மறுபடியும் உங்கள் முன் ஒரு பட்டாம்பூச்சி....
➦➠ by:
காயத்ரி தேவி
ஹாய் ஹாய் ஹாய்....
ஒன்னரை வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் நான் உங்க பட்டர்ப்ளை (நம்புங்க) காயத்ரி தேவி உங்கள எல்லாம் பாக்க வந்துருக்கேன்...
முதல்ல எனக்கு இந்த வாய்ப்ப குடுத்த தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கும், சீனா ஐயாவுக்கும் என்னோட நன்றிகள்....
இன்னிக்கி முதல் நாளா இருக்குறதால என்னோட பதிவுகள நீங்க கண்டிப்பா படிச்சே ஆகணும்ங்குற கட்டாயத்துல இருக்கீங்க... எனக்கு செம ஜாலி, பின்ன, இப்படி ஒரு வாய்ப்பு கிடச்சா விடுவேனா, வாங்க உங்கள எல்லாம் என்னோட வலைப்பூவுக்கு இழுத்துட்டு போறேன்...
என்னாச்சு, ஏன் வர மாட்டேங்குறீங்க? என்னாது, நீ யாரா?
அவ்வ்வ்வ்... ஆமால, என்னைப் பத்தி கண்டிப்பா உங்களுக்கு சொல்லியாகணும்ல...
நான் இப்போதைக்கு பி.ஹச்.டி ஸ்காலர், ஒரு வருசத்துல டாக்டர் ஆகிடுவேன்னு நம்புறேன். வீட்ல எனக்குன்னு ரூம்மேட்ஸ் இருக்காங்க, அவங்கள குருவிங்க, மீனுங்கன்னு சொன்னா கோபம் வரும், ஆல் மை செல்லம்ஸ்... ரொம்ப ஊர்சுத்துவேன், அதுக்கு பரிகாரமா இப்ப ரூமுக்குள்ள முடங்கிட்டேன். அப்பா, அம்மா ரெண்டுமே எனக்கு இப்போதைக்கு ஒரே ஆள் தான், கூட ஒரு போட்டியாளர் தம்பி... அன்பையும் அமைதியையும் விரும்புறவ, ஆனா ரொம்ப கோபக்காரி. எழுதுறது பிடிக்கும். அதுவும் நடைமுறை இயல்போட எழுத ரொம்ப பிடிக்கும்... சவாலான விஷயங்கள ஈசியா ஹாண்டில் பண்ணவும் பிடிக்கும். இப்போதைக்கு இவ்வளவு தான்... இங்க தான இருக்கப் போறேன், என்னோட மொத்த குடும்பத்தையும் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா இன்ட்ரோ பண்ணிடுறேன்...
அம்மாவ பத்தி பேச ஆரம்பிச்சுட்டேன்னா பேசிட்டே இருப்பேன். அதுவும் அவள பாக்கப் போறதா இருந்தா, கேக்கவே வேணாம்... சந்தோசம்னா சந்தோசம் அவ்வளவு சந்தோசம்... அம்மாவோட நினைவு நாள்-ல அவள பாக்கப் போன சம்பவத்த தான் அம்மாவோட ஒரு நாள்-ல சொல்லியிருக்கேன். அத தொடர்ந்து ஒரு அமாவாசை நாள்-ல அம்மாவ பாக்க பிரகதியோட போன சம்பவம் இதோ இங்க இருக்கு (ஆடி அமாவாசை- அம்மாவும் பிரகதியும்)
சில விசயங்கள பாத்தா எனக்கு ரொம்ப கோபம் வந்துடும்... ரெளத்திரக்காரியா மாறினா அவ்வளவு தான். வர்ற கோபம் மொத்தத்தையும் கன்னாபின்னான்னு எழுதியே தீத்துடுவேன். அது மட்டுமில்ல வாய்ப்பு கிடச்சா அந்த இடத்துலயே போய் சண்டைப் போடுவேன்... சரி, சரி, இப்ப நீங்க ரொம்ப பயந்துடாதீங்க, ஆரம்பம் எல்லாம் அமைதியா தான் இருக்கும்.... இத படிச்சிடுங்க... (இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்)
என்னடா இவ, ரொம்ப சண்டைக்காரியா இருக்காளேன்னு நினைச்சுடாதீங்க, சின்னபுள்ளைங்களுக்கு மட்டுமில்ல, உங்களையும் கூட அழகா குட் மார்னிங் சொல்லி எழுப்பி விடுவேன்.... சந்தேகம்னா இத பாருங்க.... குட் மார்னிங்....
இது ஒரு வகைல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதை. இந்த கவிதைய பேஸ்புக்ல போஸ்ட் பண்ணிட்டு நான் வாங்கின திட்டு இருக்கே.... ஷப்பா.... மாங்கு மாங்குன்னு அழுது, டெலிட் பண்ணிடலாமான்னு யோசிச்சு அப்புறம் அதெப்படி, ரொம்ப ரசிச்சு ரசிச்சு எழுதினோம், இத டெலிட் பண்ணவான்னு ப்ளாக்ல போட்டேன். இங்க வந்த கமண்ட்ஸ் பாத்துட்டு தான் மனசே குளுந்துச்சு. அப்படினா நீங்களும் இத கண்டிப்பா படிக்கணும்ல.... இந்தாங்க இதான் அந்த கவிதை.... பாலையாய் ஒரு வெற்றுக் கேவல் . முதல் தடவ எல்லாம் புரியாது, ஒரு நாலஞ்சு தடவ எனக்காக படிச்சிடுங்க, சரியா...
நானெல்லாம் படம் பாக்குறது ரொம்ப குறைவு. ஆனா பிடிச்ச படமா இருந்தா ரொம்ப ரசிச்சு ரசிச்சுப் பாப்பேன்.. அப்படி பாத்த படங்கள பத்தி எழுதி உங்கள டார்ச்சரும் பண்ணுவேன்... இப்படி தான் யாராவது என்னப் படம் பாக்கலாம்னு கேட்டா இந்த படம் பாருங்கன்னு சொல்லி அப்படியே லிங்க்கும் குடுப்பேன். நீ எழுதின விமர்சனத்த படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரம் பண்றியான்னு நம்மள சரியா கார்னர் பண்ணிடுவாங்க ப்ரண்ட்ஸ். அவங்கள விடுங்க, ஆல் பேட் பெல்லோஸ்.... நீங்க சமத்து தான, அதனால கண்டிப்பா இத படிச்சுடுங்க... (ப்ரிட்டி வுமன் (Pretty Woman)
படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். நானெல்லாம் ஒரு புத்தகத்த படிச்சுட்டு ரிவியூ வேற எழுதுனேன்னு சொன்னா நம்புவீங்களா? ஆனா நீங்க நம்பித் தான் ஆகணும்... நல்லா பாருங்க, இந்தா இதான் அந்த வற்றா நதி- சிறுகதை தொகுப்புக்கான ரிவியூ.... அப்படியே புத்தகம் வாங்க ஆர்டரும் குடுத்துருங்க. பின்ன சொந்த வீட்டு புத்தகம்ல....
இதுக்கு மேல நான் இங்க இருந்தா, கண்டிப்பா நீங்க என்னை தொரத்தி விட்ருவீங்க... அதனால, நாளைக்கு பல புதுமுகங்களோட அறிமுகத்தோட வர்றேன்... இப்போதைக்கு உங்க கிட்ட இருந்து விடைபெறுவது....
நான் தான்.... பட்டர்ப்ளை காயத்ரி தேவி...
......
|
|
அடிக்கடி படிக்கிறதால எல்லாமே புரியற மாதிரியான பதிவுகள் தான்மா.... வலைச்சரத்தில் ஒரு வாரம் கலக்க வாழ்த்துக்கள்....
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா
Deleteஅகமகிழ்வுடன் அன்பான நல்வரவு டியர் பட்டர்ப்ளை. இந்த வாரம் உன்னால் அழகாகட்டும்.,,!
ReplyDeleteஹை... ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
Deleteவாங்கம்மா... சண்டைக்காரி... சே... சந்தோசக்காரி + சவால்காரி... ஹிஹி... வருங்கால மருத்துவருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅசத்துங்க...!
நாங்க இங்க தாண்ணே இருக்கோம், உங்கள தான் blog பக்கமா பாக்க முடியல... முன்ன மாதிரி எல்லாரோட blog-ம் வாங்க அண்ணா
Deleteஇனிய அறிமுகத்துடன் - அழகான தொடக்கம்..
ReplyDeleteவாழ்க நலம்!..
தேங்க்ஸ் அண்ணா
Deleteநல்ல அறிமுகம்..!
ReplyDeleteநிஜமாத்தான் சொல்றீங்களான்னு தெரியல, ஆனாலும் தேங்க்ஸ்
Deleteசில பதிவுகள் வாசித்தேன் பட்டர்ப்ளை ..
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தேங்க்ஸ் அக்கா
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுன்போல் இப்போதும் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ்
Deleteவாழ்த்துகள் காயத்ரி தேவி ...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வந்து இருக்கும் சகோதரிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும். நீங்கள் எழுதிய ”இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்” என்ற பதிவினையும் அதில் நீங்கள் சுட்டிக் காட்டிய “இணைய பெண்கள் பாதுகாப்பு குழு” என்ற இணைப்பினையும் ஏற்கனவே படித்துள்ளேன்.
ReplyDeleteத.ம.3
அப்படினா என்னோட blog பக்கமா ஏற்கனவே வந்துருக்கீங்க........ வாழ்த்துக்கு நன்றி
Deleteஅழகான தொடக்கம்................வாழ்த்துகள்
ReplyDeleteஹஹா... ரொம்ப தேங்க்ஸ்
Deleteவணக்கம்
ReplyDeleteஆரம்பம் எல்லாம் அமர்க்கலம்.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேங்க்ஸ் அண்ணா, உங்க வாழ்த்துக்கு
Deleteவலைச்சர வாரத்துக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
Deleteமிக அழகுடா காயத்ரி. மனதைத் தொடும் பதிவு. வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள் சிறப்பாக செய்ங்க :)
ReplyDeleteரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா.... கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவு நல்லா பண்ணுவேன்
Deleteவாங்க, காயத்ரி தேவி (மருத்துவர்)
ReplyDeleteஅருமையான
ஆரம்பமே...
இனிய வாரமாய்
ஈட்டிக்கொடுக்க
உங்களால் முடியும்
ஊதித் தள்ளுவீர்கள்
என்று நினைக்கிறேன்
ஏமாற்ற மாட்டீர்கள்
ஐயமில்லையெனக்கு
ஒளியாய், ஒலியாய்
ஓங்கி வளந்திட
ஔவையின் ஆசியோடு.
- கில்லர்ஜி –
நேற்று திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 5
ஆசிக்கு நன்றி. நேத்து தப்பா எழுதினதுக்கு இன்னிக்கி ஓட்டா... அப்போ இன்னிக்கி சரியா எழுதினதுக்கு எப்ப ஓட்டு போட போறீங்க
Deleteவித்தியாசமான ஆரம்பம். ஒன்றரை வருடத்திற்கு முன்னால் எனக்கு எழுத வராது. படிக்கவும் வராது . ஆதலால் தம் பதிவை விட்டுவிட்டேன் . ஆரம்பமே attagaasam. போட்டு தாக்குங்கள் .
ReplyDeleteஎன்னது எழுதவும் படிக்கவும் வராதா? நல்ல வேளை இப்பவாவது வந்துச்சே
Deleteசிறப்பான தொடக்கம்.
ReplyDeleteவாழ்த்துகள்.
தேங்க்ஸ் அண்ணா
Deleteபிடிச்சிருக்கு..... யதார்த்தம் பிடிச்சிருக்கு
ReplyDeleteஹஹா அக்கா... உங்களோட blog லிங்க் எனக்கு வேணுமே
Deletehttp://malalaimoli.blogspot.in/?m=1
Deletehttp://malalaimoli.blogspot.in/?m=1
Deletenoted அக்கா
Deleteவாருங்கள்... கலக்குங்கள்.
ReplyDeleteவந்துட்டோம், கலக்குறோமா இல்லையான்னு நீங்க தான் சொல்லணும்
Deleteஇன்னிக்குத்தான் பார்த்தேன். உன்பதிவுக்கு வந்து படிக்கிறேன். மிக்க சுறுசுறுப்பாக இருக்கிராய். வாழ்த்துகள். அன்புடன்
ReplyDelete