07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 4, 2012

எனது பூக்களைக்கொண்டு முதற்சரம்


 "நசிகேத வெண்பா" அப்பாதுரை அவர்கள் கடந்த வாரம் சிறப்பான முறையில் வலைச்சர ஆசிரியர் பணியாற்றினார். அவரைப்போல் இல்லாவிட்டாலும் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன்.

  வலைச்சரம் 2011 இல் கலக்கியவர்கள் என்ற தலைப்பில் என்னைப் பற்றியும் வலைச்சரத்தில் வெளியிட்டிருந்தார். அன்றைய வலைச்சரத்தை தொடுத்த சென்னைபித்தன் அவர்கள்.
     எனக்கு அறிமுகம் வழங்கிய வலைச்சரத்தை  தொடுக்க எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் போன்ற சாதாரணர்களையும் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்த சீனா அவர்களுக்கு நன்றி.
     முதல் பதிவாக உங்கள் பழைய பதிவுகளை அறிமுகப்படுத்தலாம் என்றதும் ரொம்ப மகிழ்ச்சி. ஏனென்றால் அதிகம் பார்க்கப்படாத பதிவுகளை மீண்டும் பார்க்க வைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே! (ஹிஹி .. அதை எல்லாம் படிக்கணும்னு உங்க தல எழுத்து இருந்தா நான் என்ன பண்ணமுடியும்.. Be Careful!)
சரம்-1
மலர் 1 எனது வலைத் தோட்டத்தில் பூத்த  பதிவுப் பூக்களைக் கொண்டு  நான் தொடுக்கும் சரம். முதல் பதிவாக நான் பதிவிட்டது.கவிதை துளிகள் - இறை வாழ்த்து .கடவுள் வாழ்த்து வெண்பா. தமிழ்  பாடப் புத்தகங்களில் செய்யுள் பகுதியில் முதலில்  கடவுள் வாழ்த்து அமைந்திருக்கும். அந்தப் பாடல்களின் ஓசை நயம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை மனப்பாடப் பகுதிகளாக இருக்கும். இன்றும் வகுப்பில் நான் படித்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் நினைவில் உள்ளன. அதன் விளைவாக முதல் பதிவை கடவுள் வாழ்த்தாக அமைத்தேன். அது உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதில் எந்த மதத்தையும் குறிக்காமல் பொதுவாக அமைத்திருக்கிறேன்.

மலர் 2.  நாம் காண்கின்ற காட்சிகளில் எல்லாம் கவிதைகள் நிறைந்திருக்கின்றன. என் கண்ணிலும் நெஞ்சிலும் தோன்றியவற்றை கவிதையாக்கிய பதிவுl எது கவிதை?

மலர் 3 என் வலைப்பக்கத்து ஒரு சிலரை ஈர்த்து வந்த கவிதைப் பதிவு. இசை வேந்தன் ஏ.ஆர்.ரஹ்மான். அது கவிதையால் வந்தது அல்ல. ரகுமான் என்ற மந்திரச் சொல்லால் வந்தது.

மலர் 4.  எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாராவிதமாக இறந்து போக அதற்காக எழுதிய இரங்கல் கவிதை 

மலர் 5. செல்ல நாயின் இறப்பில் மர்மம் இருந்தது. அதன் இறப்பிற்குப் பிறகு ஏற்பட்ட பதட்டத்தை தொடராக ஆறு பதிவுகளாக எழுதினேன்.
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!! இதைப் படித்த வாசகர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்த பதிவு அப்போது வரும் என்றும்  நாய் எப்படி இறந்தது என்று தன் பெண் கேட்டு சொல்லச் சொன்னதாக என்னிடம் தெரிவித்தார். எனது வலைப்பதிவுக்கு பார்வையாளர்கள் என்ணிக்கை சிறிது அதிகரித்தது.

மலர் 6. . கவியரசு கண்ணதாசன். இப்பதிவை முகநூலில் படித்த காந்தி கண்ணதாசன் அவர்கள் பாராட்டினார்.

மலர் 7. வைரமுத்து பற்றிய கவிதைக்கும் ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது.கவிதைச் சூரியன்-வைரமுத்து (VAIRAMUTHU)

மலர் 8.: அப்போது எனது பதிவுகளில் அதிக பாரவையாளர்களைக் கொண்ட பதிவாக அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்

மலர் 8  நேரடியாகச் சொல்லாமல் கற்பனையாக வடிவேலு வை கதாபாத்திரமாகக் கொண்டு இடப்பட்ட பதிவு புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !

மலர் 9  பல பாராட்டுக்கள் பெற்ற குட்டிக் கதை பதிவு காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

மலர் 10. ஒரே மனித மனதில் இருக்கும் எதிரெதிர் குணங்கள் பற்றிய கவிதை நானும் நானும்

மலர் 11. இதைப் படித்தால் என்னுடைய  ஹிட் சாதனையை ஏற்றுக் கொள்வீர்கள்: அதிக ஹிட் வாங்கும் பதிவர் நான்தான்!

மலர் 12. எனது பதிவுகளிலயே அதிகம் பேர் படித்த பதிவு தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?

 சுயபுராணம் ஒரு டஜனோடு போதும் நிறுத்திக்கொள் என்று சொல்வதற்குள் நானே நிறுத்திக் கொள்கிறேன்.
நாளை இன்னொரு சரம்
**************

22 comments:

  1. வலைசரத்தை அலங்கரிக்க வந்த இளைஞரே உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வருக முரளிதரன்! நல்வரவு! உங்களின் அழகிய அறிமுகங்களால் இந்த வாரம் சுவாரஸ்யமாகட்டும்! என் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. முரளிதரன் - நல்லதொரு பூச்சரம் - அழகான அறிமுகங்கள் - பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. வலைத் தோட்டத்தில் பூத்த பதிவுப் பூக்களுக்கு மணம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. முதற்கண் வாழ்த்துக்கள்! முரளி!
    தங்கள் பணி சிறக்கும்
    வாரம் முழுவதும் மணக்கும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. அருமை அருமை..
    வலையுலகில் நான் கண்ட பதிவர்களுள் தாங்கள் ஒரு தனித்துவமானவர். வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  7. அசத்தலான அறிமுகத்துடன் துவங்கி இருக்கிற
    தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நினைத்ததை சுவைபட சொல்கின்ற நண்பர் திரு T.N.முரளிதரன் அவர்களே தாங்கள் ஏற்றுள்ள இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துக்கள் முரளிதரன்.
    ஜூனோ இப்போ தான் படித்தேன். மனம் கனக்கிறது.

    ReplyDelete
  10. வருக தோழரே..நற்பணி ஆற்றுக..வலைச்சர ஆசிரியர்களின் புகைப்படத்தை எனது தளத்தில் வைப்பது வழக்கம்.உங்கள் படத்தையும் வைத்திருக்கிறேன்..நேரமிருந்தால் பார்வையிடவும்..

    ReplyDelete
  11. சுவைபட இருந்தது தங்களைப் பற்றிய அறிமுகங்கள்.

    ReplyDelete
  12. வலைப் பூக்காட்டினில் தெள்ளு தமிழ்ப் பூக்களால் வலைச் சரம் தொடுக்க வந்திருக்கும் டி.என்.முரளிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வருக முரளிதரன்! நல்வரவு! உங்களின் அழகிய அறிமுகங்களால் இந்த வாரம் சுவாரஸ்யமாகட்டும்! என் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் முரளி. இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரமாகட்டும் !

    ReplyDelete
  15. முதல் சரமே வாசம் வீசி வரவேற்கிறது . தொடருங்கள் காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  16. வாங்க தலைவரே..., என்ட்ரி சும்மா அதிருதே .. :)

    ReplyDelete
  17. அறிமுகச் சரம் நன்று நன்று. நேரமிருக்கும் போது மற்றவை பார்க்க முடியும். ஆயினும் எது கவிதை என்றதை வாசித்து விட்டேன். தங்கள் வாரச் சரங்கள் சிறந்து மணந்து கவரட்டும். நல்வாழ்த்து சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் முரளி!.ஒரு சிறப்பான வாரத்தை எதிர்நோக்கி.!

    ReplyDelete
  19. தொடக்கத்திலேயே என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.நான் தகுதி வாய்ந்த ஒருவரையே அறிமுகம் செய்தேன் என்பது.நிரூபணமாகி விட்டதல்லவா?

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் முரளிதரன்.
    தங்களின் எலிக் கதையை , கதை சொல்லக் கேட்ட என் தம்பி மகனுக்கு சொல்லி மகிழ்ந்தேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது