07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 19, 2015

"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி''






நண்பர்களே!
மண்ணுக்கு மேலே தலைகாட்டும் மெல்லிய புல் தொடங்கி,
மண் மாதாவுக்கு, மகுடம் சூட்டுவது போல் எழுந்த ஆலமரம் வரைக்கும் இடையிலான, எல்லாத் தாவர வர்க்கங்களையும் இணைத்துப் பார்க்கச் செய்யும் ஒரு தமிழ் சொற்றொடர்
எது தெரியுமா?
வாழையடி வாழையென தமிழர் தம் வம்சம் தழைக்க, வாழ்த்துகிற போதெல்லாம் கண்டிப்பாய் இடம் பெறும் சொற்றொடர்தான் அது!
"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி'' என்னும்
வாழ்த்து சொற்றொடர்தான் அது!
தெய்வீகமான வில்வத்தையோ,  மூவேந்தர்கள் அடையாளமாகச் சூட்டிக்கொண்ட வேம்பு,  அத்தி,  பனை முதலான மரங்களையோ, திருத்துழாய் (துளசி),  தூதுவளை முதலிய செடிகளையோ,  கொடி வர்க்கங்களையோ குறிப்பிடாமல் "ஆலையும் அறுகையும்' முன்னிறுத்தி வாழ்த்துவது ஏன்?  தெரியுமா?

"ஆல்"
ஆணிவேர் இற்று உயிரற்றுப் போனாலும்,  பக்கவேர்களும்,  சல்லி வேர்களும் பாதுகாத்துத் தாங்கும் மரவர்க்கத்தின் மாமன்னன் ஆலமரம்.
மூலவேர் பழுதானாலும்,  நீள விழுதுகள் நீட்டிச் சில நூற்றாண்டு காலம் வாழும் வல்லமையுடையது.
ஆக, தானும் வாழ்ந்து தன்னிழலில், பிற உயிர்களும் வாழ, உதவிடும் தகுதிப்பாடு உடையது ஆலமரம். தம் சுற்றம் பேணி,  வையத்துள் வாழ்வாங்கு வாழ ! "ஆலமர வேரும்,  விழுதுகளும்" (படம் சொல்லும்) பாடமாகின்றன!

"அறுகு"
புல்லிய (சிறிய) வர்க்கம் என்பதால் புல்.
பூமித்தாயைப் புல்லி (தழுவி) கிடப்பதாலும் இது புல்.
"புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன் ' வள்ளுவ வாக்கையும்,
"பொருந்துறப் புல்லுக'  என்று அனுமனுக்கு இராமர் உரைத்ததாய்ச் சொன்ன கம்பவாக்கையும் கவனத்தில் கொண்டால்,   இதன்பெருமை இனிது விளங்கும்.

பேயாய் ஆட்டுவிக்கும் பெரிய புயலில்,  ஆலமரம்கூட அடியற்று வீழ்ந்து விடும்.
ஆனால்,  எந்தப் பெரும் புயலும்சின்னஞ்சிறு புல்லை ஆட்டிப் பார்த்து,
பின்! அடிபணிந்து போகும் என்பதுதான் இயற்கை.
பசும்புல் அழகை ' புல்லின் இயல்பென்றோ மண்ணின் மாண்பென்றோ சொல்லாமல்,
 
"வான் சிறப்பு'  என்று வள்ளுவர் கொண்டாடுவார்! அதுதான் வாழ்க்கையின் சிறப்பு!
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு (963)
என்ற வள்ளுவர் வாக்குக்கு   "அறுகும் ஆலும்" பக்கம் பக்கமாய் நின்று வாழ்த்து இசை இசைக்கின்றது!
"வலைப் பூ" பதிவாளர்களின்  சிறப்புமிகு பதிவுகள் யாவும்
"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி''  
 நீடுழி நிலைத்து நிற்கட்டும்!

இன்றைய இத்தகு சிறப்புக்குரிய பதிவாளர்களின் பதிவுகள் இதோ!


 http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post.html
 திண்டுக்கல் தனபாலன்
எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்

வலைப்பூவுலகில் வார்த்தைச் சித்தர் என்றழைக்கபடும் இவரின் பதிவுகளில் வள்ளுவரின் வாக்கு நீக்கமற நிறைந்திருக்கும். ஊக்கம் தரும் சொற்களின் சொந்தக்காரர். இவர் வருவார் வலை உலா! உதவிக்கே உதவும் நிலா!
இவரது இந்த பதிவு "எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்"

தேன் சிந்தும் வானம்.


http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_23.html 
ஊமைக்கனவுகள் (ஜோசப் விஜூ)
சொல் விளையாட்டு 

 நல்ல பதிவுகளை படைப்பதில் இவர் ஒரு பிரம்மன்
இவரது தளத்தின் பெயர் ஊமையாக இருக்கலாம்!
ஆனால் இந்த ஊமையின் தளத்தை பற்றித்தான் ஊரெல்லாம் ஒரே பேச்சு!
ஓய்வு இல்லாத தமிழ் ஆய்வு பேச்சுக்கு, மூச்சை உள்வாங்கும் உள்ளம் இவரது உள்ளம்!
 "யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்" சிறப்பு வாசகம் ஒன்றே போதும் இவரது ஒப்பற்ற பதிவுகளின் சிறப்பை ஒளிர!
புலவர்களைச் சொல்லேர் உழவர்கள்என்று தமிழ் சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது. என்பதை சொல் விளையாட்டு உணர்த்தி உள்ளார் இந்த உன்னத பதிவில்.


http://thalirssb.blogspot.com/2014/07/karikal-mangani-festival.htmlhttp://thalirssb.blogspot.com/2014/07/karikal-mangani-festival.html
தளிர்சுரேஷ் 
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா!

தனது எண்ணங்களை எழுத்தோவியமாக வடிக்கும் சிற்பி இவர்.
மாபெரும் தத்துவத்தை உள்ளடக்கிய திருவிழாவான மாங்கனித்திருவிழாவை, பிரம்மதத்தன், புனிதவதி கதையை பதிவாக்கி தந்துள்ளார். காணுங்கள் காரைக்கால் அம்மையாரின் அருள் பதிவை!


http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html
சாமானியன் சாம்
ரெளத்திரம் பழகு !

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் பிறந்து வளர்ந்த இவர் இப்பொழுது வாழ்வது பிரான்சு நாட்டில். வாசிப்பதை வழக்கமாக கொண்டவர்
தனது எண்ண ஓட்டங்களை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, பதிவாக்கித் கடல் அலைபோல் தவழ்ந்து வந்து சொல்வதில் வல்லவர்.
கோபம் தவறில்லை, அது நமது கட்டுக்குள் இருக்கும்வரை ! ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத  ! மற்றொருவரிடம் காட்டாதவரை !
அதைதான் " ரெளத்திரம் பழகு " என்றான் பாரதி!


http://killergee.blogspot.com/2015/01/blog-post_27.html
கில்லர்ஜி
"மான்செஸ்டர்" 

தேவக்கோட்டையின் மண்ணின் மைந்தர் கில்லர்ஜி அவர்கள். தற்போது இருப்பது அபுதாபியில். பூவை பறிக்க கோடரி எதற்கு என்று கேட்பதோடு நிற்காமல் ஆசையை துறந்து அகிலத்தை தனதாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார்.வலைப் பூ உலகின் முன்னணி பதிவாளர். பிறரையும் முன்னுக்கு கொண்டு வர முயலும் பதிவாளர்.பல பதிவுகள் பளீச்சிட்டாலும் சமூக அவலத்தை சாடும் இந்த "மான்செஸ்டர்" பதிவு சிறப்பு.


 http://kaviyakavi.blogspot.com/2015/02/blog-post.html
 இனியா (காவியக் கவி)
பாயும் புலியும் கேட்டால் பதுங்கி தானே கிடக்கும்  
சந்தம் சதிராடி தமிழ் மயங்கும் கண்ணனின் கவிதை படிப்பவர் பரிதவிப்பர் சிறப்புக் கவிதை.
 

http://balaamagi.blogspot.fr/2015/02/blog-post_17.htmlhttp://balaamagi.blogspot.fr/2015/02/blog-post_17.html
mageswari balachandran
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். 


 http://velunatchiyar.blogspot.com/2015/03/blog-post_12.html
Geetha M  
ஆலவாயன்-பெருமாள் முருகன்

http://mukundamma.blogspot.fr/2015/03/blog-post_13.htmlhttp://mukundamma.blogspot.fr/2015/03/blog-post_13.html
முகுந்த் அம்மா 
படித்தது மனதை பிழிந்தது , கவனித்தது, கேட்டது 

 http://puthur-vns.blogspot.com/2014/02/blog-post.html#more
  வே.நடனசபாபதி
 கருணைக் கொலையை அனுமதிக்கலாமா? 


நல்ல பதிவுகளை நாட்டிற்கு அளித்த இந்த சில பதிவாளர்களோடு,
நாளை இன்னும் பல!
பதிவாளர்களை காண்போம் என்று சொல்லி விடை பெறுகின்றேன்.

நட்புடன்,
புதுவை வேலு

 









 
 

48 comments:

  1. Replies
    1. வருக!
      வரும் வருகை
      நல்வருகை பயக்கட்டும்
      நட்புடனே!
      நன்றி!
      புதுவை வேலு

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  3. நன்றி நன்றி ஐயா...

    அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வா ! வலைப் பூ நிலா!
      வாழ்த்தினை வடித்தே
      வந்தாய் உலா!

      உமக்கு,
      எமது
      நன்றி என்னும் பலா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  4. வணக்கம் நண்பா.... மலைகளுக்கு மத்தியில் இந்த மடுவையும் இணைத்து எனக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி எனது மான்செஸ்டர் பதிவு நான் மிகவும் நேசித்து எழுதியது என்னைப்பற்றி கொஞ்சம் கூடுதலாகவே எழுதியிருப்பதுதான்..... ஏற்கனவே ஜலதோஷம் பிடிச்சு அச்சு and ஆச்சு னு தும்மிக்கிட்டு இருக்கேன்......

    ஏனைய எனது நண்பர்கள்....
    திரு. திண்டுக்கல் தனபாலன்
    திரு. ஊமைக்கனவுகள்
    திரு. தளிர் சுரேஷ்
    திரு. சாமானியன்
    திருமதி இனியா
    திருமதி. கீதா
    திரு. முகுந்தம்மா
    திரு நடன சபாபதி
    அனைவருக்கும் கில்லர்ஜியின் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தும்மலோடு தூரிகையை எடுத்து துரத்தி வந்து
      வாழ்த்து பூக்களை மற்ற நண்பர்களுக்கும் தூவி விட்டு சென்றுள்ளீர்கள்!
      சிறப்படையட்டும் சீரிய சிந்தனை! நன்றி! தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  5. வணக்கம்
    ஐயா
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்குபாராட்டுக்கள்
    தொடருகிறேன் பதிவை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே! வருக!
      அனைவருக்கும் வாழ்த்துச் செய்தியை அள்ளி தந்து விட்டு வந்திருக்கும்,
      தங்களுக்கு
      தமிழ்கூறும் நல்லுலகின் சார்பில் இனிய நன்றி!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  6. இனிய தொகுப்பு!..
    அறிமுக நண்பர்கள் மட்டுமல்லாது -
    வலையுலகத்தின் அனைத்து சொந்தங்களும்
    ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி செழிக்கட்டும்!..

    ReplyDelete
    Replies

    1. "ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி செழிக்கட்டும்!"..
      என்ற தங்களது அருள் வாக்கு பலிக்கட்டும் அன்பின் அய்யா!
      வருகை செழிக்கட்டும் செம்மொழி போல்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  7. “ஆல்போல் தழைத்தே அருகுபோல் வேரூன்றி
    ‘வேல்‘போலக் கூர்மை விரும்பிடினும் - சால்பறிந்தீர்
    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு“

    என்றிருந்த உங்களின் அழைப்பிற்கும் இங்கென்னை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி!
    தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சக பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள் !



    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பனி போல் வந்தார்
      நனிமிகு கருத்தினை தந்தார்

      கனி தரும் இன்சுவை
      பதிவே என்றார் வாழி!

      "ஆல் போல் தழைத்து
      அருகு போல் வளர வேண்டும்"
      முன்னூட்டத்தோடு , தங்களது பின்னூட்டமும் அய்யா!
      நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  8. வித்தியாசமான பாணியில் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.

    இன்றைக்கு அறிமுகம் ஆன நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்கள் சொக்கி தூக்கம் கொக்கி போட்டு அழைக்கும்போதும்,
      சொக்கரின் வருகை, விழிப்புக்கு விருந்து படைக்கின்றது!
      தொடர்க நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  9. இன்றைய வலைசரத்தில் ஜொலிக்கும் அத்தனை பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை
      நிச்சயம் என்போன்றவர்களுக்கு
      நல் ஊக்கமளிக்கும் நல் விருந்து!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  10. மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ! வலைப்பதிவில் வித்தியாசமான அறிமுகம் கவரும் படியாக அமைந்தது வெகு சிறப்பு. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ! ஏனைய அறிமுகங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. கவிதை நாயகியின்
      கற்கண்டு கருத்து இனித்தது!
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  11. Replies
    1. மணக்கும் தமிழ்மணம் வாழ்த்துகள்
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  12. நல்ல பதிவுகளை நாட்டுக்கு அளித்த நல்லோர்களுக்கு வாழ்த்துக்கள். அதை தொகுத்து அளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  13. பொறுப்பேற்ற உங்களுக்கும் பாராட்டுப் பெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து கணையாழி கொண்டு வந்து வாழ்த்திய
      கவியாழி கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  14. நான் வலைப்பூவில் இப்போதான் ஊன்றப்பட்டுள்ளேன். என்னையும்(இந்த விதையையும்) விருட்சமாக உள்ள அன்பர்களுடன் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தங்களின் அறிமுகம் அருமை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய விதையே
      நாளைய விருட்சம்!
      மேன்மேலும்,
      நல்ல பல பதிவுகளை படைத்து,
      தங்களது ஆசானுக்கு, கரந்தையாருக்கு பெருமை சேர்த்து
      பெருமை அடைய வாழ்த்துகிறேன். சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  15. என் வலைப்பதிவை on monday posting அறிமுகம் செய்தது மகிழ்ச்சியே.

    அதை விட மகிழ்வு தந்தது காவியக்கவியின்
    ஆயர்பாடி கண்ணா வலை மோதுகின்ற

    என்ற பாடல் மயங்கச் செய்து விட்டது.

    அதை நானும் இங்கு பாடி இருக்கிறேன்.
    https://www.youtube.com/watch?v=OVrlBciFfQE
    வலைச்சர அன்பர்கள் கேட்டு மகிழ்ந்து
    காவியக்கவி பாடல் நாயகன் கண்ணன் அருள் பெறவேண்டும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. என்றோ சகோதரி இனியா அவர்கள் எழுதிய பாடல்!
      இன்று வலைச் சரத்தின் மூலம் பாராட்ட பட்ட அந்த பாடலை,
      திருசுப்புதாத்தா அவர்கள் கேட்டு, ஒலிப்பதிவு செய்து யூ டிப்பில் (you tube) பாடி வெளியிட்ட செய்தி இரட்டிப்பு மகிழ்வை தந்தது.
      இது நிச்சயம் "குழலின்னிசைக்கு" மட்டற்ற மகிழ்ச்சி!
      நன்றி அய்யா!
      பெருமைக்கு பெருமை சேர்த்தமைக்கு!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  16. //இனியா (காவியக் கவி)
    //பாயும் புலியும் கேட்டால் பதுங்கி தானே கிடக்கும்
    சந்தம் சதிராடி தமிழ் மயங்கும் கண்ணனின் கவிதை படிப்பவர் பரிதவிப்பர் சிறப்புக் கவிதை//
    பாடல் மயங்கச் செய்து விட்டது.
    நானும் இங்கு பாடி இருக்கிறேன்.
    https://www.youtube.com/watch?v=OVrlBciFfQE
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com



    ReplyDelete
    Replies
    1. "சந்தம் சதிராடி தமிழ் மயங்கும் கண்ணனின் கவிதை" என்று குறிப்பிட்டேன் எனது குறிப்பில், அதனை உண்மையாக்கி பெருமை செய்து விட்டார் திரு சுப்புதாத்தா
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  17. என்னையும் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      வருகைக்கு நன்றி!
      தங்களின் பதிவை அறிமுகம் செய்ததில் பெருமை அடைகிறோம்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  18. மிக அருமையான தொடக்கம் ! வாழ்த்தும் வார்த்தைகளில் கூட தாவரங்களையும் மரங்களையும் உதாரணமாக்குவதிலிருந்து பண்டைய தமிழர்களின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வு விளங்குகிறது.

    " ஆலுக்கும் அறுகுக்கும் " இடையே இந்த சாதாரண, சாமானிய சிறு புல்லையும் பதியனிட்டத்தற்கு நன்றிகள் பல நண்பரே !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!
      சிறு புல்தான் பெரிய புயலையே தோற்கடித்து விடுகிறது என்பதை பதிவில் படிக்க வில்லையா?
      (பேயாய் ஆட்டுவிக்கும் பெரிய புயலில், ஆலமரம்கூட அடியற்று வீழ்ந்து விடும்.
      ஆனால், எந்தப் பெரும் புயலும், சின்னஞ்சிறு புல்லை ஆட்டிப் பார்த்து
      பின்! அடிபணிந்து போகும் என்பதுதான் இயற்கை.)
      சாமானியன் சாதரண புல் இல்லை ! அய்யா!
      புயலை ஆட்டங் காண வைக்கும் புல் !
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  19. அறிமுக விழாவை அருமையாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.யாதவன் நம்பி அவா்களுக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி,
      வலைச்சரம் வந்தமைக்கும்,
      வாழ்த்துகள் சொன்னமைக்கும்
      வளமான நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  20. எனது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் வந்து நன்றி பகன்றமைக்கு மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  21. அருமையான பதிவு ஐயா!

    நண்பர்களின் அறிமுகம்....மிக்க மகிழ்வளிக்கின்றது! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் வந்து வாழ்த்து தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  22. ஆஹா...அழகாய் அறிமுகப்படுத்துகிறீர்கள் சகோ.

    நட்பின் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

    தம +1

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் வந்து வாழ்த்து தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  23. என்னுடைய அறிமுகத்திற்கு நன்றி! நான் ரசிக்கும் பதிவர்களுடன் எனது அறிமுகம் கிடைத்தமை எனக்குச் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிளிரும் படைப்பு
      தளீர் தரும் படைப்பு என்று சொல்லுவதற்கு
      இது ஒரு வாய்ப்பு நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  24. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறிமுகம் அறிந்து நல்லாசி கூறும் நண்பர் பரிவை சே.குமார் அவர்களுக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது