மனோரஞ்சிதம் – புகைப்படச் சரம்
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
[பட உதவி: கூகிள்]
புகைப்படம்
எடுப்பது எனக்கு பொழுது போக்கு. அவ்வப்போது பயணம் செல்லும்போது மறக்காமல் எடுத்து வைப்பது
எனது டிஜிட்டல் காமிராவை – அப்போது தானே நிறைய புகைப்படங்களை எடுத்து அவற்றை வலை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள முடியும். புகைப்படக்கலை என்பது மிகவும் செலவு வைக்கும் ஒரு விஷயம்
என்பதால் முன்பெல்லாம் பலர் இதில் அவ்வளவாக விருப்பம் காட்டியதில்லை. இப்போது டிஜிட்டல் காமிராக்களால்
அதிக தொடர் செலவு இல்லை என்பதால் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இன்று
புகைப்படங்கள் பற்றிய வலைப்பூக்களை பார்க்கலாம்.
டிஜிட்டல்
காமிராக்களின் வருகைக்குப்பிறகு புகைப்படம் எடுப்பது என்பது இன்று மிகவும் சுலபமாகிவிட்டது. இந்தப் புகைப்படம் பற்றிய வரலாறை தெரிந்து கொள்ள ஆவலாக
இருக்கிறீர்களா? வாருங்கள் ஒளிப்படவியல் ஒரு அறிமுகம் தளத்திற்குச் செல்வோம்.
நாம் எடுக்கும் வண்ணப் புகைப்படத்தினை ஃபோட்டோஷாப் நீட்சியை பயன்படுத்தி
அழகிய ”இந்தியன் இங்க்” கருப்பு வண்ணத்தில் மாற்றுவது எப்படி என்று விளக்கம் தந்திருக்கிறார்
க. கமலக்கண்ணன். ஏனோ இப்போது எழுதுவதில்லை…. தொடர்ந்து பதிவுகளை தாருங்கள் கமலக் கண்ணன்.
தமிழில் புகைப்படக் கலை என்ற தளத்தில் மாதாமாதம் புகைப்படங்களுக்கான
போட்டி மட்டும் வைப்பதில்லை – மாறாக நமக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் உள்ள நுணுக்கங்களை
தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்கள். புகைப்படங்களை நேர்த்தியாக எடுப்பது எப்படி என்று
ஒரு தொடரே வருகிறது. தொடரின் முதல் பகுதி இங்கே.
கண்டதும் சுட்டதும் என்று தன் வலைப்பூவில்
சொல்லும் ஆ. ஞானசேகரன் “இராத்திரியில் முக்காலி இல்லாமல் நல்ல புகைப்படங்கள் எடுப்பது
எப்படி?” என்று சொல்லி இருக்கிறார். ஆடாது அசங்காது புகைப்படம் எடுக்க இதைப் பார்த்துக்
கொள்ளலாம்.
”புகைப்படம்
எடுப்பது எப்படி" என்று கற்றுத் தரும் வலைத் தளம் இருக்கிறதா?” என்றால் “ஓ... இருக்கே….”
என்று சொல்லி அதற்கான இணையதள முகவரியையும், அதன் சிறப்பு பற்றியும் அறிமுகம் தந்திருக்கிறார்
தனது பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கும் பிரபுவின்.
புகைப்படம்
எடுப்பது எப்படி என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை எடுக்கும் தருணம் மிக மிக முக்கியம். அப்படி
எடுத்த சில புகைப்படங்களை தனது பக்கத்தில் தொடர்ந்து பதிந்து கொண்டு வருகிறார் காளிராஜன்
லட்சுமணன். அவற்றில் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காய் இங்கே.
எண்ணங்களை
எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகக் கோர்த்தபடி... அதுவும் முத்துசரத்தில்
கோர்த்தபடி இருக்கிறார் ராமலக்ஷ்மி. புகைப்படங்கள் எடுப்பதில் நேர்த்தி, சில தொழில்நுட்பங்கள்
என அழகாய் எழுதி வருகிறார். அவரது புகைப்பட நேர்த்தியைச் சொல்ல பல புகைப்படங்களை எடுத்துக்காட்டாகச்
சொல்லவேண்டும். இங்கே இரண்டு படங்கள் மட்டுமே தந்திருக்கிறார் அவர்.
பார்த்து ரசியுங்களேன்.
”நான்
ரசித்த சில நல்ல புகைப்படங்கள, நீங்களும் ரசிக்க வேண்டி இங்கே பதிப்பித்திருக்கிறேன்”
என்று சொல்லும் ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலைகளின் ஊடே பகுதி ஒன்று இங்கே. மிக அருமையான புகைப்படங்கள்.
நினைப்பதற்கும்
மறக்காமல் இருப்பதற்கும் புகைப்படப் பயணங்கள் செய்கிறார் வல்லிசிம்ஹன். வசந்த காலப் பூக்கள் பதிவில் உள்ள பூக்களைப் பாருங்கள். நிச்சயம் மனது மயங்கிவிடும்.
கதை,
கவிதை, கட்டுரை என்று கலக்கும் அமைதிச்சாரல். வல்லமை மின் இதழின் துணை ஆசிரியர். இவரது
பல்துறை திறமைகள் கண்டு இவருக்கு “பல்கலை மாஸ்டர்” என்ற பட்டம் கூடக் கொடுக்கலாம்…
:) அவ்வளவு விஷயங்கள் செய்கிறார். புகைப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. இவரது நினைவுச் சின்னங்கள் – என் காமிராப்
பார்வையில்
பதிவினையும் மும்பை – 2012 புகைப்படக் கண்காட்சியும் நானும் பதிவினையும் பாருங்களேன்.
தமிழ்த்
திரைப்படத்துறையில் மிக முக்கியமான ஒரு பணி ஒளிப்பதிவாளருடையது. காமிராக் கோணங்கள்,
எடுக்கும் படங்கள் என அசத்தும் ஆட்கள் இருக்குமிடம். அப்படி ஒரு அசத்தலான மனிதர் ஆர்ம்ஸ்ட்ராங்
விஜய். அவர் ஒண்டிப்புலி படத்திற்காக Arri Alexa காமிரா கொண்டு எடுத்த சில படங்களை
இங்கே
பகிர்ந்திருக்கிறார். போய்த்தான் பாருங்களேன்.
புகைப்படங்கள்
எடுத்தாயிற்று. எடுத்த புகைப்படங்களை மேலும் அழகாக்க அவற்றில் சில நகாசு வேலைகள் செய்யவேண்டும்
எனக் கருதுபவர்கள் ஃபோட்டோஷாப் என்கிற நுண்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். அதை பயன்படுத்துவது
எப்படி என்று உங்களுக்குச் சொல்லித் தருவதற்காகவே ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார்
நண்பர் வேலன். ஃபோட்டோஷாப் பாடம் முப்பத்தி மூன்று இங்கே.
என்ன
நண்பர்களே, புகைப்படங்கள் பற்றிய பகிர்வுகளைப் படித்தீர்களா? நாளை வேறு ஒரு மார்க்கத்தில்
பயணம் செய்வோம். காத்திருங்கள்.
மீண்டும்
சந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
|
|
மனோரஞ்சித ஆல்பம் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete@ கலாநேசன்: உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரவணன்.
ReplyDeleteபார்த்ததும் எழுத நினைப்பதுபோல்
ReplyDeleteஅந்தக் காட்சியை படம் பிடித்து வைப்பது
மிகச் சிறந்த கலை.
அத்தகைய பதிவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு
நன்றிகள் நண்பரே.
நேர்த்தியான புகைப்படங்கள் பிரமிப்பூட்டுபவை; ரசனைக்குரியவை. அருமையான புகைப்படத் தளங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்று. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.....
ReplyDelete@ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. நேற்று எங்க ஆளைக் காணோம்? பிசி?
ReplyDeleteஅருமையான ஆல்பம்
ReplyDeleteஅசத்தலான பதிவு
அருமையான பதிவர்கள் அறிமுகம்
தொடர வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணிசிறக்க வாழ்த்துக்கள் அன்பரே.
ReplyDelete@ ரமணி: தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ குணா தமிழ்: வாழ்த்தியதற்கு மிக்க நன்றி முனைவரே...
ReplyDeleteமிக அருமை இந்த வாரம் எல்லாமே புதுமை.
ReplyDeleteநேர்த்தியான போட்டோக்க்கள் எடுப்பதும் சிற்ந்த கலை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ சென்னை பிளாசா: தங்களது வருகைக்கும் வாரத்தின் அறிமுகங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஜலீலா,
ReplyDeleteஎன் ரசனையை வலைத்தளத்தில் பதிப்பித்ததற்கு நன்றி, திரு.வெங்கட். தங்களின் இந்த ஒரு பதிவிலிருந்தே பலரும் டிஜிடல் புகைப்பட நிபுணராகும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திருபது ஒரு மகத்தான பணி. ஆங்கிலத்தில் இந்தத்துறையில் ஏராளமாக மண்டிக் கிடக்கும் தகவல்கள் தமிழிலும் கிடைப்பது உண்மையிலேயே மிகச் சிறந்த சேவை. மீண்டும் நன்றி!
ReplyDelete@ R.S. கிருஷ்ணமூர்த்தி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி. ஆங்கிலத்தில் இருப்பது போலவே தமிழிலும் கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது சந்தோஷம் தானே....
ReplyDeleteஅருமையான ஆல்பம்.
ReplyDeleteமனோரஞ்சிதத்தின் ஓரிதழாக எனது பதிவும். மகிழ்ச்சியும் நன்றியும்.
ஆண்களும் பெண்களும் சரி சமமாக இருக்கிற மாதிரி தெரிகிறது இந்த பதிவில். அறிமுகபடுதபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஹைய்யோ!!!! தாழம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம் இப்படி மறந்துபோன அபூர்வப் பூக்களைச் சரமாக தொடுப்பதற்கே உங்களுக்கு ஒரு மலர்ச்செண்டு கொடுக்கணும்.
ReplyDeleteரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
மனதைக் கவரும் மனோரஞ்சிதங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவர்களின் ஃபோட்டோ ஷாப்பை அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றிகள்
மனோரஞ்சிதம் போன்ற சிறப்பான அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
புகைப்படக்கலை அருமை. புதிய பக்கங்கள் அறிமுகங்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்துகள். எனக்கும் மிகப் பிடிக்கும்.( யாருக்குத் தான் பிடிக்காது!) ஆனால் முழுசாகத் தெரியாது. பணி தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நன்றி நண்பரே..மற்றவர்களை அறிமுகப்படுத்துவது நல்ல குணம். நன்றி
ReplyDeleteநேர்த்தியான புகைப்படங்கள் பிரமிப்பூட்டுபவை; ரசனைக்குரியவை. அருமையான புகைப்படத் தளங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்று. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. புகைப்படச் சரம் எனச் சொல்லிவிட்டு உங்கள் வலைப்பூ இல்லாமலா!
ReplyDelete@ மோகன்குமார்: //ஆண்களும் பெண்களும் சரி சமமாக இருக்கிற மாதிரி தெரிகிறது இந்த பதிவில். // அப்படி யோசித்தெல்லாம் ஒன்றும் செய்யவில்லை மோகன்! அதுவாகவே அமைந்திருக்கும்.... :))
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ துளசி கோபால்: //ஹைய்யோ!!!! தாழம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம் இப்படி மறந்துபோன அபூர்வப் பூக்களைச் சரமாக தொடுப்பதற்கே உங்களுக்கு ஒரு மலர்ச்செண்டு கொடுக்கணும்.// ஆஹா மலர்ச்செண்டு தரப் போறீங்களா? நல்லது. நியூசிலே நல்ல நல்ல மலர்கள் கிடைக்குமே! :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்னி!
இந்த மனோரஞ்சிதம் என் ஃப்ரெண்டோட நினைவையும் கிளப்பி விட்டுருச்சுங்க. லேசான மட்டிப்பழ வாசனையோட இருக்கற இந்தப்பூவை எங்களுக்காக அவ தினமும் வீட்லேர்ந்து கொண்டாந்து தருவா..
ReplyDeleteஅழகழகான பூக்களுக்கிடையே என்னையும் அறிமுகப்படுத்தியதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகளும், மற்றவர்களுக்குப் பாராட்டுகளும் உரித்தாகுக :-)
@ ராஜி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
ReplyDelete@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDelete@ கோவைக்கவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ Armstrong Vijay: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றிம்மா....
ReplyDelete@ அமைதிச்சாரல்: //இந்த மனோரஞ்சிதம் என் ஃப்ரெண்டோட நினைவையும் கிளப்பி விட்டுருச்சுங்க. லேசான மட்டிப்பழ வாசனையோட இருக்கற இந்தப்பூவை எங்களுக்காக அவ தினமும் வீட்லேர்ந்து கொண்டாந்து தருவா.. //
ReplyDeleteநல்ல நண்பர்கள் ஒருவருக்குக் கிடைத்த வரம். உங்களுக்கு அப்படி நல்லதோர் நண்பி கிடைத்து இருக்கிறார்களே.... வாழ்த்துகள்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.
ReplyDeleteபுகைபட்க் கலை ஒரு வரப்பிரசாதம்.
மனோரஞ்சிதம் மணம் அருமை.
அசத்தலான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவர்கள் அறிமுகம்.
@ விச்சு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா....
ReplyDelete@ சே. குமார்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
ReplyDeleteமணம் பரப்பும் மனோரஞ்சித பதிவு மூலம் சிறப்பான பதிவர்களை அறிமுகம் படித்தியமைக்கு மிக்க நன்றிகள்..
ReplyDelete@ பாரத்.... பாரதி....: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteஅன்பு வெங்கட்,
ReplyDeleteஅத்தனை பூக்களும் இறைவனுக்கெ அர்ப்பணம். அதுவும் மனோரஞ்சிதம்,தாழம்பூ அத்தனையும் அபூர்வம்.
இவ்வளவு வலைப்பூக்களுக்கு நடுவில் என்வலைப்பூவையும் வரிசையில் சேர்த்ததற்கு மிகவும் நன்றிமா.
@ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றிம்மா...
ReplyDeleteஓரிதழாக எனது பதிவு.
ReplyDeleteமகிழ்ச்சி நன்றிகள் பல...
தொடரட்டும் உங்கள் பணி
// ஏனோ இப்போது எழுதுவதில்லை…. தொடர்ந்து பதிவுகளை தாருங்கள் கமலக் கண்ணன். //
தற்போது நான் கதை எழுதும் பணியில் கவனம் செலுத்துவதால் நேரம் கிடைப்பதே மிகவும் அறிதாக இருக்கிறது.
முயற்சி செய்கிறேன்..
உங்களின் சீரிய பணிக்கு பாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஅறிமுகம் செய்த தங்களுக்கு நன்றிகள்
மனோரஞ்சித கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@ க. கமலக்கண்ணன்: //தற்போது நான் கதை எழுதும் பணியில் கவனம் செலுத்துவதால் நேரம் கிடைப்பதே மிகவும் அறிதாக இருக்கிறது.// நல்லது நண்பரே.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ ஆ. ஞானசேகரன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅடிப்படையில் நானும் ஒரு புகைப்படக் கலைஞன். ஆகையால் எனக்கும் பயனுள்ள அறிமுகங்கள்தான். நன்றி.
ReplyDelete@ துரைடேனியல்: //அடிப்படையில் நானும் ஒரு புகைப்படக் கலைஞன். ஆகையால் எனக்கும் பயனுள்ள அறிமுகங்கள்தான்.//
ReplyDeleteஓ.... உங்களுக்கு இன்றைய அறிமுகங்கள் பயன்படும் எனத் தெரிந்து மகிழ்ச்சி.
தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
இவ்வளவு வலைப்பூக்களுக்கு மத்தியில் எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றியுடன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன் நண்பரே.
ReplyDelete