிய மென்பொருட்களை தினம் ஒன்றாக அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தபுதிய வரவுகளைப் பற்றியும் அறிந்து கொள்வது முக்கியமென உணர்த்துகிறது இவர்களின் வலைப்பூ.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பதிவுகள்,

Bar Code Scanner 
SoundHound 

சமுத்திரா - எனும் வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் அணு, அண்டம் அறிவியல் என்ற தொடரினை வெகு அழகாக தொடுத்து வருகிறார்... அதில் குறிப்பிடும்படியான ஒன்று....

அணு அண்டம் அறிவியல்

நாளை  சந்திப்போம்... :)
 - அகல்விளக்கு

Sunday, November 27, 2011

சுயம் - ஒரு அறிமுகம்

 
வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள். உண்மையில் இன்று மிகப்பிரம்மிப்பாக உணர்கிறேன். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டது. 2009 ஆகஸ்டு மாதத்தில் அகல்விளக்கு என்ற பெயரில் ஒரு வலைப்பூ-வினைத் தொடங்கினேன். எத்தனையெத்தனை நண்பர்கள், வாசகர்கள், முகமறிந்த, அறியாத நலவிரும்பிகள், தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் அன்பு உள்ளங்கள்... அனைத்திற்கும் காரணம் இந்த தமிழ் வலைப்பூ உலகம்தானே. 
 
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தமிழ் வலையுலகில் மகத்தானதொரு சேவையை தொடங்கி வைத்த திரு.சிந்தாநதி அவர்களை  இந்த நேரத்தில் நினைவுகூர்வது முக்கியம்.  பொருத்தமான நேரத்தில் இதைத் தொடங்கி வைத்த அவருக்கும், அதனை சிறப்பாக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் வலைச்சர நிர்வாகத்தினருக்கும் நிச்சயம் தமிழ் வலைப்பூ உலகம் கடமைப்பட்டிருக்கிறது...

இனி என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்.... 
 
சுயம் என்பதே என்றும் மாறாதது என்பதால்  :-) முன்பு இப்பணியை ஏற்றபோது எழுதிய அறிமுகப் பதிவு...
 
********************************************

நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.

அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக, வாழ்வை எதிர்நோக்கியபடி தற்போது நகரவாசம். மலையின் வனப்புகளை நெஞ்சில் நிறைத்து நடமாடிக்கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் வெகுசிலரில் நானும் ஒருவன்.

பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.

என் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.

பள்ளிப்பிராயம் கடந்த பின் பெயர்ந்து விட்ட சில நண்பர்களை மீண்டும் சேர்த்த பெருமை இந்த இடுகைக்கு உண்டு - என் அவள்.

வலையுலகிலும், மின்னஞ்சல்குழுமங்களிலும் எனக்கொரு நற்பெயரைப் பெற்றுத்தந்த இன்னொரு இடுகை - வசனக்கோயில். 

சமீபத்திய(?) இடுகை - யாக்கை  

என் சில கவிதைகள்...

 
*******************************************

உண்மையில், சீனா ஐயா வலைச்சரத்தில் ஆசிரியராக அழைப்பு விடுத்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. காரணம், முன்பு ஒருமுறை ஆசிரியர் பணிக்கு இசைந்தபோது எதிர்பாராத நிகழ்வுகளினால் தொடர இயலாமல் போயிற்று. இப்போது அந்த பணியை நிறைவு செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். இந்த அரிய பணியை மேற்கொள்ளுமாறு மீண்டும் பணித்த சீனா ஐயா அவர்களுக்கும், ஆதரவு தரப்போகும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.
 
நான் ரசித்த பதிவுகளை நாளை முதல் பார்க்கலாம்.
 
நன்றி...

சென்று வருக பலே பிரபு ! வருக - வருக ராஜா ஜெய்சிங்

அன்பு நண்பர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பிரபு கிருஷ்ணா , தான் ஏற்ற பொறுப்பினை அழகாக, மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ முன்னூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

இவர் கவிதை, ஆல்ரவுண்டர்ஸ், காணாமல் போனவர்கள், ட்விட்டர்-பிளாகர், புதுமுகங்கள், சமுதாய சிற்பிகள் என பல்வேறு தலைப்புகளில், பல பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்திருக்கிறார். ஏறத்தாழ அறுபதுக்கும் மேலாக பதிவர்களையும் அவர்களது 160 இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். இவரது அயராத உழைப்பு பாராட்டுக்குரியது.

அருமை நண்பர் பிரபுவினை நன்றி கலந்த நல்வாழ்த்துகள் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை 28.11.2011 துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க இசைந்துள்ள, ஈரோட்டினைச் சார்ந்த, 22 வயது இளைஞர் ராஜா ஜெய்சிங்கினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தரவியல் ஆய்வாளராக பணி புரிகிறார். பெரும்பாலும் சிறுகதைகளூம் கவிதைகளும் 2009 ஆகஸ்டு முதல் அகல்விளக்கு என்னும் பதிவினில் எழுதி வருகிறார்.

நல்வாழ்த்துகள் பிரபு கிருஷ்ணா

நல்வாழ்த்துகள் ராஜா ஜெய்சிங்

நட்புடன் சீனா

சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே

இந்தச் சமுதாயம் என்பது நம்மால் ஆனது. ஆனால் நாம் அதற்கு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும். சுயநலம் மட்டும் உள்ள சமுதாயம் என்றும் உயராது. நல்லவேளை நாம் அப்படி ஒரு சமுதாயத்தில் இல்லை. இந்த வலைச் சமுதாயத்தில் நான் பார்த்த, பழகும் ,மதிக்கும், வணங்கும் நல்ல உள்ளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 


இவர்கள் வலைப்பதிவர்கள் என்று நிறைய பேருக்கு தெரியும், இவர்கள் செய்யும் சமூகம் சார்ந்த செயல்களை அறிமுகம் செய்வதே இந்தப் பதிவு 

முதலில் என் அன்பு அக்கா மனதோடு மட்டும் கௌசல்யா. இவர் மற்றும் இவரது கணவர் அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ் இருவரும் நடத்தும் EAST TRUST மூலம் சத்தமே இல்லாமல் இவர்கள் செய்யும் சேவைகள் ஆயிரம். அக்காவின் பகிர்ந்து பழகுவோம்...! என்ற ஒரு பதிவே இதற்கு சாட்சி. இந்தப் பதிவில் இவர்கள் அமைப்பு செய்த ஒரு உதவி 

அடுத்து நான் அப்பா என்று பாசமுடன் அழைக்கும், உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள். பதிவுலகில் பலரும் அறிந்தவர்.திருநெல்வேலியில் உணவுப்பாதுகாப்பு துறையில், உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிகிறார். அதே பணியை வலைப்பூவில் செய்வதுதான் சிறப்பு. கலப்படம் பற்றி செய்திகளை சொல்வதிலும் சரி, உடல்நலம் பற்றிய செய்திகளை  சொல்வதிலும் சரி விழிப்புணர்வுதான்.


அடுத்து அன்பு அண்ணன் "வாரியர்" தேவா. பெயருக்கேற்ற கம்பீரம் செயலிலும். கல் சும்மா கிடக்கும் வரை கல்தான். சிற்பியின் கை பட்டால் தான் அது பலரும் வணங்கும் சில சிலை.   அத்தகைய சிற்பி இவர். கழுகு தளம் மூலம் சமூகம் சார்ந்த விசயங்களை பேசுகிறார்(கள்), அத்தோடு அதனை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது.

இதே கழுகில் கொக்கரக்கோ சௌம்யன், சேலம் தேவா, நிகழ்காலத்தில் சிவா, ஆனந்தி, மகேஸ், நக்கீரன், வலைச்சரம் சீனா ஐயா, ரசிகன் சௌந்தர், கல்பனா ராஜேந்திரன், மஹா, சைதை அஜீஸ், ஜீவன் பென்னி, மற்றும் என்னையும் சேர்த்து பல தன்னார்வ உறுப்பினர்கள் உள்ளனர். கழுகைப் பற்றி அறிய இங்கே படிக்கவும் 


அடுத்து நண்பன் 4 ரோடு சூர்யபிரகாஷ் இப்போது நெட் பேங்கிங் சந்தேகங்கள், மற்றும் ஆதார் என உதவிகரமான கட்டுரைகளை எழுதுபவரின் சமுதாயம் சார்ந்த எண்ணங்கள் கூடவே இருப்பவன் என்ற முறையில் நான் நன்கறிந்தவன்.


பல வலைப்பூக்களில் எழுதி இப்போது மௌனத்தின் பின் என்ற வலைப்பூவில் எழுதும் தம்பி கூர்மதியன் கட்டுரைகளை வெறும் கணினியின் முன் இருந்து மட்டும் எழுதாமல் சாமான்ய மக்கள் நம் இந்தியச் சுதந்திரம் பற்றி அறிந்தது என்ன என்று நேரடி விசிட் செய்து எழுதியது. சமூக மாற்றத்தின் மீது அக்கறை கொண்டவர்.


பூவுலகின் நண்பர்கள் பகிரும் கட்டுரைகள் அனைத்தும் அருமை. எந்த ஒரு விஷயத்தையும் வெறும் பரபரப்புக்கு எழுதாமல் எழுதுவதை நன்றாக ஆராய்ந்து எழுதுகிறார்கள். பூமியின் மீது நாம் எவ்வளவு அலட்சியமாய் இருக்கிறோம் என்பது தெரிகிறது இவர்கள் மூலம். அணு மின்சாரம் - ஊருக்கு உபதேசம்! என்ற கட்டுரை அதை ஆதரிப்பவர்கள் கன்னத்தில் அறைகிறது. மற்ற தளங்களில் உள்ள விழிப்புணர்வு கட்டுரைகளையும் பகிர்கிறார்கள்.


கசியும் மௌனம் வழியே பேசும் ஈரோடு கதிர் தான் சமூக சேவையில் உள்ளதோடு மட்டும் இன்றி அதை செய்பவர்களையும் அடையாளம் காட்டுவது இவரின் சிறப்பு. அதில் கோடியில் இருவர் படிக்கும் போது நாம் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் உறைக்கிறது. கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் பின்பற்றினால் எப்படி இருக்கும் என்று மனம் ஏங்குகிறது.


மண், மரம், மழை, மனிதன். என்று அனைத்தையும் அலசும் வலைப்பூவில் படிக்க வேண்டியது நிறைய  தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்ற பதிவு நாம் பயன்படுத்தாத வளத்தை சொல்கிறது. மூங்கில் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவதே இவர்கள் பதிவு மூலம் தான் அறிந்தேன்.




அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில் உதவிக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துக் கொள்ளும் ஐயா ரத்னவேல் நடராஜன் அவர்கள் வலைப்பூவில் பகிரப்படும் பல கட்டுரைகள் பயனுள்ளது. ஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவுஆண்களுக்கும் மார்பக புற்று நோய்! போன்றவை எல்லோரும் படிக்க வேண்டியது.


இது மட்டும் இன்றி,முல்லைப் பெரியாறு அணை குறித்த உண்மையை நமக்குச் சொல்லும் காணொளியை பகிர்ந்த அன்பர் செய்த பணி மிகப்பெரியது.  அழியாச் சுடர்கள் மூலம் கிடைப்பதற்கு அரிய சிறுகதைகள் கிடைக்கிறது.  எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ இலக்கியம், பெண்ணியம் என எல்லாவற்றையும் பேசுகிறது. பதிவு எழுதாமல் எல்லா பதிவுகளையும் படிக்கும் திருச்சி சந்திரகாந்த் பாலா அவர்களின் சமூக அக்கறை மிகப் பெரியது, பயிர் அமைப்பின் மூலம் பின்தங்கிய மக்களை முன்னேற்ற முயற்சி எடுக்கும் செந்தில்குமார், "கனவுக்கு செயல் கொடுப்போம்" என்ற அமைப்பின் சபரி சங்கர்,  என பலர் உள்ளனர்.


எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே நான் இங்கே பகிர்ந்து உள்ளேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் இங்கே எல்லோரையும் அறிய ஆசையும் உள்ளது. நாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்களையும் வாழ வைப்பதே வாழ்க்கை என்பதை புரிய வைத்த இவர்கள்  மத்தியில் நானும் இருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன் நான்.

வெறும் பிச்சை போடுவதோ, சமுதாய தவறுகளை பற்றி வெற்று அரட்டை அடிப்பது மட்டும் மாற்றத்துக்கு வழி வகுக்காது. மனதில் இருக்கும் எண்ணம், செயலில் வர வேண்டும். முந்திய இரவு மது அருந்தியதையோ, ஒரு திரைப்படம் பார்த்ததையோ நண்பர்களுடன் பேசும் நாம், ஏன் நாம் செய்த சமூக அக்கறை சார்ந்த விஷயங்களை நண்பர்கள் உடன் பேசக்கூடாது? மாறுவோம், அத்தோடு சமுதாயத்தையும் மாற்றுவோம்.


பெருமை மிக்க அறிமுகங்கள் உடன் வலைச்சர தொகுத்தலில் இருந்து விடை பெறுகிறேன். எல்லோருக்கும் நன்றி.

"நடந்தால் நாடெல்லாம் உறவு, 
படுத்தால் பாயும் பகை"

தொகுத்தது,
பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

Saturday, November 26, 2011

ஊருக்கு புதுசாம்ல

தினம் தினம் எத்தனையோ புதுமுகங்கள் பதிவுலகத்தில் . ஒவ்வொரும்  நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் எல்லோருக்கும் புதுமுகம், சிலர் எனக்கு புதுமுகம். 


முதலில் சகோ அருண் பிரபு. இப்போது "ராணா" படத்தில் உதவி இயக்குனராய் இருக்கிறார். அதிகமாக எழுதவில்லை இருந்தாலும் அனைத்தும் அருமை. இவர் எழுதிய ஏழாவது அறிவு புத்தகம் பற்றிய பதிவு மிக மிக அருமை.  அத்தோடு கத்துக் குட்டி  யும் கூட அருமை. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பற்றிய பதிவு எல்லோருக்கும் பிடிக்கும். 


நீங்கள் இசைப் பிரியரா? அது பற்றி எல்லாம் படிக்க ஆசையா? முதலில் செல்ல வேண்டியது அண்ணன் லலிதா ராம் அவர்களின் கமகம்.இவர் Gandharva Ganam என்ற ஆங்கில புத்தகமும் எழுதி உள்ளார். இவரின் அதிசய அகிரா அட போட வைக்கிறது. இவரைப் பற்றி அறிய இங்கே படிக்கலாம்.(  மற்றபடி இவரின் எந்தப் பதிவையும் நான் இன்னும் படிக்கவில்லை என்று ஒத்துக்கொள்வது எனக்கு உத்தமம். )


தமிழ் ட்விட்டர்கள் நடத்தும் தமிழ் ட்விட்டர்கள் நல்ல முயற்சி. இங்கே எல்லாமே ட்விட்டர்,  ட்விட்டர், ட்விட்டர் தான். எனக்கு பிடித்தவை #GreenLies பச்சைப் பொய்கள் – 2, இன்னொரு அருமை 140 எழுத்தில் கதை முயற்சி, பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் #140Story கீச்சுக் கதைகள்



நண்பர் cool எலெக்ட்ரிகல் மோட்டார் மற்றும் இதர அதே வகை பதிவுகளை எழுதுகிறார். ரொம்ப படிப்ஸ் போல இவர். (நம்ம மண்டைல ஒன்னும் ஏறல) , இன்னொரு CoolBlog என்ற வலைப்பூவில் இந்தியா பற்றி நிறைய சொல்கிறார்.  இது மட்டும் இன்றி Gallerycool-ஓவியம் என்ற இரண்டு வலைப்பூக்களில் எழுதுகிறார்.


சகோ rAgu bluffs ரகுபதி, 2009-இல் இருந்தே பதிவுலகில் இருக்கிறார். ஆனால் அதிகமாக பதிவுகள் எழுதவில்லை. இரண்டு தமிழ் பதிவுகள் மட்டும், அதில் ஏன் வேண்டும் ஈழம்-1 எல்லோரும் அறிய வேண்டியது. மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்?  நல்ல பதிவு.


ஒவ்வொரு நாளின் சிறந்த பத்து தமிழ் ட்வீட்களை படிக்க இது தான் ஒரே வழி Daily Top 10 Tamil Tweets. அட அட அட "சந்துல சிந்து பாடுறது"னா இதுதானோ என்னும் அளவுக்கு சிறந்த ட்வீட்கள் படிக்கலாம்.


புஷ்பராஜ் அவர்களின் என் பாதிப்புகள் இங்கே பதிப்புகளாய்!!!! எளிமையான நடையில் கவிதை எழுதுகிறார். நான் தொலைந்திருந்த அந்த நிமிடம்!இங்கே புகை பிடிக்கக் கூடாது!!! போன்றவை ரசிக்க வைத்தன. 


குழந்தைப் பையன் எனும் பிரிட்டோ எழுதும் சாரல் இதமாய் இருக்கிறது. ரயில் பயணத்தில்.. கனவு அருமை. தெற்கு வீதி ஐய்யனார் அவர்களிடம் இந்தக் கேள்விகள் உங்களுக்கும் இருக்கலாம்.


அடுத்து K7 பக்கம் கேசவன்.  நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல என்ற  ஒரு பதிவு எழுதி இருகிறார்அதற்கே 28 பேர் பின்தொடர்கிறார்கள். நிஜமாவே பிரபலம் தான் இவர்.

புதுமுகங்களை நல்லா கவனிக்க வேண்டியது உங்க கடமை.


தொகுத்தது 
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா

Friday, November 25, 2011

ட்விட்டரில் இருந்து பிளாக்கர் - பறந்து வந்த பறவைகள்

கடந்த பதிவுகளில் எல்லாம் புதிய, பழைய பதிவர்களை பற்றி சொன்னேன். இந்த பதிவு முற்றிலும் புதியவர்கள் பற்றி. இவர்கள் எல்லோரும் எனக்கு ட்விட்டர் தளத்தில் அறிமுகம் ஆனவர்கள். வெறும் 140 வார்த்தைகளில் அணு உலை முதல் அண்ணா ஹாசரே வரை பேசுபவர்கள், இப்போ பதிவுலகம் பக்கம். 


முதலில் அட போட வைக்கும் இவன் பிகிலு யுகேந்தர் குமார். இவரது இறப்பிலும் வகுப்பு பாகுபாடா ? கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது, நானறிந்த காமராஜர் எல்லோரும் அறிய வேண்டியது. BCCI பண கஷ்டத்தில் இருக்கா ? என்பது அருமை. எல்லா பதிவுகளும் சூப்பர் தான்.நல்லது எது என்றாலும் பகிரிந்து விடுவார். ட்விட்டர் முகவரி: bigilu@twitter.com


வண்ணநிழல் என்று தலைப்பிலேயே அசர வைக்கும் வேதாளம் என்ற ஸ்ரீ அர்ஜுன். என் அநாதை அம்மா என்ற பதிவு அம்மாவை பிரிந்து இருக்கும் பிள்ளைகள் எல்லோரும் படிக்க வேண்டியது. இதற்கு ஒரு கிரேட் சல்யூட்.  நன்றாக சிறுகதை எழுதுகிறார். ...ஆப்பரேசன் கிரீன்... அருமை. கண்ணாமூச்சி ரே ரே..... சூப்பர். ட்விட்டர் முகவரி:  vedhaLam@twitter.com



அடுத்து @DKCBE இவர் ட்விட்டர் தளத்தில் இதே பெயரில் மிகப் பிரபலம். (இப்படி சொன்னா 50 ரூபாய்க்கு டாப்-அப் வாங்கித் தரேன்னு சொன்னார்) வந்தான் வெல்வான் என்று ஒரே ஒரு பதிவு எழுதி உள்ளார். வாங்க பாஸ் தொடர்ந்து எழுதுங்கள்.  ட்விட்டர் முகவரி: DKCBE@twitter.com


அடுத்து அதிரடி சகோ ஆணிவேர் சூர்யஜீவா. எந்த திரட்டியில் இணைக்காமல் மிக அதிக வாசகர்களை கொண்டவர். சுடாத சூரியன்டாஸ்மாக்கை ஒழித்து கட்டுவோம் போன்றவை அருமை. குட்டி குட்டியாய் நிறைய எழுதுகிறார். ட்விட்டர் முகவரி: suryajeevaa@twitter.com


அடுத்து "நான் போக்கிரி" என்பவர் எழுதிய  நினைத்தேன், எழுதினேன் இவரின் அசிடிட்டி என்ற நாய், என்பது எல்லோரும் ருசிக்க வேண்டியது. அத்தோடு இந்த பதிவு ரொம்ப காரம், மற்றும் உணர்வு மிக்கது  தமிழ் பூணூல்   சிந்திக்க வைக்கிறது. ட்விட்டர் முகவரி: ipokkiri@twitter.com

அடுத்து jompages  ஜூனியர் ஓல்ட் மாங்க். இவரது முதல் சிறுகதை, "முதல் சிறுகதை". நம்ம கோமாளி செல்வா அண்ணன் போல பட்டைய கிளப்புறார். சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது.  ட்விட்டர் முகவரி: jroldmonk@twitter.com


அடுத்து சகோ உடன்பிறப்பே. இவரின் அவள்  கவிதையில் வித்தியாசமாய் யோசித்து எழுதி இருக்கார். விஜயகாந்திற்கு ஒரு கடிதம் !! கூட எழுதி இருக்கார் இவர். ட்விட்டர் முகவரி: udanpirappe@twitter.com


ட்விட்டர் தளத்தில் எல்லோரும் கலாய்க்கும் ரேணு. இவர் எழுதிய அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே !!! இவரது சிறு வயது கிரிமினல் மூளையை சொல்லுகிறது. முத்தான மூன்றாவது படைப்பு கூட இவரின் தைரியத்தை சொல்லுகிறது. கொஞ்சம் செண்டிமெண்ட் பதிவு இது. ஆனால் கமெண்ட்ஸ் disable செய்து வைத்துள்ளார். பதிவுலகத்துக்கு அழகே கமெண்ட் போடுற மாதிரி வைப்பது தானே. ட்விட்டர் முகவரி: RealRenu@twitter.com


அடுத்து ஐய்யனார்ஸ்-`கலைடாஸ்கோப்`. ஏனோ முன்னூட்டத்துடன் நிற்கிறது. அட நிறைய எழுதுங்க தலைவா. ட்விட்டர் முகவரி: iyyanars@twitter.com


நம்ம கண்ணாடி ஜன்னல் ஷேக்பரீத் எழுதிய பேருந்துப் பயணம் நம்ம சிறு வயது ஹீரோக்களை கண் முன் நிறுத்துகிறது. ட்விட்டர் முகவரி: sheik007@twitter.com


அடுத்து கரு-நாக்கு  எழுதிய கீச்சுக்கள்! பதிவு அருமை. நன்றாக கவிதையும் எழுதுகிறார். எச்சில் மனிதன்!விவாக ரத்துக்கள்! போன்றவை ரசிக்கும் வகை 
ட்விட்டர் முகவரி: karu_naakku@twitter.com

இவர்களில் நிறைய நண்பர்கள் புதுமுகங்கள்.  எல்லோரையும் உங்கள் கண்ணில் காட்டிவிட்டேன். இனி அவர்களை பாராட்ட வேண்டியது உங்கள் கடமை.


தொகுத்தது 
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

Thursday, November 24, 2011

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

தமிழில் வலைப்பூக்கள் பல ஆயிரம்,நாம் தொடர்வது கூட நிறைய இருக்கும். ஆனால் சிலர் வலைப்பூவில் மட்டும் எப்போடா போஸ்ட் வரும் என்று ரஜினி பட ரீலிஸ் மாதிரி காத்திருந்து,அவர் போட்ட உடன் ஓடிப்போய் அவசர அவசரமாய் படிப்போம். ஆனால் திடீர் என்று அவர்கள் பதிவுலகம் பக்கம் வராமல் நம்மை ஏமாற்றி விடுவார்கள். நாமும் சில நாளில் மறந்து விடுவோம். அத்தகைய சிலர் பற்றிய அறிவிப்பு இங்கே. 

முதல் ஆளு, நம்ம சேட்டைக்காரன். பதிவுலகில் கிட்டதட்ட நிறைய பேர் இவரை விரும்பி படிப்பார்கள். ஆனால் திடீர் என்று  கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதிவிட்டு போய்விட்டார். மிக மிக வருத்தம் நிறைய பேருக்கு. ஆனால் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். சகோ உங்கள் துயரங்கள் எல்லாம் சரியாகும். காத்திருக்கிறோம் உங்கள் நகைச்சுவைக்கு மீண்டும், மீண்டு வாருங்கள் விரைவில். (நேற்று நான் இவரது வலைப்பூவுக்கு செல்ல முயன்ற போது இவரது வலைப்பூ நீக்கப்பட்டு உள்ளது. )

அடுத்து நம்ம பதிவுலகில் பாபு அண்ணா. என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க முடியாத ஆள். திரை விமர்சனத்தில் பெரிய கில்லாடி. அதுவும் ஆங்கில திரைவிமர்சனம் என்றால் பட்டையை கிளப்புவார். IT'S A WONDERFUL LIFE - திரை விமர்சனம் அதற்கு ஒரு உதாரணம். கிரெடிட் கார்டு பற்றிய இவரது இரண்டு பதிவுகளும் கிரெடிட் கார்டு உள்ள/வாங்க உள்ள எல்லோரும் படிக்க வேண்டியது.அத்தோடு இவரது அனுபவப்பதிவுகள் எல்லோரும் படிக்க வேண்டியது.  ஆனா அதிகமான வேலைப்பளு என்று சொல்லி பதிவுகலகம் பக்கமே காணோம். (ஒரே ஊர்ல இருக்கோம் இன்னும் பார்க்க கூட முடியல). சீக்கிரம் வாங்க அண்ணா. 


அடுத்து அண்ணன் எஸ்.கே, மிகப் பெரிய திறமைசாலி பதிவர் இவர். இவரின் மனம்+ வலைப்பூவில் அடோப் ஃபிளாஷ் பற்றிய பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாய் உள்ளன. உங்களுக்கும் கூட இருக்கலாம். ஆனால் பாதியில் நிறுத்தி விட்டார். அத்தோடு எதுவும் நடக்கலாம் என்ற வலைப்பூவில் நாவல்(BLACK RIVER), சிறுகதை என்று பட்டையை கிளப்பினார், ஆனால் அங்கே இப்போது எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து எழுதுங்க அண்ணா. 


அடுத்து நம்ம சகோ சுடுதண்ணி, இவர் எழுதிய விக்கிலீக்ஸ் பற்றிய பெரிய தொடர் பதிவில் இவரிடம் சிக்கியவர்கள் என்னையும் சேர்த்து பலர். அத்தோடு, சூடாக வந்த ஸ்விஸ் வங்கி பற்றியவை மிகவும் சூடு. நல்ல பதிவர் இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்... என்ற பதிவு பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது. இதுவே தற்போது இவரது கடைசி பதிவும் கூட. மே மாதத்துக்கு பின் எந்தப்பதிவும் இவர் எழுத வில்லை. இவர் கண்டிப்பாக தொடர்ந்து எழுத வேண்டும். 


அடுத்து ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி அக்கா, இவரின் (சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :)) ஆண்கள் எல்லோரும் படித்து, கடைபிடிக்க வேண்டியது. இளையராஜாவின் தீவிர பக்தை இவர் இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!! பதிவில் அது தெரியும், இளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..!!! இவருக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும். அடிக்கடி கமெண்ட்களில் காணப்பெற்றாலும் பதிவு மட்டும் இல்லை. பாசக்கார மதுரையில் இருக்கீங்க, அன்போடு கேட்கிறோம் எழுதுங்க, இல்லாட்டி அருவாளோடு ஆளுங்க வருவாங்க.


அடுத்து வலையுலகில் எனக்கு முதல் நண்பர் அண்ணன் தகவல் துளிகள் மகாதேவன் V.K.  இவரது வலைப்பூ ஆனந்த விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது. தலைமுடியின் உன்மையான நிறம் !விமானம் பறப்பது எப்படி? போன்றவை மிக அருமையான பதிவுகள். வெளிநாட்டில் வேலை செய்யும் இவர், அதிக வேலைப்பளுவால் எழுதவில்லை. உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம் அண்ணா.


அடுத்து அதிரடி சகோ தொப்பி தொப்பி, இவரைப் பற்றி தெரியாவிட்டால் உங்களைப் பார்த்து சொல்லணும் தொப்பி தொப்பினு. அவ்ளோ அருமையா எழுதுபவர். இவரது பதிவுகளில் கொள்ளைகும்பல் Amway, கொள்ளை கும்பல் AMWAY NUTRILITE-2 Jesus Calls தினகரனும் கொள்ளை கும்பலும் போன்றவை படித்தவுடன் சிந்திக்க வைக்கும்.  பங்கு சந்தை பற்றியும் கொஞ்சம் சொல்லி உள்ளார் ஆனால் பாதியில் நிற்கிறது. கிட்டத்தட்ட எல்லா பதிவுகளும் அருமை, சூடானவை. கண்டிப்பாக படிக்க வேண்டும். இவர் தொடர்ந்து எழுதவும் வேண்டும் அல்லவா?  


கெக்கேபிக்கேனு பேசுறவங்க மத்தியில் அப்படியே எழுதுபவர் அக்கா கெக்கேபிக்குணி இவரது வலைப்பூ எனக்குத் தோணினதைச் சொல்லுவேன். இவரது அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா! பயனுள்ளது,  நல்ல சிறுகதை எழுத்தாளர் இவர், நிறைய இணைய இதழ்களில் எழுதி உள்ளார். அமெரிக்காவாசி, இப்போது ட்விட்டரில் தஞ்சம் புகுந்து உள்ளார். கொஞ்சம் பதிவுலகின் பக்கமும் உங்க பார்வை படணும் அக்கா. 


அடுத்து மருத்துவம் பேசுகிறது ! வலைப்பூ, மிக மிக மிக பயனுள்ள வலைப்பூ தமிழில் ஒரு மருத்துவ வலைப்பூ என்றால் சும்மாவா? ஆனால் கடந்த ஜூலைக்கு பின் பதிவை காணோம். இதில் நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை...கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள்-ஒரு மன நோய் என இன்னும் பல பயனுள்ள பதிவுகள் உள்ளன. தொடர்ந்து எழுதுங்க டாக்டர்.


அடுத்து சகோ ♥ நிலாகாதலி ♥ நன்றாக கவிதை எழுதுபவர் பிரிவின் ரணங்கள் மிக அருமையான கவிதை, காத்திருப்பு பெண்களின் காதல் குறித்த அருமையான குட்டி கவிதை. கடந்த பிப்ரவரிக்கு பின் காணவில்லை இவரை. சீக்கிரம் வாங்க சகோ.



இவர்களில் பலர் உங்களுக்கும் பிடித்தவர் ஆக இருக்கலாம். பகிருங்கள் அவர்களைப் பற்றி. அவர்கள் எழுத்துக்கு காத்திருக்கிறோம் என்று சொல்லுங்கள்.

தொகுத்தது 
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

Wednesday, November 23, 2011

அசத்தும் ஆல்ரவுண்டர்கள்

சிலரை நாம் இவர் இந்தப் பதிவு மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்து இருப்போம். ஆனால் பார்த்தால் திடீர் என்று வேறு ஒரு புதிய வகை பதிவுகளை தந்து என்னால் எதுவும் முடியும் என்று எல்லாவற்றிலும் பட்டையை கிளப்புவார்கள் . அப்படிப்பட்ட பதிவர்கள் பற்றிய, அவர்களின் அதிகமாக அறியப்படாத முகம் பற்றிய பார்வைதான் இன்று. 



