குப்பனோ சுப்பனோ அல்ல..
➦➠ by:
மயிலன்
அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே...
இந்த பதிவினை வாசிக்க தொடங்கும் முன் முந்தைய பதிவினை வாசிக்காதவர்கள் கொஞ்சம் அதனை எட்டிப் பார்த்துவிட்டு வரவேண்டுகிறேன்... ஏற்கனவே எனக்கான அறிமுகத்தை எழுதி இப்போது எஞ்சிய பிற பன்னிரண்டு பதிவர்களை நோக்கிய நடை இங்கே தொடங்குகிறது...
அங்கீகாரம்.. ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு முக்கியம்..? அதுவும் தரமான எழுத்தாளனுக்கு...? இன்று நான் உங்கள் முன் நிறுத்தும் இருவரும் தங்களின் எழுத்துக்கான அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை என்பது என் வருத்தம்.. "அதான் இவ்வளவு ஹிட்ஸ் உள்ளதே,அவர்களது தளத்தில்? அப்பறமென்ன?" என்று நீங்கள் கேட்கலாம்.. அதற்கு இரண்டு பதில்கள் என்னிடம் உள்ளது..
ஒன்று, நான் சொல்வது "வெறும்" அங்கீகாரம் இல்லை.. "இவர்களுக்கான" அங்கீகாரம்..
இரண்டு, "ஹிட்ஸ்" என்பதை பெரும்பாலும் நிர்ணயிப்பது தலைப்புதான்... உள்ளே வரவைத்துவிடும் தலைப்பு.. அதனைத் தாண்டி வாசிப்பு என்பதை பெரிதும் தீர்மானிப்பது பதிவின் நீளமும், வகையறாவும்தான்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல கட்டுரை வகையறாகளுக்கு இங்கே வரவேற்பு இல்லாததும் கூட இங்கே ஒரு காரணம்.. இவர்கள் இருவருக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் என்று சொல்லவேண்டுமென்றால் இருவரும் சுஜாதா இரசிகர்கள், கட்டுரை பிரியர்கள், அவ்வபோதான இலக்கியவாதிகள்...
பலர் ஏற்கனவே இவர்களை அறிந்திருக்கலாம்.. எஞ்சியவர்களுக்கு..yes..Go for it...
அறிமுகம் # 2
பதிவர் ஜேகே ( வலைத்தளம்- வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை)
இணைப்பு: http://www.padalay.com/
இவர் எந்த மாதிரி பதிவர்..? அவரை மாதிரி, இவரை மாதிரி என்று எவரோடும் ஒப்பிட முடியாத எழுத்தாளர்... ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் வாழும் யாழ்பாணத்து பூர்விகவாதி இந்த படலை.. பெரும்பாலும் கதைகள், கட்டுரைகள் மட்டும் கலாய் கவிதைகள்தான்.. எழுத்து நடை விறுவிறுப்பை தூண்டும் அதே நேரம் கொஞ்சம் கவனத்தை விட்டோம் என்றால் அந்த பதிவே நமக்கு புரியாமல் போகும்.. நான் சலிக்கவே மாட்டேன்.. இரண்டுமூன்று முறை வாசித்தாவது உள்ளே நுழைந்துவிடுவேன்.. காரணம் அவரது எழுத்தில் இருக்கும் intrinsic flavour.. எழுத்தை முழு நேர பணியாக எடுத்து கொண்டாலோ இல்லை புக்கர் கிடைத்தாலோ, துளியும் ஐயமில்லை... பெரிய ஆளாய் வருவார்.. சச்சின், ஃபெடரர், சுஜாதா என்று எனக்கும் அவருக்கும் கொஞ்சம் favourites sharing இருப்பதும் கூட அவருடைய நடைக்கு நான் இசைந்துபோனதிற்கு காரணமாய் இருக்கலாம்..
அவரது பதிவுகளைப் பற்றி எழுத தொடங்கும் போது முதலில் வந்து நிற்பது வியாழ மாற்றம்என்ற அவரது தொகுப்பு பதிவுகள் தான்...தவறாமல் எல்லா வியாழ கிழமைகளிலும் எப்படி அப்படி ஒரு தொகுப்பினை அவரால் தொடுக்க முடிகிறது என்று பல முறை பொறாமை பட்டுள்ளேன்... குறிப்பாக அதில் துவக்கத்தில் அவர் எழுதும் "டேய் ஜேகே" பகுதி.. இது கிட்டத்தட்ட விகடனில் வரும் "நானே கேள்வி,நானே பதில்" பாணி தான்.. என்றாலும் "ஹாய் மதன்" பாணியில் பதில்களில் ஒரு research பெரும்பாலும் இருக்கும்... பதிவு மிக நீளம்.. ஒரே ஷாட்டில் படிக்கமுடியாது சமையங்களில்.. அவரிடமே இதை தெரிவித்து இருந்தேன்... அதற்கு சொன்ன பதில் நான் அறியாமல் என்னை inspire செய்துவிட்டதா என்று தெரியவில்லை.. அதற்கு பின் என் பதிவுகளின் நீளத்தை நானும் பொருட்படுத்துவதை நிறுத்திவிட்டேன்...
அந்த பதில்,
நூறு பதிவுகளைத் தாண்டி எழுதி கொண்டிருக்கிறார்... இவரது நூறாவது பதிவு: சச்சின்.. பெயரை கவனித்தீர்களா? "நூறு" என்பதற்கு பதிலாக அப்படி வைத்திருக்கிறார்.. இந்த பதிவின் நடுவில் வரும் "இது நூறாவது பதிவு" என்ற வரிக்கு முன்னான பத்திகளை இதுவரை ஒரு 'சச்சின்' முறை வாசித்து இருப்பேன்.. அவரது அக்மார்க் நடை அது.. இந்த குறிப்பிட்ட பகுதி போதும் அவரை உங்களுக்கு பிடித்துபோக...
சிறுகதைகள்..அதை எப்படி வகைப்படுத்துவது தெரியவில்லை.. பெரும்பாலும் fiction இனத்தில் சேர்க்கலாம்.. என்னை பிரமிக்க வைத்த அவரது சிறுகதை கதை சொல்லாத கதை.. பிரமிப்பு என்பதை விட மிரட்சி சரியான வார்த்தை.. தவிர,அவருக்கே பிடித்த சிறுகதையாக அவர் சொல்லியிருப்பது மேகலா.. ஒரு நகைச்சுவை சிறுகதையும் உண்டு...கக்கூஸ்..(எனக்கு இது சிரிப்பு மூட்டியது.. சிலருக்கு அருவருப்பு கூட வரலாம்..)
terror kummi யின் சென்ற ஆண்டிற்கான "சிறந்த அறிமுக பதிவர் யார்?" என்று கணிக்கும் போட்டி வைத்திருந்தால் அதில் நான் ஜெயித்திருப்பேன்.. மிக எளிதாக இவர் பெயரை சொல்லி... அந்த அங்கீகாரத்தை மீறியும் இவருக்கு வரும் வாசகர்கள் குறைவே என்று எனக்கு தோன்றுவதால் (அவருக்கும் அப்படி தோன்றுவதை அவ்வபோது உணர்ந்திருக்கிறேன்) என் பங்கிற்கு இவரை இங்கே முன் நிறுத்துகிறேன்..
இவரை பற்றி சொல்லணும்ன்னா திருநெல்வேலிகாரர்.. வசிப்பது பெங்களூரில்... பெயரையோ முகத்தையோ வெளியிடாமல் திரிந்ததால் ஆரம்ப நாட்களில் பதிவுலகில் இருக்கும் ஏதோ அனுபவசாலியின் இன்னோர் வலைத்தளம் என்றே சந்தேகித்து வந்தேன்.. காரணம் ஆரம்பமே நெத்தியடி பதிவு...டாஸ்மாக்கில் எம் பி ஏ.. அதனை அவர் முடித்த விதம்தான் கவன ஈர்ப்பு...
ஒருவர் வலைத்தளத்தில் இருக்கும் அணைத்து பதிவுகளையும் நான் வாசித்திருக்கிறேன் என்றால் அது இவருடையதுதான்.. 33 பதிவுகள்தான் எழுதியுள்ளார் என்பது மட்டும் காரணம் இல்லை.. ஒவ்வோர் பதிவின் இடைவெளி அதிகம் இருப்பதாலோ என்னவோ எல்லாமே மெருகேறிய இரகம்.. சினிமா விமர்சனம் அவருக்கே உரிய பாணியில் எழுதுவார்..மௌனகுரு- விமர்சனம்..வாசிச்சு பாத்திங்கன்னா புரியும்...
இதுல என்ன இருக்கு? இதத்தான் வலையுலகுல நிறைய பேர் பண்ணிட்டு இருக்காங்களேன்னு நீங்கள் நினைத்தால் இவரின் இலக்கியதுவத்தை வைத்து இவரை தனிமைபடுத்தி காட்டமுடியும்...குறிப்பாக இரண்டு இடுகைகள்..
ஒன்று செத்த உடலாக்கு
அடுத்தது திருவள்ளுவர் tweets..
இரண்டும் மனுஷன் சும்மா மிரட்டியிருப்பார்...
ஆராய்ச்சி அலசல் கட்டுரைகளும் அவ்வபோது ரிலீஸ் ஆகும்.. ஏழாம் அறிவு படம் வெளியான சமயம் கிட்டத்தட்ட சினிபதிவுலகமே அந்த போதிதர்மரை U-turn எல்லாம் எடுத்து கலாய்த்து கொண்டிருந்த நேரம் இவர் எழுதிய போதிதர்மன் சூத்திரம்- ஓஷோ விளக்கம்.. 'செம்ம' இரகம்.. அதே போல இப்போது சமீபத்தில் வெளியான '3' படத்தினை தொடர்ந்து அவர் எழுதியிருந்த மன சிதறல் தொடர்பான கட்டுரையும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று..
terror kummi அறிமுக பதிவருக்கான இரண்டாம் பரிசிற்கு நான் கணித்து இருந்தது இவரைத்தான்.. அங்கே அது நடக்கவில்லை.. ஆனந்த விகடனில் திருச்சி பதிவு வலையோசையில் என்னுடைய தளம் வெளியான அதே நாளில் சென்னை பதிப்பில் இவருரைடைய தளம் வெளியானதில் பெரும் மகிழ்ச்சி...
ஹப்பா...இதுவும் நீளமான பதிவா போயிருச்சு.. இவர்களைப் பற்றி எழுத இந்த ஒரு பதிவு ஒதுக்கியதில் ஏதோ ஒரு பெரிய பொறுப்பை இறக்கி வைத்த திருப்தி..
நாளை சந்திப்போம்..
என்றும் நன்றியுடன்...சி.மயிலன்
|
|
அட்டகாசமான இரு பதிவர்கள்! இருவருமே எனக்கு மிகப் பிடித்தமானவர்கள்!
ReplyDeleteஜேகே - சமீபத்தில் நான் கண்டுகொண்ட, ஆச்சரியப்பட வைத்த ஆளுமை! பதிவுகளின் நீளம் சிலருக்கு சலிப்பூட்டலாம். நான்கூட அப்படி யோசித்திருக்கிறேன். ஆனால் வாசிக்க ஆரம்பித்தால் இடையில் விட்டு விலக முடியாதபடி ஒரு ஈர்ப்பு. மனுஷன் வேற வேலை பார்க்க விடக்கூடாதுன்னு முடிவு பண்ணியே எழுதுவாரு போல! :-)
சில்ட் பியர் இன் திரை விமர்சனங்களுக்கு நான் பெரும் ரசிகன்! என்னமா ஓட்டுவாரு! உதாரணமா 'வேட்டை!' ஒரு வசனம் வரும்
//இடைவேளைக்கு பிறகு உண்மையை கண்டு பிடித்துவிட்டார் தூத்துக்குடியில் வளர்ந்த ஹிந்தி வில்லன்// இந்த சாம்பிளே போதும்! :-)
முதல் பதிவரை அறிந்ததில்லை தொடர்கிறேன் அவர் தளத்தை நன்றி சிறந்த தளத்தை அறிமுகபடுதியதர்க்கு ..
ReplyDeleteமின்சாரத்தைக் கண்ட சம்சாரம் போல், உங்கள் நடை வியக்கவைத்தது....
ReplyDelete#செமையானா ஆளுங்க மச்சி. இப்போத்தான் பாலோவர் ஆவுறேன்..
முன்னவர் அப்பலத்தார் அறிமுகத்தில் படித்தது...பின்னவர் பிரபாகரன் அறிமுகப்படுத்தியிருந்தார்....சில்லுன்னு பீர் மச்சி ஓப்பன் தி பாட்டில் ஒரு பத்திரிக்கைஎழுத்தாளரா இருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது....இரண்டுமே சிறப்பு!
ReplyDeleteஅடடடடடடடா...என்ன ஒரு அங்கீகாரம்...நன்றி மயிலன்.அறிமுகத்துக்கு நன்றி!நிறைய எழுதணும்னு ஆசை இருக்கு.பார்க்கலாம்.
ReplyDeleteஇரண்டாம் அறிமுகம் நமக்கு அறிமுகம் இல்லைங்கோ..
ReplyDeleteமூன்றாம் அறிமுகம் சில இடுகைகள் வாசித்ததன் மூலம் அறிமுகம்ங்கோ. நீங்களும் அவர பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குற மாதிரி சொல்லி இருக்கீங்க.
இருவருமே தேர்ந்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள். தொடர்ந்து படிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது சென்று மொத்தமாக படிப்பதுண்டு!
ReplyDelete////terror kummi அறிமுக பதிவருக்கான இரண்டாம் பரிசிற்கு நான் கணித்து இருந்தது இவரைத்தான்.. அங்கே அது நடக்கவில்லை.. ////
ReplyDeleteநடுவர்களை வைத்தே அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே ஒன்றும் சொல்வதற்கில்லை.
முதல் ஆரம்பமே எனக்கு முகவும் பிடித்த ஒரு வலைப்பூ. நான் வலையுலகத்தில் நீச்சலடித்துக் கண்டுபிடித்த மிகச் சொற்பமான அருமையான வலைப்பூக்களில் ஒன்று. எழுத்து நடைக்காகவே நீளத்தையும் பொருட்படுத்தாது ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது வழக்கம். உண்மை தான், படிக்க சுவாரசியமாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு நீளமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது வாசிக்க முடிகிறது. பொறாமைப் பட வைக்கிற எழுத்து நடை. டாஷ் போர்ட் இல் வியாழ மாற்றம் தென்பட்டதுமே போய் வாசித்து வரும் அளவுக்கு ஈர்த்து வைத்திருக்கிற வலைப்பூ. எழுத்து நடை மட்டும் அல்ல, சுஜாதா போலவே பல விடயங்களையும் தெரிந்து வைத்து அனாயாசமாக அலசும் திறமையைப் பார்த்து நிறையவே பொறாமைப் பட்டிருக்கிறேன்!
ReplyDeleteChilled beers ஆனந்த விகடன் இல் வந்ததிலிருந்து தெரியும். இவரையும் படித்து ரசித்திருக்கிறேன்.
உண்மையிலேயே சரியான அறிமுகங்கள்! ( இது டெம்ப்ளேட் கமென்ட் அல்ல!)
இரண்டு சிறந்த பதிவர்கள் அறிமுகத்துக்கு நன்றி. முன்னவரை நிரூபன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பின்னவரின் தலம் சென்றதில்லை இதோ இப்போதே பார்க்கிறேன்..
ReplyDeleteஇரண்டு சிறந்த பதிவர்கள் அறிமுகத்துக்கு நன்றி. முன்னவரை நிரூபன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பின்னவரின் தலம் சென்றதில்லை இதோ இப்போதே பார்க்கிறேன்..
ReplyDeleteஅறிமுக இல்லாத பதிவர்கள்-
ReplyDeleteஎனக்கு -இனி தொடர்கிறேன் அவர்களை-
உங்களுக்கு அறிமுக படித்தியதுக்கு மிக்க நன்றி!
வணக்கம் மருத்துவ தோழரே.. எப்படியிருக்கிறீர்கள்..நீங்கதான் இந்த வார ஆசிரியரா? மகிழ்ச்சி.. குறிப்பிட்ட இருவரது பதிவுகளையும் வாசித்திருக்கிறேன்..உங்களது அழகான அறிமுகங்கள் தொடர வாழ்த்துகள்..வலைச்சர ஆசிரியரின் படத்தை எனது தளத்தில் வைப்பது வழக்கம்..தங்களின் படத்தையும் வைத்திருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்..வாழ்த்துகள்..
ReplyDeleteகூட்டத்தோடு கும்பலாக அறிமுகப்படுத்துவதை விட இப்படி அறிமுகப்படுத்துவது நல்ல அங்கீகாரமாக இருக்கும்,
ReplyDeleteசிறந்த பதிவர்களை தனித்து பிரித்து காட்டுவதே ஒரு நல்ல ஆசிரியரின் பணியும் கூட., வாழ்த்துக்கள் ..!
எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் இனி தொடர்கிறேன் . நிச்சயம் கை குலுக்க வேண்டும் உங்களுக்கு பத்தோடு ஒன்றாக குறிப்பிடாமல் தனித்து காட்டுவது சிறப்பு .
ReplyDeleteவிரிவான அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteவணக்கம் மருத்துவரே,
ReplyDeleteஇன்று பகிர்ந்திட்ட மூவருமே எனக்கு
அறிமுகம் இல்லாதவர்கள்..
இதோ அவர்களின் தளம் நோக்கி
படையெடுத்துக் கொண்டிருக்கிறேன் ...
பதிவுகளை வாசிக்காமல்
கருத்திடுவதில் எனக்கும் உடன்பாடில்லை..
படைப்பிற்கான கரு தாங்கி அதனை
வடித்துவைக்க ஒரு பதிவாளன்
எவ்வளவு சிரமப் படுவார் அன்பது
ஒரு பதிவன் என்கிற முறையில்
நன்கறிவேன்...
நிச்சயம் படித்து பார்த்து கருத்திடுகிறேன்..
நன்றிகள் பல..
நீண்ட நீண்ட பதிவுகளை எழுதுவதாக பலர் அன்பாக முறையிட்டாலும் இப்படி ஒரு பதிவுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வார்த்தை தேடினால் தமிழில் கிடைக்கமாட்டேங்கிறது .. நன்றியையே சொல்லிவிடுகிறேன் :)
ReplyDeleteநீங்கள் அதிகமாக புகழ்ந்து எழுதியிருப்பதெல்லாம் அன்புக்காக என்று ஒதுக்கினாலும் என் பதிவுகளை வாசித்து புரிந்து பகிர்வதை நினைக்கும் போது வலி இன்னமுமே கிண் கிண் என்று ... கிள்ளிப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
வலைச்சரத்து எடிட்டராக வந்தமைக்கு வாழ்த்துக்கள் ... கலக்குங்க தல.
இன்றையப் பதிவர்கள் இருவருமே அட்டகாசம். இருவரும் நான் விடாமல் வாசிக்கும் இரு பதிவர்கள்.
ReplyDeleteஜேகேயின் வியாழமாற்றம் பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் (ஒரு வாரத்திற்குள் 2ஆக பிரித்து வாசித்துவிடுவேன்.) ஆனால் அருமையாக இருக்கும்.
சில்ட் பியர்ஸை பற்றி அவரின் பெயரே சொல்லிவிடும். கிட்டத்தட்ட சில்லுன்னு ஒரு பியர் குடித்தமாதிரி தான் அவரின் பதிவை வாசித்ததும். அந்த ”நாட்டுப்புற” கதைகள் தான் என் ஃபேவரிட். :P
வணக்கம் சார் ! இன்று பகிர்ந்துள்ள மூவருமே இதுவரை அறிந்ததில்லை. இனி தொடர்கிறேன். நன்றி ! பதிவு பெரியோதோ, சிறியோதோ, முழுமையாக படிக்காமல் கருத்திடுவதில் பிரயோசனமில்லை. என் பதிவுகள் அனைத்தும் கொஞ்சம் நீளம் தான். குறைக்க நினைத்தால், சொல்ல வந்த கருத்துக்கள் முழுமை அடையாது. நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிமுகங்களின் பதிவை படித்து விட்டு கருத்திடுகிறேன். நன்றிகள் !
ReplyDeleteஅறிமுகப்படுத்திய இரண்டு பதிவர்களுமே எனக்கு புதியவர்கள்..டாஸ்மாக்கில் எம் பி ஏ. வாசித்துப்பார்த்தேன். மற்றவற்றினை நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.
ReplyDeleteநல்லது தலைவரே...
ReplyDeleteஜீ... said...
ReplyDelete//அட்டகாசமான இரு பதிவர்கள்! இருவருமே எனக்கு மிகப் பிடித்தமானவர்கள்!//
நன்றி ஜீ...
தொடருங்கள்..
PREM.S said...
ReplyDelete//முதல் பதிவரை அறிந்ததில்லை தொடர்கிறேன் அவர் தளத்தை //
நிச்சயம் நண்பா.. எதிர்பார்ப்புகள் நிச்சயம் சரிகட்டப்படும்...
வெளங்காதவன்™ said...
ReplyDelete//மின்சாரத்தைக் கண்ட சம்சாரம் போல், உங்கள் நடை வியக்கவைத்தது....//
இப்போ கொஞ்ச நாளா அதை நீங்க பாத்திருக்க முடியாதே...மின்சாரத்தை சொல்றேன்..:)
//செமையானா ஆளுங்க மச்சி. இப்போத்தான் பாலோவர் ஆவுறேன்..//
மிக நன்றி...better late than never..
வீடு சுரேஸ்குமார் said...
ReplyDelete//முன்னவர் அப்பலத்தார் அறிமுகத்தில் படித்தது...பின்னவர் பிரபாகரன் அறிமுகப்படுத்தியிருந்தார்...//.
எனக்கு முன்னவர் பிரபா சொன்னது.. பின்னவருக்கு நான்தான் first follower... :)
//சில்லுன்னு பீர் மச்சி ஓப்பன் தி பாட்டில் ஒரு பத்திரிக்கைஎழுத்தாளரா இருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது....இரண்டுமே சிறப்பு!//
இல்லை..இல்லை.. அவருக்கு அவ்வளோ பொய் வரல...:)
Chilled Beers said...
ReplyDelete//அடடடடடடடா...என்ன ஒரு அங்கீகாரம்...நன்றி மயிலன்.அறிமுகத்துக்கு நன்றி!நிறைய எழுதணும்னு ஆசை இருக்கு.பார்க்கலாம்.//
எழுதுங்க பாஸ்.. மீ வெயிட்டிங்...:)
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDelete//இரண்டாம் அறிமுகம் நமக்கு அறிமுகம் இல்லைங்கோ..//
உடனே கெளம்புங்க..
//மூன்றாம் அறிமுகம் சில இடுகைகள் வாசித்ததன் மூலம் அறிமுகம்ங்கோ. நீங்களும் அவர பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குற மாதிரி சொல்லி இருக்கீங்க.//
நன்றி நண்பரே...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//இருவருமே தேர்ந்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள். தொடர்ந்து படிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது சென்று மொத்தமாக படிப்பதுண்டு!//
அங்க உங்க கமெண்ட்ட பாத்திருக்கேன் ஜி..
//நடுவர்களை வைத்தே அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே ஒன்றும் சொல்வதற்கில்லை.//
ஐயோ தலைவரே.. என் ஏமாற்றத்தைதான் சொன்னேன்... தீர்ப்பை குறை சொல்லல...
முன்பனிக்காலம் said...
ReplyDelete//, படிக்க சுவாரசியமாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு நீளமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது வாசிக்க முடிகிறது. பொறாமைப் பட வைக்கிற எழுத்து நடை. டாஷ் போர்ட் இல் வியாழ மாற்றம் தென்பட்டதுமே போய் வாசித்து வரும் அளவுக்கு ஈர்த்து வைத்திருக்கிற வலைப்பூ. எழுத்து நடை மட்டும் அல்ல, சுஜாதா போலவே பல விடயங்களையும் தெரிந்து வைத்து அனாயாசமாக அலசும் திறமையைப் பார்த்து நிறையவே பொறாமைப் பட்டிருக்கிறேன்! //
அருமை.. மிகச்சரி...
//உண்மையிலேயே சரியான அறிமுகங்கள்! ( இது டெம்ப்ளேட் கமென்ட் அல்ல!)//
ஹஹா.. மிக்க நன்றி தோழர்...
காட்டான் said...
ReplyDelete//இரண்டு சிறந்த பதிவர்கள் அறிமுகத்துக்கு நன்றி. முன்னவரை நிரூபன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பின்னவரின் தலம் சென்றதில்லை இதோ இப்போதே பார்க்கிறேன்..//
நிச்சயம் உங்களை ஏமாற்றாது.. நம்பி தொடருங்கள்..
Seeni said...
ReplyDelete//அறிமுக இல்லாத பதிவர்கள்-
எனக்கு -இனி தொடர்கிறேன் அவர்களை-
உங்களுக்கு அறிமுக படித்தியதுக்கு மிக்க நன்றி!//
விட்ராதீங்க...ரெண்டு பேரையும் அமுக்கி புடிங்க...
மதுமதி said...
ReplyDelete//வணக்கம் மருத்துவ தோழரே.. எப்படியிருக்கிறீர்கள்..நீங்கதான் இந்த வார ஆசிரியரா? மகிழ்ச்சி.. குறிப்பிட்ட இருவரது பதிவுகளையும் வாசித்திருக்கிறேன்..உங்களது அழகான அறிமுகங்கள் தொடர வாழ்த்துகள்..வலைச்சர ஆசிரியரின் படத்தை எனது தளத்தில் வைப்பது வழக்கம்..தங்களின் படத்தையும் வைத்திருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்..வாழ்த்துகள்..//
பார்த்தேன் தோழரே.. நன்றி... தொடர்ந்து வாருங்கள்...
வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete//சிறந்த பதிவர்களை தனித்து பிரித்து காட்டுவதே ஒரு நல்ல ஆசிரியரின் பணியும் கூட., வாழ்த்துக்கள் ..!//
தோன்றியதை செய்கிறேன்.. இதுதான் சரியா என்று தெரியாது.. எனினும் நன்றி...
Sasi Kala said...
ReplyDelete//எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் இனி தொடர்கிறேன் //
சூப்பர்..
// நிச்சயம் கை குலுக்க வேண்டும் உங்களுக்கு//
தாராளமாய்.. மிக்க நன்றி....
NIZAMUDEEN said...
ReplyDelete//விரிவான அறிமுகங்கள். நன்றி.//
நன்றி...:)
மகேந்திரன் said...
ReplyDelete//படைப்பிற்கான கரு தாங்கி அதனை
வடித்துவைக்க ஒரு பதிவாளன்
எவ்வளவு சிரமப் படுவார் அன்பது
ஒரு பதிவன் என்கிற முறையில்
நன்கறிவேன்...
நிச்சயம் படித்து பார்த்து கருத்திடுகிறேன்..
நன்றிகள் பல..//
அருமையாய் சொன்னீர்கள்...
மிக்க நன்றி தோழரே...
ஜேகே said...
ReplyDelete//நீண்ட நீண்ட பதிவுகளை எழுதுவதாக பலர் அன்பாக முறையிட்டாலும் இப்படி ஒரு பதிவுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வார்த்தை தேடினால் தமிழில் கிடைக்கமாட்டேங்கிறது .. நன்றியையே சொல்லிவிடுகிறேன் :)//
:) உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்த பதிவு..
//நீங்கள் அதிகமாக புகழ்ந்து எழுதியிருப்பதெல்லாம் அன்புக்காக என்று ஒதுக்கினாலும் என் பதிவுகளை வாசித்து புரிந்து பகிர்வதை நினைக்கும் போது வலி இன்னமுமே கிண் கிண் என்று ... கிள்ளிப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.//
மிகையேதுமில்லை...
//வலைச்சரத்து எடிட்டராக வந்தமைக்கு வாழ்த்துக்கள் ... கலக்குங்க தல.//
மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்க.. மற்ற அறிமுகங்களையும் பாப்போம்...
ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDelete//இன்றையப் பதிவர்கள் இருவருமே அட்டகாசம். இருவரும் நான் விடாமல் வாசிக்கும் இரு பதிவர்கள். //
அருமை..
நாளைக்கு உங்களுக்கு இங்க வேலை இல்லன்னு நெனைக்கிறேன்.. (ஐயையோ.. சஸ்பென்ஸ் உடைக்காதே மயிலா...)
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete//வணக்கம் சார் ! இன்று பகிர்ந்துள்ள மூவருமே இதுவரை அறிந்ததில்லை. இனி தொடர்கிறேன். நன்றி ! பதிவு பெரியோதோ, சிறியோதோ, முழுமையாக படிக்காமல் கருத்திடுவதில் பிரயோசனமில்லை. என் பதிவுகள் அனைத்தும் கொஞ்சம் நீளம் தான். குறைக்க நினைத்தால், சொல்ல வந்த கருத்துக்கள் முழுமை அடையாது.//
இதுவரை உங்கள் தளம் வந்ததில்லை.. விரைவில் வருகிறேன்.. நன்றி..
விச்சு said...
ReplyDelete//அறிமுகப்படுத்திய இரண்டு பதிவர்களுமே எனக்கு புதியவர்கள்.//
நேரம் ஒதுக்கி நிச்சயம் வாசியுங்கள்..:)
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteநல்லது தலைவரே...//
தலைவரே நீங்களா..?
பாத்து நாளாச்சு.. சௌக்கியமா?
வந்ததில் மகிழ்ச்சி...
இதில் ஜேகே என்பவருக்கு நான் கருத்திட்டதாக நினைவு வருகிறது. ஆனால் எந்தவித பதிலும் இல்லை நான் கருதுவது அவர் எனது வலைக்கு வரவே இல்லை. அப்படி தொடர்பு கொள்வதையே நான் விரும்புவது. பின்பு விட்டிட்டேன் போல தெரிகிறது. அறிமுகம் இரண்டிற்கும் நன்றியும் வாழ்த்தும்
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
@ kovaikkavi
ReplyDeleteஇது சரியான நிலைப்பாடா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை..
என்னை பொறுத்தவரை,பிடித்திருந்தால் வாசிப்பேன்.. இதுவரை எனது தளத்தில் அவர் ஒரு மூன்று நான்கு கமென்ட் மட்டுமேதான் போட்டிருப்பார்.. ஆனால் நான் அவரது எந்த பதிவையும் தவறவிடமாட்டேன்..
இது கொடுத்தல் வாங்கல் இல்லை என்பது என் கருத்து.. ஆரம்ப காலங்களில் நான் வாசிக்கும் எல்லோருடைய பதிவுகளிலும் கருத்தோடு சேர்த்து எனது பதிவிற்கான இணைப்பை அளிப்பேன்.. போக போக அது ஒரு எதிர்பார்ப்பின் அடையாளமாய் தோன்றியதால் நிறுத்திவிட்டேன்..
கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஜே.கே. முதல் முறையா at a stretch 4மணி58நிமிடங்கள் ஒருத்தர், அதுவும் என்ன மாதிரி ஒரே இடத்தில் உட்காரும் பொறுமை இல்லாதவளை, ஆணி அடிச்சது போல் இழுத்து நிறுத்திருக்காருனா, அப்போ உண்மையாவே இவரோட எழுத்துல ஏதோ இல்ல, என்னென்னமோ இருக்கு..!!! இவருடைய பதிவுகள் நீளமென்ற அறிமுகம் கண்டு சற்று தயங்கினேன் தான். நல்ல வேளை தயங்கினேன். இன்று நிறுத்தி நிதானமாக ரசிக்க முடிந்ததது. இல்லாகாட்டி, அன்றே எட்டி பார்த்துட்டு சரி வராதுனு ஓடிருப்பேன். இப்பவும் இந்த ‘கரண்டு கட்டு’னால மூட வேண்டியதா போச்சு. மூடிய பின்னும் இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்காங்க -க்ரூசாந்தி, அக்கா, மேகலா…!!! மற்றவர் படிப்பதற்காக எழுதுபவர்கும், தன் திருப்திக்காக அனுபவித்து எழுதுபவர்க்குமுள்ள வித்தியாசம் அப்பட்டமாக தெரிந்தது..!!
ReplyDeletechilled beer அ(ப)டிக்க, படலை வழிவிடவில்லை..!!! :):)
நன்றி திவ்யா!
ReplyDeleteநீங்க வாசித்து கருத்தும் சொன்னது சந்தோசம். நீளமான பதிவுகள் எழுதுவதில் இருக்கும் வசதி, வாசிப்பவர்கள் எல்லாமே, உணர்ந்து சந்தோஷமாக இரண்டு வரி சொல்லுவார்கள். நமக்கு பிடித்ததை எழுதும்போது அது உங்களுக்கும் பிடிக்கிறது என்ற சந்தோசம் தான் தொடர்ந்து எழுதுவதற்கான ஆதாரம். நன்றி.
kovaikkavi அவர்களே .. வாசிக்கபடாமல் போவதில் இருக்கும் வலி புரியும். வாரம் இரண்டு நாள் எழுதுவது .. அதுவும் கொஞ்சம் டீடெயிலாக எழுதுவது என்பதால் சக பதிவர்களை ஒரே மூச்சில் வாசிப்பதற்கு தவரிவிடுகிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயம் வாசிக்கவும் செய்வேன் .. நன்றி.
ReplyDelete