பன்னீர்ப்பூ - சோகம் சுமக்கும் சமூகம்
பனித்துளிகள் சுமந்த பன்னீர்ப்பூக்கள்!
உரிய உறைவிடம் மரமென்றாலும்
உரிமைகள் பறிக்கப்பட்டுப்
பெரும்பாலும் இருப்பது தரையில்தான்..
கண்ணீர்த்துளிகள் சுமந்த இப்பதிவுகளும்
பன்னீர்ப்பூக்கள் போலத்தான்..
கிடைக்க வேண்டிய
நியாயங்கள் மறுக்கப்பட்டு ..
உரிமைகள் பறிக்கப்பட்டு..
வாழ்க்கை வதைபட்டு..
கோ. சுகுமாரனின் நட்சத்திர வாரப் பதிவு..பார்க்காதவர்களுக்காக மீண்டும் இங்கே..சாவு வந்தாதான் சமைப்போம் . இது தொடர்பாக அவரே மீண்டும் வெளியிட்ட படமும் செய்தியும்..இதற்காகவும் போராட வேண்டிய நிலைமை.. போராடித் தீர்வு பெற்றார்கள்..
வாழ்த்துகள்..
சேவியர் பதிவில் மண்ணை உணவாக உண்ணும் மனிதர்கள்..நம்மில் பலர் உணவுப் பொருட்கள் எவ்வளவு குப்பைத் தொட்டியில் போடுகின்றோம்..ஆனால் இவர்கள் நிலை..?
யெஸ்.பாலபாரதி இந்தக் கொலையில் எனக்கும் பங்குண்டு என்கிறார்..அனுபவம் மனதைக் கனக்க வைக்கிறது .. இங்கேயும் உதவிப் பணிகள் துவங்கி விட்டன..
மங்கையின் வலிகளைப் பகிர்தலின் அவசியம் என்ற பதிவில் யாருடைய வலிகளைப் பேசுகிறார்? இன்றைய கால கட்டத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறது.. இதில் மகளிர் தினம் வேறு..
செல்வா(சந்திப்பு)வின் பள்ளிக்கூடம் ஒரு சிறுகதை..சமூக அவலம் மற்றொரு கோணத்தில் பேசும் சிறுகதை..மீள்பதிவிட்டிருக்கிறார்..இன்று தமிழ்மணத்தின் முகப்பில் கண்ணில் பட்டது..
நிவாரண நிதிக்காய் ஒரு போட்டி அறிவிப்பு:
தகவல்களுக்கு கிரிக்கெட் ரசிகனின் இப்பதிவைப் பாருங்கள்..மங்கை சுட்டிக் காட்டிய குழந்தைகள் குழந்தைகள்தானே பதிவுக்கான இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று..வாழ்த்துகள்!
|
|
நவநரசங்களையும் சேர்த்துக் கலந்து உங்களது வலைச் சரத்தை தொடுத்து வருகிறீர்கள். இந்த சுட்டியில் உள்ள பதிவுகளை ஒவ்வொருவரும் மாதத்திற்கு ஒரு தடவை படித்தால் கொஞ்சமாவது ஆணவம் குறையும்.
ReplyDeleteதங்களது வலைச்சரம் மிகவும் அருமை. இப்பன்னீர் பூக்களிலுள்ள சில பதிவுகள் அப்போது படிக்கும் போதே ஒரு வாழ்வில் ஒரு வெறுமையைத் திணித்தன.
ReplyDeleteதமிழ்பிரியன். கையேடு,
ReplyDeleteஆமாம்..மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள்தான்..
மலர், மனம் நெகிழ்கிறது - தங்களின் அயரா உழைப்பு, பொறுமை, சோகங்களைத் தேடித் தந்த நல்ல மனம், அனைத்துமே பாராட்டுக்குரியவைதான். நல் வாழ்த்துகள்.
ReplyDeleteசுகுமாரன், பால பாரதி, சேவியர் இவர்களின் பதிவுகளும் பள்ளிக்கூடம், கிரிக்கெட் போட்டி இவைகளூம், அனைத்துமே நடைமுறைச் சிக்கல்களையும், துயரங்களையும் பற்றிய பதிவுகள். படிக்கப் படிக்கத் துயரம் கூடுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
ம்ம்ம்ம்ம்ம்
உண்மைதான் சீனா சார்..
ReplyDelete//பனித்துளிகள் சுமந்த பன்னீர்ப்பூக்கள்!
ReplyDeleteஉரிய உறைவிடம் மரமென்றாலும்
உரிமைகள் பறிக்கப்பட்டுப்
பெரும்பாலும் இருப்பது தரையில்தான்..//
---பாசமலர்
அருமையாக வந்து விழுந்த வார்த்தைக் கோலங்கள்! உள்ளாடிய சோகம் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
விழுந்தது தரை என்றாலும் மக்கள் குனிந்து தேடித்தேடி அவற்றைச் சேகரித்து இறைவனுக்கு மாலைகட்டி மகிழ்கிறார்கள். சேரவேண்டிய அல்லது அப்படிச் சேர்வதற்காகவே மரத்திலிருந்து உதிர்ந்த அப்பன்னீர்ப் புஷ்பங்களுக்கும் சந்தோஷம் தான் போலும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.
நண்பர் ஜீவி யின் சிந்தனை ஆக்க பூர்வமானது. வீழ்ந்தாலும், அது ஒரு நல்ல செயலுக்காகத்தான் என்ற எண்ணம் பாராட்டத்தக்கது. நல் வாழ்த்துகள் ஜீவி
ReplyDeleteஉண்மைதான் சீனா சார்..ஜீவி அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடுதான் இது..
ReplyDeleteநீங்கள் தொடுத்த சரம் மிக அருமை
ReplyDeleteமிக்க நன்றி பாசமலர்!