07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 18, 2012

காவல்கோட்டத்திலிருந்து…

மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம்.

என்னைக்காக்கும் காவல்கோட்டத்திலிருந்து பதிவுகளைத் தொடர்கிறேன். சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலுக்காக தனித்தளம் அமைத்திருக்கிறார்கள். இதில் காவல்கோட்டம் குறித்த நிறைய தகவல்கள் உள்ளன.

மதுரை மாவட்ட ஆட்சியரான சகாயம் அவர்கள் தொடுவானம் என்னும் தளம் மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார். சகாயம் செய்த சகாயமாக எவ்வளவோ விசயங்களை குறிப்பிடலாம். சீனாஅய்யா தொகுத்த சகாயத்தின் உரையை வாசியுங்கள். சகாயத்தைப் போன்று மற்ற அரசு அதிகாரிகளும் மாறினால் எவ்வளவு நல்லாருக்கும்.

மதுரையில் உள்ள மலைகளில் காணப்படும் தொல்லியல் சுவடுகளைக் காண பசுமைநடையாய் ஒரு குழு பயணித்து வருகிறோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் யானைமலை குறித்து உயிர்மையில் எழுதிய கட்டுரை பசுமைநடைக்கு வித்தாய் ஆனது. கீழ்குயில்குடி, திருப்பரங்குன்றம், குன்னத்தூர், முத்துப்பட்டி, விக்கிரமங்கலம் குறித்த நண்பர்களின் பதிவுகளைக் வாசியுங்கள். இதில் வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடையின் போது எங்களுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வந்திருந்தார். தமிழ்ச்சமணம் குறித்து அறிந்து கொள்ள பானுகுமாரின் வலைப்பதிவை வாசியுங்கள்.

யாழிசையின் பதின்பருவ நினைவுகளை வாசிக்கும் போது உங்கள் இளமைக்கால நினைவுகளும் ஞாபகம் வரும். சீனாஅய்யா மற்றும் நம்பிக்கைப்பாண்டியனின் பள்ளிக்கூட நினைவுகளை வாசிக்கும் போது உங்கள் பள்ளிஞாபகமும் வந்துவிடும். எழுத்தாளர் வெங்கட்சாமிநாதனின் நினைவுகளின் சுவட்டில் என்ற தொடரையும், கலாப்ரியாவின் ஓடும்நதி தொடரையும் வாசித்துப்பாருங்கள். அருமையான தொடர்பதிவுகள். பள்ளிக்கல்வி குறித்து தொடர்ந்து எழுதிவரும் மதுரை சரவணன் அவர்களின் தளத்தை வாசித்துப்பாருங்கள்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், கல்பகனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிவகங்கைபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பிரத்யேக வலைதளப்பகுதியிது. இந்தப்பள்ளியைப் போன்று மற்ற பள்ளிகளும் இது போன்ற நல்ல முயற்சிகளை எடுக்கலாமே. அந்தப் பள்ளிமாணவர்களை பாராட்டுவோம்.

சித்திரங்களின் மீது எனக்கு பித்து அதிகம். ஆனந்தவிகடனில் வரும் இளையராஜாவின் ஓவியங்கள் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நடிகரும், இயக்குனரும், ஓவியருமான பொன்வண்ணனின் சித்திரங்களைக் கண்டு ரசியுங்கள். புனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பிற ஓவியர்களின் தளங்கள் இருந்தால் பின்னூட்டமிடவும்.

நாட்டுப்புறக்கலைகள் எல்லாம் அழிந்து வருகையில் அதைத் தடுக்க சில நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் குறித்த தகவல்களுக்கான தனித்தளத்தைப் பாருங்கள். மதுரையில் தெருவோரத்திருவிழா என்று நிகழ்வை சித்திரவீதியில் நிகழ்த்தினர். அப்போதெல்லாம் தொடர்ந்து போய் பார்ப்பேன். நாட்டுப்புறக்கலைகள் குறித்த தொடரை கூடு தளத்தில் பார்க்கவும். ஒயிலாட்டம், கரகாட்டம் குறித்த வித்யாசாகரின் பதிவைப் பாருங்கள். பாரம்பரியத்தமிழிசை குறித்து அறிந்து கொள்ள அறிஞர் மம்மது அவர்கள் தளத்தைப் பாருங்கள்.

பனைமரம் தரும் பயனை அறிய ஆர்கானிக்ஆனந்த் தளத்தைப் பாருங்கள். முடக்காத்தான் என்னும் கீரை சுகப்பிரசவமாக உதவுகிறதாம். சிசேரியன் அதிகமாகி மருத்துவம் பணம் கொழிக்கும் தொழிலாகயிருக்கும் வேளையில் இந்தக்கீரை குறித்த தகவல் ஆச்சர்யத்தைத் தருகிறது. மதுரையில் முடக்காத்தான் என்று ஒரு கிராமம் இருக்கிறது.

பரண்களில் ஏற்றி வைத்த சாமான்களை இறக்கி, மீண்டும் பரணுக்கு ஏற்றுகிற இடைவெளியில் எங்கெங்கோ சென்று திரும்புகிறோம் நாம். அனுபவித்த போது இருந்த மனத்தை விட மீள் பார்க்கிற மனம் சற்றுக்கனிந்து கிடப்பதால், அனுபவங்களைப் புதிய வெளிச்சங்களில் அல்லது புதிய வெளிச்சக் குறைவுகளில் பார்க்கத் தோன்றுகிறது இப்போது. - வண்ணதாசன்

மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

-சித்திரவீதிக்காரன்





8 comments:

  1. சிறப்பான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நிறைய தளங்கள் எனக்கு புதிது ...!

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...,

    நன்றி சித்திரவீதிக்காரன் அவர்களே

    ReplyDelete
  3. anaithu thalangalum puthiyathu enakku!

    vaazhthukkal ungalukku!

    ReplyDelete
  4. ஒவ்வொரு நாளும் இத்தனை அறிமுகங்களா ? வாழ்த்துகள் .

    ReplyDelete
  5. //புனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள். //

    அருமையான அறிமுகங்கள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அனைத்துப் பதிவாளர்களிற்கும் வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  7. புனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள்.

    எமது தளத்துச் சித்திரத்தை சித்திரவீதிக்காரர் அறிமுகம் தந்து பெருமைப்படுத்தியத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  8. புனிதவெள்ளி அன்று வந்த பதிவில் கிறிஸ்துவும், கிருஷ்ணனும் சேர்ந்து உள்ளது போன்ற படத்தைப் பாருங்கள்.

    எமது தளத்துச் சித்திரத்தை சித்திரவீதிக்காரர் அறிமுகம் தந்து பெருமைப்படுத்தியத்தியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது