வைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்
➦➠ by:
* அறிமுகம்
அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு,
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த தம்பி வைரை சதீஷ் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக
நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.
இவர் வலைச்சரத்தில் ஒவ்வொரு நாளும் "பிடித்த பதிவுகள் சில" என்ற தலைப்பின் கீழ் தனது பார்வையில் கவர்ந்த இடுகைகளை அழகாக குறிப்பிட்டு நிறைய மறுமொழிகளையும் பெற்றுள்ளார்.
தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த தம்பி வைரை சதீஷ் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக மின்னல் வரிகள் வலைப்பூ கணேஷ் அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களாக புத்தக வடிவமைப்பாளராக சென்னையில் வசித்து வருகிறார். தினமலர், க்ரைம் நாவல், கிழக்குப் பதிப்பகம் ஆகியவற்றில்
வடிவமைப்பாளராகவும், ‘ஊஞ்சல்’ என்ற மாத இதழுக்கு வடிவமைப்பாளர் மற்றும்
உதவி ஆசிரியராகவும் இருந்த இவர் தற்சமயம் ‘தாம்ப்ராஸ்’ மாத இதழின் வடிவமைப்பாளனாக இருக்கிறார்.
மெல்லிசை கேட்பதிலும், நகைச்சுவை உணர்வும் மிக்க இவர் தனது வலைப்பூவில் சிறுகதைகள், அவர் படித்து ரசித்த படைப்புகள், பொக்கிஷமான பழைய
விஷயங்கள் என ஒரு பத்திரிகையை படித்த அனுபவம் ஏற்படுமாறு எழுதி வருகிறார்.
கணேஷ் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துக்கள் வைரை சதீஷ்...
நல்வாழ்த்துக்கள் கணேஷ்...
வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
நல்வாழ்த்துக்கள் கணேஷ்...
வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeletevaazhthukkal!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவைரை சதீஷூக்கு வாழத்துகள்..
ReplyDeleteஅன்பர் கணேஷ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்..
மின்னல் வரிகள் கனேஷ் சார் வாழ்துகள் , வலைச்சரத்தில் கலக்குங்க
ReplyDeleteபுதிய வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள “மின்னல் வரிகள்” திரு கணேஷ் அவர்களுக்கு அன்பான இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிமையுற தன் பணியை முடித்த
ReplyDeleteநண்பர் சதிஷிற்கு வாழ்த்துக்கள்...
ஆஹா. அடுத்து மின்னல் வரிகளால் எம் நெஞ்சில்
நீங்கா இடம் பிடித்த என் மனம் நிறை நண்பர் கணேஷ் அவர்களா???
வாருங்கள் நண்பரே..
வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்...
ஊஞ்சல் என்பது "உல்லாச ஊஞசல்"தானே?
ReplyDeleteமின்னல் வரிகளே ! கன்னல் வரிகளால் வலைச்சரம் வடிவமையுங்கள். பணிக்கு நல் வாழ்த்துகள்
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
எனக்கு வரவேற்பளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறை நன்றி!
ReplyDeleteஆஹா இந்த வாரம் நண்பர் கணேஷ் அவர்களின் வாரம்.... வாவ்...
ReplyDeleteவாழ்த்துகள் கணேஷ்.
அருமையான வாரமாக இது அமையும்
ReplyDeleteஎன்பதில் எவ்வித ஐயமும் இல்லை
ஆவலுடன் காத்திருக்கிறோம்
வாழ்த்துக்கள்
உளம்கனிந்த நன்றி வெங்கட் மற்றும் ரமணி ஸார்!
ReplyDeleteஆசிரிய பங்களிப்பினை நேர்த்தியாக செய்து விடைபெறும் நண்பர் வைரை சதீஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஇவ்வார ஆசிரிய பொறுப்பினை ஏற்று வழி நடத்த வரும் இனிய நண்பர் ‘மின்னல் வரிகள்’ கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் தம்பி சத்ரியன்!
ReplyDeleteபுதிய வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள “மின்னல் வரிகள்” திரு கணேஷ் அவர்களுக்கு அன்பான இனிய வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ‘மின்னல் வரிகள்’ கணேஷ்
ReplyDelete@ Lakshmi said...
ReplyDeleteஎன்னை வாழ்த்தி வரவேற்ற தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
@ கோவை மு.சரளா said...
அழகுத் தமிழில் அருமையாகக் கவி புனையும் தங்களின் வாழ்த்துக்களில் மனமகிழ்வு கொண்டு என் உளம்நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த வார ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் கணேஷ் சாருக்கு வாழ்த்துகள்.
ReplyDelete