முதலில் நாம் போவது எனக்கு பதிவுலகில் நெருங்கிய சொந்தம், அண்ணன் என்று நான் அன்புடன் அழைக்கும் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" . தொழில்நுட்ப பதிவர் ஆக இவரை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று உங்களுக்கு தெரியுமா? 11-ஆம் வகுப்பில் தான் எழுதிய முதல் கதைக்கே பரிசு பெற்றவர். நண்பன் பக்கம் என்ற வலைப்பூவில் தடயம் என்று ஒரு கதை எழுதி மீண்டும் ஆரம்பித்து உள்ளார் . இவருள் இருக்கும் டி.என்.ஏ-வை தூண்டி விட்டால் நமக்கு ஒரு சுஜாதா கிடைக்கலாம்.(கூப்பிடுங்கப்பா அந்த ஸ்ருதி ஹாஸன)


அடுத்தபடியாக எதிர்நீச்சல் போடும் நீச்சல்காரன் "அண்ணன்". தமிழின் சிறந்த தொழில்நுட்ப பதிவர் இவர்.இவரின் பதிவு திருட்டை தடுக்கும் பூட்டு அபாரம், இவர் கவிதையிலும் கலக்குவார். இவர் எழுதிய "லிமரைக்கூ" வகை "தசம் ரசம்"  தமிழில் ஒரு புது முயற்சி.இவர் எழுதிய ப்ளாக்கர்களும் கல்யாணமும் ஜாக்கிரதையும் முதல் பகுதி, இரண்டாம் பகுதி படித்தால் மனம் விட்டு சிரிக்கலாம்.


அடுத்து நம் "தமிழ்கிழம்" ஜெயசந்திரன். ஆங்கில வலைப்பூ மூலம் அறிமுகம் ஆன தமிழர், அருமையான தொழில்நுட்ப அறிவு உடையவர். தமிழ் பதிவுலகத்துக்கு முற்றிலும் புதியவர். என்னுடைய வலைப்பூவில் இவர் எழுதிய டெபிட்/கிரெடிட் கார்ட் இல்லாமல் டொமைன் வாங்கலாம் என்ற பதிவு மூலம் நிறைய பேருக்கு தெரியவந்தார். இவரின் ஐந்து நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் பதிவு அருமை. கவிதை முயற்சி ரொம்பவும் புதுமை.


அடுத்தது சகோ தங்கம் பழனி. மிக அருமையான முயற்சி கொண்டவர். மிகச் சிறந்த பதிவரும் கூட  மாவட்டங்களின் கதை என்று ஆரம்பித்தவர் இப்போது தொழில்நுட்பத்தில் வந்து நிற்கிறார் போட்டோஷாப் மூலம் எளிமையாக படங்களுக்கு பார்டர் அமைப்பது எப்படி? என்ற பதிவு அருமை.


அடுத்து நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன்  சமூகம் சம்பந்தப்பட்ட பதிவுகளை அதிகம் எழுதிய இவர் இப்போது வந்திருப்பது எங்க ஏரியா.   மிக அருமையாக தொழில் நுட்பத்தை விளக்குகிறார் நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?, மெக்கானிகல் துறையினருக்கான தொடர் ஆகியவை அருமை.  இவர் போடும் விடுகதைகள் மிக அருமை ( விடைமட்டும் தெரியல) . அதை ஒரு தனி வலைப்பூவில் எழுதினால் மிக அருமையாக இருக்கும். செய்வீர்களா அண்ணா?


அடுத்து இயக்குனர் ஐ‌.எஸ்‌.ஆர். செல்வா அவர்கள்.செல்வா ஸ்பீகிங்கில்  கடலைப் பொறி முதல் கணிப்பொறி வரை அலசுபவர், மின்னல் கணிதம் என்ற வலைப்பூவில் மிக அருமையாக, வேகமான கணக்கு போடும் எளிய வழிகள் பற்றி சொல்லித் தருகிறார். குறிப்பாக 50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?,  அடுத்து பேரன்ட்ஸ் கிளப் வலைப்பூவில் ஃபேஸ்புக்கா? நோட்புக்கா? தடுமாறும் குழந்தைகள் பதிவு குடும்பத்துடன் படிக்க வேண்டியது.


அடுத்து அக்கா ஆமீனா, குட்டி சுவர்க்கமே நடத்தும் இவர் எழுதும் சமையல் எக்ஸ்பிரஸ் ரொம்ப ஸ்வீட் அண்ட் பாஸ்ட். இவர் செய்த சிக்கன் லேயர் பிரியாணி கம்ப்யூட்டரிலேயே மணத்தது, என்னை மாதிரி பேச்சுலர்க்கு சொல்லும் சிம்பிள் தேங்காய் சாதம் மிகவும் அருமை. ஆனா ஒரு நாள் கூட பார்சல் அனுப்ப மாட்டேங்குறாங்களே?


அடுத்து சகோ தோழி பிரஷா, இவரின் கவிதை வலைப்பூ ரோஜாக்கள் எல்லோருக்கும் தெரியும், தகவல் தொழில்நுட்ப செய்திகள் கூட சொல்வார் இவர். இவரது கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி ரொம்ப அருமை,  இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு எல்லோருக்கும் பயன்படும் ஒன்று.

Image From: http://www.allaboutfeettx.com/brands.html

தொகுத்தது

பலே பிரபு (எ) பிரபுகிருஷ்ணா 

Tuesday, November 22, 2011

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

வணக்கம் நண்பர்களே நீங்கள் படித்துக் கொண்டு இருப்பது உங்கள் வலைச்சரம்.தொகுத்து வழங்குவது உங்கள் பிரபு.  என்றுமே கவிதை என்பது நம் மனதுக்கு நெருக்கமானது. கவிதைப் பந்தலில் இளைப்பாறி குளிர்ச்சியாய் கவிதை படித்திடும் நேரம் இது. 

முதலில் நீங்க விஜயம் செய்வது எங்க ஊர் முசிறிக்கு, காவிரிக் கரையில் கணினியில் கவிதை குளிக்கும் விஜய் அண்ணாவின்  பயணம் என்ற கவிதை இன்னும் மனதில் நிற்கிறது ஒவ்வொரு பயணத்திலும். யதார்த்தக் கவிதைகளை இவர் சொன்ன விதம் தீபாவளி பதார்த்தமாய் இனிக்கிறது.   ஆரம்பத்தில் புரியாத கவிதைகளை எழுதியவரது இன்றைய கவிதைகள் மனதை விட்டு பிரியாது நிற்கின்றன. பழையதுக்கும் நேரில் பார்த்து அர்த்தம் கேட்க வேண்டும்.


ராஜா சந்திரசேகர் அவர்களின் வலைப்பூ இரண்டும் கவிதையாய் பூத்துக் கிடக்கிறது.அவர் எழுதிய, அவர் கவிதை அவர், நம் இன்றைய வாழ்க்கையை நாலே வரியில் சொல்கிறது.  நம் விவசாயி பற்றி  யாருக்கும் தெரியாமல் இவர் எழுதிய கவிதை, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது. சில கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள இவரைப் பற்றி படிக்க இங்கே 


அடுத்து செல்வது கரூர் பிரபாகரனிடம் காதல் 25 என காதலில் கொஞ்சுபவர் நாம் தமிழர்  என்று நமக்கு யார் தமிழர் என்று உணர வைக்கிறார்.அதிகமாக எழுதமாட்டார், எழுதினால் அதிக முறை படிக்க வைப்பார்.  


சென்னை உழவனின் நெற்குவியலடுத்து துடியான சாமியென சாமி பேசுவதை சொல்பவர், மியாவ் என்று ரசிக்கவும் வைக்கிறார். ஆனந்த விகடன்,கல்கி என மேலும் இருக்கிற இதழ்களில் எல்லாம் வந்து விட்டது. இனி எதாவது புது இதழ் வந்தால் இவரிடம் சொல்ல மறக்காதீர்கள். இவரது கவிதைகள் அந்த இதழுக்கே அழகு. 


அடுத்தது சகோ நாகப்பட்டினம் தமிழ்வாசல் இமலாதித்தன் எனக்கொன்றும் தெரியாது என்று தகப்பனாய் பாசம் கொள்ள வைக்கும் இவர், பிச்சைப் பாத்திரம்  என்றெழுதி இந்திய பொருளாதாரத்தின் இடத்தைக் காட்டுகிறார். இவரின் கிறுக்கல்கள் எல்லாம் கிறு கிறுக்க வைக்கின்றன. 


அடுத்து நாம் போவது இலங்கைக்கு கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் கவிதை படிக்க. குயில்கள் இப்போது குரைக்கின்றன மனத்தைக் கரைக்கிறார். விருதுகள் பெறும் எருதுகள் என வியக்கும் வண்ணம் எழுதி உள்ளார். பல கவிதைகள், திரைப்பாடல்கள் எழுதி உள்ள இவரைப் பற்றி அறிய இங்கே செல்லவும் 


அடுத்து நாம் செல்வது மதுரைக்கு நம்பிக்கை பாண்டியன் என பெயரிலேயே நம்பிக்கை தந்து விட்டு படிக்க சொல்கிறார். முதலில் குழந்தைப் பருவ அழகிய பொய்களை அடுக்குபவர். அடுத்து கவிதைகளாகவும் இருக்கலாம் என்று சொல்லி நம்மை கவர்கிறார். அதிகமாக கவரப்படாமல் அருமையாக எழுதும் நண்பர் இவர்.


மீண்டும் சென்னை வந்தால் நம்ம ஷீ-நிஷி சிந்திக்க வைக்கும் கவிதை சொல்கிறார். இவர்கள் தவழும் குழந்தைகள் என என மாற்றுத் திறனாளிகள் பற்றி மனதில் பதிய வைக்கிறார். வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் என்று கேட்பது நமக்கு நியாயமாய் தான் படுகிறது.  ஈகரை கவிதைப் போட்டிக்கு இவர் எழுதிய கவிதை இரும்பிலே ஒரு சேலை முதல் பரிசை பெற்றுள்ளது.


காதல் தளும்பும் நம்ம மதுரை பிரணவன் நீயே சொல் என்று அணை கட்டுகிறார் , கூடவே புகைப்படத்திடம் காதல் சொல்லி புலம்புகிறார் . சில மணித்துளிகள் படிக்க சென்றால் சில மணி நேரங்கள் படிக்க வைக்கிறார்.


சகோதரி திருவண்ணாமலை கயல்விழியின் க"விதை"களில் பேசித்தீர்த்தல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. மகிழ்ச்சி பற்றி இவர் சொன்ன போது ஒரு வெறுமை சிரிப்பு வருகிறது இந்த இயந்திர வாழ்வை நினைத்து. "திண்ணை" இணைய இதழில் இவர் எழுதிய கவிதைகளில்  என்னைக் கவர்ந்தவை. மீண்டும் ஒரு முறை  மற்றும் அந்த ஒரு விநாடி


ரவி ட்ரீம்ஸ் தளத்திற்கு சென்றால் இந்த தொழில்நுட்ப மனுஷன் கவிதையில் மயக்கி வைக்கிறார் நம்மை. இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள் என்று இன்றைய வாழ்க்கையை சொல்கிறார், இவரது பழைய பேப்பரும், புதிய பேப்பரும் இன்றும் வாசம் தருகின்றன. படிக்கும் போதே கவிதை எழுதத் தோணுதா? அப்படியே ரவியின் தமிழகத்தில் கவிதை ரசனை படித்து விட்டு எழுதுங்கள். சில விஷயங்களில் முரண்பட்டாலும் இதுவே இன்று உண்மை.

இப்பவும் எழுதத் தோணுதா? முதலில் ஒரு போட்டியில் பங்கேற்று கவிதைகளை ஆரம்பியுங்கள் ஈகரை நடத்தும் 30,000 ரூபாய் பரிசு கவிதை போட்டியில் கலந்து வெற்றி பெற வாழ்த்துகள்.  

தொகுத்தது, 
பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

Monday, November 21, 2011

இவன்தான் பலே பிரபு

வணக்கம் நண்பர்களே,சகோதரிகளே, அண்ணன்களே,(தம்பிகளே சொல்ல மாட்டோம் ஏன்னா நாங்கதான் எப்பவும் யங்) இங்க எழுதி, அங்க எழுதி கடைசியா வலைச்சரத்துலயும் எழுத வந்துட்டேன். இனி என் வலை வரலாற்றை பிரிச்சு பாக்கலாம். 

முதல்ல 2009 இல் கவிதை வலைப்பூ ஒன்றை தொடங்கி எழுத ஆரம்பித்தேன், கவிதைனா என்னன்னு தெரிஞ்சது, ஆனா வலைப்பூனா என்னனு புரியல அப்போ. அப்படியே கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டம் அடுத்து ஒரு ஆண்டு கழித்து ஆனந்த விகடனின் ஒரு கட்டுரை வலைப்பூ ரகசியங்களை அறிந்து மீண்டும் இந்தப் பக்கம் வந்தேன். 

அப்போ ஆங்கிலத்துல எழுத ஆரம்பித்தேன், பின்னர் தமிழுக்கு வந்தேன். வலைப்பூ பற்றிய பெரும்பாலான விவரங்கள் நம்ம வந்தேமாதரம் சசி அண்ணன் வலைப்பூவில் படித்து அறிந்தேன், அப்புறம் கூகிள் துணையோடு நிறைய அறிந்தேன். சரி என்ன எழுதலாம்னு தெரியல. கவிதை எழுதலாம்னா ஊருக்கு ஒரு இன்ஜினியரிங் காலேஜ் மாதிரி எங்க பார்த்தாலும் கவிதை தான். அப்புறம் சசி அண்ணனயே பின்பற்றி தொழில்நுட்பம் எழுத ஆரம்பித்தேன். பின்னர் நிறைய வலைப்பூக்களில் எழுதி வருகிறேன்

ஆரம்பத்தில் வலைப்பூ பெயர் பலே பாண்டியா . இதனை பெயர் மாற்றம் செய்து பலே பிரபு என்று ஒன்றில்(?) எழுதி வருகிறேன். முதல் பதிவு Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க . எப்படி வலைப்பூவு அட்ரஸ் மாற்றுவது என்று சொல்வது இந்தப் பதிவு .



அத்தோடு கூகுள் அட்சென்ஸ், HTML, வலைப்பூவை டொமைன்க்கு மாற்றுவது இதுவரை மூன்று தொழில்நுட்ப தொடர்களை எழுதி உள்ளேன். இப்போது வெப் ஹோஸ்டிங் பற்றிய தொடர் ஒன்றை எழுதி வருகிறேன்.

மற்றபடி பிளாக்கர், இணையம்,கம்ப்யூட்டர், பேஸ்புக் என எல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கிறேன்.

தொழில்நுட்பம் மட்டும் இன்றி ஆரம்பத்தில் விட்ட கவிதையையும் இப்போ கையில் எடுத்து அப்பப்போ இந்த சுதந்திரம் இனிப்பாய் இல்லை என்று இன்றைய சுதந்திர இந்தியா பற்றி கவலைப்படுவேன், தமிழை இழிவாக்கும் சிலர் கண்டு யாதுமாகி நின்றாய் என்று தமிழுக்காய் வருந்துவேன், கவிதை என்றால் காதல் இல்லாமலா? இப்படிக்கு காதலன் என்று எழுதியவன் தான் என் காதல் ஸ்டேட்டஸ்  என்றும் எழுதினேன். ஒரு முறை என் கவிதை ஒன்று  அதீதம் இணைய இதழில் வந்து உள்ளது 

அப்புறம் எனக்கு புதிர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால் தொழில்நுட்ப வலைப்பூவிலேயே புதிர் எழுதி பின் ஒரு தனி வலைப்பூவுக்கு அதை புதிர் போடலாம் என்று மாற்றினேன். மாத ஆரம்பத்தில் புதிர் கேள்விகளும் , பின்னர் கொஞ்ச நாள் கழித்து பதில் சொன்னவர்களுக்கு விருதும் கொடுத்தேன். பின்னர் இதன் வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்.

இது மட்டும் இன்றி பதிவர்கள் பலரின் பயோ-டேட்டா சேர்த்து தொகுத்து வழங்குகிறேன்.  இப்போது இதை கவனிக்கவும் நேரம் இன்றி இதில் பதிவு எழுத இன்னொரு ஆளைத் தேடி வருகிறேன். ஹி ஹி ஹி

தெய்வத்தை கல்லாக்கி விட்டோம் குழந்தைகளை? அணுமின்னுக்கு மாற்று என சில அரசியல், சமூக விழிப்புணர்வு கட்டுரைகளை கழுகில் எழுதி வருகிறேன்.

இவை மட்டும் இன்றி இன்னும் பல தளங்களில் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். மொத்த வலைப்பூக்களையும் இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன் பலே பிரபு வலைப்பூக்கள் .

இப்போது வலைச்சரம். இனி இந்த வாரம் முழுதும் இங்கே என் ராஜாங்கம். காத்திருங்கள் நாளை வரை. அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது

பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

Sunday, November 20, 2011

சென்று வருக ராம்வி - பொறுப்பேற்க வருக பிரபு

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோ ராம்வி அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகளில் அறிமுகப் படுத்திய இடுகைகளோ ஏறத்தாழ 77. பெற்ற மறுமொழிகளோ 240. இவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் பெங்களூரில் வசிக்கும் இளைஞர் கிருஷ்ண பிரபு. இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகில் தும்பலம் என்ற ஊரினைச் சொந்த ஊராகக் கொண்டவர். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது வீடியோ எடிட்டராகப் பணி புரிகிறார். இவரின் விருப்பம் நாவல்கள், சிறுகதை, கவிதை, குறும்படம். இவரின் இலட்சியமும் கனவும் திரைத்துறை. வாழ வைக்கும் சமூகத்துக்கு வாழும் வரை உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். இவருக்குப் பிடித்த பொன்மொழி " நடந்தால் நாடெல்லாம் உறவு - படுத்தால் பாயும் பகை " என்பதே !

கிருஷ்ணப் பிரபுவினை வருக வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ராம்வி

நல்வாழ்த்துகள் கிருஷ்ண பிரபு

நட்புடன் சீனா


வலைச்சரத்தில் ஞாயிறு.


வணக்கம்.


File:The Sun by the Atmospheric Imaging Assembly of NASA's Solar Dynamics Observatory - 20100819.jpg


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.சூரியன் பெருமளவு ஐதரஜன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும்,சிறிதளவு,இரும்பு,சிலிக்கன் நிக்கில்,கந்தகம்,அக்ஸிஜன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது, இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds),ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது.இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது. சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது.


இன்று வலைச்சரத்தின் எனது பணி முடியும் நாள். இன்றும், நேற்றைய தொடர்ச்சியாக பலசுவை பதிவுகளின் அறிமுகம்...


நம் தவறுகளைவிட, குறைகளைவிட, கோபங்களைவிட,
குரோதங்களைவிட பெரியது சகோதரத்துவம் என்கிறார் ராஜகோபலன் சகோதர உறவை பற்றிய தனது,  வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம். என்கிற கவிதையில்.


நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற நாம் அளிக்கும் லட்சங்கள் அல்ல,வழி காட்டும் லட்சியங்களே அவர்களுக்கு நாம் அளிக்கும் பெரிய சொத்து என்கிறார் சம்பத்குமார், தன்னுடைய, குழந்தைகளுக்கு தர வேண்டிய மிகப்பெரிய சொத்து...என்ற பதிவில்..



வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள். நாம், நம் செயல்களினாலேயே அறியப்படுகிறோம், பாக்யங்களினால் அல்ல, என்கிறார், தானைத்தலைவி தனது தங்கச்சி பாப்பா பிறந்த நாள். பதிவில்.




எவர் சொல்லும் வார்த்தையைக் கேட்டும் ஏமாந்து போகாமல்,மனம்விட்டு பேசி நல்லதொரு மணாளனை தேர்ந்தெடுக்க வேண்டும்,அப்படி இல்லாமல் பணம் கொடுத்து வாழ்வை வாங்க நினைத்தால்,குணங்கெட்டவன் துணையாக வந்துவிட்டால், நற்குடியும் முழ்கிப்போகும் அடியோடு அதனால,துணையை தேர்ந்தெடுக்க, எதுக்குதான் இந்த அவசரமோ? என்கிறார் அம்பாளடியாள்.



உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கா? கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேட வேண்டுமா? கவலைய விடுங்க சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம். நம்ப காட்டானப் பாருங்க, காளைய அடக்கச்சொல்லலாமா? இல்ல வெற்றிலைய மடிக்கச் சொல்லலாமா ,சிவலயனை அடக்க போகிறவர் யார்? இப்படீன்னு நிறைய யோசனைகள் சொல்லராரு சுயம்வரத்துக்கு..



ஆயிரம் வார்த்தைகளை கொண்டு உணர வைப்பதை ஒரு படத்தைக் கொண்டு உணர வைத்து விடலாம். அதைத்தான் நெல்லி. மூர்த்தி பண்ணராரு,அவரோட
கார்டூன்களைப் பாருங்க.--.  குலுங்குவதோ,குமறுவதோ உங்க இஷ்டம்.



வெள்ளை நிறம் மனதை அமைதிபடுத்துமாம்,பிங்க் நிறத்துக்கு கோபத்தை குறைக்கும் குணம் உண்டாம் அப்படீன்னு நிறங்களுக்கும் குணங்கள் இருக்குன்னு அமைதிசாரல் சொல்லியிருக்காங்க தனது,  நிறங்களும், குணங்களும்... பதிவுல.



தந்தையின் வீரத்தைக் கண்டும் அது பற்றிப்பலர் கூறக்கேட்டும் வளர்ந்த ஒரு சிறுவன், தன் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் என்றறியும் போது,என்ன மனநிலயை அடைவான்? அவனுடைய மனநிலையை தெரிஞ்சுக்கனுமா?சென்னைப்பித்தன் அவர்களின், அங்கதன் காத்திருந்தான். கதையில் தெரிஞ்சுக்கலாம்.



போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் பிறந்தது மாதிரி,காதல் பிறந்தது ஒரு ஒற்றை மரத்தடியில் என்கிறார் அனந்து, காதலியை பிரிந்த சோகத்தில் எழுதப்பட்ட ஒற்றை மரமாய்.. என்கிற கவிதையில்...



பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார் டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா? எப்படி அந்த டாக்டருக்கு பைத்தியம் பிடிக்குதுன்னு பார்க்கணுமா? வாங்க அப்பாவி யோட பதிவுக்கு,படிச்சு தெரிஞ்சுக்கலாம்..



அனைத்து எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் ஆரம்ப புள்ளி மனம், எனவேதான் யோகிகளும்,ஞானிகளும் மனதை கட்டுபடுத்த வேண்டும் என்று கூறினார்கள், மனம் ஒரு வினோதம் என்று மனதை கட்டுபடுத்துவது பற்றி அலசுகிறார், ராகவ் முரளி.


அம்மாவிற்கு இணை அம்மாதான்,அம்மாவின் நினைவுகள் மனதோடும், காகிதங்களோடும், மண்ணோடும் அழிந்துவிடக்கூடாது என்று அம்மாவுக்காக பதிவு எழுதும் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர்.அவர்கள் அம்மாவை, மீண்டும் வருவாயா?
என்று உருக்கமாக கேட்கிறார்.





இந்த ஒரு வாரமாக வலைச்சரத்தின் மூலம் உங்களையெல்லாம் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் அறிமுகப்படுத்திய பதிவுகள் மற்றும் பதிவர்கள் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமாகி இருந்திருக்கலாம். நான் படித்ததில் எனக்கு பிடித்த பதிவுகள் என்ற முறையில் என் அறிமுகங்களை கொடுத்தேன். என் பதிவுகளை படித்து வாழ்த்தி கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி.


நன்றியுடன்,
ரமாரவி.

Saturday, November 19, 2011

வலைச்சரத்தில் சனிக்கிழமை....


வணக்கம்.

File:Saturn during Equinox.jpg


சூரிய குடும்பத்தின் ஆறாவது கிரகமும் இரண்டாவது பெரிய கிரகமுமாகிய சனி கிரகத்தின் பெயரால், சனிக்கிழமை வழங்கப்படுகிறது. பூமியைவிட சுமார் 9 மடங்கு பெரியதாக உள்ள சனி கிரகம் சுரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 30 ஆண்டுகளாகும். ஆனால் அது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் பத்தரை மணி நேரமே ஆகும். வியாழனைப்போன்றே இதுவும் வாயுக்களினால் ஆன ஒரு கிரகம்தான்.நாம் கைவிரல்களில் மோதிரம் போட்டுக்கொள்வோமே அது மாதிரி சனியும் தன்னை சுற்றி மோதிரம் போன்ற வளையங்களை போட்டுக் கொண்டுள்ளது. இந்த வளையங்கள் பெரும்பாலும் பாறைத்துகள்கள் மற்றும் பனிதூள்களால் ஆனது.நம் சூரிய குடும்பத்திலேயே அதிக துணைக்கோள்களைக் கொண்டது சனி கிரகம்தான். இதற்கு 62 துணைக்கோள்கள் உள்ளன.இவற்றில் சில்வற்றில் உயிர் வாழ்வதற்கு தேவையான பிராண வாயு இருப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் உண்டு.


சனிக்கிழமை என்றாலே சந்தோஷம்தான்...வார இறுதி ...ஓய்வு எடுக்கலாம், நிதனமாக நம் வேலைகளை கவனிக்கலாம்,இஷ்டப்படி ஊர் சுற்றலாம் என்று இப்படிப்பட்ட சனிக்கிழமையில் நகைச்சுவை, அனுபவம் விழிப்புணர்வு, கவிதை .....இப்படி பலதரப்பட்ட பதிவுகளைப்பார்க்கலாம்.



கொலு பொம்மைகளுக்கு உயிர்வந்தால் என்ன ஆகும்? பீக் அவரில் நாம் பஸ் பிடிக்க பிரயத்தன படுவது போல பொம்மைகளும் சீட் பிடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்கிறார் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சார். உயிர் வந்த பொம்மைகள் என்ன செய்யும் அப்படின்னு தெரிஞ்சுக்கணும்மா? வாங்க நவராத்திரி கொலு!!!க்கு போய் பார்க்கலாம்.


மாடவீதியில் எல்லாக்கடை வாசலிலும் தேவாதி தேவர்கள் முகாமிட்டு இருந்தார்களாம்.சரி தேவர்கள் எல்லாம் எந்த ஸ்தியில் இருந்தார்கள்?அது பற்றி தெரிஞ்சுக்கணுமா? RVS சாரோட மாடவீதி பொம்மைகளுக்கு  போய்தான் தெரிஞ்சுக்கணும்.


பேபி ஸ்பெஷல் ஜோக்....,பவர் ஸ்டார் ஜோக்ஸ், என்று டிவிட்டுகள் ஜோக்குகள் போட்டு நம்மை சிரிக்க வைக்கும் சிபி செந்தில்குமார்,  சென்னைப்பெண்பதிவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம், போன்ற விழிப்புணர்வு பதிவுகளை கொடுத்து நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார். மேலும் சினிமா விமர்சனம் என்றால் இவரது பதிவுதான்.அருமையாக விமர்சனம் செய்வார்.வசனங்களை நினைவில் வைத்து எழுதுவதில் சிறந்தவர்.


இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவதும் ஒருவகை திருட்டுதான் என்று கூறும் வெங்கட் நாகராஜ், “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்கிறார் தன்னுடைய கண்ணெதிரே ஒரு கொள்ளை, என்ற பதிவில்.



இனிமேல் முன்னேறவே முடியாது என மூலையில் ஒதுங்கி இருக்கறவங்க கூட மனம் வைத்து விடாமல் உழைத்தால் மிகப்பெரிய இடம் உண்டு என்பதை உணர்த்தும் விதமான பிரபலங்களின் வாழ்கையை உதாரணம் காட்டுகிறார் ராஜேஷ் தனது, பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்..பதிவில்.




இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளி வரும் ஒவ்வொரு ஒரு செய்திகளின் விமர்சன தொகுப்பாக ஆணிவேர்... பக்கதை வடிவமைக்க விரும்புகிறார் சூரியஜீவா. சமூக நலனில் இவருக்குள்ள அக்கறை போற்றுதலுக்குறியது.இவருடைய மறுபக்கத்தை,  கதை கவிதையில், பார்க்கலாம்.



காஸ் சிலிண்டர் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது?
தெரிஞ்சுகோங்க.. என்று சொல்லிக்கொடுக்கிறார் குணசேகரன்.இம்மாதிரி நிறைய தெரியாத விஷயங்களை நமக்கு தெரியப்படுத்தும் இவரின் கேள்வி பதில்.. பதிவுகளும் அருமையாக இருக்கும்.



மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறு பிறவி எடுக்கும் எல்லாப் பெண்களும் தெய்வம்தான் என்கிறார்.ராஜபாட்டை ராஜா தனது, பெண்கள் எல்லாம் தெய்வமா? என்ற பதிவில்.




மெளனம் கலையும் போது,சோகங்கள் விடியும் போது,கண்ணீர் உறையும் போது............என்று காதல் உயர்வாய் தெரியும் தருணங்களை உணர்த்துகிறார், மஞ்சுபாஷிணி தனது, காதல் உயர்வாய் தெரிகிறது. கவிதையில்.



பேச்சு,செயல்,வாசனை என உலகத்தில் எந்த ஒரு செயலாலும் ஒருவரின் நினைவை தூண்டிவிட முடியும்,ஒரு மனிதனை சந்தோஷ படவைக்க, வருத்தப்பட வைக்க, ஏங்க வைக்க, தோற்கடிக்க என எல்லவற்றையும் செய்ய முடியும்,  நினைவுகளால்.. என்கிறார் கார்த்திகேயனி.



இங்க ஒருத்தர பாருங்க, கல்யாணம் ஆன புதுசுல வீட்டு சாவியை கணவர் எடுத்துக்கொண்டு அலுவலகம் போய்விட பாவம் இன்னொரு சாவி இல்லாம கஷ்டப்பட்ட இவங்களோட நிலைமைய அழகா பகிர்ந்திருக்காங்க, வண்ட்டூ மாமா.  பதிவுல. இப்ப நிலைமை எப்படீங்கற வெங்கட் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா ஆதி?



ஸ்ரீராம் மற்றும் இன்னும் நான்கு பேர் சேர்ந்து ஆ’சிரி’யர்களாக இருந்து, கதை,கட்டுரை அனுபவம் ,நகைசுவை என்று கலக்கராங்க, பாலமுரளி, Mr.Ali.. ஆன கதையை தெரிஞ்சுக்கணுமா? வாங்க எங்கள் Blog க்கு



எப்பவுமே மத்தவங்க பொருளுக்கு ஆசைபடக்கூடாது, ஆசைப்பட்டு சபைக்கு முன் தலைகுனியக்கூடாதுன்னு அப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்கிறார் நாஞ்சில் மனோ.அதற்காக அவங்கப்பா சொன்ன கதையை எங்கப்பா சொல்லித்தந்த நீதி....பதிவுக்கு போய் பார்த்து நாமும் தெரிஞ்சுக்கலாம்...




தான் சின்ன வயசுல இருந்தப்ப போஸ்ட் கார்ட் எல்லம் 15 பைசவுக்கு கிடைத்தது, இப்ப மொபைய்ல்,இ-மெயில் எல்லாம் வந்ததுல தபால் கடிதம் எழுதும் பழக்கமே விட்டுப்போச்சு என்கிறார் மாதவன் தனது, சின்ன வயசு ஞாபங்கள்..என்கிற பதிவுல.




கிராமத்து நினைவுகளை நிறைய எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச்சொல்லும் சுவை அதற்கு இருக்கு என சொல்லுகிறார் குமார் தனது கிராமத்து நினைவுகள்:பொன்வண்டும்,சில்வண்டும். என்கிற பதிவுல..



கழைக்கூத்தாடியின் கயிற்று நடைதான் ஆண் பெண் தோழமை.நூலிழை இடைவெளியை நூதனமாக கையாளத்தவறினால் என்ன ஆகும் என்று உணர்த்துகிறார், சத்ரியன் தனது, நூலிழை தவம் என்கிற கவிதையில்.



நேரமின்மை ஒரு மாயை-விரும்பிய வேலைகளுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா? அது போல குழந்தைகளின் வளரும் பருவத்தில் நேரம் ஒதுக்கி அவர்களை நல்வழி படுத்த எப்படி டீன் ஏஜ் பருவத்தில் குழந்தைகளிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று விளக்குகிறார் மாதவி தனது, டீன் ஏஜ். பதிவில்.



நாளை மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
ரமாரவி.






Friday, November 18, 2011

வலைச்சரத்தில் வெள்ளி...


வணக்கம்.


File:Venus-real.jpg


வெள்ளிக்கிழமை நம் சூரிய குடும்பத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளியின் (வீனஸ்) பெயரால் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி கிரகம் தன்னைதானே சுற்றிக்கொள்ள எடுக்கும் கால அளவு 243 நாட்களாகும்.அது சூரியனை ஒரு முறைசுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவும் ஏறக்குறைய தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் கால அளவே ஆகும்.(225 நாட்கள்).வெள்ளியை பற்றி முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த கிரகம் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல், ‘இடமிருந்து வலமாக’ தன்னைதானே சுற்றுகிறது. வெள்ளி கிரகம் சுக்கிரன் என்றும் அழைக்கப்படுகிறது.



சிறப்புமிக்க வெள்ளியில் ஆன்மீக பதிவுகளை பார்க்கலாம்.


ஆன்மீக பதிவு என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது, இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவுகள்தான். நம் கண்ணை கவரும் வகையில் படங்களும் கருத்தை கவரும் வகையில் கோவில்கள் பற்றிய தகவல்களும் நிறைந்ததாக இருக்கும் அவரது பதிவுகள்.


தக்குடு தன்னோட பதிவுல, அம்பாளப்பத்தி வர்ணனை செய்துட்டு, “இந்த மாதிரி ரூபத்துல அம்பாள மனசுல நினைச்சுப்பாருங்கோ, அதுக்கப்புறம் நாம் வேறு யாரையும் சுந்தரியா நினைக்க மாட்டோம்” அப்படின்னு சொல்லரார்.அம்பாள எப்படி வர்ணனை பண்ணரார்ன்னு தெரிஞ்சுக்கணுமா? வாங்க, உம்மாச்சி காப்பாத்து  பதிவுக்கு.


 “அம்பாளின் அருள் வெள்ளமானதும் நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் முழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது” என்று அம்பாளின் அருளைப்பற்றி நமக்கு விளக்குகிறார் கீதா சாம்பசிவம் அவர்கள் தமது  ஸெளந்தர்ய லஹரி.. பதிவுல..


துயரம் எல்லை கடந்து தாள இயலாமல் நிற்கும்போது அதை இறக்கி வைக்க கடவுள் நமக்குத் தேவைப் படுகிறார்.ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும்? சரணாகதி தத்துவம் மிகவும் எளிமையானது என்று திரு.ஐய்யப்பன் கிருஷ்ணன், அதீதம் கடைசிப் பக்கத்தில் தெரிவிக்கிறார்.


திருப்பதி பெருமாளைப்பற்றி அரிய தகவல்கள் தெரிய வேண்டுமா.வாங்க மகாராஜன் அவர்களின், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் ரகசியங்கள்  பதிவுக்கு. இவருக்கு கிடைத்த திருப்பதி பெருமாள் பற்றிய விவரங்களை தொகுத்துக்கொடுத்திருக்கிறார்.பெருமாளைப்பற்றி நிறைய புது தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.


முருகப்பெருமான் தெய்வானையை மணந்துகொண்ட இடம் எது? முருகப்பெருமானின் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் எது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதற்கான விடைகளை ராஜி அவர்களின் அறுபடைவீடுகள்.. பற்றி ஆரம்பித்திருக்கும் பதிவில் தெரிந்து கொள்ளலாம். அறுபடைவீடுகள் பற்றிய அரிய தகவல்கள் திரட்டிக்கொடுத்திருக்கிறார்.


நீர்,நிலம்,கடல்,காற்று ,எறும்பு,பறவை,பொன் பொருள் இப்படி நாம் பார்க்கும்,உணரும் இடங்களில் எல்லாம் ஆண்டவன் நிறைந்திருக்கிறான்,அவன் இந்த உலகை ஆள்பவன் என உணர்த்துகிறார் மலிக்கா தனது,   ஆண்டவனில்லை. என்கிற கவிதையில்.



அலுவலகம் ஆனாலும் சரி, வீடு ஆனாலும் சரி,நமது கடமைகளை வரிசைப்படுத்தி தவறாது செய்யவேண்டும் என சொல்லுகிறார் ஹுஸைன்னம்மா தமது, கடைசிக் கடமை.. பதிவில். ஹஜ் யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள அருமையான பதிவு இது.


ஜகத்குருவின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள எல்.கே.அவர்களின் பதிவுக்கு செல்ல வேண்டும். சங்கரரின் வாழ்கையை மிக அழகாக எளிய முறையில் விளக்குகிறார் தமது,  ஜகத்குரு. என்ற பதிவுத்தொடரில். இவர் தற்போது தனது பாகீரதி பதிவு பக்கம் வருவது மிகவும் குறைந்து விட்டது. தொடர்ந்து ஜகத்குருவைப்பற்றி தெரிந்து கொள்ளும் முகமாக பதிவுகளை எதிர்ப்பார்க்கலாமா, கார்த்திக்?


கோவில்களில் உருவ வழிபாடு செய்வதற்கும், த்வஜஸ்தம்பம் என்கிற கொடிமரம் அமைப்பதற்கும் உண்டான காரணத்தினை நமக்கு அழகாக சொல்லுகிறார், ராஜி தமது , கோவிலின் சில தாத்பர்யங்கள். என்ற பதிவில்.கோவிலுக்கு சென்று நாம் வணங்கும் பொழுது பஞ்ச பூதங்களும் எவ்வாறு நம் உடலுக்கு இடம் பெயர்ந்து நன்மையை கொடுக்கிறது என அருமையாக விளக்கியுள்ளார்.

தர்ம வழியில் நமது செயல்கள் இருப்பது உத்தமம் என்று கூறும் சீனிவாச கோபாலன்,மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்ப மாட்டோமோ, அந்த ஒன்றை நாம் மற்றவர்களுக்கு செய்யாமல் இருப்பதே தர்மம்,என்று தர்மத்திற்கு அர்த்தம் கூறுகிறார் தனது,  பகவத் கீதை தொடரில்.


ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?  ஐயா திரு ரத்தினவேல் நடராஜன் அவரிகளின் பதிவுக்கு சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்,சதுரகிரி சித்தர் மலை கோவில் ஆகியவற்றை பற்றிய அழகிய படங்களுடன் அரிய தகவல்களுடன்  தெரிந்து கொள்ளலாம்.



நாளை மீண்டும் சந்திப்போம்


அன்புடன்
ரமாரவி.


Thursday, November 17, 2011

வலைச்சரத்தில் வியாழன்...


வணக்கம்.

File:Jupiter gany.jpg



வியாழக்கிழமை சூரிய குடும்பத்தின், ஐந்தாவது கிரகமாகிய வியாழனைக் குறிக்கிறது. ஜுப்பிடர் எனப்படும் வியாழன் சூரியனை சுற்றி வரும் கிரகங்களிலேயே மிகப்பெரியதும் ஆகும்.இது புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற பாறைக்கிரகங்கள் மாதிரி அல்லாமல் முழுவதும் வாயுக்களினால் ஆன கிரகமாகும்.இதன் உட் பகுதியில் சிறிதளவு உலோகக்கலவை இருந்தாலும் மேற்பரப்பு முழுவதும் திட பொருட்கள் ஏதுமில்லாமல் வாயுக்களால் நிறம்பப்பெற்றுள்ளது.வியாழன் மிகப்பெரிய வடிவமாக இருந்தாலும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் 10 மணி நேரம் மட்டுமே ஆகும்.சூரியனை சுற்றும் இதன் நீள் வட்டப்பாதை பெரியது ஆதலால் இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 12 வருடங்கள் ஆகும். இதன் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைவிட அதிகமாகும்.


வியாழன் கிரகம் பிரகஸ்பதி என்றும் கூறப்படுகிறது.பிரகஸ்பதி என்றால் குரு என்று அர்த்தம். தனக்கு தெரிந்தை, தான் கற்றதை சொல்லிக் கொடுத்து அஞ்ஞானம் என்கிற இருட்டைப்போக்குவதால் ஆசிரியர்களை,  "குரு" என்கிறோம். அப்படி நமக்கு கற்றுத் தருபவர்களைப்பார்க்கலாம் குரு நாளாகிய இன்று.


இயந்திரகதியாகிவிட்ட இந்த நாட்களில் ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்கக் கூட நாம் கணணியையும்,தொலைப்பேசியையும் நாடுகிறோம்.நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பது மிகக்குறைந்துவிட்டது. நேரில் செல்லாவிட்டலும் பரவாயில்லை ஒரு அழகான வாழ்த்து அட்டையாவது அனுப்பலாம் அல்லாவா? Angelin Sundaram  தனது,  காகிதப்பூக்கள்.. பதிவில் நமக்கு அழகான வாழ்த்து அட்டைகள் மற்றும் பலவித கைவேலைப்பாடுகள் செய்ய சொல்லித்தருகிறார். அதை பார்த்து நாமும் செய்யக்கற்கலாம் வாருங்கள்.....


புகைப்படம் எடுப்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடாது. உங்களுக்கு அழகிய புகைப்படங்கள் எடுக்க வேண்டுமா?அதைப்பற்றியும் அதன் தொழில்நுட்பம் பற்றியும் அறிய வேண்டுமா? இதோ தமிழில் புகைப்பட கலையை கற்றுத்தருகிறார்கள்.பிட். (PIT_Photography in Tamil) என்ற குழுவினர்.


 ‘பிட்’ பதிவை பார்த்து புகைப்பட கலையை தெரிந்து கொண்டுவிட்டோம். இப்பொழுது புகைப்படம் எடுப்பது சுலபமாகிவிட்டதா? சரி, அதை எப்படி அசைய வைப்பது?  ஸ்ரீதர்.சாதாரண படங்களை அனிமேஷன் படம் ஆக்க கற்றுத்தருகிறார் தனது,  சித்திரம் பேசுதடி.. பதிவில்.


புகைப்படம் எடுத்து அனிமேஷன் செய்ய கணணியை பயன் படுத்த வேண்டுமே! கணணியை எப்படி கையாள்வது?  கவலையை விடுங்கள். கணணியைப்பற்றிய அடிப்படையான விஷயங்களை கற்றுத்தருகிறார் வாசுதேவன் திருமூர்த்தி,தமது தொண்டு கிழங்களுக்கு கணணி என்கிற பதிவில்.


ஜோதிடம் தமக்கு தொழில் அல்ல எனக்கூறும் திரு. சுப்பையா அவர்கள், தான் படித்த, கற்றுணர்ந்த ஜோதிடத்தை பலரும் தெரிந்து கொள்ளும்விதமாக, தனது திறந்தவெளி வகுப்பறையில் எழுதுவதாக தெரிவிக்கிறார்.  நாமும் ஜோதிடம் கற்கலாம் வாங்க இவரது வகுப்பறையில்..


வலைத்தலங்கள் பற்றி ஏதாவது தகவல் தேவையா? இலவச மென்பொருட்கள் தரையிறக்குவது பற்றிய தகவல்கள் தேவையா? அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் சசிகுமார். இவரது வந்தேமாதரம்..  பதிவிலிருந்து நாம் வளைத்தளம் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம்.


நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் தேவை.நம் உடலை எப்படிப் பேணி பாதுகாக்க வேண்டு என்று விளக்குகிறார் ரமேஷ் அவர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக நிறைய பயிற்சிகளை கற்றுத்தருகிறார் தமது,  அன்பு உலகம் பதிவில்.



தையல் கலை, அழகு குறிப்புகள், வர்ணவேலைப்பாடு, கைவினைப் பொருட்கள் இவற்றைப்பற்றி கற்க வேண்டுமா? வாங்க தமிழ் குடும்பம், பதிவுக்கு செல்லலாம்,  இது உங்க குடும்பம் என்று நம்மை அழைத்து சொல்லிக் கொடுக்கிறார்கள்.


வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு போறீங்களா? அங்க கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும்? கேட்கப்படும் கேள்விகளுக்கு தடுமாற்றம் இல்லாமல் பதில் சொல்லணுமாம். எப்படீன்னு இந்திரா நமக்கு சொல்லிக்கொடுக்கறாங்க. வாங்க இந்திராவின் கிறுக்கல்கள். இங்க போய் நாமும் நேர்முகத்தேர்வுக்கு எப்படி தயாரா இருக்கணும் அப்படீன்னு தெரிஞ்சுக்காலாம்.


நீங்க பொறியியல் படிப்பு படிக்கறவரா? அப்படீன்னா வாங்க தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பதிவுக்கு. மெக்கானிகல் துறையினருக்காக..தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.படித்து பயன் பெறலாம்.






நாளை மீண்டும் சந்திப்போம்.


அன்புடன்,
ரமாரவி.

Wednesday, November 16, 2011

வலைச்சரத்தில் புதன்..


வணக்கம்..



File:Mercury transit 1.jpg



புதன்கிழமை  நம் சூரிய குடும்பத்தின் முதல் கிரகமும், மிகச்சிறியதுமான  புதன் கிரகத்தின்  பெயரால் வழங்கப்படுகிறது. புதன், சூரியனைச் சுற்றிவரும்  வட்டப்பாதை மிகச் சிறியது, எனவே இது சூரியனை  ஒரு முறை  சுற்ற  எடுத்துக்கொள்ளும் காலம்  88  நாட்கள் மட்டுமே. புதன் சிறியதாக இருந்தாலும், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் 59 நாட்களாகும். தோற்றத்தில் நிலவை ஒத்துள்ள இதற்கும் நிலவு மாதிரியே வளிமண்டலம்   கிடையாது. இந்த  கிரகம்  சூரியனுக்கு  மிக  அருகில்  இருப்பதால்  மிகுந்த வெப்பத்துடன்  காணப்படுகிறது. மேலும், சூரியனின் ஓளியில் இது மறைக்கப்படுவதால் இதனைக்காண்பது மிக அறிது. எனவே நம் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது எனக்கூறியுள்ளார்கள்.






பொன்னான புதன் கிழமையில் படிப்பதைப்பற்றி அறிமுகங்கள்...


நாம் புத்தகத்தை படிக்கும் போது எப்படி கையாளுவோம்? சிலர் அதனை மடித்து வைத்து படிப்பார்கள், சிலர் அதனை சுருட்டி வைத்து படிப்பார்கள். நான் எப்படிப் படிப்பேன் தெரியுமா? எனக்கு முது வலி, கை வலி, கால் வலி வந்தாலும் பரவாயில்லை ஆனால் புத்தகத்துக்கு வலிக்கக்கூடாது என்ற விதமாக புத்தகத்தை வைத்து படிப்பேன். சிலர் புத்தகத்தை இரவல் வாங்கிச்சென்று திருப்பித்தரும்போது அதனை கிழித்து கசக்கி கொடுப்பார்கள். அதை பார்க்கும் போது எனக்கு ரத்தக்கண்ணீர் வரும். திரு.கணேஷ் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமா அவருடைய புத்தகத்தை நேசிப்பவர்களா நீங்கள். பதிவிலிருந்து..



சரி புத்தகம் படித்தாயிற்று, படித்துவிட்டு பேசாமல் இருந்தால் எப்படி விமர்சனம் செய்ய வேண்டமா? ஒரு புத்தகத்தை படிப்பது மிக எளிது அதனை புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது என்பது மிகக் கஷ்டம்.
புத்தக விமர்சனம் படிக்கும் போதே அந்த புத்தகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று நாம் முடிவு செய்யவேண்டும்.அப்படி புத்தக விமர்சனம் செய்வது ஒரு கலை. திரு கோபி அவர்களுக்கு அது கைவந்த கலை. அவருடைய . மரக்கால்,  ,    பின் தொடரும் நிழலின் குரல்.  ஆகிய நாவல்களின் விமர்சனத்தை படித்ததும் அந்நாவலைகளை உடனடியாக வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை தடுக்க முடியவில்லை.


பெற்றோரும்உற்றோரும் தம் பிள்ளைகளுக்கு படித்துச் சொல்ல நல்லபுத்தகம் என்கிறார்திரு அப்பாதுரை , அமுதன் குறள்  என்கிற புத்தகத்தை பற்றிசொல்லும் போது.  இன்றைய காலத்திற்கு ஏற்ற நெறிகளை எளிய முறையில அருமையான தமிழில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும்,  தமிழர் இலக்கியம். என்ற புத்தகத்தை பற்றி இவர் குறிப்பிடும்பொழுது ஆரிய திராவிட பிரசாரத்துக்கப்பால்  பார்க்கும் தமிழ் ஆர்வம் உள்ள முதிர்ந்த வாசகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் எனக்கூறுகிறார்.




புத்தக விமர்சனதிற்காகவே பதிவு ஆரம்பித்தது போல உள்ளது சிமுலேஷன் படைப்புகள். திரு சுந்தர்ராமன் எந்த ஒரு புத்தகத்தையும் விட்டுவிடவில்லை, இவரது பதிவிலிருந்து  நமக்கு அரிய பல புத்தகங்கள் கிடைக்கின்றன. 


ஒரு புத்தகத்தை படிப்பது உடனே மறந்துவிடுவதற்கல்ல, அழுகையோ சந்தோஷமோ அதை படித்த நினைவுகள் நம்மை பாதிக்க வேண்டும் அப்பொழுதுதான் அது அருமையான புத்தகம் என்று நான் நினைக்கிறேன்.  “கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். நினைவுகள், அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத மனதை பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது”.  என்று மிக உணர்ச்சிபூர்வமாக கூறியிருக்கிறார் தான் படித்த புத்தகத்தை பற்றி வித்யா அவர்கள் தன்னுடைய நெடுஞ்சாலை.. என்ற பதிவில்.


”வாழ்கை என்பது,ஒரு சில சம்பவங்கள்-பல பல உணருதல்கள். திரெளபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இதுவரை படித்ததுண்டு.ஆனால் அவளது வாழ்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்தது, அவளுடன் வாழ்ந்தது இதுவே முதல் முறை” என்று இரண்டே வாக்கியங்களில் அந்தப் புத்தகத்தின் தாக்கத்தை மிக அழகாக நம்மையும் உணர வைக்கிறார் மாதங்கி தன்னுடைய இந்திரபிரஸ்தம் என்ற பதிவில்.



முத்துக்கள் பத்து என்ற புத்தகத்தை பற்றி குறிப்பிடும் போது அதில் முதல் கதையும்,கடைசி கதையுமே தன்னை மிகவும் கவர்ந்ததாக சொல்லுகிறார் மோகன் குமார், அவர்கள், “கதை எழுதுவோரில் பலரும் தங்கள் நேரடி அனுபவங்களை எழுதுவர்இதனால் அவர்களும் கதையில் இருப்பர்ஆனால் வண்ண நிலவன் கதைகளில் அவர் இல்லைஅவர் பார்த்த எளிய மனிதர்கள் தான் கதை மாந்தர்கள்திருநெல்வேலி மொழி இவரது எழுத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறதுகுறிப்பாக அனைத்து கதைகளிலும் மனைவி திருநெல்வேலி தமிழில் கணவனை திட்டுவது....ஆனந்தமாக உள்ளது. ” என்று குறிப்பிடுகிறார் முத்துக்கள் பத்துகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு வண்ண நிலவனைப்பற்றி  குறிப்பிடுகையில்.



விருந்தினரை கை கொடுத்து வர வேற்பது தமிழர் பண்பாடுதானா? என்ற கேள்வியை ”புறநானுறு தமிழ் நாகரிகம்” என்னும் நூலில் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் முன் வைத்து அதற்கு அவர் கூறும் சான்றான புறப்பாடலை பற்றி விளக்குகிறார் முனைவர் திரு.குணசீலன் அவர்கள். கைகொடுத்து வரவேற்பது மேல்நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்கு கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்ற கேவிகளுக்கு விடை தருகிறார் தமது வருக! வருக! என வரவேற்கிறேன்! என்ற தனது பதிவில்.




”வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம், மாராய் இத்தொகுப்பில் விடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்துக்கொண்டே வந்ததில்…அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன்” என்கிறார் லேகா  ’யுவன் சந்திரசேகரன்” அவரிகளின் ’மணற்கேணி’ புத்தகத்தை பற்றி சொல்லும் போது. மேலும், ‘யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்து விட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல’ என்கிறார்.. லேகாவின் எழுத்தினை உணர வாருங்கள்,  யாழிசை ஓர் இலக்கிய பயணம்  என்ற பதிவிற்கு.



நாளை மீண்டும் சந்திப்போம்.


அன்புடன்
ரமாரவி.

--------------------------------------------------------------------------------------------