ரோஜாப்பூ- உறவுகள்
கொஞ்சம் முள்குத்து பொறுத்தால்
ரோஜாக்கள் கிடைக்கும்.
கொஞ்சம் வலிகள் பொறுத்தால்
உறவுகள் நிலைக்கும்.
உறவுகள் இன்றி நம் வாழ்க்கைக்கு நலமில்லை. வளமில்லை. சில உறவுகள் பற்றிப் பேசும் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு.
சந்திரவதனாவின் அம்மா கதை அம்மா அப்பாவுக்கே உரித்தான இலக்கணங்கள் விளக்குகிறது. எது எப்படியிருந்தாலும் அம்மா அம்மாதான்.. "பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டைகள் வந்து விடக் கூடாதென்று எத்தனை விடயங்களைப் பக்குவமாகச் சமாளித்திருப்பாள்."
கைப்புள்ளயின் தசரதர்கள் வாழ்வதில்லை என்ற பதிவு பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள உறவு பற்றிப் பேசுகிறது. "பிள்ளைகளின் பிரிவு பெற்றோரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று நான் பேசும் அதே வேளையில், பிள்ளையாய்ப் பிறந்தவர்களின் பேச்சினால் "கொல்லப்படும்" பெற்றோர்களைப் பற்றியும் பேசத் துணிகிறேன்."
கிருத்திகா அக்கா என்ற உறவு அன்பின் பரிமாணம் என்று உணர்வுகள் பேசுகிறார். "என்னெதிரே நிற்கும் அவளுள்ளும் நானே என்பதான எண்ணமின்னல் தொடர்ந்த நிமிடங்களில் நடந்த உரையாடல்களுக்கு வடிவங்களே இல்லை."
காட்டாறு, நீயும் என் அன்னையே என்று அத்தையின் அருமைகள் பேசுகிறார். "கேலிப்பேசி நான் துள்ள, செல்லக் கோபமாய் அவள் கை ஓங்கி வர, பிரளயம் உண்டாகும் அவ்வீட்டினிலே. என் அன்னையுடன் சண்டையிடுவாள். பேச மறுத்து முகம் திருப்பிடுவாள். என்னை மட்டும் கொஞ்சிடுவாள்; என் தாய் அறியாது."
தருமி முதியோர் பற்றி அப்படி என்ன பேசுகிறார்? "கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு."
திருமணம் என்று ஒன்று ஆனவுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும்
உறவுநிலை மாற்றங்களை ரியாத் பதிவர் கே.வி.ராஜா எப்படிக் கூறுகிறார் பாருங்கள்.
|
|
//கொஞ்சம் முள்குத்து பொறுத்தால்
ReplyDeleteரோஜாக்கள் கிடைக்கும்.
கொஞ்சம் வலிகள் பொறுத்தால்
உறவுகள் நிலைக்கும்.
//
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
பொறுப்பதுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?
So, what cannot be cured
must be endured. And,
what cannot be endured
must be ended.
இது புதுமொழி.
சுப்பு ரத்தினம்.
பி.கு: ஹு இஸ்
கெட்டிங் த கோல்டன் க்ரெளன் ?திஸ் வீக்..
விஸிட்:
http://arthamullavalaipathivugal.blogspot.com
சூரி சார்,
ReplyDelete???? உறவுகளால் அதிகம் காயப்பட்டிருப்பீர்கள் போலும்..
அருமையான முன்னுரை மலர். கொஞ்சம் வலிகள் பொறுத்தால் நிச்சயம் உறவுகள் நிலைக்கும். உண்மை. படித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteமலர், சுட்டிய அனைத்துமே அருமை. உறவுகளின் அருமை பற்றி அழக்கக எழுதப்பட்ட கதைகள்/உரைகள். அனைத்தையும் படித்து விட்டேன். அம்மா, அப்பா-பிள்ளை, அக்கா, அத்தை, பெற்றோர் என பல உறவுகளையும் பற்றிய உரைகள். நன்று நன்று. சுட்டிகளுக்கு நன்றி
ReplyDeleteஆமாம் சீனா சார்..வலையில் நாம் எல்லோரு இணைந்திருப்பது கூட ஓர் உறவுதானே..
ReplyDelete//பாச மலர் said...
ReplyDeleteஆமாம் சீனா சார்..வலையில் நாம் எல்லோரு இணைந்திருப்பது கூட ஓர் உறவுதானே..
//
வழிமொழிகிறேன்...
(தமிழில் இதை ரிப்பீட்டே என்று கோபி சொல்லுவார்)
எத்தனை நேர்த்தியான தொகுப்பு....உங்களின் உழைப்பும், மெனக்கெடலும் நல்ல பலனை தந்திருக்கிறது பாசமலர்.
ReplyDeleteமொத்தத்தில் ஸூப்பர்...கலக்கீட்டிங்கோவ்...
வாழ்த்துகள்...
அருமையான தொகுப்பு மலர். நட்பும் உறவு தான் இல்லையா?
ReplyDelete//கொஞ்சம் முள்குத்து பொறுத்தால்
ரோஜாக்கள் கிடைக்கும்.
கொஞ்சம் வலிகள் பொறுத்தால்
உறவுகள் நிலைக்கும்.
//
சரியா சொன்னீங்க. சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க.
//சுத்தம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க.//
ReplyDeleteகாட்டாறு,
இதனை "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று கூறலாமா ?
//தமிழில் இதை ரிப்பீட்டே என்று கோபி சொல்லுவார்
ReplyDeleteஹா ஹா..
சொக்கரே, நன்றி..
காட்டாறு, சரியாச் சொன்னீங்க..
சுத்தம் பார்க்கின் கூட புதுவிதமா இருக்கே..மனசு சுத்தம்னு வச்சுக்கலாமா.
// cheena (சீனா) said...
ReplyDeleteஇதனை "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று கூறலாமா ?
//
நீங்க சொல்வது தான் சரி. நான் எழுதியதற்கு பின்னால் ஒரு கதையே இருக்குது. ஹாஸ்டலில் அடிக்கடி சொல்லும் மொழி இது. :-) ஓவரா சுத்தம் பார்த்து அலட்டிப்பேன் அந்த காலத்தில் (இப்போ திருந்திட்டேன்). அப்போ என்னுடைய அறைத் தோழியர் இப்படி தான் சொல்லுவாங்க. அதே மனசுல பதிஞ்சிட்டது. :-)
கண்டுபிடிச்சிட்டீங்களே. சூப்பர் தான்!