தாழம்பூ – இயற்கைச் சரம்
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
இயற்கை
அன்னை எத்தனையோ வியப்பான விஷயங்களை நமக்குத் தந்திருக்கிறாள். மரங்கள், செடி-கொடிகள்,
விலங்குகள், பறவைகள், நீர் நிலைகள் என அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள். நெய்வேலி நகரில்
மா, பலா, புளி, முழு நெல்லிக்காய், அறி நெல்லிக்காய், வேம்பு, கல்யாண முருங்கை, முருங்கை,
எலுமிச்சை, வாழை என வித விதமாய் மரங்கள் சூழ வாழ்ந்து மரங்களின் அருமையை உணர்ந்தவன்
நான்.
அப்படி இருந்த நெய்வேலியின் ஒரு புகைப்படம் கீழே…
சமீபத்தில்
அடித்த ”தானே” புயலில் எப்படியெல்லாம் உருக்குலைந்து போய் விட்டது எனது நெய்வேலி… :(
எத்தனை
பேரழிவு! விழுந்த மரங்கள் எத்தனை எத்தனை? அவைகள் எடை போடப்பட்டு ஐம்பதாயிரம் டன் விறகுகள்
செங்கல் சூளைகளில் எரிப்பதற்காக ஏலமிடப்பட்டு
எடுத்துச் செல்லப்பட்டது எனப் படித்தபோது மனதில் உதிரம்! பக்கத்து ஊரான பண்ருட்டி பலாவுக்கும்,
முந்திரிக்கும் பேர் போனது. இப்போது அங்கே முந்திரிக் காடுகளே இல்லா நிலை. இனி அவைகளைப் பெற இன்னும்
பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
இயற்கையைப்
போற்றும் பதிவுகளை தமிழில் எழுதுபவர்கள் மிகக் குறைவுதானோ! அப்படி எழுதுபவர்களும் அவ்வப்போது
தான் எழுதுகிறார்கள். அப்படிப் பட்ட சிலரது பதிவுகளைப் பற்றி இன்று பார்க்கலாம்.
ஆங்கிலத்தில்
Ornithology என்று சொல்லப்படும் பறவைகளைப் பற்றிய இயல் மிகவும் ரம்யமான ஒன்று. ஒரு
பறவையைப் பார்ப்பதற்கென்றே பல நாட்கள் காத்திருப்பது சிலருக்கு பிடித்த விஷயம். செண்பகப் பறவை - செம்போத்து பறவையை இரண்டரை கிலோமீட்டருக்கு மேல் தொடர்ந்து
சென்று பார்த்ததையும் Bird Watching பற்றியும் அழகாய் எழுதி இருக்கிறார் இயற்கை நேசி.
”ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2 மரக்கன்னு நட்டாக்கூட, வருசத்துக்கு நூத்திநாலு மரம் நடலாம். என்னா ஒரு அரைமணி நேரம் செலவாவுமா? ஆனா நாம நடறது இல்ல. நம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு விளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா? உங்க குழந்தைய கூட்டிப் போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க தெரியுங்களா?” எனச் சொல்லி மரம் நடுவோம் வாருங்கள் என அழைக்கிறது
மரம் வளர்ப்போம் வலைப்பூ.
வெட்டி
வேர் பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம். முதல் மரியாதை படத்தில் வந்த “வெட்டி வேரு
வாசம்” பாடலை எத்தனை தரம் முணுமுணுத்திருப்போம். கோடை காலங்களில் வெட்டி வேர் சர்பத்தை
எவ்வளவோ முறை குடித்திருப்போம். அந்த வெட்டி வேரை சரிவுகளில் வளர்ப்பதன் மூலம் மழை
நீரை சேகரிக்க முடியும் என்று
தனது வலைப்பூவில் எழுதியிருக்கிறார் நண்பர் வின்செண்ட். இது பற்றிய
அவரது காணொளி கீழே.
”நமது
வனங்களில் எண்ணிலடங்கா மூலிகைகள் கொட்டிக் கிடக்கின்றன. அது பற்றி தெரிந்தவர்கள் குறைந்து
கொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு மூலிகைக்கும் என்னென்ன பண்புகள், அவற்றின் பயன் என்ன,
அவைகள் என்ன நோய்களைக் குணப்படுத்தும் என்பது நமக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்”
என யோசிப்பவரா நீங்கள்? அற்புத மூலிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய
தளம் திரு குப்புசாமி அவர்களுடைய மூலிகை வளம்.
“காடுகளையும், மரங்களையும், மலை, மழைத்துளிகளையும் காதலிப்போம். ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு செல்வோம். மலை அழகை பாதுகாப்போம்” என தனது பக்கத்தில் அறிமுகமாக சொல்லியிருக்கும்
“பசுமை இந்தியா” ”மரம் வளர்த்து மனிதம் வளர்ப்போம்” எனச் சொல்லி இருக்கிறார்.
பறவைகள்
இயற்கை நமக்குத் தந்த வரம். முட்டையிலிருந்து பெரிய பறவையாகும் வரை பார்க்கக் கிடைத்தால்?....
ஒரு காகம் இப்படி உருவாவதை படம் பிடித்து அதை தினத்தந்தியில் வெளியிட்டதை இங்கே பகிர்ந்திருக்கிறார்
நண்பர் செந்தில்.
என்ன நண்பர்களே, இயற்கையைப் பற்றிய சில பகிர்வுகளைப் படித்தீர்களா? நாளை வேறு ஒரு பூச்சரத்துடன் சந்திக்கிறேன். அதுவரை பார்த்து ரசிக்க கீழே ஒரு அருமையான பாடல் காணொளி….
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
|
|
வணக்கம் நண்பரே,
ReplyDeleteதங்களின் பணியில் வலைச்சரம் மிளிர்கிறது.
இயற்கையை நேசிக்கச் சொல்லும் இன்றைய
பதிவுகள் அறிமுகங்கள் அத்தனையும் அழகு.
கடைசிப் பாடல் நெஞ்சை கொள்ளைகொண்ட பாடல்.
நீரின் பெருமையைக் கூறும் அற்புதமான பாடல்.
arimukam seyya patta pathivarkalukku-
ReplyDeletevaazhthukkal!
மிகவும் பயனுள்ள பகிர்வுகளை அளித்து வலைச்சரத்தை மணம் கமழ்ச் செய்தமைக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி மிக..என் வலைப்பூவினையும் பெருமைப்படுத்தியதற்கு... தாழம்பூவின் வாசம் மனதை நிறைக்கிறது.
ReplyDelete@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDeleteஎனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
@ சீனி: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனி!
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ஷைலஜா: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅனைத்தும் அருமை...இயற்கையை நேசிப்போம்..
ReplyDeleteதாழம்பூக்களுக்கு வாழ்த்துக்கள்.அவற்றை எங்களுக்கு அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇயற்கையின் அழகை எடுத்துச் சொல்லி ரசிக்க செய்ததற்கும் நன்றி.அதனுடன் எனக்கு மிகவும் பிடித்தமான பாடலையும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி
@ கோவை நேரம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ராஜி: தாழம்பூவின் மணத்தை ரசித்தது மட்டுமல்லாது, உங்கள் மனதிற்குப் பிடித்த பாடலையும் கேட்டு ரசித்ததற்கும் மிக்க நன்றி ராஜி!
ReplyDeleteஇய்றகைப் பற்றிய பதிவுகள் நச்சென்று அருமை.நல்ல பாடல் பகிர்வு.தீம் தனனா தீம் தனனா..இன்று இந்த பாடல் தால் தான் வாயில் இருக்கும்.
ReplyDelete@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDeleteபாடல் இன்று முழுவதும் உங்கள் நினைவில் இருக்கும்.... :) அதனால் எனது பகிர்வும்.... நன்றி சகோ.
Arumaiyana Arimugankal.
ReplyDelete@ துரை டேனியல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை டேனியல்.
ReplyDeleteதாழம்பூவின் மணம் இன்று தூக்கலா இருக்கு!!!!!
ReplyDeleteஒன்றிரெண்டைத்தவிர எல்லாமே புதிய அறிமுகங்கள் எனக்கு!!!!!
வெட்டிவேர் அருமை!
நன்றிகள்.
@ துளசி கோபால்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வுகளை அளித்து வலைச்சரத்தை மணம் கமழ்ச் செய்தமைக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteTHE INTRODUCTIONS ARE VERY NICE.
ReplyDeleteதாழம் பூவின் வாசம்-இயற்கை
ReplyDeleteதன்மைக்கு மணமாய் வீசும்
வாழும் வலைச் சரம்தன்னில்-தேன்
வடியும் வார்த்தைகள் எண்ணில்
வீழும் அருவியைப் போற்ற-எங்கும்
வீசும் தென்றலை சாற்ற
சூழும் இயற்கை வலைகள்-எடுத்து
சொன்னீர் சிலரின் வலைகள்
நன்றி!
சா இராமாநுசம்
வணக்கம். தாழம்பூ மணத்துடன் எனது ;மூலிகைவளம்' மணத்தையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி. மற்ற நல்ல வலைப்பதிவை காணும் வாய்ப்புக்கும் நன்றி. மணம் மக்களுக்கு அடைய எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇயற்கை பற்றி இவ்ளோ பேர் எழுதுறாங்களா !!!!!
ReplyDeleteபாடலும் பகிர்வும் அருமை வெங்கட்.
ReplyDeleteஇயற்கையை போற்றுவோம்.
@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா!
ReplyDelete@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDelete@ புலவர் சா இராமாநுசம்: இயற்கை மணம் வீசும் தாழம் பூவிற்கு அருமையாக பா எழுதியதற்கு மிக்க நன்றி புலவரே.
ReplyDelete@ குப்புசாமி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மணம் பரவட்டும்!
ReplyDelete@ மோகன்குமார்: ஆமாம் மோகன். ஆனால் இன்னும் பலர் எழுதினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
@ கோமதி அரசு:
ReplyDelete//இயற்கையைப் போற்றுவோம்...// போற்றினால் நல்லது...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா!
இயற்கையைப் பற்றிய பதிவுகளை வாசிப்போம். இயற்கையை நேசிப்போம்.
ReplyDelete@ நிசாமுதீன்: நன்றி நண்பரே....
ReplyDeleteஇயற்கையை ரசித்து பச்சைப் பசேலென்ற பதிவு.இனிமையான பாடல்!
ReplyDeleteஆஹா தாழம்பு என்றதும் சின்ன வயதில் தாழம்பு ஜடை எனக்கு தைத்து தான் நினைவுக்கு வருது.
ReplyDeleteஇய்ற்கைசரம் அறிமுகங்களும் அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபாடலும் இயற்கை பற்றிய பார்வையும் கொண்ட பதிவு சிறப்பு சகோ!
ReplyDeleteஇயற்கையைப் போற்றி எழுதியவர்களை, போற்றித் தொகுத்திருக்கும் சரம் மிக அருமை.
ReplyDeleteஇயற்கையின் அருமை பெருமைகளை பேசும் தங்களின் வலைச்சரம் மணக்கிறது... வாழ்த்துகள்...
ReplyDelete@ ஹேமா: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDelete@ ஜலீலா: ம்ம்ம்ம்.... உங்களது நினைவுகளையும் தூண்டி விட்டுட்டேனா.... எங்க அக்கா-தங்கைகளுக்கும் சிறு வயதில் தாழம்பூ வைத்து சடைபின்னுவார்கள் பெரியம்மா.. :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ ஜலீலா: இரண்டாம் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ தனிமரம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ குடந்தை அன்புமணி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ Suriya The Best Actor: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... உங்களது வலைப்பக்கத்திற்கும் வருகிறேன்.
ReplyDeleteபல நல்ல வலைப்பூக்களை வைத்து மிக அழகாக "இயற்கை சரத்தை" தொடுத்துள்ள உங்களுக்கு மிக்க நன்றி. அதில் வெட்டிவேரையும் தொடுத்து பிரபலப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. 120 நாடுகளுக்கு மேல் நம் வெட்டிவேரை பயன்படுத்தி "வெற்றிவேராக" மாற்றியுள்ளார்கள்.
ReplyDelete@ வின்செண்ட்: தங்களது வருகைக்கும் ”வெற்றிவேர்” செய்திக்கும் மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து உங்கள் பணியைச் செய்ய வழி பிறக்கட்டும்.
ReplyDeleteதாழம்பூவின் மணத்திற்கு இணையுண்டோ?..அத்தனை அறிமுகவாளர்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள். தீம் தனன பாடலும் இயற்கை அழகுடன் அருமை. எனக்கும் பிடித்த பாடல்.இயற்கையை விரும்பாதார் யார்!.... நன்றி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@ கோவைக்கவி: தங்களது வருகைக்கும் இனிமையான கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஇயற்கை சரம் மனம் குளிரவைத்து அழைக்கின்றது.
ReplyDeleteஅறிமுகந்களுக்கு வாழ்த்துக்கள்.
@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
ReplyDelete