முடி சூடிய வலைப் பூ முகங்கள்
வணக்கம்!
இன்று
நல்ல பல பதிவாளர்களின் பளிச்சிடும் பதிவுகளோடு உங்களை வந்து சந்திப்பதாக சொல்லி
இருந்தேன் அல்லவா?
யார்? யார்? அவர்கள் ?
முன்பே
நான் படித்தறிந்த பல பாராட்டுக்குரிய பதிவுகளையும், பதிவர்களையும் தேடி…
.
அவர்களது வலைப் பூ பக்கம் சென்றபோது சில பதிவாளர்கள் இயங்கும் நிலையில் இல்லாமல் இருப்பது கண்டு
ஏமாற்றமே அடைந்தேன். இந்த சூழலில்தான் மூத்த பதிவாளர்களின் நிலையான நிலையை எண்ணி
மிகவும் பெருமிதம் அடைந்தேன்.
அவர்களது
அருமையானது பெருமைக்கு பேர் வாங்கித் தந்திருப்பதை நான் உணர்ந்தேன்.
அப்போது
எனது நினைவுக்கு வந்தது நான் படித்த இந்தக் குட்டிக் கதை!
இதோ!
ஒரு
முறை ராஜா எதிரிகளை தாக்க இராணுவ படை
ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி
பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும்
சந்தேகத்துடனேயே இருந்தனர்.
அனைவரும் சோர்த்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள். இதனால் அந்த ராஜா தன் படை
வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது
அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார்.
அது
என்னவென்றால் அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்துவிட்டு ,
ஒருநாணயத்தை எடுத்து வீரர்களின் முன்
காண்பித்து
"நான்
இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன்,
தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்"
என்று துறவி சொன்னதைச் சொன்னார் வீரர்களிடம் !
"நம் தலை விதியை இந்த நாணயம்
நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.
அனைவரும்
அதை கூர்ந்து கவனித்தனர்
அப்போது
தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று
நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள் யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர்.
யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி
"விதியை
யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல, "ஆம், என்று ராஜா சொல்லி,
அந்த
நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.
இந்த
குட்டிக் கதையை படித்தாவது, புதிய பதிவாளார்கள் தன்னம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டு மனம்
சோர்வடையாமல் இருக்க வேண்டும்.
வலைப்
பூ தொடங்கியதுமே புகழ் கிரிடத்தை தலையில்
சுமக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒரங்கட்டி வைப்பார்களே ஆனால்? இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒருநாள், நிச்சயம் அது அவர்களைத் தேடி ஓடி வரும். அப்போது அனுபவமானது ஆனந்தப் பூ பூத்து சிரிப்பதை பார்த்து, ‘ வலைப் பூ’ உலகமே வாய்விட்டு வாழ்த்தும்.
சரி
! இன்றைய சிறப்பு பதிவாளர்களான மூத்தவர்களின் முத்தமிழ் பதிவுகளை
முத்தமிட்டு
வணங்கி வரவேற்போம் வாருங்கள்.
வலைவழிப்
பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்! என்று அனைவரையும் அன்பு பாராட்டும் பண்புக்கு
சொந்தக்காரர் சென்னையை வசிப்பிடமாக கொண்டு வலைப் பூ வில் எழுதிவரும்
புலவர் இராமாநுசம்
முனைவர் B.ஜம்புலிங்கம்
உலகம் போற்றும் உத்தமத் தலைவர்.
கறுப்பு காந்தி நெல்சன் மண்டேலா பற்றி இவர் எழுதிய பதிவு ஒரு வரலாற்றுக் காவியம்.
டி.என்.முரளிதரன்
தி.தமிழ் இளங்கோ
G.M
Balasubramaniam
http://gmbat1649.blogspot.fr/2012/10/blog-post_6.htmlhttp://gmbat1649.blogspot.fr/2012/10/blog-post_6.html
இராஜராஜேஸ்வரி
இன்றைய
பதிவர்களின் பளிச்சிடும் பதிவுகள் வலைப் பூக்களில்
வாசம் நிறைந்தவை.
நாளை மேலும் பல
நல்ல பதிவுகளோடு வருகிறேன்.
நன்றி!
புதுவை வேலு
|
|
கதை அருமை...
