கடம்பவனத்திலிருந்து...
கடம்பவனத்திலிருந்து பதிவுகளைத் தொடர்கிறேன். முதலில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான வண்ணநிலவனைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய அவர்அப்படித்தான் என்னும் கட்டுரை வாசித்துப்பாருங்கள். நீங்களும் வண்ணநிலவனின் தீவிர வாசகனாகிவிடுவீர்கள். வண்ணதாசனின் அகமும் புறமும் வாசித்துப்பாருங்கள். கவிஞரும் சமூகசேவகியுமான சக்திஜோதியின் தளத்தையும், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதிவரும் விஜயலட்சுமியின் தளத்தையும் வாசித்துப்பாருங்கள். இதுவரை குறிப்பிட்ட ஆறுபேருடைய எழுத்தையும் பதிந்து வரும் சுல்தான் அவர்களுக்கு நன்றிகள் பல. அறிவுமதி, யுகபாரதி, தமிழச்சிதங்கப்பாண்டியன் போன்ற கவிஞர்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துப்பாருங்கள். கவிதை மீதான உங்கள் காதலும் அதிகரிக்கும். விழியன் எடுக்கும் நிழற்படங்களைப்பார்க்கும் போது எனக்குப் பொறாமையாய் இருக்கிறது. நல்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரும் நற்றமிழன் தற்போது கூடங்குளம் அணுஉலைக்கெதிராக எழுதிவரும் பதிவுகள் முக்கியமானவை. பன்றிக்காய்ச்சலுக்குக்கூட மருந்துண்டு, ஐ.பி.எல் கிரிக்கெட் கிறுக்கிற்கு மருந்தில்லை என்னும் புரட்சிகரமாணவர்இயக்கத்தின் தளத்தைப் பாருங்கள். கிரிக்கெட் தவிர மற்ற நல்ல விளையாட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மனசை மேம்படுத்த மந்திரச்சாவி என்னும் தொடர் எழுதிவரும் எழுத்தாளர் நாகூர்ரூமியின் தளத்தை வாசியுங்கள். நெகிழ்வூட்டும் நினைவுகளைப் பதிந்து வரும் ஆருத்ரா தரிசனம் தளத்தில் சைக்கிள் குறித்த நினைவுகளை வாசித்து பாருங்கள். நீங்கள் சுஜாதாவின் வாசகரா? அப்பொழுது பாலஹனுமன் தளத்தைப் பாருங்கள். முன்பெல்லாம் பாட்டுப்புத்தகங்களை வாங்கி வைத்து சினிமாப்பாடல்களைப் பாடிக்கொண்டிருப்போம். உங்களுக்கு பிடித்த தமிழ்ப்பாடல்வரிகளை வானம்பாடியோடு சேர்ந்து பாடுங்கள். இயற்கை உணவு உண்டு நோயற்ற வாழ விரும்புபவர்கள் இந்தப் பதிவை வாசியுங்கள். சமையல் குறிப்புகளை வாசிக்க இத்தளத்தை காணுங்கள். வனம் என்னும் இதழை வாசித்துப்பாருங்கள். இவன்தான் பாலா புத்தகம் தன்னை மாற்றியதை குறித்து ஆம்பல் எழுதியுள்ளதைப் படியுங்கள். மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ கவிதைகளை வாசித்துப்பாருங்கள். ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களமான தூமை எனும் தளத்தை வாசித்துப்பாருங்கள். மதுரை வடக்குமாசிவீதிக்கும் செல்லூருக்கும் உள்ள தொடர்பை அறிய கட்டியங்காரன் சொல்வதைப் படியுங்கள். இணையதளங்கள் குறித்த அதிக தகவல்களைப் படிக்க சைபர்சிம்மன் தளத்தையும், தமிழை விரும்பும் தமிழாள் பக்கத்தையும், சிபிச்செல்வனின் இலக்கியசுற்றம் தளத்தையும், அரவான் குறித்து அருமையான பதிவு எழுதிய வித்யாசாகரின் தளத்தையும், ஆனந்தவிகடனில் வந்த அறிவழகனின் சிறுகதையையும், பாண்டித்துரை, ராம்மலர், நடைவழிக்குறிப்புகள் தளத்தையும் பாருங்கள். இன்றென்ன முழுவதும் வேர்டுபிரஸ் பதிவுகளாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள். தமிழில் உள்ள நிறைய வலைப்பதிவுகளின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தவிர எல்லாநாட்களும நூலகம் இருக்கும் நாம் செல்கிறோமா? நம்முடைய வாசிப்பையும், எழுத்தையும், நம்மையும் செதுக்கிக்கொள்ள கீழ்உள்ள தளங்களையாவது அடிக்கடி வாசிக்கலாமே. கீற்று, அழியாசுடர்கள், தமிழ்தொகுப்புகள், நூலகம், தமிழ்இணையப்பல்கலைகழகம், கூடு, சொல்வனம், நட்பூ, உயிர்மை, காலச்சுவடு, வடக்குவாசல். மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.
|
|
ஒரே மூச்சில் இத்தனை அறிமுகங்கள் புது ரெகார்ட்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஒரே பதிவில் இத்தனை அறிமுகங்களா?
ReplyDeleteகடுமையான உழைப்பு தெரிகிரது. வாழ்த்துகள்.
நிறைய அறிமுகங்கள் !! நன்றி !!
ReplyDeleteதமிழ்தொகுப்புகள், தமிழ்இணையப்பல்கலைகழகம்,கூடு, போன்ற பக்கங்களுக்கு தாங்கள் தந்த லிங்க் வேலை செய்ய வில்லை சரி செய்யவும்
இதனை அறிமுகங்களா வாழ்த்துக்கள் . கண்டிப்பாக அனைத்து பதிவுகளையும் பார்த்து வர முயற்சிக்கிறேன் .
ReplyDeleteஉங்களின் இந்த பதுவு மூலம்
ReplyDeleteதேடிகொண்டிருந்த நிறைய நல்ல வலைப்பூக்களை
நுகர முடிந்தது
மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள்
mikka nanti!
ReplyDeleteமறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல.
ReplyDeleteகூடு
http://koodu.thamizhstudio.com/
தமிழ்தொகுப்புகள்
http://www.thoguppukal.in/
தமிழ்இணையப்பல்கலைக்கழகம்
http://www.tamilvu.org/
இடுகையைத் திருத்தும் அந்த தளங்களின் முகவரிகள். மோகன்குமார் அவர்களுக்கு நன்றி.
மிக அருமையான பல அறிமுகஙக்ள்
ReplyDeleteஅன்பு சித்திரவீதிக்காரருக்கு,
ReplyDeleteஇது அறிமுகம் என்று சொல்வதற்கில்லை... எல்லோருமே ஏற்கனவே அறிமுகமானவர்கள் பலருக்கும்... ஆனால் இந்த வாசிப்பணுபவத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டது ஒரு உன்னதமான விஷயம்...
யாருய்யா இந்த மனுஷர், இத்தனை படிக்கிறாரே என்று வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை... மதுரை வந்தால் பார்க்க வேண்டும், கைகளை பிடித்துக் கொண்டு மாரியம்மன் தெப்பக்குள படிக்கட்டிலாவது உட்கார்ந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும்...
ரொம்பவும் சந்தோஷமும், அன்பும். பார்க்கிற போதோ, பேசுகிற போதோ... நிறைய பேசிக்கடக்கலாம்...
அன்புடன்
ராகவன்
அப்பாடி எத்தனை அறிமுகங்கள்!..மிக்க நன்றியுடன் வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. ராகவன் அவர்களின் மறுமொழி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நண்பரே! மதுரையில் கட்டாயம் சந்திப்போம். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சுந்தர். தமிழ் தொகுப்புகள் தளத்தை பிரபலபடுத்தியதற்கு, மேலும் நிறைய பணிகள் செய்யவேண்டும், உங்களை போன்றோரின் ஆதரவே அதை நிறைவேற்றும்.....
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
சிங்கமணி