அப்பாதுரை ஆசிரியப் பொறுப்பினை முரளிதரனிடம் ஒப்படைக்கிறார்.
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் அப்பாதுரை, தான் ஏற்ற பொறுப்பினை, மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி, மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.
இவர் தனது சுய அறிமுகப் பதிவினை, வாரம் முழுவதும் அறிமுகப்படுத்தப் போகிற வலைத் தளப் பட்டியல் அளித்து, புதுமையாகத் துவங்கி இருக்கிறார். இவ்வாரத்தில் 36 பதிவர்களை அறிமுகப் படுத்தி அவர்களின் 137 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ இது வரை 175.
இவரது உழைப்பினைப் பாராட்டி - வாழ்த்தி - சென்று வருக நண்பரே என வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் டி.என்.முரளிதரன். இவர் தனது “டி.என்.முரளிதரன்” என்னும தளத்தினைல் இதுவரை பல்வேறு தலைப்புகளில் நூற்றைம்பது பதிவுகள் எழுதி உள்ளார். இவரது படைப்புகளில் இவரது சிந்தனைகளைக் கொண்டு எழுதும் படைப்புகள் தவிர கண்ட, கேட்ட, படித்த செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளூம் அடங்கும்.
நண்பர் டி.என்.முரளிதரனை வருக வருக என் வரவேற்று - வாழ்த்தி - ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் அப்பாதுரை.
நல்வாழ்த்துகள் டி.என்.முரளிதரன்.
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteஅப்பாதுரை ஒரு வாரம் வித்யாசமாய் பணியாற்றினார். முரளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்
ReplyDeleteவாருங்கள் முரளி. வரும் வாரத்தினை உற்சாகத்துடன் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் முரளி. வரும் வாரத்தினை உற்சாகத்துடன் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆகா நம்ம முரளி சார், அப்ப வலைச்சரத்தில் இந்த வாரம் "அதிரடி வாரம்"-தான் ..:)
ReplyDeleteவாழ்த்துக்கள் முரளி சார்.., வாங்க வந்து கலக்குங்க .. :)
நன்றி சீனா.
ReplyDeleteவாழ்த்துக்கள் முரளிதரன்.
ஓ!...முரளி நேற்று ஏதோ நெருக்கடியில் பார்க்கத் தவறிவிட்டேன். காலையில் தான் பார்த்தேன் நல் வாழ்த்து. உங்கள் வாரத்தைக் கலக்குங்கள் காத்திருக்கிறோம் வாத்தியாரே.... (திங்கள்)
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.