ReplyDeleteபதியுலக உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வலைச்சரத்தில் எனது வலைப்பூ அறிமுகப்படுததப்பட்ட செய்தியைத் தெரிவித்த தங்களுக்கு நன்றி.
Deleteநன்றி! முனைவர் அய்யா
Deleteநட்புடன்,
புதுவை வேலு
வார்த்தைச் சித்தரே உமது பாராட்டுக்கள் பதிவர்களை சென்றடையட்டும்!
Deleteவருகை சிறக்கட்டும்! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
Im coming after
ReplyDeleteவாருங்கள் காத்திருக்கின்றோம்! நன்றி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
கடைசி மூன்று இணைப்புகளை சிறிது சரி செய்ய வேண்டும்...
ReplyDeleteகடைசி மூன்று இணைப்புகளை சிறிது சரி செய்ய வேண்டும்...
Deleteஇருக்க பயம் ஏன்?
DD இருக்க பயம் ஏன்?
வருகைக்கு நன்றி வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
நம்பிக்கையூட்டும் கதை நண்பரே
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே
தம +1
வரலாற்று சிறப்புமிகு பதிவாளரின் வருகைக்கு மிக்க நன்றி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
அழகான கதையுடன் - இன்றைய தொகுப்பு அருமை!..
ReplyDeleteவாழ்க நலம்!..
இன்றைய தொகுப்பை பாராட்டி கருத்தினை புரிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
பதிவில் கதை மிக மிக அருமை! நம்பிக்கைதானே வாழ்க்கை! எல்லாமுமே!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா! மாபெரும் பதிவர்களோடு, சிறியவர்களாகிய எங்களையும் அறிமுகம் செய்ததற்கு! தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை! அதுவும் சிறப்புப் பதிவாளார் என்று சொல்லுவதற்கு!
சிறப்பு பதிவாளரின் வருகை பெருமை சேர்த்தது!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஆசானே!
Deleteதொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி! நம்பி! முதுமையின் காரணமாக முன்போல் எழுத இயலவில்லை!
ReplyDeleteவலைப் பூவை மீட்டெடுத்தமைக்கு கவிதை வெகு சிறப்பு!
Deleteநன்றி புலவர் அய்யா!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
நல்லகதையுடன் வலைச்சரத்தை அலங்கரித்துள்ளீர்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாம் அறிந்த வலைப்பூக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞரின் வருகையும், வாக்கும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் ஊட்டியது!
Deleteநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி, அன்புக்கு நன்றி
ReplyDeleteநன்றி!
Deleteமுனைவர் அய்யா!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
This comment has been removed by the author.
ReplyDeleteபெரிய செய்தியை உள்ளடக்கிய குட்டிக்கதை அருமை. இதை இந்திப் படமொன்றில் மிகத்திறமையாகப் பயன்படுத்தியிருப்பார்கள். இன்றைய பதிவாளர்கள் அறிமுகமும் நெடுநாள் எழுதாத பதிவர்களை எழுதக் கேட்டுக் கொண்டதும் அவசியமான வேண்டுகோள் அருமை, நன்றி தொடருங்கள். வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் ஆசானே!
Deleteஹிந்தி படத்தை "ஷோலே" நினைவு கூர்ந்த விதம் ,
அமிதாப் காசை சுண்டும் காட்சியை கண்முன் நிறுத்தியது அய்யா
தங்களது வருகை பெருமை!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
ReplyDeleteஐயா.
புது வித உணர்வுடன் அறிவுக்கதையுடன்
ஆர்ப்பரிக்கும் வலைப்பூக்கள்
கவித்துவம் நிறைந்த புலவர்-ஐயா
புதிய தேடலில் மறந்து கிடக்கும்
அகழ்வுகளின் வெளிச்ச வீடு ஜம்புலிங்கம்-ஐயா
புது புது வித்தைகளை பதிவில் காட்டும்
தமிழ் இளங்கோ-ஐயா.
புராண கதைகள் பழைய நினைவுகளை
மீட்டு பார்க்க வைக்கும் GMP-ஐயா
வரலாற்று கு றிப்புக்களை சுவைபட கூறும்
கணித வித்தகர் ஜெயக்குமார்-ஐயா
மொழி பெயர்ப்பு கதை பிற நாட்டு
காட்டு வளம் சொல்லும் கவிஞர்-கீதா-அம்மணி
யாவருக்கும் பயன் கிடைக்கும் வகையில்
தெளிவாக சொல்லும் முத்து சிதறல்- மனோ.சாமிநாதன்-அம்மணி
பக்தி சுவையூட்டும் இறை ஊர்வலம் சொல்லும்
இராஜேஸ்வரி -அம்மணி
பட்டி மன்ற பேச்சாளர் நல்லாசான்...
இனிய குரலுக்கு சொந்தகார்.
எல்லோரையும் பிரமிக்க வைக்கும் பதிவு எழுதும்
கவிஞர் முத்து நிலவன் -ஐயா.
இவர்களின் பதிவு இன்று வலைச்சரத்தில் வலம் வந்தமைக்கு பாராட்டுக்கள் நான் விரும்பி படிக்கும் வலைப்பூக்கள்.
நினைவு படுத்தி அலங்கரித்த புதுவை யாதவன் ஐயாவுக்கு பாராட்டுக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக் கவிதை வெகு அழகு!
Deleteபதிவாளர்களே இவரிடம் பழகு!
என்று சொல்லும் வகையில் அமைந்திருந்தது!
வருகைக்கு மிக்க நன்றி கவிஞரே!
நட்புடன்,
புதுவை வேலு
அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுடி சூடிய வலைப் பூ முகங்கள்
முத்தாக சிரிக்கும் தளங்கள்
குழல் இன்னிசை யாதவன் நம்பி
குழலில் இசைத்து சொன்னார் இங்கே...!!!
வாழ்த்துக்கள் நம்பி.... அருமையாக தொடருங்கள்....
7 ஸ்வரங்கள்...!!!
Delete
Deleteசப்த சுரங்களை வலைச் சரத்திற்கு வாக்காய் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
தொடர்க
நட்புடன்,
புதுவை வேலு
Deleteசப்த சுரங்களை வலைச் சரத்திற்கு வாக்காய் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
தொடர்க
நட்புடன்,
புதுவை வேலு
வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா.
ReplyDeleteஎன்னை கை பிடித்து அழைத்து வந்தவர் நீங்கள் என்பதை நான் மறவேன் அய்யா!
Deleteவருகைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இன்றைய வலைச்சரத்தில், எனது இந்த பதிவினை அறிமுகம் செய்து, தகவலும் தந்து, நான் மேலும் தொடர்ந்து எழுதிட ஊக்கம் அளித்த அன்புச் சகோதரர் குழல் இன்னிசை - யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteமேலும் இந்த இனிய செய்தியினை எனக்குத் தெரிவித்த வலைச்சித்தர் – திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.
த.ம.8
நன்றி நண்பரே!
Deleteசீர் படைப்பு சிறக்கவே செய்ய
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான பதிவர்களின் பதிவுகளுடன் முதல் நாள் வலைச்சரத்தை அலங்கரித்து விட்டீர்கள்! அருமை! தொடருங்கள்!
ReplyDeleteபணிச் சுமை பரவி நிற்க, புறா போல் பறந்து வந்து, சிறந்த பாராட்டினை வழங்கி சென்ற நண்பரே நன்றி:
Deleteநட்புடன்,
புதுவை வேலு
ReplyDeleteஅருமையான, ஏற்கனவே கேட்டிருப்பினும் பொருத்தமான, கதை இன்றைய அறிமுக பெரியோர்களுக்கு வந்தனங்கள்.
நண்பரே புகைப்படத்தில் உள்ள ஈபிள் டவரைச்சுற்றி ஊரணி வெட்டி இருப்பது அருமை நான் வரும்போது இப்படி இல்லை இதைக் காண்பதற்காக மீண்டும் வருவேன்.
வாழ்க வளமுடன்.
நண்பன் - கில்லர்ஜி
தமிழ் மணம் நவரத்தினம்
வந்தணம் சொல்லியபடி வருகை தந்த நண்பரே! வணக்கம்!
Deleteவருகை தொடரட்டும் நண்பா! நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
கதை அருமையான கருத்தினைச்சொல்லியது.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அருமை பேசும் கருத்தினை தந்தமைக்கு நன்றி நண்பரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான கதையோடு சகாக்களையும், சகோக்களையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி அண்ணா!
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரி! பாராட்டுக்கள் பதிவர்களை சென்றடையட்டும்
Deleteநட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஇந்த வார வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தும் தங்களுக்க பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க தலையைச் சுற்றிய கதை நன்றாக இருந்தது.
முடி சூடிய வலைப் பூ முகங்களைக் காண வைத்ததற்கு நன்றி.
மணவை ராஜா (ஜேம்ஸ்) இங்கு வந்து கருத்தினை தந்து தைரியத்தை தந்து எழுத வைத்தமைக்கு நன்றி நண்பரே! தங்களுக்கும்,தங்களது நண்பருக்கும் நன்றி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
என்னையும் பட்டியலில் குறிப்பிட்டமைக்கு நன்றி யாதவன் நம்பி.
ReplyDeleteகுட்டிக் கதை அருமை . புதியவர்கள் பலரும் சிறப்பாகவே எழுதி வருகிறார்கள் அறிமுகங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்
புதியவர்கள் பலரும் சிறப்பாகவே எழுதி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை அய்யா!
Deleteவலைப் பூ உலகிற்கு நானும் புதியவனே அய்யா
நட்புடன்,
புதுவை வேலு
கருத்தான கதையுடன்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்....
வருகை தந்து அறிமுக பதிவர்களை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
kaalathi vendra pathivugal. vaalthukal.
ReplyDeleteகாலத்தை வென்ற பதிவுகளை கண்டு கொண்டமைக்கு நன்றி நண்பரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
என் வலைத்தளம் பற்றிக்குறிப்பிட்டு, எனது பதிவொன்றை எடுத்து இங்கே சிறப்பித்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி புதுவை வேலு!!
ReplyDeleteதங்களை சிறப்பிக்க வாய்ப்பினை அளித்த வலைச் சரத்திற்கு நன்றி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
அழகான குட்டிக்கதையோடு அருமையான அறிமுகங்கள்! பாராட்டுக்கள் வேலு சார்!
ReplyDeleteதொடர்ந்து ஊக்கமளிக்க! வருகை தந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி கலை அரசி அவர்களே!
Deleteநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கதை மூலம் அசத்தலான ஊக்க டானிக்குடன் நல்ல தொடக்கம் !
ReplyDeleteஅறிமுகங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள் !
நன்றி
சாமானியன்
சாமானியன் அவர்களே!
Deleteநீங்கள் வாங்கி வந்து தந்த டானிக் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?
ஊக்கத்தைத் தான் சொன்னேன் நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மூத்தவர்களின் வலைப்பூ வரிசையில் நானுமா? மிகப்பெரிய அங்கீகாரம். என் எழுத்தின் பொறுப்பை இன்னும் அதிகமாக்குகிறது. மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு. தொய்ந்திருக்கும் பதிவர்களை ஒரு அழகான கதை மூலம் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதத்தூண்டும் பாங்கு பாராட்டுக்குரியது. அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி கீத மஞ்சரி அவர்களே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
ஆஹா. கதை அருமை.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
மிகச் சிறந்த பெரியவர்களின் அறிமுகம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தமிழ் முடி சூடிய முகங்களை உடையவர்கள் அல்லவா?
Deleteமூத்தவர்களானா பெரியவர்கள்!
நண்பர் பரிவை சே.குமார் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
//இராஜராஜேஸ்வரி
ReplyDeletehttp://jaghamani.blogspot.com/2013/12/blog-post_16.html
மார்கழித் திங்கள் மதி கொஞ்சும் நன்னாள் //
இந்தப்பதிவினை சிறப்பித்து அடையாளம் காட்டியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
//இராஜராஜேஸ்வரி
Deleteக்ட்ட்ப்://ஜக்கமனி.ப்லொக்ச்பொட்.cஒம்/2013/12/ப்லொக்-பொச்ட்_16.க்ட்ம்ல்
மார்கழித் திங்கள் மதி கொஞ்சும் நன்னாள் //
இந்த பதிவு எப்படி அய்யா?
குழலூதும் கண்ணனுக்கு பிடிக்காமல் போகும்?
நினைவூட்டியமைக்கு நித்திய நன்றி வை கோ அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு