சின்னஞ்சிறுசுக...so நல்லா கவனிங்க...
➦➠ by:
மயிலன்
அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே
"காலைல ஏதும் பதிவ காணுமே.. பயபுள்ள abscond ஆயிட்டானா?", என்று சீனா ஐயா தொலைபேசியேவிட்டார்... ஒன்றரை நாள் தொடர் பணி...அதனால் கொஞ்சம் தாமதம்.. நேற்றைய இருவரை வாசித்திருப்பீர்கள்.. நம்பிக்கையுடன் அடுத்த இருவரை அறிமுகம் செய்கிறேன்..சொல்லப்போனால், இன்றையவர்களை அறிமுகம் செய்வது என் கடமையும்கூட..
காரணம் அவர்கள் பதிவுலகில் பாதம் பதிக்க நேரடியாகவோ, மறைமுகமாகவோ நானும் ஓர் காரணம்.. இருவரும் என் கல்லூரி இளையவர்கள்.. ஒருவர் அரசியல்,ஈழம்,போராட்டம்,சினிமா என ஆல் இன் ஆல் அழகுராஜா..இன்னொருவர் கவிதாயினி...இந்த துறையில் இருந்துகொண்டு எழுத்திற்கு நேரம் ஒதுக்கும் கடினத்தை நான் உணர்ந்தவன்..அதையும் மீறிய தொடர் எழுத்துக்களான நன்றிகள் நண்பர்களின் உந்துதலுக்கே சமர்ப்பணம்.. ஒரு வேளை கொஞ்சம் கவனிக்கபடாமல் போயிருந்தால் ஒரு முப்பது பதிவுகளுடன் நான் விலகியிருக்கலாம்...("நாங்க தப்பிச்சிருப்போம்" என்ற உங்களின் mind voice நான் catch பண்ணிட்டேன்..)
இவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற என் சிறிய ஆசைக்கான வித்துதான் இன்றைய இவர்களின் வலைச்சர அறிமுகம்..
அறிமுகம் # 10
பதிவர்: மு.சுந்தரபாண்டியன் (ஆழ்கடல்)
இணைப்பு: http://aazhkadal.blogspot.in/
வலைத்தளம் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிந்ததும் ஈழம் சார்ந்த பதிவுகள்தான் நிறைய எழுதுவார் என்று எதிர்பார்த்தேன்..சார் அப்படி ஒரு தமிழ் வெறியர்..ஆனால் அதை தாண்டி அரசியல், சமுதாயம், கதை, கவிதை என நீண்டு சினிமா வரை எல்லாமும் எழுதி வருகிறார்.. ஆரம்பங்களில், வார்த்தை கத்தரிப்பு தேவையோ என்று அவ்வபோது தோன்றியது...கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும் சரியானது..
2011க்கான அரசியல் விருதுகள்...ஒரு அட்டகாச பதிவு...கொஞ்சம் விகடன் விருதுகள் சாயல்தான்..ஆனால் கும்மியடித்திருப்பார்...நிச்சயம் வாசிக்க வேண்டிய நகைச்சுவை தொகுப்பு இது..
அரைகுறை..எனும் கவிதையில் ஒரு கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்தியை சுருங்க சொல்லியிருக்கும் விதம் அட்டகாசம்..அதுக்கு உபயோக படுத்தபட்டிருக்கும் ஸ்ருதிஹாசன் ஸ்டில் ஜிவ்வ்வ்...
அரசியல் எதிர்காலம்..கட்டுரையில் திமுக அதிமுக விற்கு உதிர்க்கும் அரசியல் ஆரூடம் அரசியல் கட்டுரை விரும்போவுருக்கு நிச்சயம் தேவையானதைக் கொடுக்கும்..
சென்னையில் முதன்முதலில் உலாவரும் ஒரு வெளியூரானின் பார்வையில் எழுதபட்டிருக்கும் வணக்கம் வாழ வைக்கும் சென்னை..சென்னைவாசிகளுக்கு விநோதமாய் தோன்றும்.. ஆனால் தான் பார்த்ததை உணர்ந்ததை அப்படியே உரைத்திருக்கும் இந்த கட்டுரையும் இவருக்கான அடையாளம்தான்...
சமீபத்தில் எழுவதை நிறுத்திஇருக்கிறார்...உங்களின் சிலரது அவர் வலைதளதிற்கான பிரவேசம் அவரை மீண்டும் எழுத வைக்கலாம்...தொடருங்கள்.. தொடர செய்யுங்கள்...:)
அறிமுகம் #11
பதிவர்: திவ்யா @ தேன்மொழி (தேன்சிட்டு)
கிட்டத்தட்ட ஆறுமாத காலம் மயிலிறகில் வாசகியாய் மட்டும் இருந்து தன்னுடைய கவன ஈர்ப்பு பின்னூட்டங்களின் மூலம் கொஞ்சம் பலரைக் கவர்ந்த இவர் யார் என்ற அடையாளம் தெரிய எனக்கு மூன்று மாதம் ஆனது.. சிம்புவின் அடுத்த படத்திற்கு அந்த பெயரை வைக்கவில்லை என்றால் இவரை "வாலு" என்று குறிப்பிட்டிருப்பேன்..
முகநூலில் ஆங்காங்கே கவிதை வரைந்த இவரை எப்படியோ பதிவுலகில் சேர்த்துவிட்டாச்சு...இந்த வலைச்சர மேடையை பயன்படுத்தி அவளுக்கு ஒரு அறிமுகத்தையும் அளித்துவிடுகிறேன்...ஒன்லி கவிதை.. மற்ற விவாதங்களும்,கட்டுரைகளும் எழுதும் ஆளுமை இவரது எழுத்தில் இருந்தும் இதுவரை அது நடக்காதது ஏமாற்றமே..
தன்னுடைய அப்பா பணி நிறைவு பெரும் நாளில் இவள் எழுதியிருந்த என்ன தவம் செய்தேன்..என்னுடைய ஃபேவரைட்..காரணம் என் அப்பாவும் மொழியாசிரியர்..சரியாக ஆங்கிலம்..எனவே பெரும்பாலான வரிகளில் என்னை இணைத்துக்கொள்ள முடிந்தது..
எனக்கும் சற்று நேரம் ஒதுக்கு..யதார்த்தம் சொல்லும் ஒரு மென்கவிதை..அழகை மட்டும் ஆராதிக்கும் நம்மை போன்றவர்களுக்கு சிறுசு எழுதியிருக்கும் ஒரு பஞ்ச் கவிதை இது...
அவளால் முடிந்தது..ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையான வார்த்தைகளில் அழகாய் புனையப்பட்ட ஒரு நிதர்சனம் இந்த வரிகள்..ஏற்கனவே நான் மயிலிறகிலும், விச்சு அவர்கள் வலைச்சரத்திலும் பகிர்ந்திருந்த கவிதை இது.. இன்னைக்கு மிஸ் பண்ணிடாதிங்க...
என் நண்பர்கள் என்பதனால் மட்டும் இவர்களை நான் பரிந்துரைக்கவில்லை.. பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பவை இவர்கள் தளத்தில் இருக்கிறது...நம்பி தொடருங்கள்...இருவருமே நிச்சயம் நல்ல பதிவுகளை தருவார்கள் என்று அவர்கள் சார்பில் நான் உத்திரவாதம் தருகிறேன்..:)
ரெண்டே ரெண்டு...நாளை பார்ப்போம்...
நன்றியுடன்...சி.மயிலன்
|
|
திவ்யாவின் என்ன தவம் செய்தேன்... எனக்கும் பிடித்தமான ஒன்றுதான்.
ReplyDeleteபதிவை படிப்பதற்கு முன்னரே அவர்களை பின் தொடர்ந்தாயிற்று ஏனெனில் தாங்கள் அறிமுகப்படுத்திய ஏனைய பதிவர்கள் அப்படி :)
ReplyDeleteமு.சுந்தரபாண்டியன் பதிவை எழுதுவதை தொடர வேண்டும்..நல்ல பதிவர்!ஒன்றிரண்டு வாசித்திருக்கிறேன்....திவ்யா அவர்களின் பதிவை படித்தேன்....அப்பாவை பற்றி! நானும் ஒரு மக்குதான்....!
ReplyDeleteஇரண்டிரண்டாக பதிவர்களை அறிமுகப்படுத்தியது புதுமை என்றாலும், அனைவருமே பொக்கிஷசங்கள், எப்படி என்று சொல்லமுடியாத அருமையான பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள், பலரை புதிதாக பாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறேன், நன்றி மயிலன்
ReplyDeleteஇருவருமே புதிய அறிமுகங்கள் ! Follower ஆகி விட்டேன். இனி அவர்களை தொடர்வேன். நன்றி !
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteஇவைகள்தான் உண்மையான அறிமுகங்கள் .. இதுபோல புதியவர்களை இன்னும் நிறைய அறிமுகம் செய்யலாமே ?
ReplyDeleteவிச்சு said...
ReplyDelete//திவ்யாவின் என்ன தவம் செய்தேன்... எனக்கும் பிடித்தமான ஒன்றுதான்.//
:) பலமுறை வாசித்த பதிவுகளில் ஒன்று...
வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete//பதிவை படிப்பதற்கு முன்னரே அவர்களை பின் தொடர்ந்தாயிற்று ஏனெனில் தாங்கள் அறிமுகப்படுத்திய ஏனைய பதிவர்கள் அப்படி :)//
இப்போதுதான் கவனித்தேன் நண்பரே.. நான் அறிமுக படுத்தியிருக்கும் அனைவரின் தளத்திலும் இணைந்துள்ளீர்கள்.. அவ்வளவு திருப்தி எனக்கு...
வீடு சுரேஸ்குமார் said...
ReplyDelete//மு.சுந்தரபாண்டியன் பதிவை எழுதுவதை தொடர வேண்டும்..நல்ல பதிவர்!//
நானும் சொல்லியிருக்கிறேன்.. கொஞ்சம் இடைவெளியில் மீண்டும் தொடங்குவார்.. நம்பலாம்...
//.திவ்யா அவர்களின் பதிவை படித்தேன்....அப்பாவை பற்றி! நானும் ஒரு மக்குதான்....! //
:) மக்குகள் இராஜ்ஜியம்...:)
இரவு வானம் said...
ReplyDelete//எப்படி என்று சொல்லமுடியாத அருமையான பணியை மேற்கொண்டிருக்கிறீர்கள், பலரை புதிதாக பாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறேன், நன்றி மயிலன்//
மிக்க நன்றி சுரேஷ்...அவர்களும் சொல்லியிருந்தார்கள்...என்னுடைய வேலைக்கு கொஞ்சம் பிரதிபலன் இருப்பதில் திருப்தி,,,:)
//திண்டுக்கல் தனபாலன்//
ReplyDelete//கவி அழகன்//
நன்றி நண்பர்களே..
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//இதுபோல புதியவர்களை இன்னும் நிறைய அறிமுகம் செய்யலாமே ?//
நிறைய செய்யவேண்டும் என்றுதான் சார் ஆசை.. கவனிக்க படாமல் போய்விடும் என்ற அச்சம்.. அவ்வளவுதான்..
திவ்வியாவிற்கு கருத்துகள் இட்டுள்ளேன். மற்றவர் 4 வரிக்கவிதை பார்த்தேன் இன்னும் 4 வரி எழுதலாமே. நேரம் ஒதுக்கிப்போகிறோமே நேர நெருக்கடியிலும். 4 வரி பார்த்துக் கருத்திட அல்லவே ! நல்ல பல வரிகளைக் காணலாமே! இரு அறிமுகத்திற்கும் தங்களிற்கும் நன்றி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மயிலன் வாழ்த்துகள் முதலில், இந்த பதிவர்களின் அறிமுகத்துக்கு...இருவரின் பதிவுகளையும் வாசித்துவந்தாகிற்று, நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் அனைத்தும் சுவாரஸ்யாமாய் இருந்தது...வாழ்த்துகள் சகோ :)
ReplyDeleteதலைவரே மகிழ்ச்சியில் திக்குமுக்காட வெச்சுட்டீங்க. சற்று இடைவெளி விடலாம்னு நினைச்சேன் ஆனா இந்த அங்கீகாரத்துக்கு அப்புறம் எழுதாம இருக்கறது தப்பு... ஆழ்கடல்ல மீண்டும் படகுவிட நீங்கள் தந்த ஊக்கத்துக்கு நன்றி... என் வலைக்குள் விழுந்த அன்பர்களுக்கு நன்றியோ நன்றி...
ReplyDeletekovaikkavi said...
ReplyDelete//மற்றவர் 4 வரிக்கவிதை பார்த்தேன் இன்னும் 4 வரி எழுதலாமே. நேரம் ஒதுக்கிப்போகிறோமே நேர நெருக்கடியிலும். 4 வரி பார்த்துக் கருத்திட அல்லவே ! நல்ல பல வரிகளைக் காணலாமே! //
உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று கூட இருக்கலாம் இல்லையா..? நீண்ட கவிதை தொகுப்புகளை அவர் வெறுப்பவராய் இருக்கலாம்.. அல்லது அந்த தலைப்பிற்கு அது போதுமென்று தோன்றியிருக்கலாம்...
இருந்தும் கருத்துரைக்கு நன்றி...
ரேவா said...
ReplyDelete//மயிலன் வாழ்த்துகள் முதலில், இந்த பதிவர்களின் அறிமுகத்துக்கு...இருவரின் பதிவுகளையும் வாசித்துவந்தாகிற்று, நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் அனைத்தும் சுவாரஸ்யாமாய் இருந்தது...வாழ்த்துகள் சகோ :) //
தொடர் ஆதரவிற்கு நன்றி ரேவா..
மரு.சுந்தர பாண்டியன் said...
ReplyDelete//சற்று இடைவெளி விடலாம்னு நினைச்சேன் ஆனா இந்த அங்கீகாரத்துக்கு அப்புறம் எழுதாம இருக்கறது தப்பு... //
இடைவெளி தவறல்ல.. மீண்டு வந்தால் மகிழ்ச்சி...
//ஆழ்கடல்ல மீண்டும் படகுவிட நீங்கள் தந்த ஊக்கத்துக்கு நன்றி..//
மற்றவர்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்...
//என் வலைக்குள் விழுந்த அன்பர்களுக்கு நன்றியோ நன்றி..//
மற்ற அறிமுகங்கள் எல்லாம் கவனித்தாயா? அவர்கள் வலைக்குள் நீயும் விழுந்துடு... விட்றாத..
கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
ReplyDelete